குவிகம் சிறுகதைப் போட்டி
முதல் பரிசு உரு. 5000/ இரண்டாம் பரிசு உரூ. 3000/ மூன்றாம் பரிசு உரூ. 2000/ கதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 15.12.2022 கதைகள் 700 முதல் 1200 சொற்களில் இருக்க வேண்டும். magazinekuvikam@gmail.com மின்வரிக்குச் சொற்கோப்பாக அனுப்ப வேண்டும். தொடர்பிற்கு – 97910 69435 / பகிரி 944 2525 191 இதழில் வெளியிடப்படும் பிற கதை ஒவ்வொன்றிற்கும் உரூ. 1000/ வழங்கப் பெறும்.
பிரபாகரன் பிறந்த நாள் பேச்சுப் போட்டி
விடுதலைப் பேரொளி பிரபாகரன் 68ஆவது பிறந்த நாளையொட்டிச் சென்னை மாநகர அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டி! முதல் பரிசு: உரூ.50,000/- இரண்டாம் பரிசு: உரூ.25,000/- மூன்றாம் பரிசு:உ ரூ.10,000/- மேலும் 5 ஆறுதல் பரிசுகள் நாள்: 26.11.2022 மாநகர் சென்னையில் மறத்தமிழ் வளர்க்கும் மாணவர் – மாணாக்கியருக்கு அன்பு வணக்கம்! பிரபாகரன் என்பது பெயர் மட்டுமில்லை. அது விடுதலையின் முகவரி. அச்சமின்மையின் அக வரி. பிரபாகரன். ஆவேசம் பொங்க உரையாற்றுகிற பேச்சாளரில்லை. அரிதினும் அரிதான அவரது உரைகளில் சொல்மாயங்கள் இருந்ததில்லை. ஆனால், அவரது சொற்கள்…
இலக்குவனார் விளக்கும் இல்லற மாட்சி– இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் விளக்கும் இல்லற மாட்சி தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலியவற்றை மக்கள் இலக்கிமாக மாற்றியவர்; சொற்பொழிவுகள், மாலை நேர வகுப்புகள், விடுமுறைக்கால வகுப்புகள், நூல்கள், இதழ்கள் வாயிலாக இலக்கியங்களின் மூலம் தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியச் சிறப்பு, பண்பாட்டுச் செழுமை, நாகரிக வளமை முதலியவற்றை மக்களின் உள்ளங்களில் பதித்தவர். “வள்ளுவர் கண்ட இல்லறம்” நூல் மூலம் இல்லறத்தின் சிறப்பை அவர் எடுத்துரைத்தார். அவற்றுள் சிலவற்றை நாம் பார்ப்போம். இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே! பெண்ணுரிமையைப் போற்றிப் பெண்களுக்கான தலைமையை…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 2
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 1 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 2 உதாரன் இருப்பிடம், உதாரன் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்தவாறிருக்க, அமைச்சர், பரிவாரத்துடனும், பரிசுப் பொருட்களுடனும் வந்து வணங்குகிறார் கலித்துறை அமைச்சர்: வானும் மண்ணும் வாழுங் காலம் தமிழ்வாழ தேனும் பாலும் கலந்து பாடும் கவிமன்னா தானை கொண்டு தரணி யாளும் தமிழ்வேந்தன் ஏனை இவற்றோடு இனிதே சொன்னான் தன்வணக்கம் உதாரன்: நாடு…
‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள்
ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டி முடிவுகள் வருமாறு: முதல் பரிசு: முனைவர் தாமரை, திருச்சி இரண்டாம் பரிசு: முனைவர் தானப்பன், புதுதில்லி மூன்றாம் பரிசு: முனைவர் வதிலை பிரதாபன் முதல் பரிசிற்கான உரூ. 5,000 / தொகையில் கட்டுரையில் சில பிறமொழிச்சொற்கள் இடம் பெற்றிருந்தமையால், உரூ 2,000/ பிடிக்கப்பட்டு இருவருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன….
இலக்குவனார் பிறந்த நாள் கருத்தரங்கம், மும்பையிலிருந்து இணைய வழியில்
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் தமிழ்க்காப்புக் கழகம் வலைத்தமிழ்த் தொலைக்காட்சி, அமெரிக்கா இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து இணைய வழியாக நடத்தும் பேராசிரியர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் கார்த்திகை 04, 2053 / 20.11.2022 ஞாயிறு மாலை 6.00 மணி (இந்திய நேரம்) அ.எண்: 94503360817 கடவுச் சொல்: 123123 நிகழ்ச்சித் தலைமை: பாவரசு வதிலை பிரதாபன் மகிழ்வுரை: முனைவர் கோ.பெரியண்ணன் தொடக்கவுரை: கவிஞர் குமாரசுப்பிரமணியன் கருத்தரங்கத் தலைமை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் சிறப்பு விருந்தினர்: புலவர் செந்தலை கெளதமன் கருத்தரங்கம்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 16
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 15 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் அத்தியாயம் 9 : குழந்தைப் பருவம்: தொடர்ச்சி பாரதியாருடைய பழக்கம் ஏற்பட்ட பின்பு நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களிற் சிலவற்றையும் என் தந்தையார் தம் இராமாயணப் பிரசங்கத்தினிடையே பாடிக் காட்டலானார். அக்கீர்த்தனங்களின் எளிய நடையும் அவற்றில் அமைந்திருந்த பக்திச் சுவையும் கேட்போர் உள்ளங்களைக் கவர்ந்தன. என் குழந்தைப் பிராயத்தில் எனக்கிருந்த பழக்கம் ஒன்றை என் தாயார் சொல்லியிருக்கிறார்; நான் காலையில் எழும்பொழுதே எனக்கு ஏதேனும் ஆகாரம் கொடுக்க வேண்டுமாம். ரொட்டி, பி சுகோத்து முதலிய உணவுப் பொருள்கள் அந்தக் காலத்தில்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 516 -521
( தமிழ்ச்சொல்லாக்கம் 511 -515 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 516-521 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 516. Passport – வழிச்சீட்டு சிரீ திலகர் சீர்திருத்த விசயமாகப் பார்லிமெண்டார் சட்டமாக்குவதற்கு முன் இங்கிலாந்தில் பெரிய கிளர்ச்சி செய்து…
தமிழ்நாடும் மொழியும் 14 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 13 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 14 5. பல்லவப் பேரரசு தோற்றம் முற்கால இந்திய வரலாற்றிலே விளங்காதன பல உள. அவற்றுள்ளே பல்லவர் தோற்றமும் ஒன்று. இது நெடு நாளைக்கு முன்பு முனைவர் வி.ஏ. சிமித்து கூறியதாகும். கோபாலன் என்பவர் இது குறித்து, 1928-ஆம் ஆண்டில் கூறியதாவது :- தற்பொழுது நமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பல்லவர் தோற்றத்தைப்பற்றி நாம் எதுவும் உறுதியாகக் கூறமுடியாது. முதன் முதலில் பல்லவர் என்போர் பார்த்தியன் மரபினைச் சேர்ந்தவர்கள் என்றும், மேற்கு இந்தியா வழியாக வந்து தக்கணத்தைக் கடந்து…
5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் ¾
(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 2/4 – சி.பா. தொடர்ச்சி) சான்றோர் தமிழ் 5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 3/4 இலக்கண ஆராய்ச்சி பேராசிரியரின் இலக்கண ஆராய்ச்சி நூல்களுள் தலைமை இடம் பெறுவது ‘தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி’ என்ற நூலாகும். இந்நூல் 1912ஆம் ஆண்டு இலங்கைச் செல்வர் கு. பூரீகாந்தன் என்பவர் நடத்திய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சிப் போட்டியில் முதன்மைப் பரிசு பெற்றது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை எளிய முறையில் மாணவர்களுக்குப் பயன்படத்தக்க வகையில் இந் நூலை…
கி.ஆ.பெ.விசுவநாதம் & சி.இலக்குவனார் பிறந்த நாள் விழா
தமிழியக்கம்வே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம்இணைந்து வழங்கும்முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 124ஆவது &செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 114 ஆவதுபிறந்த நாள் விழா கார்த்திகை 1, 2053 / வியாழன் / 17.11.2022 காலை 10.00 மணிவே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம் சென்னை வளாகம்வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, சென்னை 600 127 தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன்சிறப்புரை: முனைவர் மறைமலை இலக்குவனார்நெகிழ்வுரை: திரு சிறீசாந்து கருனோசு
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 15தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி வேற்றுமை திராவிட மொழிகளில் எல்லாம் வேற்றுமைகள் எட்டெனவே கொள்ளப்பட்டுள்ளன. வேற்றுமைகளை அறிவிக்கும் உருபுகள் பெயர்க்குப் பின்னால் பெயருடன் சேர்ந்து வருகின்றன. இவ் வுருபுகள் தொடக்கத்தில் பின் இணைத் துணைப் பெயர்ச் சொற்களாக இருந்து நாளடைவில் தனித்தியங்கும் இயல்பு கெட்டு இடைச்சொற்கள் நிலையை அடைந்து விட்டன என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றார். இந் நிலை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் அவை வேற்றுமையுணர்த்தும் உருபுகளாகவே கருதப்பட்டு இடைச்சொற்களாகவே…
