கவிக்கோ துரை வசந்தராசன் வாசகர் வட்டம் – இலக்குவனார் விருது வழங்கு விழா
மாசி 06, 2054 சனி 18.02.2023காலை 9.30 – பகல் 1.00 பிரபஞ்சன் அரங்கம்க.க.நகர், சென்னை 600 078 கவிக்கோ வட்ட முதலாம் ஆண்டு விழா செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் விருதுஇருபத்து மூவருக்கு வழங்கல் விருதுகள் வழங்கிச் சிறப்புரைபேரா.முனைவர் சுப.வீரபாண்டியன்நூல் வெளியிட்டு வாழ்த்துரைபேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் பிற அழைப்பிதழில் உள்ளவாறு அன்புடன் வருகையை எதிர்நோக்கும்கவிக்கோ துரை வசந்தராசன் வாசகர் வட்டம்
மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு இணைய உரையரங்கம்
மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு இணைய உரையரங்கம் மாசி 07, 2054 / 19.02.2023 காலை 10.00 கூட்ட எண் Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் எதிர்ப்புரைகள்: முனைவர் நா.இளங்கோ முனைவர் வெற்றிச் செழியன் தோழர் தமிழ்க்கதிர் நிறைவுரை: தோழர் தியாகு நன்றியுரை: திருவாட்டி புனிதா சிவக்குமார் தமிழ்க்காப்புக் கழகம் தமிழ்நாடு–புதுச்சேரி தமிழ் அமைப்புகள்
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் மன்னிப்பு கேட்பாரா? வாகை சூடுவாரா? – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் மன்னிப்பு கேட்பாரா? வாகை சூடுவாரா? ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27.02.2023 அன்று நடைபெற உள்ளது. தற்சார்பு வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும் தி.மு.க.வின் கூட்டணியில் பேராயக்கட்சி சார்பில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் போட்டியிடுகிறார். எதிர் நிலையில் அஇஅதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்து, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா முதலிய பலரும் நின்றாலும் இவர்களுள் போட்டி பேராயக்கட்சிக்கும் அதிமுகவிற்கும் தான். பாசகவின் சதியால் பன்னீர்செல்வம் அணி அதிமுக…
தமிழ்நாடும் மொழியும் 27: சோழர் காலத் தமிழகம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 26 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 27 சோழர் காலத் தமிழகம் தொடர்ச்சி சோழர் பிரதிமைகள் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்டுக் கோவில்களில் வைக்கப்பட்டன. இராசராசன், அவன் அரசி உலகமாதேவி இவர்களது செப்புப் பிரதிமை உருவங்களைத் தஞ்சாவூர் பெரிய கோவிலில் செய்துவைத்த செய்தியை அக்கோவில் சாசனமொன்று கூறுகின்றது. இதேபோன்று திருக்காளத்திக் கோவிலில் இருந்த மூன்றாம் குலோத்துங்கனது உருவச்சிலை செப்பினால் ஆயது. இவனது மற்றொரு கற்சிலை உருவம் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் காணப்படுகிறது. சிவன், பார்வதி, கணபதி, முருகன் போன்ற தெய்வ உருவங்களும், மனிதன், பறவை முதலிய இயற்கை…
மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! இந்தி எதிர்ப்புப் போராட்டம்போல் நாம் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளோம். இந்தி, சமற்கிருதத் திணிப்புகள் தமிழைக் குற்றுயிரும் குறையுயிருமாகச் சிதைத்து வருகின்றன. அவற்றிற்குச் சிறிதும் குறைவி்லாத வகையில் ஆங்கிலத் திணிப்பு நம் தமிழை அழித்துக் கொண்டு வருகிறது. தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் பிற மொழிச்சொல் இடம் பெற்றது என்றால், அந்தத் தமிழ்ச்சொல் வாழ்விழந்து விடுகிறது. மு.க.தாலின் அரசு, அரசுப் பணியிடங்களில் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம், அயலகத் தமிழர் நலன் – மறுவாழ்வுத் துறை…
கலைமாமணி விருதுகளை இதழாளர்களுக்கும் வழங்குக ! – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைமாமணி விருதுகளை இதழாளர்களுக்கும் வழங்குக ! பல்துறைக் கலைஞர்களுக்கும் கலைமாமணி விருதுகள் தமிழ்நாட்டரசின் சார்பில் கலைபண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கப் பெறுகின்றன. பொதுவாக எத்தகைய விருதுகள் வழங்கினாலும் அவை குறித்த எதிருரைகள் வருவது வழக்கமாக உள்ளது. ஆனால், கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் போதெல்லாம் எதிர் அலைகள் மிகுதியாகவே வீசப்படுகின்றன. “ திரைத்துறையினருக்கே கொட்டிக் குவிக்கின்றனர்; கலைஆற்றலின் மிகுதியைக் கருதாமல் ஆடைக் குறைப்பின் மிகுதியைக் கருத்தில் கொண்டு விருதுகள் வழங்குகின்றனர்; குறிப்பிட்ட சாதியினர்மட்டும்தான் தகுதியாளர்களா? அவர்களுக்கே விருதுகள் வழங்குவது ஏன்?;…
சுரதாவின் தமிழ்ச்சொல்லாக்கம் 621-638
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 616-620 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 621-638 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 621. ராசுட்டிரம் – நாடு ஆந்திர சக்கரவர்த்திகள் காலத்தில் கர்மக ராசுட்டிரம் என்னும் ஒரு பூபாகம் ஆந்திர தேசத்தின் மத்தியில் சிறந்து விளங்கியது. இதுவே காலாந்தரத்தில் கம்மராசுட்டிரம் என்றாகிப் பின்னர் ’கம்ம நாடு’ என உச்சரிக்கப்பட்டதாகச் சிலசாசனங்களால் தெரிய வருகிறது. இக்கம்ம நாட்டை பரிபாலித்த ஆந்திர சக்கரவர்த்திகளுக்குப் பின் சோழர்களும், கடைசியாக முகமதியர்களும் அரசாண்டதாகச் சரித்திரங் கூறுகிறது. மேற்சொன்ன தமிழ் மன்னராகிய சோழர்கள் இம் மண்டலத்தைப் பரிபாலனஞ் செய்த பொழுதுதான் கர்மக…
தமிழ்நாடும் மொழியும் 26: சோழர் காலத் தமிழகம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 25 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 26 சோழர் காலத் தமிழகம் அரசன் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாண்டு முடிய, ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் சோழர் ஆட்சிக் காலமாகும். இக் காலத்தினைத் தமிழ்நாட்டின் மற்றொரு பொற்காலம் எனக் கூறுதல் வேண்டும். தெலுங்கு நாடு உட்பட தென்னிந்தியா முழுவதும் சோழர் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது எனக் கூறலாம். மேலும் சாவா, சுமத்திரா, ஈழம் முதலிய தீவகங்களிலும் சோழர் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறந்ததைப் பல வரலாற்றாசிரியர்கள் பலபடப் பாராட்டியிருப்பது நாமறிந்ததொன்றே. சுருங்கக்கூறின் தமிழ்நாட்டை ஆண்ட…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 616-620
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 611-615 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 616-620 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 616. Stock – இருப்பு சில தினங்களுக்கெல்லாம் ஆத்திரேலியாவிலிருந்து சில வியாபாரிகள் வந்து அவ்விடங்களிலிருந்த சோளங்களை மூட்டை நான்கு சிலிங் முதல் பத்து சிலிங் வரை விலை ஏற்றிக் கொடுத்து வாங்கி விட்டார்கள். பிறகு சில தினங்களுக்கெல்லாம் மூட்டை இருபது சிலிங் வரை ஏற்றமாகி அந்தச் சமயமும் ஆத்திரேலியா வியாபாரிகள் வந்து அவ்விடங்களிலிருந்த சோளம் முழுவதும் வாங்கி விட்டார்கள். நான் மாத்திரம் விற்கவில்லை. பிறகு சில தினங்களுக்கெல்லாம் சோளம் விலையேறி மூட்டை முப்பது…
என்னூல் திறனரங்கம் 3 : ‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம்’
தமிழே விழி! தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414) மலர்க்கொடி வெளியீட்டகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்க்காப்புக் கழகம் என்னூல் திறனரங்கம் 3 இலக்குவனார் திருவள்ளுவனின் ‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர ப.மருதநாயகம்’ நூல் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம் கூட்ட எண் Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரும் ஞாயிறு தை 22/05.02.2053 காலை 10.00 மணிக்கு மும்பை பல்துறைக் கலைஞர் இராணி சித்திரா…
தமிழ்நாடும் மொழியும் 25: சோழர் கால ஆட்சி முறை – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 24 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 25 சோழர் கால ஆட்சி முறை தொடர்ச்சி அளவைகள் இங்கிலாந்திலே வில்லியம் என்ற பேரரசன் தன் நாட்டை அளப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முந்தியே சோழ மன்னர்கள் தங்கள் நாட்டு விளைநிலங்களை நேர்மையான முறையிலே அளந்து பதிவும் செய்தார்கள். நிலங்கள் வேலி முறையில் கணக்கிடப்பட்டன. தஞ்சை, திருச்சி முதலிய மாவட்டங்களிலே இன்றும் குழி அல்லது வேலிக் கணக்கிலேயே நிலங்கள் குறிக்கப்படுகின்றன. ஒரு வேலி என்பது இக்காலத்தில் 63 ஏக்கருக்குச் சமமாகும். நிலங்களை அளக்கப் பயன்படுத்திய அளவுகோல் சீபாதம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 27: தீரன் திண்ணியன் தேசத் தலைவன்
(தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): தொடர்ச்சி) தீரன் திண்ணியன் தேசத் தலைவன் “களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்எண் தேர் செய்யும் தச்சன்திங்கள் வலித்த கால்அன் னோனே.” (புறநானூறு 87) “நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!” பகையரசின் அகந்தையை அறுத்திட இவ்விதம் எச்சரித்தாள் ஔவை. தமிழ் என்றால் வீரம் என்று பெருமிதம் கொள்ளும்…
