இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 7. பழந்தமிழ் நிலை தமிழ்மொழியின் தொடக்க காலத்தில் ஐ, ஔ நீங்கிய பத்து உயிர்களும், ற, ன நீங்கிய பதினாறு மெய்களும் இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம். ஐ என்பதை அ இ எனவும் அய் எனவும், ஔ என்பதை அ உ எனவும் அவ் எனவும் எழுதியும் ஒலிக்கலாம் என்று தொல்காப்பியர் கூறுகின்றனர். ஆகவே ஐ யும் ஔ வும் கூட்டொலிகளாகின்றன. ற என்பது ல்+த சேருங்கால் உண்டாகக் காண்கின்றோம். புல்+தரை=புற்றரை. ன…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):23
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 23 4. குலமும் கோவும் தொடர்ச்சி அழகிய பாண்டியன் பூதப் பாண்டியனுக்குப் பின்னே வந்த அழகிய பாண்டியன் பண்டைக் காலத்துப் பாண்டி மன்னருள் மிகச் சிறந்தவன். பொதியமலைச் சிற்றரசனாகிய ஆய் என்பவனை வென்று மேம்பட்ட அப் பாண்டியன் தன் வெற்றிச் சிறப்பு விளங்குதற் பெருட்டு அம் மலையடி வாரத்திலுள்ள ஓர் ஊருக்கு அழகிய பாண்டியபுரம் என்று பெயரிட்டான் என்பர்.24 சேந்தன் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரில்…
தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): நாற்று பறித்த இராமன்
(தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6) – தொடர்ச்சி) நாற்று பறித்த இராமன் பொன் நாடார் கொலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகும் தோழர் ஏ.எம். கோதண்டராமன் சில மாதக் காலம் கடலூர் மத்திய சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார். இடையிடையே வேறு சில வழக்குகளுக்காக அவர் சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மத்தியச் சிறையில் வைக்கப் பட்டார். கடலூர் நீதிமன்றத்தில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு இருந்தது. யாவற்றிலும் பெரிய வழக்கு — சதி மற்றும் கொலை வழக்கு —…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 611-615
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 606-610 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 611-615 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 611. Weight – நிறுக்குங் கருவி இரயில் நிலையுங்களில் சீட்டு(டிக்கட்டு) வாங்கும் ஜன்னல்களுக்கு முன்னே ஒரு வெயிட் (நிறுக்குங் கருவி) ஒன்று பலகைபோல் போட்டு விட்டால் அதன் மேல் ஏறி நின்றுதான் சீட்டு(டிக்கட்டு) வாங்க நேரிடும். அப்படி ஆள் ஏறியவுடன், ஏறினவன் இத்தனை பவுண்டு எடையுள்ளவன் என்று டிக்கட்டு விற்பவர்களுக்கு ஒரு முள் காட்டிவிடும். ஒரு பவுண்டுக்கு ஒரு மைலுக்கு இவ்வளவு கட்டணம் என்று ஏற்படுத்தி எடையின் மீதுசீட்டு(டிக்கட்டு )…
தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6)
(தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? – தொடர்ச்சி) ஏ. எம். கே. (6) மனவுறுதி சட்டத்தின் ஆட்சி என்றும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் சட்டம் தன்வழிச் செல்லும் என்றும் அரசிலிருப்பவர்கள் எவ்வளவுதான் பிரமாதமாய்ப் பறைசாற்றினாலும், அரசு இயந்திரத்தின் அடக்குமுறைக் கருவிகளே சட்டத்தை மீறுகிற சந்தர்ப்பங்களில் இந்தக் கோட்பாடுகளை எல்லாம் வசதியாக மறந்து விட்டுச் கண்களில் கறுப்புத் துணி கட்டி விடுவார்கள். இதை நியாயப்படுத்த அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? ஆயுதப் படையினரின் மனவுறுதி கெட்டு விடக் கூடாதாம். சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5), கடலூர் இரவு-தொடர்ச்சி) நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? எங்குச் சுற்றினாலும் இங்குதான் வந்து நிற்க வேண்டும் என்பது போல், காலநிலை மாற்றம் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் புதைபடிவ எரிபொருளின் வாசலில்தான் நிறுத்தப்படுகிறோம். செடிகொடிகள் மரங்கள் விலங்குகள் (மனிதனும் கூட) மண்ணில் புதைந்து நீண்ட காலம் மக்கிச் சிதைந்துதான் புதைபடிவ எரிபொருள் உண்டாகிறது. அது கரி வளி, நீரகம் எனும் இரு தனிமங்களால் ஆனது. நிலக்கரி, எண்ணெய் (கல்+நெய் = கன்னெய், பெற்றோல்), இயற்கை…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் அமுதவல்லி : கவிதை யாக்கும் மரபெல்லாம் கன்னித் தமிழின் நிலைகொண்டு குவியும் படியாய் எனதுள்ளம் குறித்தீர் என்றும் என்நன்றி புவியோர் போற்றும் இலக்கியங்கள் பொருந்தும் மரபைச் சொல்வீரேல் கவியோர் நெஞ்சின் போக்குணர்ந்து கவிதை சுவைத்தல் எளிதாமே…
தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5) : கடலூர் இரவு
(தோழர் தியாகு எழுதுகிறார் 22. காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும் தொடர்ச்சி) கடலூர் இரவு சிறைப்பட்ட எவரும் சிறையிலிருந்து தப்ப எண்ணுவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது அந்த எண்ணத்தைச் செயலாக்க முற்படுவதும் இயல்புதான். சாதாரணமான ஒருவருக்கே இப்படி யென்றால், பொதுவாழ்வில் ஈடுபட்டு ஏதேனுமொரு குறிக்கோளுக்காகச் சிறைப்பட்டவர்களுக்கு அதுவே புகழ்தரும் சாதனையாகி விடுகிறது. ஒளரங்கசீப்பின் ஆகுரா சிறையிலிருந்து தப்பியது வீர சிவாசிக்கும்,தென் ஆப்பிரிக்க பூவர் சிறையிலிருந்து தப்பியது வின்சுடன் சர்ச்சிலுக்கும், ‘வெள்ளையனே வெளியேறு!’போராட்டக் காலத்தில் ஆங்கிலேய ஆட்சியின் சிறையிலிருந்து தப்பியது செயப்பிரகாசு நாராயணனுக்கும், அதே ஆட்சியின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பியது…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 25
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 24 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 15 குன்னம் சிதம்பரம் பிள்ளை அரியிலூரில் இருக்கையில் எனக்குக் கல்வியில் அபிவிருத்தி ஏற்பட்டதோடு விளையாட்டிலும் ஊக்கம் அதிகரித்தது. பிராயத்திற்கு ஏற்றபடி விளையாட்டிலும் மாறுதல் உண்டாயிற்று. அரியிலூரிலுள்ள பெருமாள் கோயில் வாசலிலும் உள்ளிடங்களிலும் நண்பர்களோடு விளையாடுவேன். படத்தை (காற்றாடியை)ப் பறக்கவிட்டு அதன் கயிற்றை ஆலயத்திற்கு வெளியேயுள்ள கருடதம்பத்திலே கட்டி அது வான வெளியில் பறப்பதைக் கண்டு குதித்து மகிழ்வேன். கோபுரத்தின் மேல் ஏறி அங்கும் படத்தின் கயிற்றைக் கட்டுவேன். தோழர்களும் நானும் சேர்ந்து ஒளிந்து பிடிக்கும்…
தமிழ்நாடும் மொழியும் 24: சோழர் கால ஆட்சி முறை – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 23 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 24 சோழர் கால ஆட்சி முறை சோழ மன்னர்கள் வெற்றி வீரர்கள் மட்டுமல்ல; திறமை மிக்க ஆட்சி புரியும் ஆற்றல் உடைய மன்னர்கள் என்றும் கூறலாம். சில மன்னர்கள் போரிலே புலிகளாக இருப்பர்; மாற்றாரும் கண்டு தோற்றுக் காற்றெனப் பறந்தோடச் செய்யும் பெரு வீரமிக்க மன்னர்களாகவும் இருப்பர்; கூற்றுவனும் அத்தகைய அரசர்களைக் காணின் குடல் கலங்குவான். ஆனால் அவர்கள் நாட்டை ஆளத் திறமை சிறிதும் இல்லாது இருப்பர். இதனால் கண்ணீரும் செந்நீரும் சிந்திப்பெற்ற பெரு நாடுகளை…
தோழர் தியாகு எழுதுகிறார் 22. காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும்
(தோழர் தியாகு எழுதுகிறார் 21 : ஏ. எம். கே. (4)தொடர்ச்சி) காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும் (CLIMATE ACCOUNTABILITY AND CLIMATE JUSTICE) இந்தப் புவிக் கோளத்தில் காலநிலை மாற்றத்துக்குப் புவி வெப்பமாதல் காரணம். புவி வெப்பாமதலுக்கு கரியிருவளி(Carbon dioxide) உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு காரணம். இந்த உமிழ்வு என்னும் கேடு செய்வதில் நாடுகளிடையே நிகர்மை (சமத்துவம்) இல்லை. கேடு செய்யும் நாடுகள் சில என்றால், கேட்டின் கொடும்பயனைத் துய்த்துத் துன்புறும் நாடுகள் பல. அந்தச் சில நாடுகள் தொழில்துறையில் வளர்ச்சி…
தோழர் தியாகு எழுதுகிறார் 21 : ஏ. எம். கே. (4) : சட்டம் ஒன்றுதான்
(தோழர் தியாகு எழுதுகிறார் 20: காலநிலைக் களம் தொடர்ச்சி) சட்டம் ஒன்றுதான் சிறைக் கண்காணிப்பாளரையும் ஏனைய அதிகாரிகளையும் காவலர்களையும் சிறைக்கு வெளியே துரத்தியடித்த பின், ஆர்வக் குரல் எழுப்பிய கைதிகளிடையே ஏ.எம். கே.யின் எச்சரிக்கைக் குரல் ஒலித்தது. “தோழர்களே! நிதானம் வேண்டும். பகைவனிடம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அவனைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது. நியாயம் நம் பக்கம்தான் உள்ளது. ஆனால், போராடித்தான் அந்த நியாயத்தை நிலைநாட்ட முடியும். நாம் இன்னும் வெற்றி பெற்று விடவில்லை என்பதை மறவாதீர்கள். பகைவனின் அடுத்த தாக்குதலுக்கு நாம் தயாராக வேண்டும்.” வெளியிலிருந்து…
