தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 124-128 
(தமிழ்ச்சொல்லாக்கம் 118 -123 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 124. Hero – பெருமான் 125. Heroine – பெருமாட்டியார் இந்துக்கள் அதிர்ட்டவசமென்றும், திசாபலம் இராசி நட்சத்திரங்களின் பலமென்றும், ஊழ்வினைப் பலமென்றும் பலவகையில் இந்நடவடிக்கைகட்கு நியாயம் சொல்வதால், கவி எடுத்துக்கொண்ட பெருமான், பெருமாட்டியார் (Hero, Heroine) பெருமை இவ்வித இவ்வித சம்பவங்களால் அலங்கரிக்கப்பட்டு விசித்திரமாவது பற்றி, இதை ஒரு அணியென வகுத்தல் தமிழாசிரியர் பெற்றியாம். மேற்படி நூல் : பக்கம் : 414 ★ 126. சூரிய நாராயண சாத்திரியர் -பரிதிமாற்கலைஞன் இதுகாறும்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.1-5
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.23-28 தொடர்ச்சி) ஒழுக்கப் படலம் கொச்சகம்
‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு – வெ.அரங்கராசன்
முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ – நூலாய்வு 1/4 1.0.0.0.நுழைவாயில்: 1-8-1973 முதல் 30-6-2008 வரை [34 ஆண்டுகள், 10 திங்கள்கள் 29 நாள்கள்–மொத்தம் 12477 நாள்கள்] சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் இருக்கையில், போற்றுதலுக்கு உரிய பெரும் பணி ஆற்றியவர் திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள். அப்போது “ஆய்வே வாழ்வு; வாழ்வே ஆய்வு” என்னும் பே ராசிரியர் முனைவர் ந. சஞ்சீவி அவர்களின் ஆய்வியல் கோட் பாட்டை அகத்தில் ஏற்றுக் கொண்டார். அன்றுமுதல் சாய்வும் ஓய்வும் இன்றித்…
கலங்காதே பெண்ணே! விடியலில் வருவான்! – சொற்கீரன்
கலங்காதே பெண்ணே! விடியலில் வருவான்! மெலி இணர் நவிரல் ஒள் வீ சிதற வான் அதிர் உடுக்கள் வெள் நிலம் வீழ்ந்து பரந்து விழி விழி உறுத்து வியத்தல் அன்ன நின்னைக்கண்டு நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய். வெங்கல் அருங் கடம் சென்றான் ஆங்கு மீள்வழி நோக்கி வானப்பரவை உன் விழி அம்பு கூர்த்த வடுக்கள் எண்ணி எண்ணி புள்ளியிட்டாய் . அதனை அழித்திட வருவான் என்னே. கலங்கல் மன்னே.காலையும் விரியும். பொழிப்புரை மெல்லிய பூங்கொத்து உடைய முருங்கை மரத்தின் ஒளிசிந்தும் சிறு பூக்கள் உதிர்ந்து தரையில் படர்ந்து கிடப்பது…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 118 – 123 
(தமிழ்ச்சொல்லாக்கம் 111-117 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 118. ஆண்டிமொனி – நிமிளை அச்செழுத்து எப்படி உண்டாகிறது? நாலு பங்கு ஈயத்துக்கு ஒரு பங்கு நிமிளை (ஆண்டிமொனி) கூட்டுவார்கள். நூல் : மூன்றாம் சுடாண்டர்டு புத்தகம் – பதப்பொருளும் வினா விடையும் (1897) நூலாசிரியர் : எத்திராச முதலியார். ★ 119. அம்போதரங்கம் – நீரின் அலை அம்போதரங்கம் (நீரின் அலை) அல்லது அசையடி – இது கடல் அலைகள்போல அடிகள் அளவடியாய்ப் பெருத்தும், சிந்தடியாய்ச் சிறுத்தும், குறளடியா யதனினும் சிறுத்தும் தாழிசைக்குப் பின்…
பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 1
பேரறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம்: முன்னுரை – தொடர்ச்சி பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் அத்தியாயம் 1. “சிரீமான் குழந்தைவேல் செட்டியார்வாள், மகா உத்தமர். அவருடைய திவ்விய குணத்தைத் தேசம் பூராவும் போற்றுகிறது. இப்படிப்பட்டவா, ஒரு சிலராவது இருப்பதாலேதான், காலம் கலிகாலமா இருந்தாலும், மழை பெய்யறது, பூலோகத்தைச் சமுத்திராதி உற்பாதங்களால் அழிக்க முடியவில்லை” என்று கூறலாம். “உலகமே தலைகீழாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே, பெரியவாளுடைய காரியங்களை நாசம் செய்யறதை, பிரமாதமான சீர்திருத்தம்னு பேசிண்டிருக்கு, ஒரு ராட்சசக் கூட்டம். அப்படிப் பட்டவாளெல்லாம், நம்ம செட்டியாரின் சர்வ…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 50
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 49 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 18 “தாங்க முடிந்ததற்கு மேல் அதிகப்படியான சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறவன் ஏலாமையோடு முனகுகிற மாதிரி வாழ்க்கையில் இன்று எங்கும் ஏலாமையின் முனகல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது. முள்ளோடு கூடிய செடி பெரிதாக வளர வளர முள்ளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருப்பதைப் போல உரிமைகளும் விஞ்ஞான விவேக வசதிகளும் நிறைந்து வாழ்க்கை தழைத்து வளர வளர அதிலுள்ள வறுமைகளும் பிரச்சினைகளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருக்கின்றன. குற்றம் குறைகளோடு தப்பாக எடுக்கப் பெற்ற புகைப்படத்தை அப்படியே பெரிது…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1712 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1707-1711 இன் தொடர்ச்சி) 1712. வானகவியல் Astronomy – வானியல், வானசாத்திரம், ககோளசாத்திரம், வான நூல், வான வியல், வானவியல் வான நூல், வானூல், வான்கோள ஆய்வியல், விண்ணியல், கணிதசாத்திரம், சோதிட நூல், காலக்கணிதம், காலக் கணனம்பற்றிய வானசாத்திரம், சோதிசாத்திரம் எனக் கூறப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவற்றுள் வானியல் என்பதையும் கணனம்(சோதிடம்) என்பதையும் Astronomy குறிப்பிடுகிறது. Ástron என்னும் கிரேக்கச் சொல்லுக்கு வானிலுள்ள பொருள்கள் எனப் பொருள். அஃதாவது, கோள்கள், நட்சத்திரங்கள் முதலியவை. Astrologia என்னும்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.23-28
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-22 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 4.தலைமக்கட் படலம் 23. மாரி போற்பொரு ளீந்துமே தாய்மொழி வளர்த்த சேர சோழபாண் டியரெனத் தமிழர்கள் செப்ப வீர ராகவும் புலவர்க ளாகவும் வெருவாச் சூர ராகவும் விளங்கினா ரிவர்வழித் தோன்றல். 24. அன்ன மூவருந் தன்னின்கீ ழன்னசிற் றரசர் தன்னை யேற்படுத் தியல்பொடு தமிழகந் தன்னைப் பன்னு நூற்றுறை பழுத்தநற் பழந்தமிழ்ப் புலவர் சொன்ன சொற்படி…
ஆளுமையர் உரை 2 & 3 : பேரா. வெ.அரங்கராசன் & புதிய மாதவி
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 2 & 3 : இணைய அரங்கம் நாள்: வைகாசி 22 , 2053 ஞாயிறு சூன் 05.2022 காலை 10.00 ஆளுமையர் உரைகள் : எழுத்தும் நானும் பேராசிரியர் வெ.அரங்கராசன் எழுத்தாளர் புதிய மாதவி, மும்பை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: தமிழாசிரியை உரூபி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் தொகுப்புரை: தோழர் தியாகு நன்றியுரை: …
தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (திருவள்ளுவர், திருக் குறள் 813) பயன்கருதிப் பழகுநருக்கும் பரத்தையருக்கும் கள்வருக்கும் ஒப்பாகத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவோரைக் கூறலாம். ஏனெனில் அவர்கள் தமிழ்ச்சொற்களை மக்கள் பயன்படுத்த இயலா வண்ணம் கவர்ந்து அகற்றி விடுகிறார்கள். பொதுநலம் பார்க்காமல் பிறருக்குப் பொதுவாக இருந்து புன்னலம் தோயும் விலைமக்களுக்கு ஒப்பாகத் தமிழ் நலம் பார்க்காமல் வாழ்கிறார்கள். குமரி முதல் இமயமலை வரை வழங்கி வந்த தமிழ் மொழி,…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1707-1711 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1701-1706 இன் தொடர்ச்சி) 1707. வாழ்க்கைப் புள்ளியியல் இன்றியமையாத புள்ளி விவரங்கள், உயிர்ப் புள்ளியியல், உயிர்ப் புள்ளிவிவரவியல், பிறப்பு இறப்பு விவரங்கள், உயிர்நிலைப் புள்ளிவிவரம், குடிவாழ்க்கைப் புள்ளியியல், குடிசனப் புள்ளிவிபரம், சனன மரணக் கணக்கு, சனங்களின் பிறப்பிறப்புப் பதிவுப் புத்தகம், பிறப்பிறப்பு விபரங்கள், பிறப்பிறப்புப் புள்ளிகள், பிறப்பு இறப்பு விவரங்கள், பிறப்பு-இறப்புப் புள்ளி விவரங்கள், முதன்மைப் புள்ளிவிவரங்கள், வாழ்க்கைப் புள்ளிவிபரம், வாழ்க்கைப் புள்ளிவிவரவியல் எனப் பலவாறாகக் கூறப் படுகின்றது. உயிர், உயிர் நிலை, முதலானவற்றைக் கையாள்…
