குவிகம் – க.சுப்பிரமணியத்தின் வேரும் விழுதும் – அளவளாவல்

புரட்டாசி 31, 2052 / 17.11.2021 மாலை 6.30 நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய கூட்ட எண்  / Zoom  Meeting ID:  619 157 9931கடவுச் சொல் /  Passcode:  kuvikam123    பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்.   குவிகம்  இணையவழி அளவளாவல் நிகழ்வு க.சுப்பிரமணியத்தின் வேரும் விழுதும் புதினம் இராய செல்லப்பா இரமேசு கல்யாண் சதுர்புசன் க.சுப்பிரமணியன்

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் – சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 1. முன்னுரை இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின், இன்று வரையுள்ள பொதுவான வளர்ச்சிப் போக்குகளைத் திரட்டிக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும். பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் ஈழத்து இலக்கியத்தில் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும், ஈழத்து நவீனத் தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் உடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் இந்நூல் அமைந்துள்ளது. ‘ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான திசையில் வளர்ச்சியடைந்துள்ளது‘ என்ற ஒரு பொதுவான கருத்து இன்று…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 4.

 (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 3. தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 தொடர்ச்சி எந்தக் காலத்திலோ வளம் மிகுந்ததாக இருந்துவிட்டு இப்போது மொட்டைப் பாறையாய் வழுக்கை விழுந்த மண்டை போல் தோன்றும் ஒரு குன்று. அதன் வடப்புறம் கீழே குன்றைத் தழுவினாற்போல் சிறியதாய், சீரியதாய் ஒரு கோபுரம் படிப்படியாய்க் கீழ்நோக்கி இறங்குமுகமாகத் தளவரிசை அமைந்த பெரிய கோயில். அதன் முன்புறம் அதற்காகவே அதை வணங்கியும், வணங்கவும், வாழ்ந்தும், வாழவும் எழுந்தது போல பரந்து விரிந்திருந்த ஊர். குன்றின் மேற்குப்புறம் சிறிய தொடர்வண்டி…

பேராசிரியர் மதியழகி வாழ்க! பேரன்புத் தங்கை மதியழகி வாழ்க!

பேராசிரியர் மதியழகி வாழ்க! பேரன்புத் தங்கை மதியழகி வாழ்க!   பல்வித்தகமும் பாங்குறப் பயிற்றும் நல்லாசிரியராய் நற்பணி ஆற்றியும் தமிழ்த்துறைத் தலைவராய்த் தகைமை தாங்கியும் கல்விநிலையக் கனிவுறு முதல்வராய் பல்கலைக்கழகப் பேரவைக் குழுவிலும் கல்லூரி ஆசிரியர் போராட்டத்திலும் முத்திரை பதித்த போராளியாகவும் அயர்விலாப் பணிகள் ஆற்றிய மாண்பு அன்புத்தங்கை மதியழகிக்கே என்றும் உரியது; வாழ்க! வாழ்க! எழுபான் அகவை எய்தும் இந்நாளில் முழுநிறை அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன்! பேராசிரியர் மதியழகி வாழ்க! பேரன்புத்தங்கை மதியழகி வாழ்க! புதல்விகள் இருவரும் பேரனும் பேத்தியும் எல்லா நலனும்…

தந்தை பெரியார் சிந்தனைகள் 16: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 15 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 16 2.  குமுகம்பற்றிய சிந்தனைகள்    அன்பு நிறைந்த தலைவர் அவர்களே,அறிஞர்பெருமக்களே,மாணாக்கச்செல்வங்களே. இன்றைய இரண்டாவது சொற்பொழிவு பெரியாரின் குமுக(சமூக)ச் சிந்தனைகளைப் பற்றியது. பேச்சில் நுழைவதற்குமுன் குமுகம் பற்றிய சில சொல்ல நினைக்கின்றேன். மனிதன் என்ற வாழும் உயிரியும்  அசைவிலியாகவும் தாவரமாகவும் நிலைத்திணையாகவும்(அசேதனமாகவும், தாவரமாகவும், அசரமாகவும்) இருந்த  பொருள்களிலிருந்தே படிப்படியாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கின்றான். இங்கு, புல்லாகிப் பூடாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்றஇத்…

புலவர்கள் 3. – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  31 –  தொடர்ச்சி)   இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  32 16. புலவர்கள் (தொடர்ச்சி) அக்காலத் தமிழ்மக்கள் இயலிசை நாடகங்களிலும், நடனங்களிலும் இன்பங் கண்டனர்.  அக்கால நடனம் எவ்வாறு நடந்தது என்பதை இயற்கைக் காட்சியில் இன்புறக் காட்டுகின்றார். இங்கு நடனப் பெண்ணாக மயில் தோன்றுகிறது.  பார்த்து மகிழும் அவையினராக மந்திகள் அமருகின்றன. குழலிசையை இயற்கையில் துளைபட்ட மூங்கிலில் கோடைக்காற்று சென்று எழுப்புகின்றது.  முழவாக அயலில் ஓடும் அருவியின் இன்னிசை  இயம்புகின்றது.  தூம்பு…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 6/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 5/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 6/17   ஏர்திருந்து வளமுடைய இன்தமிழ்நாட் டினில்இன்றுசீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் அம்மானைசீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் என்றிடினச்சீர்திருத்த வழியொன்று செப்பிடுவாய் அம்மானைநாடகத்தால் சீர்திருத்தம் நாட்டவேண்டும் அம்மானை       (26) தமிழர் நாகரிகம் நாகரிகத் தினைப்பெரிதும் நாடுகின்ற இவ்வுலகில்நாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழர் அம்மானைநாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழ ராமாயின்நாகரிகம் எதுவென்று நவின்றிடுவாய் அம்மானைநயமான நற்குணமே நாகரிகம் அம்மானை       (27) விருந்து புறத்திருக்க விலாப்புடைக்க உண்ணாநம்அருந்தமிழ்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 3.

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 2. தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 தொடர்ச்சி “அப்பா போய்விட்டார்” என்பதற்கு ஒப்புக்கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க்கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு, அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய்விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக்கொள்ளவோ முடிவதில்லைதான். “நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்” என்று வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார்….

திருநங்கையரின் வாழ்வியலைப் படம் பிடிக்கும் புதினம் – பொட்டு வைத்த பொழுதில்

இல.அம்பலவாணனின் பொட்டு வைத்த பொழுதில் அணிந்துரையும் பதிப்புரையும் அணிந்துரை   வணக்கம், இந்தப் புதினத்தைப் படித்த போது எனது சின்ன வயதிற்குள் மூழ்கிப்போனேன். இப்படியெல்லாம் நடந்து விடாதா என ஏங்கிய நாட்களே எனக்கு நினைவில் வந்தன. எனது கண்களைக் குளமாக்கியது.             ஒரு திருநங்கையாய்ப் பிறந்தவள் வாழ்வில் என்னவெல்லாம் நடக்குமோ அனைத்தையும் எழுத்துகளால், காட்சிகளால் உருவாக்கி இருக்கிறார், திரு. அம்பலவாணன் அவர்கள்.             அற்புதமான புதினம் என்பதற்கு புதினத்தினுள்ளே பல இடங்கள் உணர்த்துகின்றன. ஒரு மனிதனைப் போல் மற்றவர் இருப்பதில்லை. ஆனால் புதினத்தை எழுதி…

அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4

துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4:பேராசிரியர் வெ.அரங்கராசன்   விளக்க உரை: பேராசிரியர் வெ.அரங்கராசன்                 1031ஆவது குறள் உழவின் இன்றியமையாமையை உரைக்கின்றது. இதில் உள்ள ஈற்றுச் சீர் தலை என்பதுதான் உழவின் இன்றியமையாமையை மிகத் தெளிவாக இயம்புகின்றது.                  அஃதாவது, உடலுக்குத் தலை எத்துணை அளவு  இன்றியமையாமையாதது  என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை; தலை உள்ளவர்கள் அனைவரும் நன்குணர்வர்.       அதுபோலவே, உலகம் என்னும் உடலுக்குத் தலையாக அமைவது உயிர் கொடுக்கும்  உயர்தொழில் உழவே; உயிர்த்தொழிலாம்.  உலகம் சார்ந்தது: அகச்சான்று:                 சுழன்றும் ஏர்ப்பின்ன[து] உலகம்;…

தந்தை பெரியார் சிந்தனைகள் 15: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 14 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 15 (4) பிராமணர்களின் மோசடித்தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டுமக்கள் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரே குலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டுமானால், உலகத்தில் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே பரப்பப்பெற்றிருக்கும் மதவுணர்ச்சி வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும். குருட்டுத்தனமான மதவுணர்ச்சியை வளர்க்கும் பண்டிகைகள் வெறுக்கப் பெறல் வேண்டும். அயோக்கியச் செயல்களுக்கெல்லாம் வளர்ப்புப் பண்ணைகளாயிருந்து மதப்போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடலாயங்கள் எல்லாம்…

புலவர்கள் 2. – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  30 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  31 16. புலவர்கள் (தொடர்ச்சி) தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆய மூவரும் தனிச்சிறப்புடையவர்கள்.  தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பே தமிழ் வளர்ப்பதற்கெனச் சங்கம் தோன்றியிருக்க வேண்டும்.  ஆதலின், சங்கக் காலத்துக்கு முற்பட்டவராவார் தொல்காப்பியர்.  தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு எனவும், திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், இளங்கோ அடிகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கொண்டுள்ளோம்.  சங்கக்காலத்தைக் கி.மு….