6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 6/6
(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-5/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 6/6 தொல்காப்பியப் பொருட்படலமும் புதிய உரையும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் பலர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணாக்கர்க்குத் தொல்காப்பியப் பாடம் சொல்லி வருங்கால் சிற்சில இடங்களில் உரையாசிரியர்கள் தமிழ் மரபுக்கும் தொல்காப்பியர் கருத்துக்கும் மாறுபட்டு உரை எழுதியிருப்பதைக் கண்டார். இலக்கணக் கடல் சோழவந்தான் அரசஞ் சண்முகனாரோடும், இருமொழிப் புலமைப் பெருமழைப் புலவர் பண்டிதமணியுடனும் தம் கருத்துகளைக் கலந்து பேசி இறுதியாக, தொல் காப்பியம்…
தன்னலம் பெரிதா ? இனநலம் பெரிதா ? – புலவர் பழ.தமிழாளன்
தன்னலம் பெரிதா ? இனநலம் பெரிதா ? 1. மனமொழியால் ஒன்றாது மதிமயங்கித் தன்னலத்தால் செயலே செய்வான் மானமுமே இல்லாத மாக்களிலும் கீழான பிறவி யாவான் தனதுநலம் ஒன்றினையே தலையாகக் கொண்டேதான் வினையே செய்வான் தன்னினத்துப் பகைவர்கால் தான்வீழுந் தறுதலையன் தமிழ னல்லன் இனம்வாழ்ந்தால் இன்பமுடன் எல்லாரும் வாழ்வாரென் றெண்ண மற்றே இனப்பகையின் பின்சென்றே எடுபிடி யாய் இருப்பவனும் இறந்தோ னாவான் இனப்பகையை வீழ்த்துதற்கே எவ்விழப்பு வந்தாலும் ஏற்று வாழ்வோன்…
தோழர் தியாகு எழுதுகிறார் 2
(தோழர் தியாகு எழுதுகிறார் 1 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 2 காதல் விடுமையா? பாலியல் விடுமையா? கிளாரா செட்கினுடன் பாலியல் சிக்கல்கள் குறித்து உரையாடுகிறார் மா இலெனின். இந்த உரையாடலின் போக்கில்தான் “கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு” எனும் பாலியல் விடுமைக் கொள்கை பற்றிப் பேசுகிறார். இளைஞர்கள் பலரும் தாங்கள் நம்பும் பாலியல் விடுமைப் போக்குதான் புரட்சியமானது என்று நம்புகின்றனர். இதுதான் பொதுமைத் தனமானது (கம்யூனிசுட்டுகளுக்குரியது) என்றும் புரிந்து கொள்கின்றனர். இலெனின் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. எம்மைப் போன்ற [அல்லது நம்மைப் போன்ற?]…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ –22 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ இனி இயற்பெயரால் அறியப்பட்டுள்ள புலவர்களையும் அவர்கள் இயற்றியவற்றுள் நமக்குக் கிடைத்துள்ள பாடல் தொகைகளையும் காண்போம். புலவர் பெயர் பாடல் தொகை 1. அகம்பல்பாலாதனார் 1 2. அஞ்சியத்தை மகள் நாகையார் 1 3. அஞ்சில் அஞ்சியார் 1 4. அண்டர் மகன் குறுவழுதியார் 2 5. அதியன் விண்ணத்தனார் 1 6. அந்தில் இளங்கீரனார் 1 …
செந்தமிழ்த் தாயே!- கவிஞர் முடியரசன்
செந்தமிழ்த் தாயே! எடுப்பு எங்கள் தமிழ் மொழியே! – உயிரே! -எங்கள் தொடுப்பு இங்குனை நாங்கள் இகழ்ந்தத னாலேஇழிநிலை அடைந்தோம் உரிமையும் இழந்தோம் -எங்கள் முடிப்பு பூமியில் மானிடர் தோன்றிய நாளேபூத்தனை தாமரைப் பூவினைப் போலேபாமிகும் காவியப் பாவையே தாயேபணிந்தோம் கடைக்கண் பார்த்தருள் வாயே. -எங்கள் இயலிசை கூத்தென இலங்கிடு வாயேஎமதுயிர் உணர்வுகள் யாவையும் நீயேமயலெமை நீங்கிட மதியருள் வாயேமைந்தரைக் காத்தருள் செந்தமிழ்த் தாயே. -எங்கள் – கவிஞர் முடியரசன்
தோழர் தியாகு எழுதுகிறார் 1
தோழர் தியாகு எழுதுகிறார் – முன்னுரை இனிய அன்பர்களே! தாழி மடலுக்கு நான் எந்த வரம்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த ஊடகம் இடமளிக்கும் வரை உள்ளடக்கத்தை விரிவாக்கிக் கொள்ள முடியும். தாழி மடலில் தன்வரலாறு, பிறர் வரலாறு, தன்னாட்டு வரலாறு. பன்னாட்டு வரலாறு, பொருளியல், அரசியல், மெய்யியல், கலை இலக்கியம், ஐயந்தெளித்தல், ஐயந்தெளிதல் இன்னும் என்னவெல்லாம் முடியுமோ இடம்பெறச் செய்வோம். சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள், விலங்கிற்குள் மனிதர்கள் … இவற்றின் தொடர்ச்சியாக எழுத வேண்டியவை ஏராளம். சொல்லடித்தல் என்று நான் குறிப்பிடும் புதிய…
நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்! நானிலம் சிறக்கவே நன்னெறி காணவே நலம் திகழவே வளம் நிறையவே அல்லன அழியவே நல்லன பெருகவே நல்லோர் உயரவே இல்லார்க்கும் வல்லார்க்கும் நல்லார்க்கும் பொல்லார்க்கும் எல்லார்க்கும் வாழ்த்துகள் நடைமுறை யாண்டில் என்றென்றும் வாழிய! – இலக்குவனார் திருவள்ளுவன்
மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் – இரா. திருமாவளவன், மலேசியா
மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் எதிர்மறை நேர்மறை என மறையைச் சேர்த்து எழுதும் சொல்லும் வழக்கைச் சிலர் ஆள்கின்றனர். இவற்றுள் நேர்மறை எனச் சொல்வது சரியா? சரியா பிழையா என அறிய, மறையில் மறைந்துள்ள நுட்பப் பொருளை அறிந்தால் கட்டாயம் தெளிவுறும்.. எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு வேர்ச்சொல் விளக்கமேயாகும்… உல் எனும் ஊகாரச் சுட்டு ஆணிவேர், பல்வகைக் கருத்துகளைத் தந்து சொற்களைப் பிறப்பிக்கும் என்பது பாவாணரின் கோட்பாட்டு விளக்கமாகும். அக்கருத்துகளில் ஒன்றே வளைவுக் கருத்தாகும். பாவாணர் வித்தினின்று முளைவிட்டு கிளம்பிய ஆணிவேரின் நகர்ச்சியை அடிப்படையாகக்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 18. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19 கிடங்கில் அகழி சூழ்ந்த கோட்டையைக் கிடங்கில் என்றும் கூறுவதுண்டு. முன்னாளில் கிடங்கில் என்னும் பெயருடைய கோட்டையின் தலைவனாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கிய நல்லியக்கோடன் என்ற சிற்றரசனது பெருமையைச் சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. அவன் காலத்தில் அவ்வூர், கோட்டை மதில்களாலும், அகழிகளாலும் நன்றாக அரண்செய்யப்பட்டிருந்தது. இன்றும் அங்குக் காணப்படும் சிதைந்த சுவர்களும் தூர்ந்த கிடங்குகளும் அதன் பழம் பெருமையை அறிவிக்கின்றன. கிடங்கால் என்னும் பெயர் கொண்டு வழங்கும் அவ்வூருக்கு அண்மையில் திண்டிவனம் இப்போது சிறந்து…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 85
(குறிஞ்சி மலர் 84 தொடர்ச்சி) குறிஞ்சி மலர், அத்தியாயம் 30 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண்கலத்துள் நீர்பெய்து இரீஇ யற்று. — திருவள்ளுவர் மதுரைக்கே ஒரு புதிய சுறுசுறுப்புக் களை உண்டாகியிருந்தது. நகரம் முழுவதும் ஏதோ பெரிய போருக்குத் தயாராகிற மாதிரித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. பழைய காலத்து அரசியல் வெள்ளாற்றுப் போர், தலையாலங்கானத்துப் போர் என்றெல்லாம் போர்கள் நடந்த மாதிரி அடிக்கடி போர்கள் ஏற்பட இன்றைய அரசியலில் வாய்ப்பும் இல்லை;…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 585-596
( தமிழ்ச்சொல்லாக்கம் 581-584 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 585- 596 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 585. பிரமாணம் – உறுதி 586. சிருட்டித்தல் – பிறப்பித்தல் 587. நியதி – கட்டளை 588. பரிவாரம் – …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3
(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 2 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 2 காட்சி : 3 முச்சந்தி – மோனைப்புலவன், அல்லி கலிவிருத்தம் மோனை: அன்பே அருமருந்தேஅன்றுநீ சொன்னபடிபுன்னை மரத்தடியில்புலரும் பொழுதளவும்கண்ணைஇமை மூடாமல்காத்துநான் தவித்திருந்தேன்சொன்னசொல் மாற்றினாய்சுகம்ஏ மாற்றினாய் அல்லி: வேளை தவறாதுவீதியிலே நின்றபடிவாளை மீன்போல்வார்த்தை வழுக்கஊளை வாயின்ஊத்தைப் பல்காட்டும்மூளையிலாப் புலவரேமூச்சை நிறுத்தும் அறுசீர் விருத்தம் மோனை: புத்தம் புதிய மலராள்நம்புவியாள் மன்னன் மகளுக்குநித்தம் யாப்பை உரைக்குங்கவிநிகழ்த்தும் பாங்கை எனக்குரைப்பாய்தத்துப் பித்தென் றவனும்மிகப்பித்துப் பிடித்துப் பேசுவனேல்சித்தங் கலங்கா தென்னிடம்நீசிறிதும்…
