சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 493-504
(தமிழ்ச்சொல்லாக்கம்: 486-492 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 493-504 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 493. Wrist Watch – மணிக்கட்டு கெடியாரம் நல்லொழுக்கம் நாட்டிலில்லை. சூதே சொந்தமாயிற்று. வாதே வழக்கமாயிற்று. தீதே தேடலாயிற்று சட்டையுடன் சாப்பிடுதலே சகசமாயிற்று….
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 13
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 12 தொடர்ச்சி) ஊரும் பேரும் –13 நாடும் நகரமும் நாடு(தொடர்ச்சி) இவ்வாறு கங்கை கொண்ட சோழன் கண்ணெனக் கருதி வளர்த்த பெரு நகரம் இக் காலத்தில் உருக்குலைந்து பாழ்பட்டுக் கிடக்கின்றது. சிவாலயம் சிதைந்துவிட்டது. பெரிய ஏரி பேணுவாரற்றுத் தூர்ந்து போயிற்று. அரண்மனை இருந்த இடம் மாளிகைமேடு என்ற அழைக்கப்படுகின்றது. நீரற்ற ஏரி பொன்னேரி என்று குறிக்கப்படுகின்றது. அந் நகரின் பெயரும் குறுகிக் கங்கை கொண்ட புரம் ஆயிற்று. தஞ்சைச் சோழர் ஆட்சியில் அந் நகரம் எய்தியிருந்த…
உலகாய்தத்தை உணர்த்த உம்பர் உலகு சென்றாரோ பேரா.க.நெடுஞ்செழியன்!
பேரா.க.நெடுஞ்செழியன் மறைவு! தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று வைகறை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79. தமிழறிஞர், பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தமிழ் மெய்யியல், தமிழ் இலக்கியம், தமிழர் அரசியல், தமிழர் சமயம் ஆகிய துறையினரால் போற்றப்பட்டவர். ஆசீவகம் பற்றிய இவருடைய ஆய்வு தமிழாய்வு உலகில் மிகவும் முதன்மையானது. திருச்சி மாவாட்டம், இலால்குடி வட்டத்தில் உள்ள படுகை ஊரில் 15.06. 1944-இல் பிறந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று திருச்சியில் உள்ள ஈ.வே.இரா பெரியார்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 77
(குறிஞ்சி மலர் 76 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 27 தொடர்ச்சி “ஏண்டா, முருகானந்தம்! இன்றே உன் வீட்டுக்கு நான் வந்தாக வேண்டுமா, அப்படி என்ன அவசரமப்பா?” என்று கேட்டான் அரவிந்தன். முருகானந்தம் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லத் தயங்கினாற்போல் நின்றான். அரவிந்தனுக்குப் புரிந்து விட்டது. “ஓகோ? உன் திருமண ஏற்பாட்டைப் பற்றி உங்கள் வீட்டில் பெரியவர்களிடம் எடுத்துச் சொல்லிச் சம்மதம் பெற வேண்டுமென்கிறாயா? இதை என்னிடம் சொல்லுவதற்கு வெட்கமென்ன வேண்டியிருக்கிறது? நான் வருகிறேனப்பா. இப்போதே வேண்டுமானால் புறப்படு” என்று விவரம் புரிந்து கொண்டதும் முகமலர்ச்சியோடு வருவதற்கு…
உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 5/5- ப. மருதநாயகம்
(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 4/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 5/5 15. அகழ்வாய்வாளர்கள் நிறைவாகப் பதினைந்தாவதாக அகழ்வாய்வாளர்கள் குறித்த கட்டுரையை அளித்துள்ளார். “ஓர் இனத்தின் தொன்மைபற்றியும் பண்பாட்டின் தனிச்சிறப்பு பற்றியும் பேசுவதும் எழுதுவதும் தேவையா? அவ்வாறு செய்வது பிற இனங்களுக்கு அதன்பால் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் வளர வழி செய்வதாகாதா? பழம் சமுதாய, மொழி, இலக்கிய, பண்பாட்டு வரலாற்றைக் கிளறி உண்மை யறிய முயல்வதால் ஏதேனும் நன்மை உண்டா?” எனத் தொன்மை வரலாற்றுச் சிறப்பு…
‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை
(‘புதியபுரட்சிக்கவி’தமிழர்நெஞ்சில்எழுச்சியாய்உலவட்டும்! தொடர்ச்சி) பட்டுக்கோட்டை பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை வாழையடி வாழையென வருகின்ற தமிழ்ப் புலவர் திருக்கூட்ட மரபில், கடவுள் என்பதை முற்றாக மறுதலித்த முதற்கவிஞரான பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகள் முதல் தொகுதியை நடுநிலைப் பள்ளி மாணவப் பருவத்திலே கிடைகப் பெற்று அதனில் மூழ்கித் திளைத்தவன் நான். 1956இல் இருமுறை ‘தூக்குமேடை’ நாடகத்தை மேடையேற்றிய போது கதைத்தலைவன் பாண்டியனாகத் தூக்கு மேடையில் “பேரன்பு கொண்டோரோ பெரியோரே என் – பெற்ற தாய்மாரே நல்லிளஞ்சிங்கங்காள் – எனத் தொடங்கும் பாவேந்தரின் பாடல் வரிகளை முழங்கியவன்….
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.36-1.7.41
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 36. தந்துவைத்த வொருபொருளைத் தான்கொள்ளு மாறேபோல் வந்தடுத்துத் தீயாழி வாய்க்கொண்டு போயதன்பின் இந்திரத்தை யினிதாண்டன் றிருந்தபெருந் தமிழ்ச்சோழன் செந்தமிழின் மணங்கமழுந் திராவிடம்புக் கிருந்தனனே. 37. பூண்டசுவை யதுகண்ட பூனையுறி யுறிதாகத் தாண்டுமெனு முதுமொழியோற் றமிழ்சுவைத்த பாழ்ங்கடலும் ஆண்டெழுநூ றதன்முன்ன ரரைகுறையா வுள்ளதுங்கொண் டீண்டுள்ள வளவினநாட் டிடஞ்சுருங்கச் செய்ததுவே. 38. எத்தனையோ வகப்பொருணூ…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 25, 26 & 27: இணைய அரங்கம்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 25, 26 & 27 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 20, 2053 ஞாயிறு 06.11.2022 காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: எழுத்தாளர் மாம்பலம் ஆ. சந்திரசேகர் சிலம்புநம்பி முனைவர் இளவரச அமிழ்தன் புலவர் ச.ந. இளங்குமரன் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 14
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 13 தொடர்ச்சி) அத்தியாயம் 8எனது பிறப்பு விவாகம் ஆன பிறகு என் தந்தையார் உடையார்பாளையத்திலேயே இருந்து வந்தனர். அக்காலத்தில் தம் தாய் தந்தையரையும் தம்பியாரையும் அழைத்து வந்து தம்முடன் இருக்கச் செய்தனர். நடுவில் சில காலம் உத்தமதானபுரம் சென்று இருக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று. அதனால் உடையார்பாளையம் சமீன்தாரிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு தாய் தந்தையாரோடும் தம்பியாரோடும் உத்தமதானபுரம் வந்து தம் வீட்டில் தங்கியிருந்தார். தம்முடைய தந்தையாரால் போக்கியத்திற்கு விடப்பட்ட குடும்ப நிலங்களை மீட்க வேண்டுமென்ற கவலை அவருக்கு அதிகமாக…
சுவை உணவு தருவோரே சுவைத்தமிழையும் தாரீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 11. சுவை உணவு தருவோரே சுவைத்தமிழையும் தாரீர்! (முதல்வர் சாட்டையை எடுக்க வேண்டும்! தொடர்ச்சி) தமிழ்நாட்டிலுள்ள உணவகங்களில் தமிழைத் தேடும் நிலைதான் உள்ளது. இதனை முன்பே, “உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்!” என்னும் தலைப்பில் இரு கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம். இருப்பினும் இப்பொதுத் தலைப்பில் அதனையும் குறிப்பிட வேண்டும் என்பதற்காகக் குறிப்பிடுகிறோம். முன்பெல்லாம் பெரும்பாலான உணவகங்களின் பெயர்களைக் ‘கிளப்’ எனக் குறிப்பிட்டனர். பாவேந்தர் பாரதிதாசன் தமிழியக்கத்தில், “உணவுதரு விடுதிதனைக் ‘கிளப்’பெனவேண்டும் போலும்!” எனக் கேட்டிருப்பார். ‘கிளப்’ என்பது குறைந்திருந்தாலும்…
அறத்தமிழ்த் தாயே உறக்கம் களைக ! – பழ.தமிழாளன்
அறத்தமிழ்த் தாயே உறக்கம் களைக ! 1. மூத்தமுதற் தமிழ்க்குடியின் முத்தமிழ்த் தாயே ! மூவுலகும் போற்றிடவே முடிபுனைந்த உன்னை நேத்துவந்த ஆரியத்தார் நிலைகுலைத்தல் கண்டும் நீருறக்கம் கொள்ளுவது நன்றாமோ சொல்க பாத்திறத்த பைந்தமிழ இனமதனை வீழ்த்திப் பன்மொழியாய்ப் பல்லினமாய்ப் பாரதனில் கண்டும் பூத்திருக்கும் தூக்கமதன் பூவிழியால் கண்டே பகைத்தமிழ ஆரியரைப் பாரைவிட்டே ஓட்டு ! 2. இனத்தமிழ இனமதனை அழிப்பதற்குப் பாரில் எடுபிடியாம் சில்லறையை இணைத்துவைத்தே இன்பக் கனவுகண்டே ஆடுவதைக் களையெடுத்தே ஓட்டல் கதிரொக்கும் …
தமிழ்நாடும் மொழியும் 12 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 11 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி சமய நிலை திருமால், பிரம்மா, சிவபிரான், முருகன் இவர்களைப் பற்றி மிகுதியாகவும், பலராமன், கொற்றவை இவர்களைப் பற்றி ஆங்காங்கும் சங்க நூல்கள் கூறுகின்றன. அந்தணர் மந்திர விதிப்படி வேள்விகள் செய்தனர் என்றும், அவர்கள் ‘சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச் சீரெய்திய ஒழுக்கமொடு புணர்ந்து, அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்’ பெரியோராய் விளங்கினர் என்றும், ஒருவன் இம்மையிற் செய்த வினையின் பயனை மறுமையில் அடைவான் என மக்கள் எண்ணினர் என்றும், கணவன் இறப்பின் மனைவி உடன்கட்டை…
