மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய உரையரங்கம்
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (திருவள்ளுவர், திருக்குறள் 268) மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய உரையரங்கம் தை 08, 2054 ஞாயிறு 22.01.2023 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் புகழ் போற்றுநர் : வழ.பால சீனிவாசன் முனைவர் தமிழ் வேலு மும்பை இசைக்கலைஞர் இராணிசித்திரா மாணவர் தமிழ் கார்த்தி…
தோழர் தியாகு எழுதுகிறார் 18 : கரி படுத்தும் பாடு
(தோழர் தியாகு எழுதுகிறார் 17.2: ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி- தொடர்ச்சி) கரி படுத்தும் பாடு காலநிலை மாற்றம் வறுமைக்கும் அடிமை முறைக்கும் காரணமாகி மாந்த வாழ்வைச் சீர்குலைக்கக் கண்டோம். ஆனால் எந்த உயிரினத்தையும் அது விட்டு வைப்பதில்லை. காலநிலை மாற்றம் இப்படியே தொடருமானால் கடல்சார் உயிர்க் கோளங்கள் இந்த நூற்றாண்டு முடிவதற்குள் உலகளாவியச் சிதைவுக்குள்ளாகும் என்று பிரின்சுடன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. மூ ஊரிகள் (Dinosaurs) அழிந்த பிறகு ஏற்படும் பேரழிவாக இஃதமையும். புவி வெப்பமாகும் வேகத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் புவிக்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 மோனைப்புலவன் – அல்லி கலித்தாழிசை மோனை : மேற்றிசையில் ஒளிகுறைய மேகங்கள் கருத்துவர தோற்றந்தான் மிகுந்தமயில் தோகையை விரித்தாட காற்றினிலே குயிலோசை கனிவைமிக எழுப்புகையில் வேற்றாளாய் எனைவிலக்கி விரைந்துநீ செலலாமோ ஆதவனும் மேற்றிசையில் அழகொளியைப் பரப்பிவிட போதினையே மலர்த்தியங்கே புகுகின்ற …
இதழ்கள் மூலமான தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! -தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 19- இலக்குவனார் திருவள்ளுவன்
இதழ்கள் மூலமான தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 19 (ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 18: தொடர்ச்சி) இதழ்கள் மக்கள் மீது ஆளுமையைச் செலுத்துவதால் தமிழ்க்காப்புப்பணியில் ஈடுபட்டுப் பிற மொழிக்கலப்பிற்கு இடங்கொடாது இதழ்கள் நடத்த வேண்டும். “தமிழே எழுதுக! தமிழையே நாடுக!” என 1915 இலேயே தாம் நடத்திய ‘ஞானபாநு’ இதழில் சுப்பிரமணிய சிவா வலியுறுத்தியுள்ளார். அவர், “தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ்சனங்களே சாக்கிரதை! சாக்கிரதை! உங்களுடைய மொழியைக் காப்பாற்றுங்கள். ஒரு…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 24
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 23 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 14 தொடர்ச்சிசடகோபையங்காரிடம் கற்றது தொடர்ச்சி மாலை வேளையில் அவர் கடை வீதி வழியே செல்வார். என் வத்திரத்தை வாங்கி மேலே போட்டுக்கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடைய திருவுலாவிலே அங்கவத்திரமாக உதவும். அவர் செல்லும்போது அவரைக் கண்டு ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் இருக்கச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்புக் காணிக்கையை ஐயங்கார் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வருவார். எல்லாவற்றையும் சேர்த்து…
தோழர் தியாகு எழுதுகிறார் 17.2: ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி
(தோழர் தியாகு எழுதுகிறார் 17 : ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி ஒரு நாள் ஏஎம்கே ஏதோ உடல்நலிவுக்காகச் சிறை மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் உடம்பைக் காண்பித்து, மருந்து கேட்டார். மருத்துவர் சொன்னார்: ” இதோ பாருங்கள் ஐயா. இது கறுப்புக் குல்லா சிறை. இங்கே மருந்தெல்லாம் அவ்வளவாகக் கிடைக்காது. ஏதாவது வாணாளர்(லைஃபர்) சிறைக்குப் போய்விட்டீர்கள் என்றால் நல்ல மருந்தாகக் கிடைக்கும்.” ஆக, நோய்க்கு மருந்து கொடுப்பதில் கூட கறுப்புக் குல்லாய் என்றால் பாகுபாடு! உணவு தொடர்பாகவும் கூட…
தமிழ்நாடும் மொழியும் 23: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 22 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 23 பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி முதற் குலோத்துங்கனின் தாய் அம்மங்கைதேவி. இவள் கங்கைகொண்ட சோழனின் மகளாவாள். குலோத்துங்கனின் தந்தை வேங்கியை ஆண்ட இராசராசன் – இவன் குந்தவையின் மகன். குந்தவை முதல் இராசராசனின் மகள். எனவே முதற்குலோத்துங்கன் சாளுக்கியன் என்பதைவிடச் சோழன் என்னலே பொருத்தமுடைத்தாகும். முதற் குலோத்துங்கன் சோழநாட்டை கி. பி. 1070 லிருந்து 1120 வரை, அஃதாவது ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்டுள்ளான். இவன் பட்டம் பெற்ற காலத்தில் சோழப் பேரரசு பல…
தோழர் தியாகு எழுதுகிறார் 17 : ஏ. எம். கே. நினைவாக (2)
(தோழர் தியாகு எழுதுகிறார் 16 : ஏ. எம். கே. நினைவாக (1) தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (2) கறுப்பும் வெள்ளையும் கடலூர் மத்தியச் சிறையானது பரப்பிலும் கொள்திறனிலும் சிறியதே என்றாலும், மிகப் பழமையான சிறைகளில் ஒன்று. அது கடலூர் நகரத்திலிருந்து சுமார் ஐந்து அயிரைப்பேரடி ( கிலோ மீட்டர்) தொலைவில், வண்டிப்பாளையம் கிராமத்தில், கேப்பர் குவாரி என்னும் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. ஆகவேதான் வண்டிப் பாளையம் சிறை, கேப்பர் குவாரி சிறை என்ற செல்லப் பெயர்களும் அதற்கு உண்டு….
தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 2/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 1/3 தொடர்ச்சி) செஞ்சொல் நடைவேந்தர் ‘நடை’ என்பது எழுத்தாளரின் இயல்பையும், சித்தனைப் போக்கையும் வெளிப்படுத்த-வல்லது என்பர். எளிமை, அமைதி, அடக்கம் இவற்றின் வடிவானவர் திரு.வி.க. ஆனால், அவர்தம் நடை வீறுகொண்டதாய், சிந்தனையைக் கிளறுவதாய். மிடுக்கு நிறைந்ததாய் விளங்கும் தெளிந்த நடையாகும். வாழ்வையும் இலக்கியத்தையும் ஒன்றாகக் கண்டு வாழ்ந்த திரு வி. க. வுடன் நெருங்கிப் பழகிய முனைவர் மு.வ. அவர்கள், அவர்தம் நடையில் காணப்படும் வியத்தகு கூறுகளைத் தம் கட்டுரை யொன்றில், “எழுதும்போது இருந்த பண்பாடும் பேசும்போது வந்தது….
தோழர் தியாகு எழுதுகிறார் 16 : ஏ. எம். கே. நினைவாக (1)
(தோழர் தியாகு எழுதுகிறார் 15 : வறுமையும் அடிமைமுறையும்-தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (1) 20.11.2022: ஏஎம்கே என்று நாமறிந்த தோழர் ஏ.எம். கோதண்ட ராமன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள். தோழர் ஏஎம்கே மறைந்த சில நாளில் அவர் குறித்து முகநூலில் எழுதிய இடுகைத் தொடரைத் தாழி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் நான் ஏற்கெனவே அவரது சிறை வாழ்க்கை குறித்து கம்பிக்குள் வெளிச்சங்களில் எழுதியதை (தேவையான சில திருத்தங்களோடு) ஒரு தொடராகப் பதிவிடுகிறேன்.] கைதி செத்தால்… கறுப்புத் திரைகள் திருவோணம்…
பெரியாரின் போர்க்களங்கள் நூல் வெளியீட்டு விழா
திராவிட இயக்கத் தமிழர் பேரவை கருஞ்சட்டைப் பதிப்பகம் பெரியாரின் போர்க்களங்கள் நூல் வெளியீட்டு விழா தை 02, 2054 / 16-01-2023 திங்கள்கிழமை காலை 11 மணி நந்தனம் சென்னை புத்தகக் கண்காட்சி, சிற்றரங்கம்.தலைமை: பெல் கு.இராசன் சிறப்புரை சுப.வீரபாண்டியன் பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை திருமாவேலன் கலைஞர் தொலைக்காட்சி தோழமையுடன்சுப.வீரபாண்டியன்
பொங்கல் வாழ்த்துகள் – த. ஞானசேகரன்
நாளெல்லாம் தமிழ்பேசி பொங்கலிடுங்கள் ! பொங்கலிடுங்கள் ! நீங்கள் பொங்கலிடுங்கள் ! புத்தாண்டு பிறந்ததென்று பொங்கலிடுங்கள் ! புதுவாழ்வு காணவேண்டி பொங்கலிடுங்கள் ! புதுமை எங்கும் பூத்ததென்று பொங்கலிடுங்கள் ! நாளெல்லாம் தமிழ்பேசி பொங்கலிடுங்கள் ! நானிலத்தில் தமிழ் வளரப் பொங்கலிடுங்கள் ! பாரதியின் கொள்கை வாழப் பொங்கலிடுங்கள் ! பாரதம் செழித்திடவே பொங்கலிடுங்கள் ! சமநீதி காத்திடவே பொங்கலிடுங்கள் ! சமுதாயம் தழைத்திடவே பொங்கலிடுங்கள் ! குறு நோக்கு விலகிடவே பொங்கலிடுங்கள் ! குன்றாத நேயம் வளரப் பொங்கலிடுங்கள் ! தமிழர்தாம் ஒன்றுபடப்…
