ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டு

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 4சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் (4) ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டென்பதும் அது தனியே ஆராயப்படவேண்டியதென்பதும் இந்நூற்றாண்டின் பிற்பாதியிலேயே அழுத்தம் பெற்றது. தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டு இலக்கியமாகவே நோக்கப்பட்டு வந்த நிலை மாறி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழத்தின் பங்கும் வற்புறுத்தப்பட்டது இதன் பின்னரேயாகும். எனினும் ஈழத்தவர், ஈழத்து இலக்கியம் என்ற பற்றுணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது எனலாம். ஈழத்துத் தமிழரின் சமய பண்பாட்டுத்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 10/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி : 11/17   தடமொழியாம் நம்முடைய தமிழ்ப்போர்வை தாம்போர்த்திவடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றார் அம்மானைவடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றா ரெனிலவர்கள்படையின்றிச் சூழ்ச்சியால்நம் பதவிகொள்வார் அம்மானைபதவிகொள இனிவிடின்நாம் பதராவோம் அம்மானை       (51) கடல்சூழும் இவ்வுலகில் கவினியநம் தமிழர்க்குஉடல்பொருள் ஆவிகள் ஓண்தமிழே அம்மானைஉடல்பொருள் ஆவிகள் ஓண்டமிழே யாமாயின்அடல்வேண்டும் தமிழை அழிப்பவரை அம்மானைஅடல்தவறாம் இனிஅவரே அழிந்திடுவார் அம்மானை       (52) தமிழ்நாட்டில் தமிழையே தாய்மொழியாக் கொண்டசிலதமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றார் அம்மானைதமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றா ராமாயின்தமிழ்க்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 7. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3   “ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின்ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்வீடுகின்றன என்செய்வோம் இனி அவ்வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே”      -நற்றிணை விளக்கம் துன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும்போதெல்லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. “தோற்று விடாதே? வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ. துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும் தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன….

கெள.செ.(உ)லோகநாதன்: வெற்றிமேல் வெற்றி

ஐப்பசி 14, 2052 / ஞாயிறு 31.10.2021 மாலை 6.30 இணையவழி அளவளாவல் நிகழ்வு      கெள.செ.(உ)லோகநாதன் வெற்றிமேல் வெற்றி நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய                                              கூட்ட எண்  / Zoom  Meeting ID:  619 157 9931கடவுச் சொல் /  Passcode:  kuvikam123    பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்.

திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 17 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 18 2 . திருமணம் வழக்கமாக நடைபெறுவது: (1) திருமணம் என்பது-வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்றால் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் சேர்ந்து உலக வாழ்வு வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளுகிற ஒப்பந்தம் (contract) என்பதாக இருக்க வேண்டுமே தவிரத் திருமணம் என்றால் ஆண் வீட்டாருக்குச் சம்பளம் இல்லாமல் வெறும் சோற்றுச் செலவோடு மட்டுமே ஒரு வேலைக்கு ஆள் (பெண்) சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது. (2) ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை நடத்த ஆணும் பெண்ணும் –…

அரசியல் புதிய நிலைமைகள் தாக்கம் இலக்கியத்திலும் எதிரொலித்தது

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 4சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் அத்தியாயம் 3 ஈழத்துத் தமிழிலக்கியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தனித்து ஆராயப்பெறும் தகுதிகள் கொண்டது. வரலாற்றைப் பொறுத்தவரையிலும் பல முதன்மையான நிகழ்ச்சிகள் இந்நூற்றாண்டில் நடைபெற்றன. 1802ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்றநாடானமை, 1831ஆம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது அரசியற் சீர்திருத்தம் வழங்கப்பட்டமை, சுதேசிகள் இலங்கையரசியலிற் பங்குபற்றும் நிலையேற்பட்டமை, ஆங்கிலக் கல்வி நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டமை, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டமை, நாட்டின் பல்வேறுபகுதிகளையும் இணைக்கும் வண்ணம்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17 முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரம்மானைமுடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரெனிற்பின்னர்அடிமையில் நம்தமிழர் ஆழ்ந்ததேன் அம்மானைஆழ்ந்ததோ ஒற்றுமையின் அகன்றதால் அம்மானை       (46) புலவர் அன்று தொடங்கி அருந்தமிழ்நற் புலவோர்கள்சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ரம்மானைசென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ராமாயின்இன்று முதற்பெருமை இலாததேன் அம்மானைநன்று சொனாயினியும் நழுவவிடா ரம்மானை       (47) வரிசை பலசெய்து வண்தமிழ்நற் புலவோர்கள்அரசர் அடங்கிமிக அரசாண்டார் அம்மானைஅரசர்…

இணைய அரங்கம் 12 -யசுர் வேதம் செவ்விலக்கிய நூலல்ல

தமிழே விழி!                                                                                        தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 12 யசுர் வேதம் செவ்விலக்கிய நூலல்ல ஐப்பசி 14 , 2052 /…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 7.

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 6. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 2 தொடர்ச்சி   அதுவரை அவள் வீட்டில் காத்திருக்க முடியாது. மூன்று மணி சுமாருக்காவது புறப்பட்டுப் போனால்தான் மதுரையில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டு திரும்பலாம். ‘பிராவிடண்டு பண்டு’ பற்றி நினைவுறுத்தி விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு அப்பா வேலை பார்த்த கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும். வீட்டுக்காரரைச் சந்தித்து வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டு ‘வீட்டை விரைவில் காலி செய்துவிடுவதாக’த் தெரிவிக்க வேண்டும். அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர் ஒருவர் புதுமண்டபத்தில் இருக்கிறார்….

ஆட்சிமுறை குறித்த பெரியார் சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 16 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 17 1. ஆட்சிமுறை. இதுபற்றித் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைக் காண்போம். (1) ஆட்சிமுறை என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எந்த மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாகக் கருதப்பெற வேண்டியது. (2) “ஓர் இணைச்செருப்பு 14 ஆண்டுக்காலம் இந்த நாட்டை ஆண்டதாக உள்ள கதையை மிகுந்த விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் இழிவான மிருகம், நாய், கழுதை, ஆண்டால்கூட அஃது அதிகமான அவமானம் என்றோ குறை…

ஈழ இலக்கியத்தில் ஐரோப்பியர் ஆதிக்கம்

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 3சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் (முன்னிதழ்த் தொடர்ச்சி) அத்தியாயம் 2 யாழ்ப்பாண வரலாற்றில் ஐரோப்பிய இனத்தவரின் தலையீடு ஏற்படத்தொடங்கியதுடன் தமிழிலக்கியத்திலும் புதிய பண்பு ஒன்று தலைதூக்கியது. கிறித்த சமயப் பாதிப்பு வௌித்தெரியும் இலக்கியங்கள் எழத்தொடங்கியமையே இப்புதிய பண்பாகும். இதனால் இத்தகைய பாதிப்பு வௌித்தெரியும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளைத் தனித்த ஒரு பிரிவாகக் கொண்டு அக்கால இலக்கியங்களை ஆராய்தல் பொருத்தமுடைத்து. இவ்விரு நூற்றாண்டுகளிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆதிக்கம் இலங்கையின் மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 8/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 9/17   திருமணம் காதலனும் காதலியும் கருத்தொன்றிக் கலந்ததமிழ்க்காதல் மணமேயக் காலத்தில் அம்மானைகாதல் மணமேயக் காலத்தி லாமாயின்ஈதல் கிழவனுக்கின் றேற்றதோ அம்மானைசாதல் கிழமணத்தின் சாலவுநன் றம்மானை       (41) நந்தமிழ் மக்கள்செய் நல்லதொரு திருமணத்தில்செந்தமிழினால் நிகழ்ச்சி செய்யவேண்டும் அம்மானைசெந்தமிழி னால்நிகழ்ச்சி செய்யவேண்டு மாமாயின்வந்தவட மொழிபோகும் வழியென்ன அம்மானைவந்தவழி யேபோகும் வடமொழிதான் அம்மானை       (42) தமிழர்தம் திருமணத்தில் தக்கமண நிகழ்ச்சிகளைத்தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே…