தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 106- 110 

(தமிழ்ச்சொல்லாக்கம்  101-105 தொடர்ச்சி) (சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித்தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 106. Photo – புகைப்படம் வெகு நேர்த்தியான அமைப்பு! அற்புதமான வேலை! பார்க்கப் பார்க்க பரமானந்தத்தைத் தரும்! தங்க வண்ணமான சாயையுள்ளது!! சிதம்பரம் நடராசர் கோயிலின் புகைப்படம். சிற்சபை, கனகசபை, நிருத்தசபை, முக்குறுணிப் பிள்ளையார் கோயில், தில்லை கோவிந்தராசர் சந்நிதி முதலியனவும் இரண்டு கோபுரங்களுமடங்கியது….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1696 – 1700 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1691 – 1695 இன் தொடர்ச்சி) 1696. வாந்தியியல் Eméō> emeto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் வாந்தி எடுத்தல்.  Emetology  1697. வாயு Aero – வாயு, வான், காற்று, வான, வானூர்தி, விமான என்னும் பொருள்களில் பயன்படுத்துகிறது. காற்று என்பதையும் காற்று வழங்கும் வானத்தையும் வானத்தில் பறக்கும் வானூர்தி யையும் இடத்திற்கேற்பப் பயன்படுத்தலாம். வாயு என்பதும் தமிழ்ச்சொல்லே. வாய் என்றால் நிறைதல் என்றும் பொருள். எங்கும் நிறைந்துள்ளதால் காற்று என்பதற்கு வாயு என்றும் பெயர் வந்தது….

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4. 6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 1-5 தொடர்ச்சி) இராவண காவியம்1. தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் 6.     ஏந்திய செல்வ மோங்கு மிரும்புனல் மருதந் தன்னில்                  வாழ்ந்தவே ருழவ ரோங்க வருமுதற் றலைவர் முன்பு                  போந்தவ னரணந் தங்கிப் பொருள்வளம் பொலியக் காத்து                  வேந்தனென் றானா னப்பேர் மேவினார் வழிவந் தோரும்.            7.     கடல்கடந் தயனா டேகிக் கலனிறை பொருள ராகி                  மடலுடைத் தாழைச் சேர்ப்பின் மணலுடை நெய்தல் வாழும்                  மிடலுடை நுளையர்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 101- 105 

(தமிழ்ச்சொல்லாக்கம்  96-100 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 101. Gas Light – காற்றெரி விளக்கு நீராவியந்திரம் கண்டுபிடித்தவனைப் பைத்தியக்காரனென்று கல்லை விட்டெறியாத பேருண்டோ முதலில்? காற்றெரி விளக்கை (Gas Light) உண்டாக்கினவனை அவன் காலத்தோர் யார்தான் நகைத்துக்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  48

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  47 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்18 பரபரப்பினோடே பலபல செய்தாங்(கு)இரவு பகல் பாழுக்(கு) இறைப்ப – ஒருவாற்றான்நல்லாற்றின் ஊக்கிற் பதறிக் குலைகுலைபஎவ்வாற்றான் உய்வார் இவர்.      — குமரகுருபரர் மேற்கு வானத்திலிருந்து தங்க ஊசிகள் நீளம் நீளமாக இறங்குகிறாற் போல் மாலை வெயில் பொற்பூச்சுப் பூசிக் கொண்டிருந்தது. கண்களுக்கு நேரே மஞ்சள் நிறக் கண்ணாடிக் காகிதத்தைப் பிடித்துக் கொண்டுப் பார்க்கிற மாதிரி தெருக்களும், வீடுகளும், மரங்களும் மஞ்சள் கவிந்து எத்தனை எழில் மிகுந்து தோன்றுகின்றன! கோடானுகோடி நெருஞ்சிப் பூக்களை வாரிக்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1691 – 1695 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1681-1690 இன் தொடர்ச்சி) 1691. வளைவரை தட்பியல் காண்க : தட்பியல்-Climatology Dendroclimatology 1692. வறுமையியல் ptōkhós என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் வறுமை. Ptochology 1693. வனைமுறை  இயங்கியல்   Process – செயல்முறை, நடைமுறை, செயலாக்க முறை, செயல் முறைக்குள்ளாக்கு, முறைப்படுத்து, படிமுறை, பதனம் செய், செலுத்தம்  எனப் பலவாறாகக் கூறுகின்றனர். படிப்படியாக நிகழ்விக்கும் செயல்பாட்டை மட்கலங்கள் செய்யப்படும் வனைதல் முறையுடன் ஒப்பிடலாம். மண்பானை செய்யத் துணை நிற்கும் சக்கரத்தை வனை கலத்திகிரி எனச் சீவக…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.1-5

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் அறுசீர் விருத்தம்            1.     குறிஞ்சியி லிருந்து முல்லை குறுகிப்பின் மருத நண்ணித்                  திறஞ்செறி வடைந்த பின்னர்த் திரைகடல் நெய்தல் மேவி                  மறஞ்சிறந் தயனா டேகி வணிகத்தாற் பொருணன் கீட்டி                  அறம்பொரு ளின்ப முற்றி யழகொடு வாழுங் காலை;            2.     தங்களுக் குள்ளே தங்கள் தலைவரைத் தேர்ந்தெ டுத்தாங்                  கங்கவ ராணைக் குட்பட் டச்சமொன் றின்றி யன்னார்                 …

சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ்

சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ் சிறுவர் சிறுமியர் குறள்நெறி வழி நடைபோட வந்துள்ள திங்கள் மின்னிதழ் குறள் விருந்து. உலகத்திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தால் இலவச இணைய இதழாக வெளியிடப்பெறுகிறது. இதன் ஆசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார். பொறுப்பாசிரியர் முற்போக்குப்பாவலர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு. முனைவர் முரசு நெடுமாறன் சிறப்பாசிரியராக உள்ளார். பொறி தி.ஈழக்கதிர் இணை ஆசிரியராக உள்ளார். கம்போடியா அங்கோர் தமிழ்ச்சங்கப் பொருளாளராகவும் உள்ள இதன் பொறுப்பாசிரியர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு எழுதிய தலைமைப்பண்பிற்கு உயிர்நேயம் தேவை என வலியுறுத்தும் வகுப்பறை-சிறுவர் கதை விருந்து…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 74

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 73. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். “நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பள பள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு” என்றான்….

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 96-100

(தமிழ்ச்சொல்லாக்கம்  91- 95 தொடர்ச்சி) அ. Donation – நன்கொடை இந்து கன தனவான்கள் மெம்பர்களாக விருக்கப் பிரியப்படாமற்போனால் நன்கொடை (Donation)களாகவாவது கொடுக்க இட்டப்பட்டால் கொடுத்து வரலாம். இதழ் :           சிரீலோரஞ்சனி 15-4-1890, புத். 4, இல – 1 பக். – 8, சி.கோ. அப்பு முதலியார் : (சிந்தாதிரிப்பேட்டை) பத்திராசிரியர். ★ ஆ. Donation – நன்கொடை இந்து மதாபிமான சங்கம். இச்சங்கம் தாபித்து இரண்டு வருடமாகிறது. இதில் மெம்பராய் சேரவேணுமாகில் மாதம் சபைக்கு 4 அணாவும், சங்கத்திற்கு 1 அணா…

2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  – 1 இன் தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! தமிழ்வளர்ச்சித் துறை என்னும் பெயர் குறித்துப் பல்வேறு தமிழ் அமைப்பினரும் பிற துறையினரும் இத்துறை தமிழையா வளர்க்கிறது. அப்படியானால் தமிழ் வளரவில்லையா என்பர். சிலர் தமிழ் மேம்பாட்டுத் துறை எனப் பெயரிடலாமே என்பர். அப்படிக் கூறினால் தமிழ், மேம்படுத்தப்படவேண்டிய குறை நிலையில் உள்ளதாகப் பொருள் ஆகாதா என விடையிறுப்பேன். அலுவலகங்களில் தமிழை வளர்ப்பதால் தமிழ் வளர்ச்சித் துறை எனக்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் மக்கட் படலம் அழுக்கற வெளுத்து வண்ண மாக்குவோர் வண்ணார் பின்னர்                  மழுக்குற மயிரை நொய்தின் மழிப்பவர் மழிப்பர் வாய்மை                  ஒழுக்குற வரிதி னோவந் தீட்டுவோ ரோவர் மற்றும்                  வழக்குறு தொழில்க ளெல்லாம் வகைப்படுத் தப்பேர் பெற்றார். பல்வகைப் பறையின் யாழின் பாகுசெய் குழலின் வாயிற்                  சொல்வகை யமையத் தாளத் தொகையுட னராகம் வாய்ப்ப                  நல்வகை யிசையுங் கூத்தும் நலம்பட விசைக்க மேலோர்                 …