ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 16
(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 15 தொடர்ச்சி) ஊரும் பேரும் 16 மன்னார் கடற்கரையில் முத்துப் பேட்டை என்னும் ஊர் உளது. கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவர் முன்னாளில் அங்கே சிறந்திருந்தார்கள். முத்து வேலை நிகழ்ந்த இடம் முத்துப் பேட்டையென்று பெயர் பெற்றது. இப்பொழுது அங்குள்ள மகமதியர் சங்குச் சலாபத்தை நடத்தி வருகின்றார்கள். வட ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டை மகமது அலியின் பெயரால் நிறுவப்பெற்ற நகரமாகும்.+1 பதினெட்டு பேட்டைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய அந் நகரம் பஞ்சு வியாபாரத்திலும், கூல வாணிகத்திலும் முன்னணியில் நின்றது….
அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14)- இலக்குவனார் திருவள்ளுவன்
(நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13) தொடர்ச்சி) அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14) தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு, 01.01.1960 முதல் செயல்பட்டு வருகிறது. அலுவலகங்களில் ஆட்சித்தமிழைச் செயற்படுத்தும் முன்னணித் துறைகளுள் ஒன்றாக இத்துறையும் உள்ளது. இருப்பினும் முழுமையாக நிறைவேற்ற வேண்டி வாழ்த்துகிறோம். பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து விட்டு எதற்கு அறக்கேடு என்று கூற வேண்டும என்ற எண்ணம் வருகிறதா? தமிழர்களால் தமிழர்களுக்குக்…
(இணைய வழி) பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டி
தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் வணக்கம் மலேசியா சப்பான் தமிழ்ச் சங்கம் (இணைய வழி) பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டி காணொளி அனுப்ப இறுதி நாள் : 28-12-2022 (புதன்) அனைவருக்கும் வணக்கம்! இணைய வழியாக நடைபெறும் மாபெரும் பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் பங்கெடுக்க விரும்புகிறீர்களா? இதோ ஓர் அரிய வாய்ப்பு! ‘ வணக்கம் மலேசியா ‘ நடத்தும் இந்த உலகளாவிய முழக்கத்தில் சப்பான் தமிழ்ச் சங்கமும் ஒரு குரலாய்ப் பங்கெடுப்பதில் பேருவகை கொள்கின்றது! மாணவர் முழக்கம் – 10 வயது முதல் 13…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 82
(குறிஞ்சி மலர் 81 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 29 புண்ணிய நல்வினை திரண்டனையபொன்னொளிர் பொலிவினைகண்ணிற்கரந்தானே மறுபடிகண்ணுள் கலந்தானே! விமானம் மேலே உயரச் சென்று பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் ஏதோ புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டாள். ‘உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்’ என்று விமானம் புறப்படுமுன் நகைத்துக் கொண்டே கூறினானே அரவிந்தன். அப்போது அவன் முகம் எப்படி இருந்ததென்பதைக் கண்களை மூடிக்கொண்டு…
என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு
என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு என் அம்மா பூபதி அம்மாள்(92), குழந்தைப் பருவத்தில் இருந்தே கடுமையான அறைகூவல்களை எதிர்கொண்டார். தன் பாதையிலிருந்து புறங்காட்டவே இல்லை. மக்களுக்குத் தொண்டாற்றவே செவிலியர் படிப்பைத் தேர்ந்தெடுத்து, செவிலியர் கல்வியில் சிறந்து விளங்கினார். பிரித்தானியர் காலத்தில் ஆயுதப்படையில் சேர்ந்தார்; நாயகன்(catain) நிலைக்கு உயர்ந்தார். கிளாசுகோ, மெடிசின் ஆட்டு(கனடா, Medicine Hat, Canada), இலங்கை போன்ற பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் அவரது பணி இருந்தது. தாயகம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி மீதான அவரது பற்றும் ஈடுபாடும்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 4 – தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5 அரண்மனைப் பகுதி, அரசனும், அமைச்சனும் இருக்க, உதாரன் வருகிறான் கலி விருத்தம் அரசன் பண்பாடும் தமிழில் பழகுதமிழ்ப் பாடல் விண்ணோடும் முகிலாய் விளைக்குங்கவி மன்னா என்னினிய வணக்கம் எற்றருள்க ஈங்கே பொன்னினிய இருக்கை பொலிவுபெறச் செய்க உதாரன் என்னாடு வாழ்க இனியதமிழ் போற்றிப் …
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 
(தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) உருதுமொழிச் சொற்கள் 556. கம்மி – குறைவு 557. சிபாரிசு – தகவுரை 558. டோபிகானா – வண்ணான் சாவடி 559. சராய்…
களப்பிரர் காலம் இருண்ட காலமா? – முனைவர் ஆ.பத்மாவதி: இணைய வழிக் கூட்டம் 10/12/22
“தொன்மை! தொடக்கம் !! தொடர்ச்சி!!!” குழுவின் இணையவழிக் கூட்டம் தமிழ் மொழி மற்றும் தமிழரின் சிறப்பு தொன்மையில் இருப்பதோடு அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது. உலகின் தொன்மையான பல நாகரிகங்கள் தன் தொடர்ச்சியை இழந்து அழிந்து போனதைப் பார்க்கிறோம். சங்கக் காலம் தொடங்கி, தற்காலம் வரை உள்ள தமிழர் வரலாற்றில் களப்பிரர் காலத்தை மட்டும் ஏன் இருண்டகாலம் என்று சிலர் கூறுகிறார்கள்? தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இன்று வரை கிடைக்க பெற்றுள்ள தொல்லியல் ஆதாரங்கள்…
நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13)- இலக்குவனார் திருவள்ளுவன்
நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா?(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13) (தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12 தொடர்ச்சி) தமிழ்நாட்டில் மருத்துவ நிலையங்கள் மருத்துவச் சாலைகள்(பொது மருத்துவ மனைகள்), மாவட்ட மருத்துவ மனைகள், வட்ட மருத்துவமனைகள், நகரக நல்வாழ்வு நிலையங்கள், ஊரக நல்வாழ்வு நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவமனைகள், பன்னோக்கு மருத்துவமனை எனச் சிலவகை உள்ளன. 2019 ஆம் ஆண்டுக் கணக்கின் படித் தமிழ்நாட்டில் 377 அரசு மருத்துவமனைகள், 242…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 18
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 17 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 10: இளமைக் கல்வி தொடர்ச்சி பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் தானத்தில் இருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா. உபாத்தியாயர் எழுதித் தரும் ஏட்டுச் சுவடியிலிருந்து முதலில் நெடுங்கணக்கை (அரிச்சுவடியை)க் கற்றுக் கொள்வான் மாணாக்கன். அப்பால் எண்சுவடி முதலிய சுவடிகள் பெற்றுப் படிப்பான். ஓலை வாரவும், சுவடி சேர்க்கவும், நன்றாக எழுதவும் தெரிந்துகொள்வதற்குப் பல நாளாகும். சுவடியைப் பிரித்து ஒழுங்காகக் கட்டுவதற்குக்கூடப் பழக்கம் வேண்டும். பிள்ளைகளுக்கு எழுத்துப் பழக்கம் உண்டாக உபாத்தியாயர் ஓர் ஓலையில்…
கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . .- சொற்கீரன்
கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . கொழுநிழல் மறைக்கும் அடர்செறிக்கானின் வரிநிழல் காட்டும் ஓர் வேங்கை கண்ணுறீஇ உறுமிய ஒற்றும் செஞ்சின வேங்கையும் வெரூஉய் ஒளிக்கும் குழைகவி யோமை சேய்மையின் வரூஉம் ஆளி ஆங்கு கண்டே. வெண்கோடு குத்தி வெரு வெரு செய்யும் மள்ளற் களிறும் சுரத்தின் கண்ணே பிளிறும் ஓதையில் நோலா நெஞ்சும் நோன்றார் கலி மிழற்றும் காட்சி மலியும் நிரம்பா நீளிடை அரசிலை எஃகம் தனியன் ஏந்தி வரும் கொல் என துயில் மறுத்து நெஞ்சில் வேகும் வேர்க்கும் வேர்க்கும்….
தமிழ்நாடும் மொழியும் 17; பல்லவப் பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 16 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 17 பல்லவப் பேரரசு தொடர்ச்சி அபராசிதவர்மன் நிருபதுங்கனுக்குப் பிறகு அபராசிதவர்மன் என்பான் பல்லவ நாட்டின் அரசனானான். கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருப்புறம்பியம் என்னும் ஊர். அவ்வூரின் கண்ணே பல்லவனுக்கும் பாண்டியனுக்கும் போர் நடை பெற்றது. அப்போரில் முதலாம் பிருதிவிபதி என்னும் கங்க அரசன் பல்லவ மன்னனுக்கு உதவிபுரிந்தான். இப்போரில் பல்லவனே வெற்றிபெற்றான். ஆனால் வெற்றியைப் பல்லவனால் துய்க்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இப்போரில் பல்லவன் பக்கம் போரிட்ட முதலாம் ஆதித்த சோழன் போர்…
