அகல் விளக்கு – மு.வரதராசனார்: 48
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 47. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 20 மாலனுடைய திருமணம் ஆவணி இறுதியில் அமைந்தது. கால் ஆண்டுத் தேர்வு முடிந்துவிட்ட பிறகே திருமணம் நடைபெறுவதால், ஒருவகை இடையூறும் இல்லாமல் திருமணத்திற்கு வந்து போகுமாறு மாலன் கூறிச் சென்றான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெருங்காஞ்சிக்கு ஒருமுறை போய்வரலாம் என்று முடிவு செய்தேன். மாலன் தந்த அழைப்பு அல்லாமல், சந்திரன் அனுப்பிய அழைப்பும் வந்தது. சந்திரன் தனியே கடிதமும் எழுதியிருந்தான். நல்ல காலம், அவனுடைய மனம் மாறியிருக்கிறது என மகிழ்ந்தேன்….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 238 – 257 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206 – 237 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 238 – 257 238. உயிரிய ஒலியியல் Bioacoustics 239. உயிரிய நுட்பியல் Biotechnology 240. உயிரிய நோயியல் Pathobiology 241. உயிரிய மரபியல் Biogenetics 242. உயிரிய மருத்துவ மரபியல் Biomedical genetics 243. உயிரிய மருத்துவப் பொறியியல் Biomedical Engineering 244. உயிரிய மின்னணுவியல் Bioelectronics / Bionics 245. உயிரிய மீ ஓசையியல் Bioultrasonics 246. உயிரிய முறைமையியல் Biosystematics 247….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206- 237 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 187-205 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206- 237 206. உணர்ச்சி உடம்பியியல் Physiology Of Emotion உணர்ச்சியின் உடலியங்கியல், உணர்ச்சியின் உடலியல், உணர்ச்சி இயங்கியல் எனக் கூறப்படுகிறது. Physiology – உடம்பியியல் எனப் பயன்படுத்துவதால் உணர்ச்சி உடம்பியியல்- Physiology Of Emotion என்றே சொல்வோம். Physiology of emotion 207. உணர்ச்சி யியல் Emotionology 208. உணர்வகற்றியல் / மயக்கவியல் Anesthesiology / Anaesthesiology 209. உணர்வு இயங்கியல் Sensory Physiology 210….
தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 32 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 33 4. இந்தி எதிர்ப்பு “உலக வாழ்க்கையில் ஓர் ஒடிந்து போன குண்டூசிக்கும் பயன்படாத மொழியாகிய இந்திக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பெற்று வருகிறது. என்பது வெகுநாளாகத் தமிழ் மக்கள் கவனித்து வரும் சங்கதியாகும்” என்று எழுதிய ஐயா அவர்கள் இந்தி எதிர்ப்புக்காக மேற்கொண்ட பணி மிகப் பெரியது. இவற்றை விவரமாக ஈண்டு எடுத்துக்காட்டுவேன். 1926-ஆம் ஆண்டு முதலே பெரியார் தமிழ்நாட்டில் இந்தி நுழைக்கப்பபெறுவதை எதிர்த்து வருகின்றார். “இந்தியைப் பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை…
133 மணிநேரத் திருக்குறள் தொடர் இணைய ஆய்வரங்கம்
திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் அனைத்திந்திய புத்தக ஆவணம், புதுச்சேரி இணைந்து வழங்கும் வள்ளுவம் போற்றுவோம் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி 133 மணிநேர இணைய வழி உலக அருந்திறல் பன்னாட்டுத் திருக்குறள் ஆய்வரங்கம் தொடக்க விழா திருவள்ளுவர் ஆண்டு 2052 மாா்கழி 29 13.01.2022 வியாழன் காலை 9.30 முதல் தொடர்ந்து 133 மணிநேரம் 133 கட்டுரையாளர்களின் அருந்திறல் ஆய்வரங்கம் நடைபெறும். குத்துவிளக்கேற்றித் தலைமையுரை அருள்மிகு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு தொடக்கச் சிறப்புரை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் பொறி….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 187 – 205 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 175-186 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப்பெயர்கள் 187 – 205 187. உடம்பிய Physiological என்னும் முன் இணைப்புச்சொல் உடலிய, உடலியக்க, உடலியக்கத்தின், உடலியங்களின், உடலியக்கவியலிய, உடலியங்கு, உடலியல், உடற்றொழியியல், உடற்றொழிலுக்குரிய, உடற்றொழில், உடற்றொழில்வழி, உடற்றொழின்முறை, உடற்றொழிற்பாடு, உடற்றொழிலியல், உடற்கூற்றியல், உடற்செயல். உடற்றகு, உடற்றொழிற்பாட்டு, உடற்றொழின்முறை, சரீர அடிப்படை, உடற் கூற்று, வாழ்வியல், வினையிய, வினையியல், உடலியற், உடலி, உடற் கூற்றிய, உடற் கூற்று எனப் பலவாறாகக் குறிக்கப் பெறுகிறது. Physiology என்பதை உடம்பியியல்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 23
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 22 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 9 தொடர்ச்சி ஒவ்வொரு நாளும் அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளுக்காக மாலையில் மதுரைக்குப் புறப்படும்போது தம்பிகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்க மாட்டார்கள். அதனால் குழந்தையையும் வீட்டுச் சாவியையும் ஓதுவார் வீட்டிலோ பக்கத்தில் கமலாவின் தாயாரிடமோ ஒப்படைத்துவிட்டுப் போவாள். தம்பிகள் வந்தவுடன் சாவியை வாங்கிக் கொண்டு குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு பூரணி நகரத்திலிருந்து வீடு திரும்புவாள். சில நாட்களில் தம்பிகளும் தங்கையும் அவள் வருமுன்பு…
மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி
மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி அன்புள்ள தம்பி தங்கைகளுக்கு,வணக்கம். “எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்! விளக்கம் இதோ:நம் நாட்டு விடுதலை மூலம் உலகிற்கே அகிம்சைப் பாடம் நடத்திய அண்ணல் காந்தியை நம்மில் ஊறியிருந்த வன்முறை உணர்வுகளுக்கு நாமே பலியாக்கினோம். எனினும் அகிம்சைக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அது அமைந்தது அல்லவா? அகிம்சைக்கு மேலும் வலுவூட்ட அகிலத்தையே ஆன்ம சக்தியால் நிரப்ப வேண்டிய…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 175-186 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 133 – 174 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 175 – 186 175. உடல் அசைவியல் 176. இன்ப துன்பவியல் álgos, hēdonḗ ஆகிய பழங் கிரேக்கச் சொற்களின் பொருள்கள் துன்பம், மகிழ்ச்சி என்பனவாகும். இன்பத்தில் வருவதுதானே மகிழ்ச்சி. Kinology Algedonics 177. ஈக்களியல் Diptero என்றால் ஈரிறக்கை எனப் பொருள். இரண்டு இறக்கைகள் உள்ள ஈயைக் குறிக்கிறது. Dipterology 178. ஈரப்பத அசைவியல் hugrós என்னும் பழங் கிரேக்கச்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம்: அரசர் தொடர்ச்சி
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 16-20 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 21-25 வேறு படியிடை முத்தமிழ்ப் பாவல ராகவும் கடியுடையத் தமிழகக் காவல ராகவும் வடிவுடை முதுதமிழ் மரபினின் மேவிய முடியுடை மூவர்தம் மொய்கழல் போற்றுவாம். இலங்கையை யடைதர இளையபாழ்ம் பாவியும் அலங்கியே யாரியர்க் கடிமையாய்ப் படையொடு தலங்கியே யெதிர்வரக் கண்டுமத் தமிழ்மனங் கலங்கிடா விறையவன் கழலிணை போற்றுவாம், வேறு கொண்டோன் களப்படவக் கொலைகார ஆரியருங் கண்டே யிரங்கக் கணவ னுடனவிந்து தண்டாத் தகையதரிழ்த் தாய்மானங் காத்துயர்ந்த வண்டார் குழலி மலர்ச்சிலம்பை வாழ்த்துவமே)….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 165 – 174 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 146 – 164 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 165- 174 165. இனத்திரள் Population என்னும் சொல்லிற்குத் தமிழில் குடித்தொகை, சனத்தொகை, மக்கள் தொகை, இனத்திரள், இனத்தொகுதி, இனத்தொகை, உயிரினத் திரள், முழுமைத் தொகுதி, மக்கள் திரள், உயிரியத் தொகை, உயிரினம், குழு எனப் பலவகையாகக் குறிக்கின்றனர். populatio என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் மக்கள், கூட்டம் என்பதாகும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு(Census) என நாம் குறிப்பிடுவதில் மக்களின் எண்ணிக்கை மட்டும் கணக்கெடுக்கப்…
ஈழத்து நாடக இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 16 நாடக இலக்கியம் தொடர்ச்சி 2 ஆங்கிலக் கல்வி சிருட்டித்துவிட்ட மத்தியதர வருக்கத்தின் ஒரு பிாிவினர் மேனாட்டு மொழிபெயர்ப்பு நாடகங்களையும் புராண இதிகாசக் கதைகளையும் கையாண்டு நாடகத்தைப் பொழுதுபோக்குச் சாதனமாகக் கொள்ள இன்னொரு பிாிவினர் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் மண்வளம் ததும்பிய சமூகநாடகங்களை நாடக உலகுக்கு அளித்தனர். இவர்களே ஈழத் தமிழ் நாடக உலகில் இயற் பண்பு வாய்ந்த நாடக நெறி ஒன்றினை உருவாக்கினர். இவர்கள் கையில் நாடகம் வெறும் பொழுதுபோக்குச்…
