கவிஞர் வைத்தீசுவரனின்சொல்ல நினைத்தேன் – அளவளாவல்

ஐப்பசி 07, 2052 / 24.10.2021மாலை 6.30 குவிகம் இணைய வழி அளவளாவல் கவிஞர் வைத்தீசுவரனின்‘ சொல்ல நினைத்தேன் ‘புத்தகம் குறித்துஇந்திரன்மீ.விசுவநாதன்எச்சு.என்.அரிகரன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய  கூட்ட எண்  / Zoom  Meeting ID:  619 157 9931கடவுச் சொல் /  Passcode:  kuvikam123    பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்.  

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 6

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 5. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 2 “தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீகல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீஅறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீஅனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ”      -பரிபாடல் குழந்தை மங்கையர்க்கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய போது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு….

தமிழில் பிறமொழிக் கலப்பு 3/4 – மறைமலை அடிகள்

தமிழில் பிறமொழிக் கலப்பு 3/4 (தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 தொடர்ச்சி) இங்ஙனஞ் செய்தல் இறந்துபோன வடசொற்களை முற்றுமே அங்ஙனம் விடாமற், சில பல சொற்களையேனும் உலக வழக்கிற் பயிலவிடுதற்கு வழியாய் இருத்தலின் அது குற்றமாய்க் கொள்ளப்படுதலாகா தெனின்; இறந்துபோன வடமொழியின் சில சொற்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று புகுந்து பல நூறாயிரம் மக்களுக்குப் பயன்பட்டு வழங்கி இறக்கச் செய்தல் எள்ளளவும் பொருந்தாது. கையிலுள்ள பெருந்தொகைப் பொருளைக் கடலிற் கொண்டுபோய் எறிந்துவிட்டு, நிலத்தை அகழ்ந்து அடியிலுள்ள பொருள்களை எடுக்க முயல்வார் திறத்திற்குந், தமிழ்ச் சொற்களைக் கைந்நெகிழ…

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு ஓர் அறிமுகம் : சி. மௌனகுரு, மௌ.சித்திரலேகா, எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 2. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு: ஓர் அறிமுகம்   ஈழத்துத் தமிழிலக்கியப்பரப்பு ஐந்துநூற்றாண்டு காலத் தொடர்ச்சியான பாரம்பரியத்தையுடையது. இவ்விலக்கியப் பாரம்பரியத்தினையும் அதனூடு காணப்படும் பல்வேறு போக்குகளையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் நோக்குதல் அவைபற்றிய தௌிந்த விளக்கத்துக்கு உதவும். இக்காலத்தில் இலங்கையில் குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சமூக சமய  பண்பாட்டு நிலைமைகள், அவற்றை ஊக்குவித்த அரசியல் பொருளாதாரக் காரணிகள் ஆகியவற்றின் விளக்கமும் இவ்விலக்கிய வரலாற்று விளக்கத்துக்கு உதவி புரிவதாகும். எனினும் 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ்ப்பகுதிகளின்…

வெளிமாநிலத்தவருக்கான வேலை வாய்ப்பை மறுத்திடுக! -த.தே.பே. வலியுறுத்தல்

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக்கூடாது! தேர்வு அறிவிப்பைத் திருத்தி வெளியிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!   தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 2021 அட்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடக்கவுள்ளதாக ஆசிரியர் பணித்தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) அறிவித்துள்ளது. வெளி மாநிலத்தவர் பங்கேற்பால் ஏற்கெனவே நீக்கப்பட்டு இரண்டாம் முறையாக நடைபெறும் அத்தேர்வில் மீண்டும் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க…

இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா

இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தொடர் இலக்கியக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றது.  இந்த மாதம் எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “தேவரடியார்கள் – கலையே வாழ்வாக!” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.  அமெரிக்க நேரம்: ஞாயிற்றுக்கிழமை, ஐப்பசி 07, 2052 /அட்டோபர், 24ஆம் நாள், இரவு 8:30மணி கிழக்கு நேரம் (EDT)  இந்திய நேரம் IST : திங்கட்கிழமை, ஐப்பசி 08,…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 8/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் :7 /17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 8/17   சமயம் புதுப்புதிய சுவைதன்னைப் புலனாக்கும் தமிழ்மொழிதான்மதிப்புள்ள சங்கநூல் மாண்புடைய தம்மானைமதிப்புள்ள சங்கநூல் மாண்பிருக்கப் பித்தானமதச்சண்டை நம்தமிழில் மண்டியதேன் அம்மானைமண்டியதவ் ஆரியர்செய் மயக்கத்தால் அம்மானை       (36) உய்வதனைக் கருதி உயர்ந்திடுநம் தமிழ்முன்னோர்தெய்வ வணக்கந்தாம் செய்துவந்தார் அம்மானைதெய்வ வணக்கந்தாம் செய்பவரை இன்றுசிலர்எய்வதுபோல் கடுமொழியால் எதிர்ப்பதேன் அம்மானைஎதிர்க்கலாம் ஆரியர்கள் ஏய்ப்பதையே அம்மானை       (37) இயற்கை வடிவுடைய இறைவனை முன்தமிழர்இயற்கை முறைக்கேற்ப ஏத்தினர்காண்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 5

 (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 4. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 தொடர்ச்சி மணி ஒன்பதரை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்ததுபோல் வாயிற் படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள். “ஏண்டா இன்னும் நிற்கிறீர்கள்? பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு நேரமாகவில்லையா?”மூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும், சொல்லத் தயங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே…

தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 – மறைமலை அடிகள்

தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 (தமிழில் பிறமொழிக் கலப்பு ¼ தொடர்ச்சி) அங்ஙனமாயின், வேற்று நாட்டுச் சொற்கள் தமிழிற் கலந்தது போலவே, தமிழ்ச் சொற்களும் மற்றைத் தேயமொழிகளிற் கலந்து காணப்படுதல் வேண்டுமேயெனின்; ஆம், தமிழ்ச்சொற்கள் பல பழைய மொழிகளிலுங் கலந்து வழங்கவேபடுகின்றனவென்று கடைப்பிடிக்க. ஆணி மீனம் நீர் தாமரை கலை குடம் முதலான பலசொற்கள் ஆரிய மொழியிலும், அசை அருவி இரும்பு ஈன எல்லாம் மென்மை முகில் முதலான பல சொற்கள் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கு முதலான ஐரோப்பியர் மொழிகளிலும், அவா இரு ஊர்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 7/17

 (தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 6/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 7/17   அடையும் எளியவர்கட்(கு) அகமகிழ்ந்தே கொடுக்கும்கொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழர் அம்மானைகொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழ ராமாயின்படையின்றி அவர்பொருளைப் பறிக்கலாமே அம்மானைபறித்துபறித்(து) அயலார்கள் பரவினர்காண் அம்மானை       (31) மருந்தா யினும்தமிழ் மக்கள் பிறர்க்களித்துவிருந்தோம்பும் வேளாண்மை விரும்புபவர் அம்மானைவிருந்தோம்பும் வேளாண்மை விரும்பிமிகச் செய்திடினேவருந்திப்பின் வறுமையால் வாடாரோ அம்மானைஅவ்வருத்தம் அவர்கட்கோர் அணிகலமாம் அம்மானை       (32) பொன்னான நம்தமிழர், புல்லிய எண்ணமுடன்இன்னாமை செய்தார்க்கும் இனிமை…

பரிசுகளுக்கும் வெளியிடுவதற்கும் படைப்புகளை அனுப்புக – குவிகம்

குவிகம் இலக்கிய வாசல் ஏப்பிரல் 2022 முதல் மார்ச்சு 2023 வரை வெளிவர இருக்கும் இதழ்களுக்காகப்  படைப்புகளை வரவேற்கிறோம். 1. முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகள் முறையே உரூ.5000, உரூ.3000, உரூ.2000 வழங்கப்படும்.  2. வெளியீட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற கதைகள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் உரூபாய் வெகுமதி வழங்கப்படும்.  3.படைப்புகள் நாலாயிரம் முதல் எட்டாயிரம் சொற்களுக்குள் (4000 -8000) இருக்கவேண்டும்.  4. அச்சு மற்றும் இணையதளம்/ வலைப்பூ/ முகநூல்/ கிண்டில் போன்ற எதிலும் வெளியிட்ட படைப்புகளாக இருக்கக் கூடாது.  5. முடிவுகள் அறிவிக்கப்படும்வரை வேறு போட்டிக்கோ…