சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 
(தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 551. Monkey Screw — குரங்குத் திருகு விளக்கைப் பிரதாப்சிங்கிடம் கொடுத்துவிட்டுத் தன் இடுப்பிலிருந்து ஒர் நீண்ட கயிற்றைக் கழற்றினாள். அது சுமார்…
6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 2/6
(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-1/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 2/6 காங்கிரசு மாநாடுகள் எவ்வகை விசாரணையுமின்றி எவரையும் தண்டித்தற்கு இடந்தரும் (இ)ரெளலட்டு சட்டத்தை ஆங்கில அரசு திணிக்க முயன்றது. இதனை எதிர்த்து அண்ணல் காந்தியடிகளார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். நாடெங்கும் சுற்றுப் பயணம் செப்து, இச்சட்டத்தின் கடுமையை பொல்லாங்கைப் பொதுமக்களுக்கு விளக்கத் துணிந்தார். இதன் பொருட்டுச் சென்னை வந்தார். காந்தியடிகள் சென்னை வருவதையறிந்த நாவலர் பாரதியார் அவரைத் தூத்துக்குடிக்கு வரச் செய்தார். முதன்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 19
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி பதினேழாம் நூற்றாண்டில் (கி.பி. 1650) துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள (தமிழ்) மொழிக்கு ஆரிய மொழியை ஒட்டி எழுத்து முறைகளையும் இலக்கண விதிகளையும் அமைத்துவிட்டார். பின்னர்த் தமிழின் தொடர்பு குறைந்து ஆரியமொழித் தொடர்பு மிகுந்து தமிழுக்கு அயல்மொழியாக வளரத் தலைப்பட்டு விட்டது. மொழிக்குரியோரும் தம்மை ஆரியர்களோடு தொடர்பு படுத்திக்கொள்ள விரும்பினரே யன்றித் தமிழருடன் உறவு முறைமை பாராட்ட விரும்பினாரிலர். தம் மொழியை ஆரியத்தின் புதல்வி என்று கூறிக்கொள்வதில் பெருமையும் அடைந்தனர்….
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 
( தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 546. Secondary Education – இரண்டாங் கல்வி 547. University – பல்கலைக்கழகம் நான் இரண்டாங் கல்வி கடந்து பல்கலைக் கழக…
வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசு கடன் – புலவர் பழ.தமிழாளன்
வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசுகடன் 1. வடபுலத்தார் தமிழ்நாட்டில் வந்துகுடி புகுந்தே வண்டமிழ நாட்டகத்தில் வாக்காளர் ஆயின் விடைகாண முடியாத நிலையாகும் நிலத்தே ஈழநிலை தமிழ்நாட்டில் நிகழ்ந்துவிடும் தேர்க கடனென்று தமிழ்நாட்டை ஆளுகின்ற அரசு காவிவட வருகையினைத் தடைசெய்து விட்டால் நடமாடும் பண்பாட்டின் தொட்டிலாக விளங்கும் நற்றமிழ இனப்பகையும் நாட்விட்டே ஓடும் ! 2. எம்மதமாய் எச்சாதி எக்கட்சி சார்ந்தே இருந்தாலும் தமிழனென்ற உணர்வு பொங்க வேண்டும் தம்மன்னை தமிழென்ற நினைவோங்க வேண்டும் தம்பகையே ஆரியமாய்த் …
இருமை வகைத்தே இயற்கை நெறியே! – தொல்லூர் கிழான்
இருமை வகைத்தே இயற்கை நெறியே! அல்லது வெளிக்குமால் இல்லது கருக்குமால் வல்லது மெலிக்குமால் மெல்லது வலிக்குமால் புறத்தது அகக்குமால் அகத்தது புறக்குமால் நிறுத்த வியல்நிலை திரீஇ தோன்றலும் இருத்தலும் ஒடுங்கலும் வினையல் மும்மை இருமை வகைத்தே இயற்கை நெறியே! தொல்லூர் கிழான். சொற்பொருள் : அல்லது > அல் அது = இருள் நிலை என்பது வெளிக்குமால் = தன்னிலை மாறி வெளிறி வெளிச்சமாகுமாதலால் இல்லது > இல் அது = இல் எனும் ஒளிமையாகிய வெளிச்சம் மாறி இருண்டு கருக்குமாதலால் வல்லது >…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 15
(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 14 தொடர்ச்சி) ஊரும் பேரும் 15 தொண்டை நாட்டில் ஓர் ஊர் பில வாயில் என்று பெயர் பெற்றிருந்தது. நாளடைவில், ஊர் என்னும் சொல் அப் பெயரோடு சேர்ந்து பிலவாயிலூர் என்று ஆயிற்று. அப்பெயர் குறுகி வாயிலூர் என வழங்கிற்று. இந் நாளில் அது வயலூர் எனச் சிதைந்தது. செங்கற்பட்டைச் சேர்ந்த திருவள்ளுர் வட்டத்தில் அவ்வூர் உள்ளது.9 முற்றம் வாயிலைப் போலவே முற்றம் என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம். சங்க இலக்கியத்தில் குளமுற்றம் என்ற ஊர் குறிக்கப்பட்டிருக்கிறது….
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 541-545
(தமிழ்ச்சொல்லாக்கம் 536-540 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 541. Mayor – தலைவர் அந்நாளில், கல்கத்தா நகரபரிபாலன (முனிசிபல்) சபையின் தேர்தலில் சுயராச்சிய கட்சியினரே வெற்றி பெற்றனர். இதுகாறும் சட்ட சபையில்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 81
(குறிஞ்சி மலர் 80 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 28 தொடர்ச்சி தொழிற்போட்டிகளையும், பொறாமை, பகைகளையும் கூடியவரை நியாயமாகவும், கண்ணியமாகவும் தீர்க்க முயன்றான் அரவிந்தன். அனாவசியச் சண்டைகளை முன்கூட்டியே தவிர்த்தான். தான் கிராமத்தில் நிலம் விற்றுக் கொணர்ந்த பணத்தில் அச்சகத்துக் கடன்களை அடைத்தவை போக எஞ்சிய பகுதியை தேர்தல் செலவுக்கென ஒதுக்கி வைத்தான். தன்னுடைய திறமையான நிருவாகத்தினாலும் நாணயமான நடவடிக்கைகளாலும் மீனாட்சி அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்த எந்த வேலைகளும் குறையாமல் பார்த்துக் கொண்டான் அரவிந்தன். பக்கத்தில் புதிதாக ஏற்பட்டிருந்த அச்சகம் அவனையோ, அவனுடைய தொழிலையோ எந்த…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 28, 29 & 30: இணைய அரங்கம்
தமிழே விழி ! தமிழா விழி! செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 28, 29 & 30: இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: கார்த்திகை 18, 2053 ஞாயிறு 04.12.2022 காலை 10.00 “தமிழும் நானும்” – உரையாளர்கள்: முனைவர் வீ.சந்திரன், மேனாள் சட்டத்தமிழ் இயக்குநர் திருவாட்டி ஒ.பா.சாந்தி நடராசன், சட்ட மொழிபெயர்ப்பாளர் முனைவர் மு.முத்துவேலு, உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணையம் கூட்ட எண் / Meeting ID:…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 4
(புதிய புரட்சிக்கவி- களம் : 1 காட்சி : 3 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 4 முச்சந்தியில் மோனைப் புலவன் நிற்க ; இளவரசியின் தோழி அல்லி வருகிறாள் அகவல் மோனை: பாளைச் சிரிப்பிலே பாவிஎன் ஆவியைப் பதைக்க வதைக்கும் பாவாய் அல்லி பாதையில் மேதிபோல் பாவியேன் நிற்கவும் பார்த்தும் பாராது பால்முகம் திருப்பிப் பதைப்புடன் எங்கே பாய்கிறாய்? நின்று முத்து விளையாட் டொன்றுஎன் முகத்தில் மெத்தென் றாடினால்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 17
(உ.வே.சா.வின்என்சரித்திரம் 16 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் 17 அத்தியாயம் 10 இளமைக் கல்வி முதலில் உத்தமதானபுரத்தில் எனக்கு உபாத்தியாயராக இருந்த நாராயணையர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து பிராயம் கொண்டவர்; நல்ல வடிவம் உடையவர். அவரைக் காணும்போது எனக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் பயம் உண்டாகும்; பிரம்பை அதிகமாக அவர் உபயோகிப்பார். அவரை நினைக்கும்போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் எனக்கு ஞாபகம் வருகிறது. அவரது பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள். அடிக்கிற விசயத்தில் அவர் யாரிடமும் பட்சபாதம் காட்டுவதில்லை. பிள்ளைகளுக்குள் பிச்சு என்று…
