ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 510 – 527 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 498 – 509 இன் தொடர்ச்சி) 510. கனிம இயல் Metallogeny / Mineralogy 511. கனிம உறவியல் Paragenetic Mineralogy 512. கனிம வேதியியல் Inorganic Chemistry 513. கனிமப் பொருளியல் Mineral Economics 514. கனி யியல் Carpology 515. கன்னிமை இயல் Parthenology 516. காட்சிக் குமுகவியல் Visual Sociology 517. காந்த ஒலியியல் Magneto acoustics 518. காந்த ஒளியியல் Magnetooptics 519. காந்த நிலையியல் Magnetostatics 520. காந்தநீர்ம இயங்கியல் Magneto…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம். 6-10
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 6. தன்கடன் குன்றித் தமிழகங் கொண்ட தென்கடல் முன்பு செழுந்தமிழ் நாடா நன்கட னாடு நனிவளந் தேங்கிப் பொன்கட னாடப் பொலிந்தது காணும். ++ கடல்நாடும் கடலும் விரும்பும், பொன் கடன்’ நாடக செல்வம் கடன் கேட்க, ++ 7. ஆயிரங் கல்லி னகன்ற பரப்ப தாயய னாட ரவாவுற, நீங்கிப் போயல ரேங்கப் பொலிவுறு செல்வம் தாயது பண்டக…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 498 – 509 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 491 – 497 இன் தொடர்ச்சி) 498. கருப்ப இயல் káruon என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கருப்பம் . இதனை மரபுத்திரியியல் என இ.த.க.க.அகராதி, கால்நடை அறிவியல் துறை அகராதியில் இருந்து எடுத்துக் கூறுகிறது. கருவியல் – embryology என்பதன் மறுசொல்லாகக் கருதலாம். Karyology/Caryology 499. கலங்கரைவிளக்க இயல் Pharmacology(2) 500. கலைச்சொல்லியல் Terminology 501. கல்வி உளவியல் Educationa lPsychology 502. கல்வி நுட்பியல் Educational Technology 503. கல்விக் குமுகவியல் Educational Sociology 504….
ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 20 திறனாய்வு (தொடர்ச்சி) 2 உரைநடையில் அமைந்த நவீன இலக்கியங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியதை அடுத்து 1940 களிலேயே ஈழத்தில் நவீன விமர்சனம் துளிர்விடத் தொடங்கியது எனலாம். இக்காலக் கட்டத்தில் புனைகதைத் துறையில் ஈடுபட்டோரே இவ்விமர்சனத் துறையிலும் ஈடுபட்டனர். நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் நவீன சிந்தனை முறையின் தோற்றமும் ஆகும். அதனால் பழைய சிந்தனை மரபுக்கும் புதிய சிந்தனை மரபுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டின் விளைவாகவே நவீன இலக்கிய விமர்சனம் தோன்றியது. தாம்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 51
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 50. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 21 தொடர்ச்சி “உனக்கும் அப்படித்தான். இனிமேல் படிப்பதாக இருந்தால் நீ சொல்வது சரி. படிப்பு இனிமேல் இல்லை என்று முடிவாகிவிட்ட பிறகு, திருமணம் செய்துகொள்வது நல்லது. பணக்காரக் குடும்பத்தினர் உன்னைத் தேடி வருவார்கள். விருப்பமாக இருந்தால் சொல். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விருப்பம் இல்லை. அவர்களுக்குச் சமமாகப் பணம் இல்லாவிட்டால், நம்மை மதிக்கமாட்டார்களே என்று அம்மாவும் அப்பாவும் அஞ்சுகிறார்கள். ஆகவே பொருளாதாரக் கவலை தான் இதற்கும் காரணம். அத்தை மகள், அக்கா மகள்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 491 – 497 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 470 – 490 இன் தொடர்ச்சி) 491. அணுப் பொருள் உளவியல் கருப் பொருள் உளவியல் என்கின்றனர். கருப் பொருள் என்பது அணுக் கருவைக் குறிக்கிறது. இலக்கியக் கருப்பொருளுடன் குழப்பம் நேரக் கூடாது என்பதற்காக அணுப் பொருள் உளவியல் எனக் குறித்துள்ளேன். Atomistic Psychology 492. கருஊன இயல் 493. பிறவிக்கோளாறு ஆய்வு, கருஊன இயல், இயல்பிறழ் கருவியல் எனப்படுகிறது. சுருக்கமான கருஊன இயல் – Teratology (2) இங்கே தரப்பட்டுள்ளது. சில அகராதிகளில் Terratology எனவும் இடம்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 470 – 490 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 452 – 469 இன் தொடர்ச்சி) 470. கதிரிய நீரியல் Radiohydrology 471. கதிரிய நுட்பியல் Radiotechnology 472. கதிரியக் கால நிரலியல் Radio Chronology 473. கதிரிய ஏமவியல் எதிரூக்கி யியல் என்கின்றனர். அவ்வாறு சொல்வதைவிடச் சொற்சீர்மை கருதி கதிரிய ஏமவியல் என்பது ஏற்றதாக இருக்கும். Radioimmunology 474. கதிரிய வளைசலியல் Radioecology 475. கதிரியப் பண்டுவம் Radiotherapy 476. கதிரியப் பனியியல் Radioglaciology 477. கதிரியப் புவியியல் Radiogeology 478. கதிரியல் Radiology 479. கதிர்வீச்சு…
தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 35 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 36 5. தமிழ்மொழியாராய்ச்சி மேலே காட்டியவாறு பெரியாரின் இந்தி எதிர்ப்புச் சிந்தனைகளைக் கண்டோம். தமிழ் மொழி ஆய்வுபற்றியும் சிந்தனைகளைச் செலுத்தியுள்ளார். அச்சிந்தனைகள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். (1) ‘தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பவை தமிழேயாகும்’. மலைநாட்டுப் பகுதியில் பேசும் தமிழ் மலையாளம் என்று சொல்லப்பெறுகின்றது, கருநாடகப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் கன்னடம் எனப்பெறுகின்றது. ஆந்திரப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் தெலுங்கு எனப்படுகின்றது. இந்த நால்வரும் பேசுவது தமிழ்தான். (2) திராவிடமொழிகள்…
தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு
தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது. பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்துமகாகவி…
வாழ்வியல் அரங்கம் – பொன்னவைக்கோ சிறப்புரை
மயிலைத் திருவள்ளுவர் சங்கம் தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வாழ்வியல் அரங்கம் – 19 தை 14, 2053 / 27.01.2022 வியாழன் மாலை 4.00 – மாலை 6.00 கூட்ட எண் : 356 272 2898 கடவுச் சொல் : mtsacademy சிறப்புரை – பேராசிரியர் முனைவர் பொன்னவைக்கோ பங்கேற்போர் முனைவர் சேயோன் முனைவர் வாசுகி கண்ணப்பன் பேரா.கோ.பார்த்தசாரதி பேரா.க.திலகவதி திருமதி செண்பக காசி முனைவர் ஐ.அம்பேத்து
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 452 – 469 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 431 – 451 இன் தொடர்ச்சி) 453. கணித இயற்பியல் Mathematical physics 454. கணிணி சார் பொறியியல் Computer-Aided Engineering 455. கணிதப் புவியியல் Mathematical Geology 456. கணித வியல் Mathematics 457. கணிப்பி மொழியியல் Computational linguistics 458. கணிப்பிப் பொறியியல் Computer Engineering 459. கணிப்பியப் பாய்ம இயங்கியல் Computational Fluid Dynamics 460. கணிப்பியப் புள்ளியியல் Computational statistics 461. கணிப்பொறி வரைவியல் Computer Graphics 462. கணிய நுட்பியல் Software…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 10 தொடர்ச்சி திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாயிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்லை அவள். குறைவிலும் நிறைவாக இருக்கிற இரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான். அன்றைக்கு வெள்ளிக்கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அதில் எல்லாரும் கலந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்கலாம். பூரணி அன்று ‘திலகவதியார் சரித்திரம்’…
