சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 648-653
( தமிழ்ச்சொல்லாக்கம் 639- 647தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 648-653 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 648. வசனம் – உரை நடை ரசவாதிகள் – பொன் செய்வோர் 649. காபிரைட் – உரிமை நூல் : மதிமோச விளக்கம் (1929) நான்காம் பதிப்பு நூலாசிரியர் : தூசி. இரா ச கோபால பூபதி பக்கம் : 4 நான்காம் பதிப்பின் முன்னுரை எழுதியவர் : நா. முனிசாமி முதலியார் – (ஆனந்த போதினி பத்திராதிபர்) 650. அமிர்தம் – சாவா மருந்து 651. சரிகை –…
தோழர் தியாகு எழுதுகிறார் 34 : படிப்பொலிகள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 33 தொடர்ச்சி) படிப்பொலிகள் இனிய அன்பர்களே! தாழி மடலில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும், எப்படியெல்லாம் இடம் பெற வேண்டும் என்பது குறித்து வேறுபட்ட சில முன்மொழிவுகள் வந்துள்ளன. எல்லாவற்றையும் நான் கருத்தில் கொள்கிறேன். சிலவற்றை உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன். மதுரையிலிருந்து தோழர் இரவிச்சந்திரன் எழுதுகிறார்: தோழர் தியாகுவுக்கு. தங்களின் ‘தாழி மடல்’ தொடர்ந்து வாசிக்கின்றேன். தோழர்களோடு நாள்தோறும் உரையாடுவதற்கான மிகச்சிறந்த வடிவம் மடல் வரைதல். கைபேசியில் வாசிப்பதற்கும் மிக வசதியாக சுருக்கமாகவும் நிறைவாகவும் இருக்கிறது. தங்களின் தூய தமிழ்ப் பதங்களின்…
தோழர் தியாகு எழுதுகிறார் 33: ஏ. எம். கே. (10)
(தோழர் தியாகு எழுதுகிறார் 32 தொடர்ச்சி) பிரிந்தவர் கூடி. . . தோழர் ஏ.எம். கோதண்டராமனின் வழிகாட்டுதலில் ஓராண்டுக் காலத்துக்கு மேல் இயக்கப் பணி ஆற்றியவன் நான். நாங்கள் பல முறை சேர்ந்து பயணம் செய்தோம் என்றால், பல கல் தொலைவு வயல் வரப்புகளில் நடந்து சென்றோம் என்று பொருள். நாங்கள் பல முறை சேர்ந்து உணவருந்தினோம் என்றால், பல நாள் சேர்ந்தே பட்டினி கிடந்தோம் என்றோ, நாலணாப் பொட்டுக் கடலையும் குவளை நீரும் பகிர்ந்து பசியாறினோம் என்றோ பொருள். இன்ப துன்பங்களில் பங்கேற்றல் என்றல்லவா சொல்வார்கள்? இங்கு துன்பங்கள்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 27
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 26 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 16கண்ணன் காட்சியின் பலன் காலை எட்டு நாழிகையளவில் குன்னம் போய்ச் சேர்ந்தோம். சிதம்பரம் பிள்ளையும் அவர் நண்பர்களும் எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அங்கே எங்களுக்காக அமைக்கப் பெற்றிருந்த வீட்டில் இறங்கினோம். அந்தச் சாகை அவ்வூரிலிருந்து சிரீ வைணவராகிய இராம ஐயங்கா ரென்பவருடைய வீட்டின் ஒரு பகுதியாகும். அவர் என் தந்தையாருக்கு இளமை முதல் நண்பர்; சித்த வைத்தியத்தில் நல்ல பயிற்சி யுடையவர். அவர் வசிட்டபுரத்தா ரென்னும் வகையைச் சேர்ந்தவர். குன்னத்திலும் அதைச்சார்ந்துள்ள ஊர்களிலும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 32: கரி-எரி பரவல் தடை
(தோழர் தியாகு எழுதுகிறார் 31 தொடர்ச்சி) கரி-எரி பரவல் தடை உலகம் அழிந்து போய் விடுமோ? என்ற அச்சத்துக்கு இரு முகன்மைக் காரணிகளாகச் சொல்லப்படுகிறவை: 1) அணு ஆய்தப் போர்: 2) காலநிலை மாற்றம். அணுக்குண்டின் அழிவாற்றலை இரோசிமாவிலும் நாகசாகியிலும் கண்டோம். மீண்டும் ஓர் அணுவாய்தப் போர் மூளக் கூடாது என்றால் அணுவாய்தங்களை அடியோடு அழித்து விட வேண்டும், புதிய அணுவாய்தங்கள் செய்யக் கூடாது. அணுவாய்தங்களுக்கு மூலப்பொருள் கிடைக்காமற்செய்ய வேண்டும் என்றால் அணுவாற்றல் இயற்றுவதைக் கைவிட வேண்டும். அணுவாற்றலை அமைதி வழியில் பயன்படுத்துவது என்ற பேச்சுக்கே…
தோழர் தியாகு எழுதுகிறார் 31 : ஏ. எம். கே. (9)
(தோழர் தியாகு எழுதுகிறார் 30 தொடர்ச்சி) ஏ. எம். கே. (9) நாங்கள்… எங்கள்… தஞ்சையார் எனப்படும் தஞ்சை அ. இராமமூர்த்தி மாணவராய் இருந்த காலத்திலிருந்தே தமிழக அரசியல் உலகில் நன்கறியப்பட்டவர். ஆனால் வழக்கறிஞரான பிறகும் கூட சட்ட உலகில் அந்த அளவுக்கு அறியப்படாதவராகவே இருந்தார். சட்டப் படிப்பு படிக்கும் போதும் அது முடிந்த பிறகுங்கூட தஞ்சையார் அநேகமாய் முழுநேர அரசியல்வாதியாகவே செயல்பட்டு வந்தார். காமராசரின் வழிகாட்டுதலில் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டு, சென்னை தொடங்கி அடுத்தடுத்த மாவட்டத் தலைநகரங்களில் மாநாடுகள் நடத்தப்பட்ட…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 25
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 24. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):25 4. குலமும் கோவும் தொடர்ச்சி பல்லவர் குடி மன்னர் பல்லவர் ஆட்சி பல்லவர் குடியைச் சேர்ந்த அரசர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டையாளத் தலைப்பட்டார்கள். ஏறக் குறைய அறு நூறாண்டுகள் அன்னார் அரசு புரிந்தனர் என்னலாம். சுந்தரர் தேவாரத்திலும், திருமங்கை யாழ்வார் திருப்பாசுரங்களிலும் பல்லவர்பீடும் பெயரும் குறிக்கபடுகின்றன.41 பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் அரசாட்சி நிலைகுலைந்து அழிந்தது. ஆயினும் அக்குல மன்னர் பெயர் சில…
தோழர் தியாகு எழுதுகிறார் 30: பொ.ந.பி. இட ஒதுக்கீடும் பாண்டேயின் கவனப் பிசகும்
(தோழர் தியாகு எழுதுகிறார் 29: தொடர்ச்சி) பொ.ந.பி. இட ஒதுக்கீடும் பாண்டேயின் கவனப் பிசகும் பொருளியலில் நலிந்த பிரிவினருக்கான (EWS – பொ.ந.பி.) இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் குறித்தும், அதனை செல்லுபடியாக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய இணையவழிச் (Zoom) சிறப்புச் செய்தி அரசியல் நிகழ்வில் முன்னாள் நீதியர் அன்புக்குரிய அரி பரந்தாமன் அவர்கள் விரிவாக உரையாற்றியதோடு, பங்கேற்பாளர்கள் கேட்ட வினாக்களுக்கும் தெளிவாக விடையளித்தார். இங்கே நான் ‘பொநபி’ இட ஒதுக்கீடு…
தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! (தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 தொடர்ச்சி) தமிழ் ஆட்சிமொழிச்செயலாக்கம் குறித்து ஆட்சியாளர்களும் அதிகாரிகள் மட்டத்தினரும் ஆர்வமுடன் பேசுவதை நாம் அறிவோம். அதே நேரம் ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது வெற்றுரையாகத்தான் இன்றும் உள்ளது என்பதையும் நாம் நன்கறிவோம். இந்நிலை தொடரத் தொடரத் தமிழ் வளர்ச்சி என்பது தேய்பிறையாகத்தான் நலிகிறது. தலைமைச் செயலகத்திலிருந்து துறைத்தலைமைக்கும் சில நேர்வுகளில் பிற சார்நிலையினருக்கும் ஆங்கிலத்தில் அனுப்பி விட்டு அங்கிருந்து அடி நிலை வரை ஒவ்வொரு நிலையிலும் “தமிழில்…
தோழர் தியாகு எழுதுகிறார் 29: ஏ. எம். கே. (8)
(தோழர் தியாகு எழுதுகிறார் 28: தொடர்ச்சி) ஏ. எம். கே. (8) புதிர் முறுவல் திருச்சி மத்தியச் சிறையில் 1974 செட்டம்பர் 25ஆம் நாள் தோழர் பாலகிருட்டிணன் தூக்கிலிடப்பட்ட போதும் அதன் பிறகும், நானும் இலெனினும் அதே சிறையின் முதன்மைக்கண்டத்தில் வைக்கப்பட்டிருந்தோம். எங்களோடு அதே கண்டத்தில் பத்துக்கு மேற்பட்ட ‘நக்சலைட்டு’ தோழர்களும் மற்றவர்களும் அடை பட்டிருந்தார்கள். நானும் இலெனினும் பாலுவை இழந்த பெருந்துயரிலிருந்து மீண்டு, எங்கள் அடுத்த பணிகள் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். வரலாற்றுப் புகழ் படைத்த மேத் திங்கள் போராட்டத்துக்குப் பின் கொடிய அடக்குமுறையால் கலைந்து போன சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கத்தை மறுபடியும் கட்டுவது…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 29 சொற்களை ஓரெழுத் தொருமொழி என்றும், ஈரெழுத் தொருமொழி என்றும், தொடர் மொழி என்றும் பகுத்துள்ளார். இப்பகுப்புத் தமிழியல்புக்கு ஒத்ததேயாகும். சொற்களால் திணை, பால், எண், இடம் அறியக்கூடும். ஆகவே, திணை வகையால் சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று பகுக்கப்பெற்றுள்ளன. இப் பகுப்பும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்தனவாகும். பால்வகையால் ஆண், பெண், பலர், ஒன்று, பல என ஐவகைப்படும். ஆண், பெண், பலர் என்பன உயர்திணைக்கும், ஒன்று, பல என்பன அஃறிணைக்கும் உரியன….
தோழர் தியாகு எழுதுகிறார் 28: மாவீரர்களின் பெயரால்…
(தோழர் தியாகு எழுதுகிறார் 27: தொடர்ச்சி) மாவீரர்களின் பெயரால் ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்டுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள். 2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது.. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக…
