மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 80
(குறிஞ்சி மலர் 79 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 28 தொடர்ச்சி “இது தொடங்கி எத்தனை நாளாயிற்று முருகானந்தம்?” “நாலு நாளைக்கு முன்னால்தான் திறப்பு விழா எல்லாம் பிரமாதமாகத் தடபுடல் செய்தார்கள். பருமாக்காரர்தான் திறந்து வைத்தார்.” “ஊம்! இனிமேல் இது ஒரு புது வம்பா?” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டவாறே அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். முருகானந்தமும் பின் தொடர்ந்தான். அன்று இரவு அரவிந்தனுக்கு உறக்கமே இல்லை. பருமாக்காரரைப் போல் வசதியுள்ளவர்கள் ஒருவர் மேல் பகைமை முற்றி வைரம் பெற்றுவிட்டால் திட்டத்தோடும், தீர்மானத்தோடும், கெடுதல் செய்து விரைவாக…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி- களம் : 1 காட்சி : 3
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 2 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி- களம் : 1 காட்சி : 3 அரசனும், அமைச்சனும் அமர்ந்திருக்க இளவரசி வருகிறாள் கலி விருத்தம் அமைச்சர் : குலம்விளங்க வந்துதித்த கொழுந்தே வருக புலம் வியக்குஞ் செந்தமிழின் பொழிவே வருக இலம்விளக்கும் இந்நாட்டின் ஒளியே வருக நலம்பயக்கும் எம்மரசின் இழையே வருக இளவரசி: குடிகாத்து நலம்விளைக்குங் கொற்றவ வணக்கம் முடிவில்சீர் தமிழ்காக்கும்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 527-531 
( தமிழ்ச்சொல்லாக்கம் 522-526 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 527-531 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 527. கசுபா – அகநகர் இவர் திருநெல்வேலி அக நகரிலே (கசுபா) கீழப் புதுத் தெருவிலே குடியிருப்புடையார். ‘குப்ப குறிச்சிச் செல்லம்பிள்ளை’…
கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா,நாகப்பட்டினம்
கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கருத்தரங்கம் கார்த்திகை 08, 2053 24.11.2022 வியாழன் முற்பகல் 10.00 பேராசிரியர் கா.சுப்பிரமணியன் பேராசிரியர் சி.இலக்குவனார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் கவிஞர் சுரதா ஆகியோரைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் இடம்: மீன்வளப் பொறியியல் கல்லூரி காஞ்சூர் சோதனைச் சாவடி நாகூர், நாகப்பட்டினம்
தமிழ்நாடும் மொழியும் 15; பல்லவப்பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 14 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 15 பல்லவப் பேரரசு தொடர்ச்சி சிவசுகந்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்தவர்மன் பட்டம் பெற்றான். அப்புத்தவர்மனின் மனைவி சாருதேவி. அவளால் வெளியிடப்பட்ட பிராகிருதப் பட்டயம் ஒன்று கோவிலுக்குத் தானம் அளித்ததைக் குறிக்கிறது. புத்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்யங்குரன் பட்டமேறினான். மற்றொரு நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று சிவசுகந்தவர்மன் பரம்பரையில் வந்த விட்டுணுகோபன் காலத்தில் நடைபெற்றது. விட்டுணுகோபன் என்னும் பல்லவ மன்னன் கி. பி. 350-இல் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு நாட்டை ஆண்டுவந்தான். அக்காலை…
தன்னேரிலாத தமிழ் மகன் ஒளவை நடராசனார் தமிழ்ச்சுவை பரப்ப எமனுலகு சென்றார்
இன்று(கார்த்திகை 05, 2053 / 21.11.2022) இரவு 7.50 மணிக்கு தாமரைத்திரு, கலமாமணி, நாவரசர் ஒளவை இயற்கை எய்தினார். தனிப்பட்ட முறையில் என்மீது பேரன்பு கொண்டிருந்த பெருமதிப்பிற்குரிய அண்ணல் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. நாவரசர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தனிப்பட்ட முறையிலும்இலக்குவனார் குடும்பத்தினர் சார்பாகவும் தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், அகரமுதல மின்னிதழ், தமிழ்நாடு – புதுவை தமிழ் அமைப்புகள் ஆகியன சார்பாகவும்தெரிவிக்கிறோம். அறிஞர் ஒளவை குடும்பத்தார் தெரிவிக்கும் மறைவுச் செய்தி எந்தையும் இலமே ! ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார்…
5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் 4/4
(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 3/4 – சி.பா. தொடர்ச்சி) சான்றோர் தமிழ் ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4 – சி.பா. சொற்பொழிவாளர் மு. இராகவையங்கார் எழுத்தாளராக இருந்த மு. இராகவையங்கார் அவர்கள் சொற்பொழிவாளராகவும் துலங்கியிருக்கின்றார். 1929ஆம் ஆண்டு பதிப்பு வேந்தர் அறிஞர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இலக்கியம், சாசனம் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார், இப்பொழிவே பின்னர் ‘சாசனத் தமிழ்க் கவி சரிதம்’ என்ற நூலாகத்…
இலக்குவனார் என்றும் வாழ்வார் ! – பழ.தமிழாளன்
தமிழ்க்காப்புக் கழகம் இணையவுரை தமிழ்ப்போராளி இலக்குவனார் நாண் மங்கல விழா திரு . ஆண்டு துலை( ஐப்பசி ) 27 13-11-2022 ஞாயிறு 10.00 மு.ப பாவரங்கம் தமிழின மொழிநாட்டுப் போராளி இலக்குவனார் என்றும் வாழ்வார் ! …
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி இவ்வாறே படர்க்கை ஒன்றன்பால், பலவின்பால், தன்மை, முன்னிலை விகுதிகளும் தமிழ்க் குடும்ப மொழிகள் அனைத்திலும் ஒரே வகையாக அமைந்துள்ளமையைக் காணலாம். விரிக்கின் பெருகுமாகையால் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதை விடுத்து இனி எண்ணுப் பெயர்களை நோக்குவோம். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஒன்று ஒன்னு ஒந்து ஒகட்டி இரண்டு ரண்டு எரடு இரடு மூன்று …
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 522-526 
( தமிழ்ச்சொல்லாக்கம் 516 -521 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 522-526 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 522. Director – தலைமையோர் தூத்துக்குடியில் சுதேசிக் கப்பற் கழகம் ஏற்பட்டிருந்த காலத்தில் நமது நண்பர் அதைத் தொடங்கினோர்க்கு வேண்டும்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 79
(குறிஞ்சி மலர் 78 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 28 ஊரெல்லாம் கூடிஒலிக்க அழுதிட்டுப் பேரினைநீக்கிப் பிணமென்று பேரிட்டுச்சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டுநீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்கள். — திருமூலர் தன்னைப் பெற்ற தந்தை இறந்தபோது கூட அரவிந்தன் இப்படி அதிர்ந்து அலமந்து கதறியழவில்லை. அப்போது அவன் சிறுவன். இப்போதோ உணர்வுகளில் நோவும் அளவுக்கு மனம் பக்குவப்பட்ட இளைஞன். ‘தன்னை வளர்த்து உருவாக்கி வாழ்வளித்த வள்ளல் இறந்து போய்விட்டார்‘ என்று அந்தத் தந்தியில் படித்தபோது அதை உண்மையாக ஏற்றுக் கொண்டு நம்பி ஒப்புக்கொள்ளவே, அவன்…
கருநாடகத்தில் மாணவர் போட்டிகள்
தமிழ்ப்புத்தகத் திருவிழா மாணவர்க்கான போட்டிகள் கருநாடகம் கார்த்திகை 04, 2053 / 20.11.2022
