தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.1/4

சான்றோர் தமிழ் 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 1/4 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப் பெறுவது தஞ்சை மாவட்டம் ஆகும். ‘கலை மலிந்த தஞ்சை’ என்றும் தஞ்சை மாவட்டம் போற்றப் பெறும். ஆடல், பாடல்களும், அழகுக் கலைகளும் நிறைந்த மாவட்டமும் தமிழ் நாட்டில் அதுவேயாகும். ‘பெரிய கோயில்’ என்று சிறப்பாகப் பேசப்பெறும் முதலாம் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் அமைந்திருப்பதும் தஞ்சை மாவட்டத்திலேயேயாகும். வற்றாத வளம் கொழித்துக் காவிரிப் பேராறு பாய்ந்து வளம் சிறக்கும் நாடு தஞ்சை மண்ணேயாகும். இத்தகு பெருமை…

கோவை ஞானி – எசு.என்.நாகராசன் நினைவு இணையக் கருத்தரங்கு

கோவை ஞானி – எசு.என்.நாகராசன் நினைவு இணையக் கருத்தரங்கு ஆடி 07, 2053 சனி 23.07.2022 மாலை 6.00-7.30  – இரவு 7.30-9.00 ஈரமர்வுகள் கூட்ட எண்: 864 136 8094    புகு எண்: 12345 கோவை ஞானி வாழ்வும் பணியும் மாலை 6.00 – இரவு 7.30 தொடக்க உரை: முத்துக்குமார் கருத்துரை: சுப்பிரபாரதி மணியன் பஞ்சாங்கம் சோதி மீனா சவகர் எசு.என்.நாகராசன் வாழ்வும் பணியும் இரவு 7.30-9.00 தொடக்க உரை: கண.குறிஞ்சி கருத்துரை: தோழர் தியாகு யமுனா இராசேந்திரன் பொதிய…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 295 – 301

(தமிழ்ச்சொல்லாக்கம்: 289-294 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 295-301 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 295. சாமானியம்  —        பொதுமை 296. விசேடம்         —        சிறப்பு 297. இரசம்  —        சுவை 298. பரிமாணம்    —        அளவு 299. பேதம்  —        வேற்றுமை 300. பிரயத்தனம் —        முயற்சி 301. சத்தம்  –           ஓசை நூல்   :           தருக்க கெளமுதி (செளமிய ௵ (1910) நூலாசிரியர்         :           தஞ்சை மாநகரம் வெ. குப்புசுவாமி இராசு (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல்,  ஆசிரியர் முன்னுரை

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் ஆசிரியர் முன்னுரை   உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மை யுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம். இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது.   மொழியே நம் விழி;…

தமிழினமே பெருமையுறத் தமிழ்நாடு பிறந்ததுவே! – கிருட்டிண திலகா

பா வகை: கலி மண்டிலம்.      தமிழினமே பெருமையுறத் தமிழ்நாடு பிறந்ததுவே! ஆண்டதொரு ஆங்கிலேயர்              ஆட்சியிலே வைத்தாரே..    வேண்டாத மதராசு            வென்றதொரு   பெயர்மாற்றம்.      நீண்டகாலப்   போராட்டம்             நிலைத்தது     நற்பெயராய்க்      கொண்டதொரு   தமிழ்மொழியால்                  கண்டோமே    தமிழ்நாடு. 2.   சங்கரலிங்    கனாரேற்றார்              சாகும்வ     ரைஉண்ணாது       மங்காதப்    புகழ்பெற்றார்.               மகத்தான    உயிர்நீத்தார்.       தங்கமான சின்னதுரை               தந்தாரே   தீர்மானம்.        எங்கெங்கும் தமிழ்நாடு                இசையாகப்  பரவியது. 3. நிதியமைச்சர்   பேசினாரே             …

நிலையில்லை எதுவும்…! அமுதா பொற்கொடி

நிலையில்லை எதுவும்…! மணம்வீசும் மலர்கள் மாலையில் வாடும் வனம்சூழும் குயிலோசை குரல்வளை ஓயும் தனம்கோடி குபேரமும் தெருக்கோடி சேரும் மனம்கூடிய பாசமும் பசபசப்பாய்ச் சோரும் கட்டிய கோட்டைகள் தரைமட்டமாகும் ஒட்டிய ஒட்டடைகள் ஒவ்வாமையாகும் வாட்டிக் கூட்டி வகுத்த போகம் வட்டியும் முதலுமாய்க் கைவிட்டுப் போகும் ஆய்விழிப் பார்வை அந்தகம் ஆகும் வாய்வழிப் புன்னகை உதட்டோடு குன்றும் நோய்நொடி அகன்று நூறாண்டு கடந்தாலும் மெய்வற்றி உலர்ந்து பாடையில் போகும் நேற்றைய நிகழ்வுகள் இன்று புரையும் இன்றைய நடப்புகள் நாளை திரையும் முந்தை கடந்தவை காலத்தால் கரையும்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3- 1.6.7 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்           8.     ஒருமொழி யேனு மினையநாள் காறு                      முலகெலாந் தேடியு மடையா                 இருவகைக் கைகோ ளன்பினைந் திணையோ                      டெழுதிணை யகம்புற மென்னும்                 பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப்                      பொருளிலா ளெனப்புகல் பொய்யர்                 மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர்                      மதியினுக் குவமையம் மதியே.           9.     பேசுநற் குணமு மெழுதெழில் வனப்பும்                      பெரியர்சொற்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 8

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 7 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி ஏதுமறியாத குமரி, செட்டியார் ஏதோ கவலையாக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு வருந்தினாள். “என்னாங்க உடப்புக்கு? ஒரு மாதிரியா இருக்கறிங்க.” “ஏன்! அதெல்லாம் ஒண்ணுமில்லையே! “ரொம்பக் களைச்சாப்போல இருக்கறிங்க” “எனக்கென்ன களைப்பு ! நான் என்ன, உன் போல வெயிலிலே வேலை செய்கிறேனா?” “உங்களுக்கு ஏனுங்க, தலை எழுத்தா என்ன, கூலி வேலை செய்ய? நீங்க மகாராசா.” “உனக்கு மட்டும் தலை எழுத்தா, இவ்வளவு இளம்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 289-294

(தமிழ்ச்சொல்லாக்கம்: 281-288 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 289-294 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 289 – 293. உடலசைவுகள் : 5 289. உத்தானிதம் —        மல்லாத்தல் 290. திரியக்கு        —        குறுக்கு அல்லது ஒருகணித்தல் 291. ஆசிதகம்       —        உட்காத்தல் 292. (இசு)திதம்       —        நிற்றல் 293. ஆன்மிதம்      —        குனிதல் நூல் : கொக்தோகம் (1910) பக்கம் : 171 ★ 294. மகாவித்துவான் – பெரும்புலவர் மார்க்கண்டேய புராணம் வசனகாவியமும் அரும்பத விளக்கமும் இஃது சென்னை பிரசிடென்சி காலேசில் தமிழ்ப்புலமை…

கூட்டை எரிக்கும் சிறகுகள்!- கிருட்டிண திலகா

கூட்டை எரிக்கும் சிறகுகள்! வேலியுமே பயிர்களைத்தான்   கெடுக்கும் காலம்.      வெள்ளாட்டை வளர்ப்போனே           அழிக்கும் கோலம். கூலியின்றி   ஏமாற்றிப் பிழைக்கும்    கூட்டம்.         குடிவைத்த வீட்டினையே          எரிக்கும்   நாட்டம். வாலில்லாக்    குரங்கினத்துப் பகையை        அன்று         வாலிதனை மாய்த்ததுபோல்  மறைந்திருந்து            அழிக்கத்    தோன்றும். சூலியென  ஆங்காரம் எழுமே     நெஞ்சில்.         சூழ்பகையும் அழிந்திடுமே             வலியும்  மிஞ்சில்! *பொய்சொல்லி ஆட்சியேறிப் பிழைக்கும்    கூட்டம்.        போக்கற்ற  வழியினிலே        பணத்தைக்   கட்டும். மெய்வருத்தி   உழைப்போர்மேல் வரியைக்  கூட்டி…       …

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  61

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  60 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 22 தொடர்ச்சி அப்பாவின் நினைவு, உள்ளத்தில் உண்டாக்கிய உரத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த மீனாட்சிசுந்தரத்தையும், முருகானந்தத்தையும் நோக்கி உறுதியான குரலில் கூறலானாள் பூரணி. “நீங்கள் மிக்க அனுபவசாலி, எவ்வளவோ பெரியவர். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்லுகிற காரியத்துக்கு எப்படி இணங்குவதென்று தான் தயக்கமாக இருக்கிறது. இத்தகைய உலகியல் வழிகளில் சிக்கிப் பொருளும் புகழும் பெறுவதை என் தந்தையே தம் வாழ்நாளில் வெறுத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்போதே அப்படியானால் இப்போது உள்ள…