இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 30 தமிழில் தொல்காப்பியர் காலம்வரை இன்ன இடைநிலைகள் இன்ன காலத்தை உணர்த்தும் என்ற வரையறை ஏற்படாமல் இருந்திருக்கலாம். பழந்தமிழில் சொற்களெல்லாம் ஓரசை, ஈரசை உடையனவாகவே இருந்தன. அவற்றுடன் துணை வினை சேர்ந்து காலம் அறிவித்தன. த் இறந்த காலத்தையும், உம் நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும், வ், ப் எதிர்காலத்தையும், இன் அல்லது இ இறந்தகாலத்தையும், பகுதி இரட்டித்தலால் இறந்த காலத்தையும் வெளிப்படுத்தியுள்ளமை பழந்தமிழ் இலக்கியங் களாலும் தொல்காப்பியத்தாலும் அறியலாம். நிகழ்காலத்தை அறிவிக்கின்ற கிறு,…
தோழர் தியாகு எழுதுகிறார் 41: சொல்லடிப்போம் வாங்க! (2)
(தோழர் தியாகு எழுதுகிறார் 40 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (2) நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கல் குறித்து மேலும் சில பார்வைகள்: தாராளியம் என்ற சொல்லாக்கம் குறித்து அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதுகிறார்: புது + ஆண்டு = புத்தாண்டு. ஏனெனில் புத் என்பது முன்னொட்டு. ஆனால் பொது + ஆண்டு பொத்தாண்டு என வராது. தாராளம் என்பது தள் → தரு → தார்+ஆளம் = தாராளம். எனவே, இந்த இடத்தில் ஆளம் என்பதைப் பிரித்து ஆள் + இயம் என்பது இடராக உள்ளது. எனினும் தாளியம் என்னும் சொல்லோசைக்கிணங்க இருப்பதால் தாராளியம் என்பதைப் பயன்படுத்தி…
தமிழ்நாடும் மொழியும் 30: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 29: பிற்காலப் பாண்டியர் வரலாறு தொடர்ச்சி) 8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் முன்னர்க் கூறியபடி பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர் வடக்கிருந்து முகமதியரும், அவரை எதிர்த்த விசய நகர மன்னரும், மராட்டியரும் தமிழ் நாட்டில் நுழைந்து அதனைப் போர்க்களமாக்கி, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்து சென்றனர். நம் நாட்டில் நுழைந்த முகமதியர் கோவிலையும், குளத்தையும் கெடுத்து, நாட்டையும், நகரையும் பாழாக்கி, கிடைத்தவற்றை வாரிக்கொண்டு சென்றனர். அக்காலத்திலே விசய நகர வேந்தர் முகமதியர்களை முறியடிப்பதற்கு வீறுகொண்டு எழுந்தனர். மராட்டியரும் மார்தட்டி எழுந்தனர். அவர்கள்…
தோழர் தியாகு எழுதுகிறார் 40: சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 4
(தோழர் தியாகு எழுதுகிறார் 39 தொடர்ச்சி) சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 4 கீழ்ச்சாதிக்காரன் தரத்தைக் கெடுத்து விடுவான் என்று சொல்லாமல் சொல்லும் இந்த மேல்சாதிக் கூட்டத்துக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும்: இடஒதுக்கீடு என்பது ஒரு கல்விக் கழகத்தில் நுழைவதற்குக் கோரப்படுகிறதே தவிர இறுதியில் பட்டம் பெற்று வெளியே வருவதற்கு அல்ல. அதாவது இடஒதுக்கீடு சேர்க்கையில்தானே தவிர தேர்ச்சியில் அல்ல. தேர்ச்சிக்கான படித்தரங்கள் எல்லார்க்கும் ஒன்றுதான். ‘இந்து‘ வின் சாதியம் பிராமணியத்தின் தகுதி-திறமைவாதமும் சாதிக் குருட்டுச் சாதியமும் எவ்வளவு விபரீதமான வாதங்களுக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதற்கு ஆங்கில நாளேடு ‘இந்து’ வின் ஏப்பிரல் 2 ஆசிரியவுரையே…
தோழர் தியாகு எழுதுகிறார் 39 : சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 3
(தோழர் தியாகு எழுதுகிறார் 38 தொடர்ச்சி) சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 3 இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம் (IIT), இந்திய மேலாண்மைப் பயிலகம் (IIM), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பயிலகம் (AIIMS) என்ற வகையிலான கல்வி நிறுவனங்களில் ஒன்றே ஒன்றிலாவது ஏனைய பிற்படுத்தப்பட்டோர் அவர்களின் மக்கள் தொகைக்குரிய விழுக்காட்டை நெருங்கியிருப்பதாகக் காட்ட முடியுமா? இந்த உயர்கல்விப் பயிலகங்களில் ஒன்றே ஒன்றின் நிருவாகத்திடமிருந்தாவது அதன் ஆசிரியர்கள் -மாணவர்களின் வகுப்புவாரிக் கணக்கைக் கேட்டுப் பெற முயன்றார்களா உச்ச நீதிமன்ற நீதிபதிகள்? வழக்கில் வந்து சேர்ந்து கொண்ட பேராசிரியர் பி.வி இந்திரேசன் போன்றவர்களிடம் ‘ஐ.ஐ.டி.யில் பிராமணர்கள் எத்தனை?…
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 23. ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தொடர்ச்சி) ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! தலைப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள இந்தி மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும் என்று கருதக்கூடாது. அவர்களுக்கு இந்தியைச் செயற்படுத்துவதில் உள்ள உணர்வும் செயலும்போல் தமிழ்நாட்டு அதிகாரிகளுக்குத் தமிழ் மீது உணர்வும் செயற்பாங்கும் வேண்டும். இது குறித்துப் பின்னர்தான் வேறுவகையில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஆனால் கடந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர் “அரசு ஏன் பெயர்ப்பலகைகளை வைக்க வேண்டும். அவரவரை…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5 சோலை மேடை. ஒருபால் காத்திருக்கும் உதாரன் நிலவைக் கண்டு பாடத் தொடங்கிய வேளை, அமுதவல்லி மறுபுறம் வந்து வியந்து நிற்கிறாள் எண்சீர் விருத்தம் உதாரன் : நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலவென்று காட்டுகிறாய் ஒளிமு கத்தைக் கோலமுழு துங்காட்டி விட்டால்காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ…
தோழர் தியாகு எழுதுகிறார் 38 : சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? . 2
(தோழர் தியாகு எழுதுகிறார் 37 தொடர்ச்சி) சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? 2 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்திய அரசு நடத்தும் மையக் கல்விப் பயிலகங்களில் ஏனைய பிற்படுத்தப்பட்டோர்க்கு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதற்கெதிராகத் தொடரப்பட்ட நீதிப் பேராணை (ரிட்) வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் உசாவலுக்கும் தீர்ப்புக்கும் காத்துள்ளது. இந்நிலையில் மேற்படிச் சட்டத்தின் 6ஆம் பிரிவை நிறுத்தி வைக்கும்படி அரிஜித் பசயத், லோகேசுவர் சிங் பந்தா ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட ஆயம் (‘பெஞ்சு’) சென்ற மார்ச்சு 29ஆம் நாள் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு குறித்துப் பல செய்நுட்பக் கேள்விகள்…
தோழர் தியாகு எழுதுகிறார் 37 : சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 36 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இட ஒதுக்கீடு தொடர்பான கருத்துப் போரில் சமூக நீதிக் கட்சியாராகிய நம் பங்கு தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இருக்க வேண்டும். அது தொடர்பாக சமூகநீதி மறுப்பாளர்கள் நடத்தும் பலமுனைத் தாக்குதலை முறியடிக்கும் கருத்துப் படைக்கலன்கள் நம் கொட்டிலில் அணியமாய் இருக்க வேண்டும். அந்த முறையில் கடந்த காலத்தில் (தமிழ்த் தேசம் 2007 சித்திரை இதழில்) எழுதப்பட்டதென்றாலும் இன்றளவும் பொருத்தப்பாடுள்ள ஒரு கட்டுரையை இம்மடலில் மீள் வெளியீடு செய்கிறோம். பயன் பெறுங்கள், நம் உறவுகள் பயன்பெறச் செய்யுங்கள்….
8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 1/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 3/3 தொடர்ச்சி) 8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 1/3 கவிஞன் தான் பிறந்த காலத்தின் கருவாகவும் பின்னர்க் கருத்தாவாகவும் துலங்கக் காணலாம். தன்னைக் சுற்றிலுமுள்ள சூழலை, சமுதாயத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது என்பது ஒருமுறை: அச்சமுதாயத்தை விவரிக்கவும் செய்து தன்னுடைய கருத்துகளைப் பரப்பி ஒரு புதிய மறுமலர்ச்சிக்குச் சமுதாயத்தினைப் படைக்க வேண்டும் என்ற பேரார்வத்தில் பிறங்கிடுவது பிறிதொரு வகை. முன்னவர் உள்ளதை உள்ளவாறே கூறுபவராகவும். பின்னவர் உள்ளதை உணர்ந்தவாறு கூறுபவராகவும் அமைவர். உள்ளதை உள்ளவாறு உணர்த்துபவர்,…
தோழர் தியாகு எழுதுகிறார் 36 : சொல்லடிப்போம், வாங்க!
(தோழர் தியாகு எழுதுகிறார் 35 தொடர்ச்சி) சொல்லடிப்போம், வாங்க! கலைச் சொல்லாக்கம் என்பது அறிவியல் கல்விக்கு இன்றிய மையாதது. இயற்கை அறிவியல் ஆனாலும் குமுக அறிவியல் ஆனாலும் கலைச் சொற்களைத் தவிர்த்துப் பயிலவோ பாடம் சொல்லவோ முடியாது. ஒவ்வொரு மொழியும் அடிப்படையான ஒரு சொற்களஞ்சியத்தைக் கொண்டு இயங்குகிறது. சொற்களஞ்சியத்தின் செழுமை மொழிவளத்தைப் புலப்படுத்தும். ஆனால் எவ்வளவுதான் வளம்பொருந்திய மொழி என்றாலும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கப் புதிய சொற்கள் வார்க்க வேண்டிய தேவை எழுந்தே தீரும். அப்படிச் செய்யும் போது அந்தந்த மொழிக்கும் உரிய…
தோழர் தியாகு எழுதுகிறார் 35 : நீண்ட வழி போக வேண்டுமம்மா!
(தோழர் தியாகு எழுதுகிறார் 34 தொடர்ச்சி) “The woods are lovely, dark and deep But I have promises to keep, And miles to go before I sleep.” இப்படி எழுதியவர் அமெரிக்கப் பாவலர் இராபருட்டு (Robert Frost). இந்த வரிகளைத் தன் படிப்பு மேசையில் எழுதி வைத்து நமக்கெல்லாம் தெரிய வைத்தவர் பண்டித சவகர்லால் நேரு. தமிழில் இப்படிச் சொல்லலாமா? “கானகங்கள் அழகானவை, அடர்ந்து இருண்டு ஆழ்ந்து செல்பவை ஆனால் யான் காப்பாற்ற வேண்டிய உறுதிகள் உள,…
