தந்தை பெரியாரின் சாதிக்கொள்கை தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 21 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 22 3. சாதிக்கொள்கை தொடர்ச்சி (2) தீண்டாமை: தீண்டாமைபற்றிக் காந்தியடிகளும் சிந்தித் துள்ளனர்; அது பதமான வெறும் மழுப்பல்போல் தோன்றுகின்றது. அரிசன் (Harian) என்ற பருவ வெளியீட்டில் எவ்வளவோ எழுதியுள்ளார். பெரியாரும் இதனைத் தம்வாழ்நாள் பணியாக மேற்கொண்டு ‘குடியரசு’ ‘விடுதலை’ என்ற இதழ்களில் எவ்வளவோ எழுதியும் பெருங்கூட்டங்களில் ‘முழங்கியும்’ பணிசெய்துள்ளார். இப்பணியே பட்டிதொட்டியெல்லாம் பரவியுள்ளது. ‘நாத்திகர்’ என்று பெரியாரை வெறுத்த உள்ளங்களில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் ‘பூச்சி மருந்து’ அடித்ததுபோல் வேலை செய்துள்ளது. தம்மை அறியாமலேயே மனமாற்றம் செய்துள்ளது. பெரியாரின் இத்தகைய சிந்தனைகளில்…
இலக்குவனார் வலியுறுத்தும் கல்விக் கொள்கை- இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் வலியுறுத்தும் கல்விக் கொள்கை – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பன்முக அறிஞராகவும் களப்பணிகளில் ஈடுபட்ட போராளியாகவும் திகழ்ந்தவர். “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர். இதற்காகத் தமிழ்க்கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் எக்காலமும் எப்பொழுதும் வலியுறுத்திவந்தவர். தமிழ்வழிக்கல்விக்கு மூடு விழா நடத்திக் கொண்டு வரும் நாம் இப்பொழுதாவது இத்தகைய அழிவுப்பணிக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். தமிழ் நலப்பணிகளில் கருத்து செலுத்தும் தமிழக அரசு தமிழ்நாட்டில் கல்வி என்றால் அது தமிழ் வழிக்கல்வியே என்னும் சீர்நிலையைக்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 12
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 11. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 4 தொடர்ச்சி பூரணியின் நிலையைப் பார்த்து கமலா பயந்து போனாள். “இதென்ன பூரணி! உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுகிறது? அவன் சாகவேண்டியது விதி. பாம்புக் கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய்?” “நேற்று இரவு நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னாயா கமலா?” “மூச்சுவிடுவேனா நான்? உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சரவணப் பொய்கைக் கரையில் ஒரே கூட்டம். இரவு அவனுடைய விதி என் சங்கிலியில் இருந்திருக்கிறது, பாவம்.” “மனித நப்பாசை எத்தனை வேடிக்கையாக…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 14/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி: 14/17 தமிழ்க்கிளர்ச்சி தனைவிரும்பித் தமிழ்மறவர் சிலர்முன்புதமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தார்கள் அம்மானைதமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தவரைக் கொடியசிலதமிழரே தண்டித்து வெறுத்தனர் அம்மானைவெறுத்தோர் எலாம்இன்று விரும்புகின்றார் அம்மானை (66) உரிமை இனியும் தமிழர்கள் ஏமாற இயலாதால்தனியாக தமிழர்க்குத் தரவேண்டும் அம்மானைதனியாக தமிழர்க்குத் தரவேண்டின் இணைந்துள்ளஇனியநல் இந்தியத்தை எதிர்ப்பதாமே அம்மானைஎதிர்க்காது தமிழுரிமை ஈயக்கேள் அம்மானை (67) தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே அம்மானைதண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே யாமாயின்நண்ணு…
இலக்குவனார பிறந்த நாள் விழா, யாழ் பாவாணன் உரை
https://www.youtube.com/watch?v=GoRISbXnPcw
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 36
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 35. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14 தொடர்ச்சி “முதலாம் நாள் சந்திரனைக் கண்டு பழகி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோமே, அன்று அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரன் வந்து போனார் என்று சொன்னேன் அல்லவா? அன்று இரவு அம்மா என்னைத் தனியே அழைத்து அறிவுரை கூறினார். “நல்ல பிள்ளை அம்மா அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்….
இணையவழியில் இலக்குவனார் பிறந்த நாள் விழா – தமிழியக்கம்
தமிழியக்கம் வழங்கும் செந்தமிழ்க்காவலர் சி. இலக்குவனார் 113 ஆவது பிறந்த நாள் விழா மெய்நிகர் கூட்டம் கார்த்திகை 01, 2052 / புதன் / 17.11.2021 மாலை 6.00 அடையாளம் 880 3802 5238 கடவுச்சொல் 186801 தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன் சிறப்புரை: பேராசிரியர் முதுமுனைவர் பா.வளனரசு முனைவர் கடவூர் மணிமாறன் நெகிழ்வுரை: பேராசிரியர் முனைவர் இ.மதியழகி
‘தமிழ்’ என்னும் சொல்லுக்குப் பொருள் – மயிலை சீனி. வேங்கடசாமி
‘தமிழ்’ என்னும் சொல்லுக்குப் பொருள் தமிழ் என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதா? தமிழ் என்றால், தமிழ் மொழி – தமிழ் பாசை – என்பது பொருள் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆம்; அஃது உண்மைதான். அன்றியும் தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்னும் பொருளும் உண்டு. இந்த இரண்டு பொருளைத் தவிர மூன்றாவதாக வேறு ஒரு பொருளும் தமிழ் என்னும் சொல்லுக்கு இருந்தது. அப்பொருள் பிற்காலத்தில் வழக்கிழந்து மறைந்து விட்டது. அந்த மூன்றாவது பொருள் என்ன? அதுதான் அகப்பொருள் (காதல்) என்பது. அ ஃ தாவது, தமிழ் என்னுஞ்…
இலங்கைத் தமிழ்க் கவிதையில் தோன்றிய புதிய அலை -சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 6 அத்தியாயம் 3. கவிதை தொடர்ச்சி 1960 ஆம் ஆண்டுகள் இலங்கைத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை பிறிதொரு வகையில் முதன்மையான காலப் பிரிவாகும், சமூக விழிப்புணர்வும் முற்போக்குச் சிந்தனையும் தமிழ்க்கவிதையின் தலைமைப் போக்காக மாறிய காலப்பிரிவும் இதுவே. 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து புதினம், சிறுகதை, திறனாய்வுத்துறைகளில் முற்போக்குச் சிந்தனை முதன்மை இடம் பெறத் தொடங்கியது. ஆனால் கவிதையைப் பொறுத்தவரை 60 ஆம் ஆண்டுகள், அதிலும் குறிப்பாக…
சி.இலக்குவனார் 112-ஆவது பிறந்த நாள் விழா & உலகத் தமிழ் நாள்
தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு–புதுவை தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 112-ஆவது பிறந்த நாள் விழா உலகத் தமிழ் நாள் ஐப்பசி 28, 2052 / ஞாயிறு / 14.11.2021 காலை 10.00 / இணையக் கூட்டம் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் கவிவாழ்த்து: பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்…
தந்தை பெரியாரின் சாதிக்கொள்கை : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 20 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 21 3. சாதிக்கொள்கை தமிழர் வாழ்வில் எப்படியோ புகுந்தவிட்ட ‘சாதிக்கொள்கை’ யைச் சாடுவதை ஆய்வு செய்வதற்கு முன்பு பண்டைய தமிழ் இலக்கணங்களில் இக்கொள்கைகைபற்றி வரும் குறிப்புகளை முதலில் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று கருதி அவற்றை முதலில் காட்டுவேன். களவுக்காலத்தில் தலைவன் பிரிவு வகைகளைக் கூறும் இறையனார்களவியல், ஓதல் காவல் பகைதணி வினையேவேந்தர்க் குற்றுழி பொருட்பிணிஆங்க ஆறே அவ்வுயிற் பிரிவே [குறிப்பு 2] என்ற நூற்பாவில் அப்பிரிவுகள் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன. அவை: ஓதற்பிரிவு, காவல்பிரிவு, பகைதணிவினைப் பிரிவு, வேந்தர்க்குற்றுழிப்பிரிவு, பொருட்பிணிப்பிரிவு, பரத்தையர் பிரிவு என்ற ஆறு ஆகும். இந்த…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 11
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 10. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 4 “என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமேஉன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்தபின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்குமுன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே!” ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கொதிப்பினால் ஏற்பட்ட துணிவு வெறியில் பூரணி அந்தத் திருட்டுக் கிழவனைப் பிடித்து, அவன் மேல் துண்டாலேயே கைகளைக் கட்டிப் போட முயன்றாள். சங்கிலியைப் பறிகொடுத்த கமலாவோ பயந்தோடி வந்து அவன் பூரணியால் பிடிக்கப்பட்ட இடத்தில் நழுவி விழுந்திருந்த சங்கிலியின் மூன்றாய் அறுந்துபோன துணுக்குகளைத்…
