திருக்குட நன்னீராட்டு விழா முதலிய பெரு விழா, திருவையாறு

அருள்தரு ஒளவைத் திருக்கோயில்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாதிருவள்ளுவர் சிலை திறப்பு விழாநாட்டுப்புற இசை நிகழ்ச்சி ஒளவைத் தமிழ் வாழ்வியல் கருத்தரங்கம் வைகாசி 20,21,22,23, 2053 * 03-06.06.2022 ஒளவைக்கோட்டம், திருவையாறு, தமிழ்நாடு

பேரறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் – முன்னுரை

குமரிக்கோட்டம் முன்னுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்து விடுகின்றன. ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை, உரோசம்  நிரம்பிய அண்ணன், இவர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் காணலாம். பெயர்கள், குழந்தைவேலர் என்றிராது; குமரி என்று இருக்காது. ஆனால், இவ்விதமான நிலைமையிலுள்ளவர்களை, நாட்டிலே காண முடியும். மகன் தலைகால்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.17-22

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 11-16  தொடர்ச்சி)    இராவண காவியம் தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் 17.    இன்ன போலவே கிழக்குநா டென்னுமவ் விடத்திற்                  கன்னை போவோ ரின்புடைத் தமிழ்மகன் தன்னை                  மன்ன னாக்கினன் அன்னனும் வண்டமிழ் வளர்த்தான்                  இன்ன வன்மர பெழுந்தரே யிசையுடைச் சோழர்.            18.    ஓகை யோடவர் வானினுங் கொடுமுடி யுயர்ந்த                  நாகை மாநகர் தனிலினி திருந்துநா ணாளும்                  ஈகை யோடுசெங் கோலற முதலிய வெவற்றும்                  வாகை…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 111- 117

(தமிழ்ச்சொல்லாக்கம்  106-110  தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 111. Room – சிற்றில் அறை – அடி, சொல், சிற்றில் (Room), திரை, பாறை, மறை, மலையுச்சி. நூல்   :           தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894) முதற் பாகம், பக், 2 நூலாசிரியர்         :           பு: த. செய்யப்ப முதலியார் (சென்னை சென்ட் மேரீசு காலேசு தமிழ்ப் பண்டிதர்) (தமிழ்நாட்டில் பயிற்சிமொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்றவர்) ★ 112. விசாலாட்சி – அழகிய கண்ணையுடையவள் நூல்   :           தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894)…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  49

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  48 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 18 “இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்” என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந்தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம். “இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவி நிதிகள் – இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு…

திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! -இலக்குவனார் திருவள்ளுவன்

திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! தமிழுக்குத் தலைமை அளிக்கும் வகையில் செயல்படுவதைத் தமிழக அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், சொற்கள்தாமே செல்வம். நாம் தமிழ்ச்சொற்களைக் கைவிடலாமா? பிற மொழிச் சொற்களை இறக்குமதி செய்துவிட்டுத் தமிழை வளர்க்கிறோம் என்பதில் பயனில்லையே! இதற்கு எடுத்துக்காட்டாகத் ‘திராவிட மாடல்’ என்று பயன்படுத்துவதைக் கூறலாம். கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சக வெளியீடாக செட்டம்பர் 2011 இல் உருவாக்கப்பட்ட ஒரு நூல் நவம்பர் 25, 2011 இல் வெளிவந்தது. அந்த நூலின் பெயர் “திராவிட மாதிரி: தமிழ்நாட்டின்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.11-16

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி) இராவண காவியம்1. தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம்        11.    ஈங்குபல் லாண்டு செல்ல விருந்தமி ழகத்தில் வாழும்                  ஓங்குநல் லறிவு வாய்ந்த யுயர்தமிழ் மக்க ளெல்லாம்                  தாங்குநா னிலத்த ராகித் தனித்தனி வாழ்தல் நீத்துத்                  தேங்குமோர் குடையி னீழற் றிகழ்ந்திட மனக்கொண் டாரே. மாபெருந் தலைவன்            12.    தண்டமி ழகத்தை முற்றுந் தனியர சோச்சத் தாழ்வில்                  திண்டிற லொழுக்க மேன்மை திறம்பிடா நீர்மை மேய                 …

நான்

நான் முதுமை என்பது எனக்கில்லை! முனகலும் தவிப்பும் எனக்கில்லை! நோய்கள் குறித்து வருத்தமில்லை! நோதலும் சாதலும் எனக்கில்லை! இளமை இன்றும் மனம் நிறைய இன்னிசைப் பாடித் திரிகின்றேன்! எனக்கும் மேலே உள்ளவனை ஏக்கம் கொண்டு பார்ப்பதில்லை! எனக்கும் கீழே இருப்பவனை ஏளனம் செய்துச் சிரிப்பதில்லை! இதயத் துடிப்பின் உயிர்த்துளியாய் இயற்கை என்போன் இயக்குகிறான்! அன்பும் அறிவும் நிறைந்தோர்கள் அருகில் வாழும் காரணத்தால் ஆசைகள் குறைந்த மனிதன் நான்! அகந்தை இல்லாக் கவிஞன் நான்! – பாவலர் கருமலைப் பழம் நீ பேசி – 94444…

‘அ . . . .’ க்கு நன்றி! முதல்வரின் சிறப்பான அணுகுமுறையை உணரச் செய்தமைக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

‘அ . . . .’ க்கு நன்றி! முதல்வரின் சிறப்பான அணுகுமுறையை உணரச் செய்தமைக்கு! தலைமையமைச்சர் நரேந்திரர் மூன்று நாள் முன்பு சென்னையில் சில திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தார். இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.தாலின் மிகச் சிறப்பாக நம் மாநிலத்தின் வேண்டுகோள்களைத் தெரிவித்தும் திராவிட நன்முறை ஆட்சி விளக்கம் குறித்தும் பேசினார். இதனால் கண்ணேறு பட்டதால் கண்ணேறு கழிக்கப் பூசுணைக்காய் கட்டுவதுபோல் ஒருவர் சிலவற்றை உதிர்த்துள்ளார். ‘முதல்வர் பேசிய உரைக்காக நான் வெட்கப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். அந்த அளவிற்குச்…

பீலிபெய் நடுகல் – சொற்கீரன்

பீலிபெய் நடுகல் மண்காத்து தன் உயிர் நீத்தவர்பீலிபெய் நடுகல் அல்லது பிறிது உரைபேழ் வாய்ப் பூதம் பேய்க்கதை கூறும்மறை மொழி ஈண்டு என்னிஃது பகரும்.பிறப்பும் இறப்பும் அடுக்கிய ஊழ் தனில்இருப்பின் பொறிகிளர் எல்லே எல்லாம்சொல்லிச்செல்லும் மெய்மொழி உணரார்கல்படு சுனை ஒரு நுங்கின் கண் என‌பளிங்கு வீழ்த்த நிழற்பட்டாங்குஉள்ளம் பாழ்த்து அஞ்சவும் படுமே. – சொற்கீரன் விளக்க உரை தன் தாய்மண் காக்க உயிர்நீத்தவர் பற்றி மயில் பீலி சூட்டிய அந்த நடுகல் காட்டும் உரைகள் தவிர வேறு வாய்பிளந்த பூதம் பேய்களின் கதைகளா அங்கு…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 75

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 74. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி இரவு மூன்று மணிக்கு விழித்தபோது புயல் அடங்கி இருந்தது. மின்னலும் இடியும் களத்தைவிட்டு அகன்று ஓய்ந்திருக்கச் சென்றிருந்தன. காற்றுத் தோல்வியுற்று அடங்கி எங்கே ஒளிந்திருந்தது. மழையும் களைத்துச் சோர்ந்து விட்டாற்போல் சிறு சிறு தூறலாய் பெய்து கொண்டிருந்தது. எழுந்து போய்ச் சந்திரனைப் பார்த்தேன். பிதற்றாமல் புரளாமல் ஆடாமல் அசையாமல் இருந்தான். நல்ல அமைதியோடு உறங்குகிறான் என்று திரும்பி விட்டேன். மன அமைதி உள்ளபோது உடம்பும் நல்ல அமைதி பெறுவது…