உலகத்தமிழ்ச்சங்கம், நூல் அரங்கேற்றம்
நூல்கள் அரங்கேற்றம் மார்கழி 14, 2053 – 29.12.2022 வியாழன் முற்பகல் 10.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கவிஞர் ச.கசேந்திரன், கவிஞர் பொன்.சந்திரன், எழுத்தாளர் கா.புவனேசுவரி, எழுத்தாளர் சோ.பரமசிவம், ஆய்வாளர் சோழ.நாகராசன் ஆகியோரின் நூல்கள் அரங்கேற்றம் மதிப்புரைகளுடன்.
ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 18: இலக்குவனார் திருவள்ளுவன்
ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 18 (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 17 தொடர்ச்சி) தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இந்தியா நாட்டியவிழா குறித்த விளம்பரங்களை எங்கும் பார்க்கலாம் அதில் ஆங்கில விளம்பரங்களிலில் ஆங்கில முத்திரை இருப்பதையும் காணலாம். தமிழக ஆட்சியாளர்களின் அறியாமைகளுள் ஒன்று ஆங்கில மடல், ஆங்கில ஆணை, ஆங்கில விளம்பரம் முதலியவற்றில் தமிழக அரசின் முத்திரையை ஆங்கிலத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது. தமிழ் முத்திரையைப் பயன்படுத்தினால் குற்றமாகிவிடும் என்ற பதைபதைப்பு அவர்களுக்கு. சாலை அறிவிப்புகள், விளம்பரங்கள்,…
தமிழ்க்கூடல், மதுரை
உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை தமிழ்க்கூடல் மார்கழி 13, 2053 புதன் 28.12.2022 முற்பகல் 10.00
உ.வே.சா.வின் என் சரித்திரம் 21
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 20 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 12 தொடர்ச்சி அரியிலூர் ஞாபகங்கள் இங்குள்ள விட்ணு கோயில் பெரியது. பெருமாளுக்கு வேங்கடேசப் பெருமா ளென்பது திருநாமம். கோயிலின் மகா மண்டபத்தில் மகா விட்ணுவின் பத்து அவதாரங்களின் திருவுருவங்களும் தூண்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அம்மண்டபத்திற்குத் தசாவதார மண்டபமென்ற பெயர் வழங்குகின்றது. அங்கே மூர்த்திகளெல்லாம் மிக அழகாக அமைந்திருக்கின்றன. இங்கே ஒரு சிவாலயமும் இருக்கிறது. சிவபெருமானுக்கு ஆலந்துறை ஈசரென்றும் அம்பிகைக்கு அருந்தவநாயகி யென்றும் திருநாமங்கள் வழங்குகின்றன. சமீன்தார்கள் குலதெய்வமாகிய ஒப்பிலாதவளென்னும் துருக்கையின் கோயிலும், காமாட்சியம்மன் கோயில், விசுவநாதசுவாமி…
தமிழ்நாடும் மொழியும் 20: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 19 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 20 6. பிற்காலச் சோழர் வரலாறு சோழர் எழுச்சி சங்கக்காலத்தில் சீரும் சிறப்பும் கொண்டு விளங்கிய சோழர்கள் பிற்காலத்தில் பல்லவர்க்குக் கீழ்க் குறுநில மன்னர்களாகவும் அதிகாரிகளாகவும் வாழ நேரிட்டது. பல்லவர் காலத்தில் இவ்வாறு அழிந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலே மறுபடியும் தம் பண்டைச் சிறப்பை நிலை நாட்டக் கிளர்ந்து எழலானார்கள். பிற்காலச் சோழப்பேரரசை நிறுவியவன் விசயாலயன் என்பவனாவான். பிற்காலச் சோழர்க்குத் தலைநகர் தஞ்சை மாநகராகும். விசயாலயன் காலம் கி. பி. 850-71 என்பதாகும். பல்லவர்…
6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 5/6
(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-4/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 5/6 இந்நூற் கருத்துகளுடன், தாம் ஆராய்ந்த வேறு சில கருத்துகளையும் சேர்த்து ‘பண்டைச் சேரரைப் பற்றிய சில ஆராய்ச்சிகள்’ (Some Studies about the Cheras of yore) என்னும் தலைப்பிட்டு ஆங்கில நூல் ஒன்றும் எழுதி நாவலர் பாரதியார் வெளியிட்டார். சேரர் தாய முறை சேரர் தலைநகரான வஞ்சி குறித்துத் தமிழறிஞர் பெரு மக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவன போன்றே, சேரர்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 22
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 21 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 6. பழந்தமிழ் இலக்கியம் மொழி என்பது நேருக்கு நேர் கருத்தினை அறிவிக்கும் கருவியாகப் பயன்பட உருவாக்கப்பட்டது; என்றாலும், எழுத்துகள் உண்டான பின்னர் அது கால இடையிட்டும் நாடு இடையிட்டும் கருத்தினை அறிவிக்கும் கருவியாகவும் பயன்படும் நிலையை அடைந்துள்ளது. உயர்ந்த கருத்துகளைத் தன்னுள் கொண்டிருப்பதே இலக்கியம் எனப்படும். மொழியின் முதிர்ந்த பயன் இலக்கியம் எனலாம். இலக்கியமே மக்கள் வாழ்வினைச் சிறப்பிக்கும்; பண்படுத்தும்; இன்பமாக்கும்; உயர்நிலைக்குக் கொண்டு செல்லும். இலக்கியம் என்பது தூய தமிழ்ச்சொல். குறிக்கோளை இயம்புவது…
தி.சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா, மதுரை
நாள்: மார்கழி 11, 2053 திங்கள் 26.12.2022 மாலை 5.00 இடம்: அரபிந்தோ மீரா பதின்மப் பள்ளி, மதுரை 625016 திப்புசுல்தான் சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா தலைமையும் நூல் வெளியீடும்: முனைவர் சா.குமார் துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நூலறிமுகம்: முனைவர் நிருமலா மோகன் சிறப்புரை: முனைவர் மு.கிருட்டிணன், துணைவேந்தர், மத்தியப்பல்கலைக்கழகம், திருவாரூர் வாழ்த்துரை, வரவேற்புரை, நன்றியுரை: அழைப்பிதழில் உள்ளவாறு பலர் ஏற்புரை: நூலாசிரியர் திப்புசுல்தான் சபருல்லா
‘பள்ளி’ அறியாப் பள்ளிக் கல்வித் துறையினரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பலாமா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 17: இலக்குவனார் திருவள்ளுவன்
‘பள்ளி’ அறியாப் பள்ளிக் கல்வித் துறையினரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பலாமா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 17 (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 16 தொடர்ச்சி) திட்டங்கள் மக்களுக்காகத்தான். அப்படி என்றால் திட்டங்களின் பெயர்களும் தமிழில்தானே இருக்க வேண்டும்! மக்களின் குறைகளைக் களையவும் முன்னேற்றத்திற்காகவும் பல நல்ல திட்டங்களைச் செயற்படுத்தி வரும் தமிழ்நாட்டின் அரசு அவ்வாறு கருதாதது விந்தையாக உள்ளது. உலகத் சதுரங்க விழா(44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி: நம்ம chennai, சென்னை செசு) மாணாக்கியர், இளம்பெண்களுக்கான காவல்துறை உதவித் திட்டம்(போலீசு அக்கா’)…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):18
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 17. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):18 வெளி வெளி என்னும் சொல் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றது. நாகபட்டினத்துக்கு அருகே வடக்குவெளி என்னும் ஊர் உண்டு. சங்ககாலத்துப் புலவரில் இருவர், வெளி என்னும் பெயருடைய ஊர்களில் பிறந்ததாகத் தெரிகின்றது. எருமை வெளியனார் என்பது ஒருவர் பெயர். வீரை வெளியனார் என்பது மற்றொருவர் பெயர். அவ் விருவரும் முறையே எருமை வெளியிலும், வீரை வெளியிலும் பிறந்தவ ரென்பது வெளிப்படை. அரணும் அமர்க்களமும் தமிழகத்தில் முன்னாளில் கோட்டை கொத்தளங்கள்…
மாதம்பட்டி செஞ்சோலை பண்ணை துவக்க விழா
மார்கழி 10, 2053/ 25.12.2022 ஞாயிறு காலை 9.30 – 01.30 மாதம்பட்டி செஞ்சோலை பண்ணை துவக்க விழா நம்மாழ்வார் நினைவேந்தல் இயற்கை விளைபொருட்கள் நேரடிச் சந்தை சிறப்புரை: காருண்யா நடராசன் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 84
(குறிஞ்சி மலர் 83 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 29 தொடர்ச்சி மணிமேகலையைப் பற்றி எண்ணியபோது உடன் வந்திருப்பவர்களையெல்லாம் எங்காவது விலக்கித் துரத்தி விட்டுத் தனியாக அந்தத் தீவின் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கொந்தளிப்பின்றி அடங்கிக் கிடக்கும் கடலைப் பார்த்தவாறே தன் முகமாகத் தனக்குள்ளே நினைவுகளில் ஆழ்ந்து மௌனமாக அழவேண்டும் போலப் பைத்தியக்காரத்தனமானதொரு ஆசையும் அவளுக்கு உண்டாயிற்று. விலை மதிப்பற்றனவும், மீட்டு எடுக்க முடியாதனவுமாகிய பழைய பொற்காலத்தின் அழகிய நினைவுகள் அந்தக் கடற்கரைப் பகுதிகள் எங்கும் ஒளிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். மாலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்….
