ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 14
(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 13 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 14 3. குடியும் படையும் குடியும் படையும் நாடாளும் அரசனுக் குரிய அங்கங்கள் என்று திருவள்ளுவர் கூறியருளினார்1. ஆதியில் தமிழகத்தில் எழுந்த குடியிருப்பும் அதனைப் பாதுகாக்க எழுந்த படையிருப்பும் ஊர்ப் பெயர்களால் ஒருவாறு விளங்கும். இக் காலத்தில், இல் என்பது பெரும்பாலும் மக்கள் வாழும் வீட்டைக் குறிப்பதாகும். ஆயினும், அச்சொல் சில பழமையான ஊர்ப் பெயர்களிற் சேர்ந்திருக்கின்றது. திருச்சி நாட்டிலுள்ள ஊர் ஒன்று, அன்பில் இல் என்னும் அழகிய பெயரைப் பெற்றது.2 அன்பின் இருப்பிடம்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 511 -515 
( தமிழ்ச்சொல்லாக்கம் 505-510 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 511-515 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 511. Budget – அரசிறை கணக்கு நூல் : (உ)லோகமான்ய பாலகங்காதர திலக் (1924) பக்கம் : 69 நூலாசிரியர் :…
இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை- இலக்குவனார் திருவள்ளுவன்
இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை இராசீவு கொலைவழக்கில் சிக்கித் சிறைத் துன்பத்தில் உழலும் எஞ்சிய அறுவரை உச்சநீதி மன்றம் இன்று (ஐப்பசி 25, 2053 / 11.11.2022) விடுதலை செய்தது. இராபர்ட்டு பயசு, செயக்குமார், சுதேந்திர இராசா(சாந்தன்), இரவிச்சந்திரன், சிரீஅரன் (எ)முருகன், நளினி ஆகிய அறுவரின் நலிந்த உடல்நிலை, சிறைவாழ்க்கையில் மேற்கொண்டுள்ள நன்னடத்தை, கல்வி, படைப்புகளில் ஈடுபடல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சட்டப்படியும் மனித நேயத்துடனும் மூன்று தலைமுறையாகச் சிறைவாழ்க்கையில் துன்புறுவதைக் கருத்தில் கொண்டும் பேரறிவாளனை விடுதலை செய்த வழியில் இந்த அறுவரையும்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 78
(குறிஞ்சி மலர் 77 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 27 தொடர்ச்சி “உங்களுடைய உடம்புக்கு என்ன?” “உடம்பெல்லாம் நன்றாக இருக்கிறது. மனத்துக்குத் தான் எல்லா இழவும்.” அவருடைய குரலில் இருந்த கடுமையான வறட்சியைக் கண்டு மேலே எதுவும் பேசத் தோன்றாமல் தயங்கி நின்றான் அரவிந்தன். கோபமோ, கவலையோ அதிகமாகி உணர்ச்சி வசப்பட்டால் இரத்தக்கொதிப்பு (பிளட்பிரசர்) வந்துவிடும் அவருக்கு. “எல்லாப் பயல்களும் சமயம் பார்த்துத்தான் காலை வாரி விடுகிறார்கள். குனிந்து கொள்ளச் சொல்லிப் பச்சைக் குதிரை தாவி விட்டுக் குப்புறத் தள்ளியும் விடுகிறார்கள். தேர்தல் செலவுகளுக்காக…
இலக்குவனார் பிறந்த நாளும் உலகத்தமிழ் நாளும்
இணைய உரையரங்கம் ஐப்பசி 27, 2053 * ஞாயிறு காலை 10.00 *13.11.2022 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் கவியுரைஞர்கள்: நற்றமிழ் வேந்தன் மறத்தமிழ் வேங்கை பைந்தமிழ்ப் புலவர் பழ.தமிழாளன் உரையாளர்கள்: பேரா.முனைவர் நா.இளங்கோ பேரா.முனைவர் முகிலை இராசபாண்டியன் இணைப்புரை : தோழர் தியாகு பதிவு இணைப்பு: தோழர் மகிழன் நன்றியுரை: மாணவர் ஆரணி பாரதி தமிழ்க்காப்புக்கழகம் * இலக்குவனார் இலக்கிய இணையம் * தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி /…
பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 1
(‘புதியபுரட்சிக்கவி’: முன்னுரை – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி – களம் : 1 காட்சி : 1 களம் : 1 காட்சி : 1 அரசன் இருக்க – அமைச்சர் வருகிறார் அகவல் அமைச்சர் : ஆல்போல் வளர்க அரசர் கொற்றம் கடிதில் அழைத்த காரணம் யாதோ? அரசன் : வருக அமைச்சரே அமர்க ஈங்கே * அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண் தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள் அமைவுற ஆய்ந்தாள் அயல்மொழி பயின்றாள் ஆர்ந்த ஒழுக்கநூல் நீதிநூல்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 15
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 14 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் அத்தியாயம் 9குழந்தைப் பருவம் அரியிலூரில் என் தந்தையார் ஒருவாறு திருப்தியோடு காலங்கழித்து வந்தாராயினும், அவருடைய உள்ளத்துள்ளே ஒரு வருத்தம் இருந்தே வந்தது. தம் குடும்பக் கடனாகிய 500 உரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற எண்ணமே அதற்குக் காரணம். அதனால் அவருக்கு இடையிடையே ஊக்கக்குறைவு ஏற்பட்டது. ‘எவ்வாறேனும் 500 உரூபாய் சம்பாதித்துக் குடும்பக் கடனைத் தீர்த்து நிலங்களை மீட்க வேண்டும்’ என்ற கவலை அவருக்கு வரவர அதிகரித்து வந்தது. இல்லறத் தருமத்தை மேற்கொண்ட…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 505-510 
( தமிழ்ச்சொல்லாக்கம் 493-504 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 505-510 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 505. கோகினோர் – ஒளிமலை தென்னிந்தியாவில் வச்சிரகருவூர் என்னும் ஒரு கிராமம் உண்டு. அப்பெயர், வைரக்கற்களைத் தன் வயிற்றுள் அடக்கியிருக்கும் ஊர்…
தமிழ்நாடும் மொழியும் 13 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 12 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி ஆனால் காப்பியக் காலத்திலே இம்முறை அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் காப்பிய க்காலத் தமிழ்ச்சமுதாயம் காதலை நாடவில்லை போலும். அதுமட்டுமல்ல; கோவலன் கண்ணகி திருமணத்திலே முத்தீ வளர்க்கப்பட்டது; பார்ப்பான் மறை ஓதினான்; மணமக்கள் தீவலம் செய்தனர். அஃதோடு இம்மணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் பெற்றோர்கள். மணமக்களின் ஒப்புதல் கேட்டதாகத் தெரியவில்லை. இறுதியிலே கண்ணகி – கோவலன் மணமக்களாகிவிடுகின்றனர். பிறகு பிரிந்துவிடுகின்றனர். கோவலன் போற்றா ஒழுக்கம் புரிகின்றான். கேட்பாரில்லை; அதுமட்டுமா? கோவலனுக்கு நண்பனாகவும் அறவுரை கூறுபவனாகவும் இருப்பவன் மாடலன் என்னும்…
5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 2/4
(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் ¼ – சி.பா. தொடர்ச்சி) சான்றோர் தமிழ் 5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 2/4 அடுத்து 1915இல் வெளிவந்த ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற நூல் செங்குட்டுவனின் வரலாற்றை ஆய்வது. செங்குட்டுவனைப் பற்றிய பல்வேறு செய்திகளும் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறநானூறு இவற்றின் அடிப்படையில் விளக்கம் பெறுகின்றன. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை இனிய உரைநடையில் விளக்கும் இந்நூல், இவர்தம் புலமைத் திறத்திற்கும் ஆராய்ச்சி வன்மைக்கும் தக்கதோர் காட்டாகும். 1926ஆம் ஆண்டில் தமிழ் உலகத்தில்…
சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!– இலக்குவனார் திருவள்ளுவன்
திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்! 1966-ஆம் ஆண்டுமுதல் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 11 ஆவது உலகத்தமிழ் மாநாட்டைச் சார்சாவில் சூலை 2023இல் நடத்த இருப்பதாகத் தகவல் வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. 90களில் அரசு சார்பாகத் துபாய் செல்ல வாய்ப்பு இருந்தும் வேறு அலுவல் பணிகளால் செல்ல முடியாமல் இருந்தது. எனவே, இப்பொழுது இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என எண்ணினேன். உலக மாநாடுகள் வணிக நோக்கு மாநாடுகளாகக் கருதி அவற்றைப்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 15
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் பல்லுயிரும் பலவுலகும் படைத் தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும் உன் உதரத்து உதித்துஎழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. எனும் தமிழ்த்தாய் வாழ்த்தில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்மொழி பல மொழிகட்குத் தாயாயுள்ள செய்தியை இனிமையுற எடுத்து மொழிந்துள்ளார்கள். இன்று திராவிட மொழிகள்…
