மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 63
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 62 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 23 கள்ளக்கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து – இங்குஉள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்? – சித்தர் பாடல் ஒரே கரும்பின் ஒரு பகுதி இனிப்பாகவும் மற்றொரு பகுதி உப்பாகவும் இருக்கிற மாதிரி மனிதனுக்குள் நல்லதும் கெட்டதும் ஆகிய பல்வேறு சுவைகளும், வெவ்வேறு உணர்ச்சிகளும் கலந்து இணைந்திருக்கின்றன. எல்லா கணுக்களுமே உப்பாக இருக்கிற ஒருவகைக் கரும்பு உண்டு. அதற்குப் ‘பேய்க்கரும்பு’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்குக் கரும்பு போலவே தோற்றம் இருக்கும். ஆனால் கரும்பின் இனிமைச்…
ஆங்கில விளம்பரங்களை நிறுத்து! – தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல், தாய் இதழ்
ஆங்கில விளம்பரங்களை நிறுத்து! தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல் 44ஆவது சதுரங்கப் பெருவிழாவில் ஆங்கில விளம்பரங்களே எங்கும் காணப்படுகின்றன. இது குறித்து ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மேற்கொண்டு சில விவரங்களை அவரிடம் கேட்டோம். அந்த நேர்காணல் இதோ… வணக்கம் ஐயா வணக்கம். ஐயா, நீங்கள் சதுரங்க உலகப் போட்டி தொடர்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளீர்கள். அது குறித்து மேற்கொண்டு சில விவரங்களைக் கேட்கலாமா? கேளுங்கள். சொல்கிறேன். நடைபெறும் சதுரங்கப் போட்டியை ஆங்கிலத்தில் குறிப்பிடாமல், 44…
எழிற்றமிழ் வேந்தன் இளங்குமரனார் இசையுடன் வாழ்வர் ! – புலவர் பழ. தமிழாளன்
எழிற்றமிழ் வேந்தன் இளங்குமரனார் இசையுடன் வாழ்வர் ! (திருவள்ளுவர் ஆண்டு 2053 கடகம் (ஆடி) 8, 24.07.2022 ஞாயிறு அன்று பாவாணர் இயக்கத் திங்கள் கூட்டத்தில் செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் முதலாம் நினைவேந்தல் நிகழ்வில் பாடப்பெற்ற பா) 1. தொடக்கநிலை ஆசானாய்ப் பணியதனை ஏற்றே தொல்தமிழ மாணவர்க்கே தமிழறிவை ஊட்டி நடமாடும் பல்கலையாய் நாட்டகத்தே தோன்றி நாடுதமிழ்ப் பல்கலையில் பணியுமதும் ஏற்று முடமானோர் முனைப்புறவே முதுகெலும்பும் நிற்க முதுமைவரை பணியாற்று மூதறிஞர்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6. 13 – 1.6. 17
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 13. ஈங்கொரு புதுமை யில்பொரு ளுவமை யெனத்தகு சிறுமுகை மணம்போற் பாங்கொடு மக்கள் பற்பல பெற்றும் பழமையென் றளவிடு மகவுந் தாங்கிய தாவிற் கன்னியா யிளமை ததும்பிடுந் தண்டமிழ்த் தாயை நீங்கிய விளமைச் சிறியவ ருலக நெறியிலா ரொத்துளே மெனலே. 14. வண்புகழ் மூவ ரொடுதமிழ்க் குயிரை வழங்கிய…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 305- 308
(தமிழ்ச்சொல்லாக்கம்: 302-304 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 305-308 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 305. சர்வசுதந்தரம் – முற்றூட்டு இராசநீதிகளையும், ஆசாராதிகளையும், வழக்கங்களையும், தெய்வத்தையும், புண்ணிய பாவ மோட்ச நரசாதிகளையும், சிவஞானத்தையும் யாவர்க்கும் உணர்த்துவதும், பூர்வ சரிதங்களை விளக்குவதும் இவ்வியற்புலமையன்றோ? இத்தகைய உயர்வு தாழ்வுகளையறிந்தே பூர்வ அரசர்களில் எத்தனையோ பேர், இயற்புலவர்கட்கு முற்றூட்டாகப் (சர்வசுதந்தரம்) பல கிராமங்களைத் தானஞ்செய்தும் பற்பல ஆடையாபரண வாகன முதலிய விசேட மரியாதைகளைச் செய்தும் பாதுகாத்ததுடன் தமக்கு முக்கிய மந்திரிகளாகவும், உயர்ந்த துணைவர்களாகவும், தம்மினுமிக்க மரியாதையுடன் எப்போதுந்தம்முடன் (இவ்வியற்புலவர்களையே) வைத்து, அவர்கள்…
சிறப்புக் கட்டுரை: சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
சிறப்புக் கட்டுரை: சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்! அரசியல் சிறப்புக் கட்டுரை Jul 24, 2022 08:49AMJul 24, 2022 IST : –இலக்குவனார் திருவள்ளுவன் சதுரங்க ஞாலப் போட்டி 2022 இற்கு வாழ்த்துகள்! 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி ஆடி 12, 2053 / 28.07.2022 -ஆடி 25, 2053/ 10.08.2022 நாட்களில் நடைபெறுகிறது. சதுரங்க ஞாலப்போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது. நேப்பியர் பாலத்தைச் சதுரங்கக் கட்டங்களாக வண்ணந்தீட்டி விளம்பரப்படுத்துவதிலிருந்து எல்லா வகையிலும் முதல்வர் அவர்கள் அறிவுரைக்கிணங்க அதிகாரிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்….
பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 9
(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 8 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த கோயிலிலேயே ஒரு சிறு அறை, செட்டியார் தங்கி இருந்த இடம். அகல் விளக்கு அதிகப் பிரகாசமின்றி எரிந்து கொண்டிருந்தது. வேலையாட்கள் தூங்கும் சமயம். குமரி அவசரமாக ஓடி வந்தாள் கோயிலுக்கு. அறை யிலே செட்டியார் உலவிக் கொண்டிருக்கக் கண்டு, ” என்னாங்க உடம்புக்கு ! என்னமோ நொப்பும் நுரையுமா தள்ளுது, போய்ப் பாருடி, யாரையும் எழுப்பாதே. யாருக்கும் சொல்லாதே என்று மீனா அக்கா சொன்னாளே…
அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆங்கில மோகம் கொண்ட அதிகாரிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(6. புதிய ஆட்சித்தமிழ்ச்சட்டம் தேவை தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 7. அதிகாரிகளின் ஆங்கில மோகத்தை அகற்றுங்கள்! அல்லது அவர்களை உயர் பொறுப்புகளில் இருந்து அகற்றுங்கள்! [குறிப்பு: தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 7. திரைத்துறையின் தமிழ்க்கொலைகளைத் தடுத்திடுக ; 8. இதழியல் துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்திடுக! என்பனவற்றைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். தேவை கருதி இப்பொழுது அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆங்கில மோகம் கொண்ட அதிகாரிகள் குறித்து எழுதுகிறோம்.] சதுரங்க ஞாலப் போட்டி 2022 இற்கு வாழ்த்துகள்! 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி …
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 302-304
(தமிழ்ச்சொல்லாக்கம்: 295 – 301 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 302-304 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 302. Atoms – உயிரணு பூமியில் எங்கு பார்த்தாலும் பதார்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. இப்பதார்த்தங்களை (இ)ரசாயன சாசுதிரிகள் பலவிதமாகச் சோதனை பண்ணிக் கடைசியில் அவை துண்டு பண்ண முடியாமலிருக்கும்படியான நிலைமையை அடைகின்றன என்று தாபித்திருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட நிலைமையை உடையன ஏறக்குறைய எண்பது விதமானவை. அவற்றை உயிரணு (Atoms) என்று சொல்வது வழக்கம். நூல் : வியாசப்பிரகாசிகை (1910), பக்.97. பதிப்பாளர் : பி. எசு. அப்புசாமி (ஐயர்) (உரிமையாளர் : …
உ.வே.சா.வின் என் சரித்திரம், பதிப்புரை
உ.சா.வின் என் சரித்திரம் பதிப்புரை ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனைபாடு பட்ட பதத்தெளி வெத்தனை பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனைநாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனைகூட நோக்கினர்க் காற்றின வெத்தனை கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே! – இரா.இராகவையங்கார்தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது. இந்நூலைக்…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 10,11 & 12 : இணைய அரங்கம் – சூலை 24,2022
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 10,11 & 12: இணைய அரங்கம் ஆடி 08, 2053 ஞாயிறு , சூலை 24, 2022, காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: கவிஞர் முனைவர் மு.பொன்னவைக்கோ முன்னை மும்மைத் துணைவேந்தர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ மேனாள் தலைவர், பாரதிதாசன் உயராய்வு மையம் முனைவர் (இ)லிங்க.இராமமூர்த்தி ஆய்வுத் தகைமையாளர் . இந்தியக் குமுகாய அறிவியல் ஆராய்ச்சிக் கூட்டமைப்பு. கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 62
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 61 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 22 தொடர்ச்சி “நானே தபாலாபீசுக்குப் போய்விட்டு வருகிறேன் அம்மா!” என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய…
