உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்- ப. மருதநாயகம்

(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 4/5 10. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பத்தாம் கட்டுரை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் குறித்தது. “தேவநேயப் பாவாணர், தமிழ்மொழியே முதல் மாந்தன் பேசிய மொழியென்றும் தமிழினமே முதலில் தோன்றிய மாந்த இனமென்றும் குமரிக் கண்டமே மாந்தர் முதலில் வாழ்ந்த நிலப்பரப்பென்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டிற்கு வடமொழி இலக்கணம் பண்பாடு ஆகியவை பெரிதும் கடன்பட்டிருக்கின்றனவென்றும் தக்க சான்றுகளுடன் நாளும் முழங்கி வந்தவர்….

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் ¼ – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 தொடர்ச்சி) சான்றோர் தமிழ் 5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 1/4 பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அருந்தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர் சிலருள் குறிப்பிடத் தக்கவர் மு. இராகவை யங்கார் அவர்கள். தமிழ் மொழிப் புலமையும் வடமொழிப் புலமையும், ஆங்கில அறிவும். மிக்கவர். சேதுபதிகளின் ஆதரவாலும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தொடர்பாலும், தம் விடா முயற்சியாலும் இவர் கற்றுத் துறைபோய தமிழ்த் துறைகள்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி  வடமொழிச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள்தாமும் அச் சொற்களை ஆடம்பரப் பொருளாகவும் அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை.  ஆதலின் அவற்றை அறவே கைவிட்டு வாழவல்லவாம் என்பதை அவர்கள்-  கீழைநாட்டு மொழிநூல் அறிஞர்கள்  -அறிந்தவரல்லர். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தம்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு வடமொழிச் சொற்களை அளவுக்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின்…

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி உலக அளவில், வலையொளி வழியாக தமிழ், தமிழர், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக – பொருளாதார விடுதலை, குமுகாய மறுமலர்ச்சி ஆகிய தளங்களில் தமிழ்க்குடி விழிக்கப் பாடிய வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகளை முன்னிறுத்தி இளையோருக்கான புலமைப்பரிசில் திட்டமொன்றை கவிஞரின் 103ஆம் வெள்ளணி நாளான 07.10.2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் அறிவித்தது. வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் 2022 அறிவிப்பை இங்கே காணலாம் இதனொரு பகுதியாக ‘முடியரச முழக்கம்’ எனும் தலைப்பில் வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகள் மீதான…

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு)

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு) வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் பகரும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். வீறுகவியரசர் முடியரசனாரின் 103ஆம் வெள்ளணி நாளான அக்டோபர் 7, 2022 அன்று mudiyarasan.org வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டு வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி: தமிழின் பெருமையையும் முதன்மையையும் தன்னிகரில்லா வகையில் முன்னிறுத்திப் பாடிய முதுபெருங்கவி வீறுகவியரசர் முடியரசனார் ஆவார். தம்மொழியின் மாண்புணராத் தமிழர் நிலைகண்டு அவர் துன்புற்று வாடினார்;…

உலகத்தமிழாராய்ச்சிமாநாடு, புதிய கால அட்டவணை

செய்தி மடல் – Newsletter     மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு, வணக்கம். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணையைத் தங்களுடன் பகிர்கின்றோம். இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ள அறிஞர்களின் ஆர்வத்தையும் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு ஆய்வுப் பணிகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணை பின்வருமாறு 1. ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய தேதி: 15.நவம்பர்.2022.2. ஆய்வுச் சுருக்கம் பற்றிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 30.நவம்பர்.2022.3. முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 12

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 11 தொடர்ச்சி) ஊரும் பேரும் –12 நாடும் நகரமும் நாடு      நாடு என்னும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்த முறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. அந்நாடு மூன்று பாகமாகிய பொழுது ஒவ்வொரு பாகமும் தனித்தனியே நாடு என்னும் பெயருக்கு உரியதாயிற்று. சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என்ற பெயர்கள் தமிழிலக்கியத்தில் மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். நாளடைவில் முந் நாடுகளின் உட்பிரிவுகளும் நாடு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 76

(குறிஞ்சி மலர்  75 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 27 தொடர்ச்சி மாந்தர்பால் பொருள் போக்கிப் பயின்றதாம்மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலைஎந்தமார்க்கமுந் தோற்றில தென்செய்கேன்?ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?      — பாரதி அடுத்த நாள் விடியற்காலையில் மீனாட்சிசுந்தரத்தோடு அரவிந்தனும், முருகானந்தமும் மதுரைக்குத் திரும்பி விட்டார்கள். சிற்றப்பாவின் பதினாறாவது நாள் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குத் திரும்பவும் போவதற்கு முன்னால் அரவிந்தன் மதுரையில் செய்ய வேண்டிய செயல்கள் சில இருந்தன. மாவட்ட அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று பூரணியின் வெளிநாட்டுப் பயண அனுமதிக்கான விண்ணப்பங்களைக் கொடுத்து ஏற்பாடு செய்தான். பார்க்க வேண்டியவர்களைப்…

திருக்குறளின் அறத்துப்பாலுக்குக் கதையெழுதிய மாணவர்கள்!

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்!        மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பதின் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம்வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர்கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும்நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார்.        இப்பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்றுபள்ளி வளாகத்திலுள்ள ஆற்றல் அவைக்களம் அரங்கில் இந்நூலின் வெளியீட்டு விழாநடைபெற்றது.       ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும் இந்நூலை பள்ளியின் தாளாளர் சக்தி சிரீதேவி வெளியிட, கவிஞர்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35

(இராவண காவியம்: 1.7.26 – 1.7.30தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷ வேறு வண்ணம்         31.     குஞ்சோ ரைந்தின் மூன்றொழியக் கோலென் றலறுங் குருகேபோல்                வஞ்சாய் நீயுன் பொருளிழந்து மண்மே டாவா யென்றலற                அஞ்சா தக்கா ராழிபினும் ஐந்நூற் றோடீ ராயிரத்தே                எஞ்சா நின்ற பெருவளத்தோ டிந்திரப் பேரின் றாக்கியதே.         32.     அந்தோ முன்போற் றமிழ்மக்க ளானார் வடபா லடைவாகிக்                கொந்தார் கானக் குலமுண்டு கொழுதே யடிமைக் குடியாக                நந்தா…

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் – ப. மருதநாயகம்

(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 2/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 5. விபுலானந்த அடிகளார் ஐந்தாம் கட்டுரை விபுலானந்த அடிகளார் குறித்தது. “யாழ்நூல் கண்ட விபுலானந்தர் தமிழிசைக்கு மட்டுமின்றி, தமிழியலின் பல்வேறு துறைகளுக்கும் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். “படைப்பிலக்கியக்காரராக, திறனாய்வாளராக, மொழியியல் வல்லுநராக, கலைவரலாற்று ஆசிரியராக, கவிஞராக, தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தவராக, தமிழினப் பாதுகாவலராக, இதழியலாளராக, அறிவியல், சமயம், தத்துவம், வரலாறு ஆகிய துறைகளில் புததொளி தந்தவராக, அவர் செய்துள்ள…

மன்னர் மன்னன்: ‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்!

(‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்! பாவேந்தரின் புரட்சிக்கவி குறுங்காப்பியம் வெளிவந்து எழுபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.           இந்த நூல் வெளிவந்த அந்த ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பாரதிதாசன் ஒர் செந்தமிழ்ப் புரட்சிக்கவி எனத் தந்தை  பெரியார் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். 1946இல்  பேரறிஞர் அண்ணா நடத்திய நிதியளிப்பு விழாவில் புரட்சிக்கவிஞர் எனப் பாராட்டிப் பொற்கிழி வழங்கிப் போற்றினார். சிங்கப்பூர் நகரில் முதன் முதலில் புரட்சிக்கவி மேடை நாடகமாக அரங்கேறியது. அதன்பின்னர். டி.கே.எசு நாடக மன்றத்தினர்…