இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 25

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ இவர்கள் ஆரியர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்தவர்களாவார்கள் என்று கூறலாம். ஒரு சிலர் அவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய காலத்திலோ அக்காலத்தை ஒட்டிப் பின்போ வாழ்ந்திருக்கலாம். சிலர் பெயர்களும் பாடல்களுட் பயின்ற சில சொற்களும் வடமொழியைச் சார்ந்தன என்று கருதப்பட்டன. தேவன், பூதன், கீரன் முதலியனவற்றை வடசொற்கள் என்றே கருதியோரும் உளர். இவையெல்லாம் தூய தமிழ்ச்சொற்களே. தேவன் என்ற சொல் இனியன், விருப்பத்திற்குரியன், இடத்திற்குரியன் என்னும் பல பொருளினது. பூதன், பூதம்  என்ற தமிழ்ச் சொல்லினடியாகத்…

தோழர் தியாகு எழுதுகிறார் 15: காலநிலை மாற்றம் ஊட்டி வளர்க்கும் வறுமையும் அடிமைமுறையும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 14 : அனல் கீழ் பனித் திரள்-தொடர்ச்சி) காலநிலை மாற்றம் ஊட்டி வளர்க்கும் வறுமையும் அடிமைமுறையும் காலநிலை மாற்றம் என்றால் என்ன? கோடைக் காலத்தில் வெப்பமும் குளிர் காலத்தில் குளிரும் கூடுதலாக இருக்கும் என்பதுதான் என்றால், வெப்பதட்பத்தைச் சீர்செய்ய உதவும் மின் பொறிகளின் துணைகொண்டு சமாளித்து விடலாம். பெருமழை பெய்வதுதான் என்றால் குடை அல்லது மழையங்கி கொண்டு சமாளிக்கலாம். புயல்தான் என்றால் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம். இவையெல்லாம் இடையில் வந்து போகிறவை என்றால் நிலையாகக் கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் வழக்கம்…

தமிழர் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து,

01.01.2054  / 15.01.2023 தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து அகரமுதல படைப்பாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும்  தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா, திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவிக்கிறோம்.    இந்து சமயம் உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் பொங்கல் நாளினை இந்து சமய விழா என்பது தவறு. திராவிடம் என்னும் சொல் உருவாவதற்கு முன்னரே கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் நாளினைத் திராவிடத்திருநாள் என்பதும் தவறு. தமிழ்மொழிஇனக் குடும்பத்தினர் பகுதிகளில் தமிழ்மொழிஇனக் குடும்ப விழா என்று கொண்டாடுவோம்! பொங்கல் விழா தமிழர் திருநாளே! உலகெங்கும் உள்ள…

தோழர் தியாகு எழுதுகிறார் 14 : அனல் கீழ் பனித் திரள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 13 : ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள் – தொடர்ச்சி) அனல் கீழ் பனித் திரள்   காலநிலை மாற்றம் தொடர்பான தரப்புகளின் மாநாடு –27 (கொப்27) எகித்தில் நடந்து முடிந்துள்ளது. கொப்27 (COP27)  மாநாட்டில் ஐநா பொதுச் செயலர் அந்தோணியோ குத்தரசு ஆற்றிய உரையை — நரகத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கையை — சென்ற மடலில் மேற்கோளாகக் கொடுத்திருந்தேன். மாநாட்டின் உருப்படியான விளைவு என்பது காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வின் வளர்ச்சிதான். காலநிலை மாற்றம் என்பது கற்பிதமன்று, அறிவியல் புனைகதையன்று. அஃது அறிவியல் அடிப்படையிலானது. அறிவியலின் துணைகொண்டுதான் அதை வெல்லவும் கூடும். இந்த அறிவியல் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது இம்மாநாட்டில் வெள்ளிடை மலையாக ஒளிர்ந்தது. இஃது அதிர்ச்சியளிக்கக் கூடிய உண்மை: ஏடேறிய வரலாற்றில் கடந்த ஏழாண்டுக் காலம் போல் ஒரு வெப்பக் காலம் கண்டதே இல்லை….

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):21

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 20. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):21  4.குலமும் கோவும்      பழந் தமிழ் நாட்டில் பல வகுப்பார் வாழ்ந்திருந்தார்கள்; பல குல மன்னர் ஆட்சிபுரிந்தார்கள். அன்னார் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் பெயரும் பெருமையும் ஊர்ப் பெயர்களால் விளங்குகின்றன. நாகர்      நாகர் என்பார் ஓர் இனத்தார். தமிழ் இலக்கியங்களில் நாகநாடு செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது.1 சோழ மன்னன் ஒருவன் நாக மங்கையை மணந்து பெற்ற மைந்தனே தொண்டைமான் என்னும் பெயரோடு காஞ்சி…

தோழர் தியாகு எழுதுகிறார் 13 : ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 12 : பசிபிக்கு தவிப்பு – தொடர்ச்சி) ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள் துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தின் விளைவாக அழிவின் விளிம்பில் நிற்கும் மற்ற நாடுகள் எவை? தாழி அன்பர்களின் இந்தக் கவலைதோய்ந்த வினவலுக்கு, பொதுவாக பசிபிக்கு தீவுகள், ஆனால் அவை மட்டுமல்ல என்று விடையிறுக்கலாம். மேலும் துல்லியமாக மாலத்தீவுகள் உள்ளிட்ட சில நாடுகளை ஐநா அமைப்பின் காலநிலை வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர். 1900க்குப் பின் நாளது வரை கடல்மட்டம் 15 – 25 கீழ் நூறன் கோல்(centimeter) (6 முதல் 10…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605

( தமிழ்ச்சொல்லாக்கம் 597 – 600 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 601-605 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 601. போசன பாத்திரம் –           பரிகலம் 602. அக்கினிச் சுவாலை         –           தீக்கொழுந்து நூல்   :           திருக்குற்றாலக் குறவஞ்சி…

கைப்பாவை ஆளுநரின் அடாத செயலும் தன்மான முதல்வரின் ஆளுமைச் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

கைப்பாவை ஆளுநரின் அடாத செயலும் தன்மான முதல்வரின் ஆளுமைச் சிறப்பும் இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த மார்கழி 25, 2053/09.01.2023 அன்று கூடியது. மரபிற்கிணங்க ஆளுநர் உரையும் இக்கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், ஒன்றிய ஆள்வோரின் கைப்பாவையாகச் செயற்படும் ஆளுநரால் இந்நாள் கறுப்பு நாளாக மாறிவிட்டது. பா.ச.க.ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் அத்து மீறல் நடப்பது வழக்கமாகி விட்டது. அதுபோல் இங்கும் ஆளுநரின் அத்துமீறல் நடந்து உள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாள் ஆளுநர் அரசின் உரையை வாசிப்பது மரபு. இது…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2  காட்சி : 5

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2  காட்சி : 5 அமுதவல்லி – உதாரன் கலி விருத்தம் அமுதவல்லி  :           புண்பட்ட                நெஞ்சும்        பொலிவுற      மாந்தர்                              பண்பாடுந்               தமிழைப்       பணிந்து         வணங்குவேன்                              பண்பட்ட                திறனாம்        புலமை         யென்னுங்                              கண்பெற்ற               கவிஞர்க்குக்    கனிவான    வணக்கம் பதின்சீர் விருத்தம்                              வெண்பா                 அரும்பா                  வீணாம்                                                         முயற்சி                   யென்றே                                        விலகி          …

தோழர் தியாகு எழுதுகிறார் 12 : பசிபிக்கு தவிப்பு

(தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று – தொடர்ச்சி) பசிபிக்கு தவிப்பு துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தால் இடர்நிலையில் இருக்கும் மற்ற தீவுகள்பற்றித் தோழர் கதிரவன் கேட்டிருந்தார். பலருக்கும் அதே கேள்வி உண்டு. ஒரு வகையில் பார்த்தால் இந்தப் புவிக் கோளமே காலநிலை மாற்றத்தால் இடர்நிலையில்தான் உள்ளது. முன்னால் யார், பின்னால் யார் என்பதில்தான் வேறுபாடு. மேலும் கடலுக்குள் மூழ்கிப் போவது மட்டும்தான் கேடு என்பதில்லை. வேறு பல கேடுகளும் நம்மைச் சூழ்ந்துள்ளன. கடலுக்குள் மூழ்கிப் போவது என்ற கடைக்கோடி இடர்நிலையில்…

தமிழன் வாயில் .. … வேண்டாத வடநாட்டு  ‘ஜி’- இரா. திருமாவளவன்

தமிழன் வாயில் .. … வேண்டாத வடநாட்டு  ‘ஜி’ ஆர் எசு எசு-இன் சூழ்ச்சியை உணர்ந்து தமிழ்நெறியைக் காப்பீர்! இக்கால் அடிக்கடி ‘ஜி’ எனும் சொல்லினைப் பல இடங்களில் கேட்க முடிகிறது. வடநாட்டில் வடவர்கள் ஒருவரை ஒருவர் மதிப்போடு அழைத்துக்கொள்ளப் பயன்படுத்துகின்ற ‘ஜி’யை இன்று தமிழர் சிலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சுவாமி’ஜி’, குரு’ஜி’, குமார்’ஜி’, இராதா’ஜி’, இராமா’ஜி’… என ‘ஜீ’…நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குட்டிப் போட்டு வருகின்றது.. இந்தியாவின் ஆர் எசு எசு( RSS) … இந்தியாவில் மட்டும் தன் கைவரிசையைக் காட்டவில்லை…

தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று

(தோழர் தியாகு எழுதுகிறார் 10: மா இலெனின் விளக்கமும் பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல் குறிப்பும் தொடர்ச்சி) காலநிலை மாற்றம் கற்பிதமன்று “மெய்ம்மைகளிலிருந்து உண்மைக்கு” என்பார் மா இலெனின். தரவுகளிலிருந்து முடிவுக்கு என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம். தரவுகள் இல்லாமல் சில முன்-முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவதால் பயனில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான தரவுகள்  இல்லாமல் இந்தச் சிக்கலான போராட்டத்தை முன்னெடுக்க இயலாது. எகித்து நாட்டில் இப்போது காலநிலை மாற்றம் தொடர்பான உயர்நிலை மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டை ஒட்டி முதன்மையான சில காலநிலைத் தரவுகள் வெளிவந்துள்ளன. நேற்றைய இந்து (ஆங்கிலம்) நாளேட்டில் தரவு அணி…