தமிழனின் மொழிப்போர் எதற்காக? – இலக்குவனார் திருவள்ளுவன், இன்றைய(25/01) உரை

திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம் இணையவழிக் கருத்தரங்கம் 37 தை 12, 2053 / செவ்வாய் / 25.01.2022 / மாலை 6.30 குறி எண் : 894 6054 6548 கடவு எண் : 202020 வலையொளி நேரலை : Dhiravidam 1944 தலைமை:  தகடூர் சம்பத்து சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழனின் மொழிப்போர் எதற்காக?” தொடர்பு : 8939 59 4500

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 431 – 451 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  421 – 430  இன் தொடர்ச்சி) 431. கடலியல் Oceanology 432. கடல் உயிரியல் Marine biology  433. கடல் பொறியியல் Marine Engineering 434. கடல் வானிலையியல் Naval Meteorology 435. கடல்சார் தொல்லியல்            Marine Archaeology 436. கடல்முள்ளி யியல் Acanthology 437. கடற்கரைப் பொறியியல் Coastal Engineering 438. கடற் பாசியியல் Algology (2) 439. கடற்பரப்பு வானிலையியல்    Marine Meteorology 440. கடைக்கால் பொறியியல் Foundation Engineering 441. கடைத்தேற்ற இயல் Soteriology…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 31-37 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம்   வேறு 1. தெண்டிரை மூன்று திசையுனுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.   2. நனிமிகு பண்டுநர் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறு. பகைசிறி தின்றி இனிதுயர் வெண் குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.   3. சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும்…

தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கான தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022 முதல் பரிசு: அமெரிக்கப்பணம்  $ 1000.00 இரண்டாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 500.00 மூன்றாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 250.00 கட்டுரைகள் திருக்குறள் குறித்து தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். கட்டுரைகள் 1000 சொற்களுக்குக் குறையாமலும் 1500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் எத்தனைக் கட்டுரைகளும் அனுப்பலாம் ஆனால், வெவ்வேறு தலைப்புகளில் இருக்க வேண்டும். கட்டுரைகள் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும். கட்டுரை குறித்த 5 நிமைய…

தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா

தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா விழா மலருக்குப் படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்வரி malar@fetna.org 750 சொற்களுக்கு மிகாமல் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும். கடைசி நாள்: மாசி 17, 2053 / 01.03.2022 கூடுதல் தகவலறிய : http://fetna-convention.org    

குழந்தை வளர்ப்பிற்கான இணைய வழிப் பயிலரங்கம்

பெண்களுக்கான குழந்தை வளர்ப்பு இணைய வழிப் பயிலரங்கம் பிப்.11-16, 2022 பதிவுக்கட்டணம் உரூ.499/- தொடர்பிற்கு: 75982 33858 ; 93455 53486 தகவல்: முதுவை இதாயத்து துபாய் 00971 50 51 96 433 muduvaihidayath@gmail.com   

ஈழத்துத் திறனாய்வு – மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 19  6. விமர்சனம் இலக்கிய விமர்சனம் என்பது, இலக்கியப் படைப்புக்களை வகைப்படுத்துதல், வரையறை செய்தல், விளக்கியுரைத்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஓர் அறிவுத்துறை என்று கூறுவர். பொதுவாக விமர்சனம் இரு வகைகளாகப் பாகுபடுத்தப்படுகின்றது. ஒன்று கோட்பாட்டு விமர்சனம் அல்லது விமர்சனக் கோட்பாடுகள். மற்றது செயல்முறை விமர்சனம். இலக்கியப்படைப்புகளை விளக்குவதற்கும், அவை பற்றி அபிப்பிராயம் கூறுவதற்கும் அவற்றை வகைப்படுத்தி மதிப்பிடுவதற்கும் உாிய பொதுவான அடிப்படைகளையும் அளவுகோள்களையும் வகுப்பதைக் கோட்பாட்டு விமர்சனத்துள் அடக்குவர். ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பை அல்லது…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 421 – 430 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  404 – 420 இன் தொடர்ச்சி) 421. ஓடிலி யியல் Limacology 422. ஓட்டுடலியல் Crustaceology / Malacostracology 423. ஓமரியல் Homerology 424. ஓய்வறை எழுத்தியல் Latrinology 425. ஓரையியல் hōra என்னும் இலத்தீனில் இடம் பெற்ற பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நேரம்/ காலம். எனவே, கால  அளவியல் என்றும் நேர அளவையியல் என்றும் குறிப்பிடுகின்றனர். ஓரா என்னும் கிரேக்க/ இலத்தீன் சொல்லின் மூலம் தமிழ்ச்சொல்லான ஓரை.    “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம்…

கலைஞர் செம்மொழி விருது வழங்கு விழாவில் முதல்வரின் சிறப்பான உரையும் அறிவிப்புகளும்

கலைஞர்    மு.கருணாநிதி செம்மொழித்  தமிழ்  விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கி உரையாற்றிய முதல்வர் மு.க.தாலின் அவர்கள், “மேடவாக்கம்  –  சோழிங்கநல்லூர்இணைப்புச் சாலை “செம்மொழிச்சாலை”  எனப்  பெயர்  மாற்றம்செய்யப்படும்.    என்றும்  தென்கிழக்குஆசியாவிலுள்ள  5  பல்கலைக்கழகங்களில் “செம்மொழித் தமிழ்இருக்கைகள்” அமைக்க நடவடிக்கை   மேற்கொள்ளப்படும்” என்றும்  “அண்ணா,  கலைஞர்காட்டிய பாதையில் கழக அரசுதமிழை  ஆட்சி  மொழியாக்கதொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றும்  உறுதிபடக் கூறினார். 2010  முதல்  2019-ஆம்  ஆண்டுகள்  வரையிலான  செம்மொழித் தமிழாய்வு  மத்திய  நிறுவனத்தால் வழங்கப்படும்     “கலைஞர்     மு.கருணாநிதி  செம்மொழித்  தமிழ்விருதுகள்’’    வழங்கும்  விழாவில், முதல்வர் …

‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதுகள்’ வழங்கப்பட்டன.

2010 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்தமிழ்  விருதுகள்’ முதல்வரால் வழங்கப்பட்டன. முத்தமிழறிஞர்  கலைஞர்  அவர்களின்பெரு  முயற்சியால்  தொன்மையும்,  இலக்கியவளமும் நிறைந்த தமிழ் மொழியானது  2004-ஆம்  ஆண்டு  ஒன்றிய  அரசால்  செம்மொழியாக  அறிவிக்கப்பட்டது.  செம்மொழித்தமிழுக்கெனத்  தனித்தன்மையுடன்  கூடிய ஓர்  ஆராய்ச்சி  நிறுவனம்  தொடங்கப்படவேண்டும்  என்ற  முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின்    கனவினை    நிறைவேற்ற, ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு, இந்திய  மொழிகளுக்கான  நடுவண்  நிறுவனத்தின்  ஓர்  அங்கமாக,  செம்மொழிக்கான நிறுவன மொன்று அமைக்கப்பட்டது. பின்னர்2008-ஆம்  ஆண்டில்  ‘செம்மொழித்  தமிழாய்வு…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 404 – 420 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  396- 403  இன் தொடர்ச்சி) 404. ஒவ்வாமை இயல் Allergology 405. ஒழுங்கிலி யியல்          Chaology 406. ஒளி அளவை இயல் Photometry 407.ஒளி உயிரியல் Photobiology 408. ஒளி ஒப்புமை யியல் Optical Analogy 409. ஒளிபுவிவடிவியல் Photogeomorphology 410. ஒளிமின்னணுவியல் Opto electronics 411. ஒளி வேதியியல் Photo Chemistry 412. ஒளி வளைசலியல் Photoecology 413. ஒளித்துத்த வரைவியல் Photozincography – ஒளித்துத்த வரைவியல், நிழற்பட முறையில் துத்துநாகத் தகட்டில் உருச்செதுக்குங் கலை எனக்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 50

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 49. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 21 பி.ஏ. தேர்வு நன்றாகவே எழுதி முடித்தேன். நல்ல வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. மாலன் அவ்வளவு நம்பிக்கையோடு பேசவில்லை. மூன்றாம் பகுதியைப் பற்றிக் கவலைப்பட்டான். “நீ எப்போதும் இப்படித்தான். உனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு. உள்ளதைச் சொல்ல மாட்டாய்” என்றேன். “உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?” என்றான். “உழைப்பில் நம்பிக்கை உண்டு. அறத்தில் நம்பிக்கை உண்டு.” “கூடிய வரையில் உழைக்கிறோம். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம்…