தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 12/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 13/17 பெண்களே நாட்டிற்குப் பெருவிளக்காம் ஆதலின்நம்பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் அம்மானைபெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் என்றக்கால்பெண்புத்தி பின்புத்தி என்றதேன் அம்மானைஎனல்தவறு முன்னேற்றம் ஈயவேண்டும் அம்மானை       (61) சீரிய பண்புடைய செந்தமிழ்ப் பெண்மக்கள்கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்காண் அம்மானைகூரியநல் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதைநீநேரிய சான்றொன்றால் நிறுவிடுவாய் அம்மானைசங்ககால ஒளவைமுதல் சான்றுபலர் அம்மானை       (62) காய்கனிகள் வளமிக்க கவின்தமிழ்நாடு ஓங்கநம்தாய்கட்கு வீரம் தழைக்கவேண்டும் அம்மானைதாய்கட்கு வீரம்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 35

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 34. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14 தொடர்ச்சி எங்களைப் பின் தொடர்ந்திருக்கிறார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் ஏறிய பேருந்திலும் ஏறினார். அங்கும் முரடன் நடந்து கொண்ட முறையைக் கவனித்திருக்கிறார். அவன் ஒதுங்காமல், முன்னுக்கும் செல்லாமல் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான் அல்லவா? என் பக்கமாகத் தன் கால்களை நகர்த்தி என் கால்கள்மேல் படுமாறு செய்தான். நான் என் கால்களை எவ்வளவோ ஒடுக்கி உட்கார்ந்தும் பயன் இல்லை. எனக்கு அழமட்டாத குறைவாக இருந்தது. ஒரு புறம் கோபமாகவும் இருந்தது….

சதுரங்கப் போட்டி, வ.அ.த.ச.

வணக்கம்! வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வணக்கம் வட அமெரிக்காவின் ஏழு வண்ணப் போட்டிகளோடு சதுரங்கப் போட்டியையும் நடத்த ஆயத்தமாக உள்ளது. போட்டியில் பங்கு பெற இந்த இணைப்பைச் சொடுக்கவும். https://tinyurl.com/VVAChessRegistration போட்டியின் அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்களுக்கு இங்கே சொடுக்கவும். https://tinyurl.com/VVAChessRules சதுரங்கப் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வெல்வீர்! தமிழ் வாழ்க!    

கவிஞர் அ.வெண்ணிலாவிற்குப் புதுமைப்பித்தன் விருது

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினைத்’ தமிழ்ப் பேராயம் வழங்கியது சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள திரு.இரா.நி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ எனும் வரலாற்றுப் புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’யும், பரிசுத் தொகை உரூ.50 ஆயிரமும் வழங்கினர். இவ்விழாவிற்கு, திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் வரவேற்புரையாற்றினார். கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அ.வெண்ணிலாவுக்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருருதினை’யும்,…

இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை – சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 5   அத்தியாயம்  3. கவிதை இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை என்று பேசும்போது நவீனத் தமிழ்க் கவிதையையே நாம் முதன்மையாகக் கருதுகின்றோம். ‘நவீன தமிழ்க்கவிதை அல்லது ‘தற்காலத் தமிழ்க்கவிதை’ என்ற ஒரு தொடரை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். பழைய, பண்டித மரபு வழிப்பட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்ட பிரபந்த இலக்கிய வகைகளிலிருந்து மாறுபட்டு,நிகழ்கால வாழ்க்கை நிலைமைகளையும், அதன் அடிப்பிறந்த வாழ்க்கை நோக்குகளையும் கருத்தோட்டங்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளையே நவீனக் கவிதை…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 10

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 9. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3 தொடர்ச்சி கமலா – அவள் தாயார், இன்னொரு பாட்டியம்மாள் – மூன்று பேராக வீட்டு வாயிலில் திண்ணையிலேயே உட்கார்ந்து ஏதோ வம்புப் பேச்சு பேசிக் கொண்டிருந்தார்கள். போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே நடந்துபோய் அந்த வீட்டு வாசலில் நின்றாள் பூரணி. பேச்சில் ஈடுபட்டிருந்த கமலாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக ‘கமலா’ என்று பூரணி மெல்லக் கூப்பிட்டாள். எத்தனை குரலின் ஒலிகளுக்கு நடுவே ஒலித்தாலும் தனியே ஒரு தனித்தன்மை பூரணியின் குரலுக்கு உண்டு. அந்தக் குரலிலேயே அவளை அடையாளம் கண்டு…

திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 19 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 20   2 . திருமணம் தொடர்ச்சி   (3) சாரதா சட்டத்தை மீறுவதான முறையில் மணம் நடைபெறப் போவதாகத் தெரிந்தால் அதைத் தடுக்கும் அதிகாரமும் அவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு இருக்கவேண்டும். (4) பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விடுவதால் சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்து விடுகின்ற காரணத்தால் சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவற்றிற்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். திருமண அடையாளம்: திருமணத்தில் தாலிகட்டப் பெறுகின்றது. இதுபற்றிப் பெரியார் சிந்தனைகள்: (அ) தாலிகட்டுவது என்பது பெண்களுக்குமட்டும் ஆண்கள் தாலிகட்டுவதால் அதில் ஏதோ…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 12/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17 தொடர்ச்சி)       தனித்தமிழ்க் கிளர்ச்சி 12/17 பல்வகை இன்பம் படைத்துமே காக்கும்நற்செல்வம் தமிழர்க்குச் செந்தமிழே அம்மானைசெல்வம் தமிழர்க்குச் செந்தமிழேல் அத்தமிழ்க்கல்வி பலர்கற்காக் காரணம்என் அம்மானைஅறியாமை காரணம் இன்(று) அகன்றுவிட்ட தம்மானை       (56) அடுத்துமே பள்ளிதனில் அருங்கல்வி பெறாதோர்க்குப்படத்தினால் கல்விதனைப் பரப்பலாம் அம்மானைபடத்தினால் கல்வி பரவுமென்றாற் படத்தைநடத்துபவர் அதில்கருத்து நாட்டவேண்டும் அம்மானைநாட்டின் நம்நாட்டிற்கே நலமுண்டாம் அம்மானை       (57) ஏர்மிகு பல்வளங்கள் இயையத் தமிழர்வாழ்ஊர்தோறும் நூல்நிலையம்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 34

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 33. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14   அதற்கு மறுநாள் எங்கள் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்த நாள் ஊர்க்குப் போகத் திட்டமிட்டோம். மாலையில் மாலனும் நானும் கீழ்ப்புறத்துச் சிமெண்டுத் திண்ணையின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அதே திண்ணையில்தான் எங்கள் நட்பு அன்று ஒருநாள் வேர் கொண்டது. அன்று சந்திரனுடைய ஒத்திகையை – பெண்ணாக நடித்த திறமையைப் பார்த்து மனத்தில் பாராட்டிக் கொண்டிருந்தேன். அந்த நாள் நினைவுக்கு வந்தது. சந்திரனிடத்தில் அதுவரையில் கண்டிராத திறமையை அன்று அவனிடம் கண்டேன்….

பிரிந்து மறைந்தது முறையா ஐயா? —மறைமலை இலக்குவனார்

புலவரேறு பெ.அ.இளஞ்செழியன் [வைகாசி 28, 1969 / 10.06.1938 – ஐப்பசி 14,2052 / 31.10.2021] பிரிந்து மறைந்தது முறையா ஐயா?   அன்பே உருவாய் ஆட்கொண் டீரே பண்பின் வடிவாய்  எமைக் கவர்ந்தீரே நட்பின் இலக்கணம் கற்பித்தீரே பிரிய இயலாப் பரிவின் உருவே பிரிந்து சென்றிட எப்படி ஒப்பினீர்? காலம் முழுமையும் கட்சிக்கு  உழைத்தீர்! காலணாப் பயனும்  கருதா மனத்தீர்! திராவிட இயக்கப் பாவலர் அணியில் முன்னணி  வரிசை  முதல்வர் நீவிர்! அண்ணா கலைஞர் பேராசிரியர் எந்நாளும் நீர் போற்றிடும் நாவலர் அனைவரும் …

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 9

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3 தொடர்ச்சி   “அக்கா! இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா?” அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன. “இல்லை கண்ணே! அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்” என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த…

திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 18 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 19   2 . திருமணம் தொடர்ச்சி   (9) அறிவோடு சிக்கனமாக வாழவேண்டும். வரவிற்குமேல் செலவிட்டும் பிறர் கையை எதிர்ப்பார்ப்பதும், ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு இடங்கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டுக் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும். (10) மணமக்கள் இருவரும் நண்பர்களாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை அன்புருவாக இருக்க வேண்டும். மணமக்கள் தங்களுக்காகவே என்று இராமல் மற்றவர்க்காகவே வாழ்கின்றோம் என்று எண்ணவேண்டும். (இ) சீர்த்திருத்தத் திருமணம்: இதுபற்றியும் ஐயாவின் சிந்தனைகளை உங்கள் முன்வைக்கிறேன்: (1) கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண்டுமேயொழிய அடிமை…