தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 5/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 4/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 5/17 காடுதனில் வாழ்விலங்கும் கல்லும் உருகுவண்ணம்பாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டால் அம்மானைபாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டாம் என்றிடினேபீடுற்ற தமிழிசையின் பெயர்களெங்கே அம்மானைகள்வர் பெயர்மாற்றிக் களவுசெய்தார் அம்மானை (21) செந்தமிழ்த் தெய்வத்தைச் சிறந்தநம் முன்னோர்கள்பைந்தமிழ்ப் பண்களால் பாடினர்காண் அம்மானைபைந்தமிழ்ப் பண்களால் பாடினரே யாமாகில்இன்தமிழில் இசையில்லை என்பதேன் அம்மானைஎன்பவர் ஆராய்ச்சி யிலாதவரே யம்மானை (22) ஒருகால் உரைத்தாலும் உவப்பளிக்கும் தமிழிசைகேட்(டு)உருகாத உயிர்ப்பொருளே ஒன்றுமில்லை…
போகிறபோக்கில், குவிகம்
புரட்டாசி 24, 2052 / 10.10.2021 மாலை 6.30 குவிகம் அளவளாவல் போகிறபோக்கில் கூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931 கடவுச் சொல் / passcode: kuvikam123
உத்தமம், கட்டுரை நாள் நீட்டிப்பு
வணக்கம்.உத்தமம் இணைய மாநாடு 2021 இற்கான கட்டுரைச் சுருக்கம் அளிக்க புரட்டாசி 24, 2052 / 10 அட்டோபர் 2021 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்க் கணிணி ஆய்வாளர்கள் கட்டுரை வழங்க அன்புடன் வேண்டுகிறோம்.நன்றி. மா. கணேசன்தலைவர், உத்தமம்
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 2.
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 1. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 மெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும்பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய்மெல்லப் போனதுவே! பேரண்டப் பூச்செடியில் மறுபடியும் ஒருநாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை! உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத (உ)ரோசாப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம் போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும்…
பரதமுனிவரின் நாட்டியச் சாத்திரத்திற்குச் செவ்விலக்கியச் சிறப்பு இல்லை!
தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 11…
தந்தை பெரியார் சிந்தனைகள் 14: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 13 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 14 2. சமயம் இவ்வுலகம் தோன்றியநாள் தொட்டு மக்களிடையே ஏதோ ஒருவகையில் சமயம் நிலவி வருகின்றது. மக்கள் அன்றாட வாழ்க்கை ஒழுங்கு பெறவிருக்கும் நன்னெறிகளின் தொகுதியே சமயம் ஆகும். நம் நாட்டில் நிலவும் சமயங்கள்; சைவம், வைணவம், புத்தம், சமணம் என்பவையாகும். நடைமுறையிலுள்ள மதம் அல்லது சமயத்தைப் பற்றிப் பெரியார் கூறுவது. (1) நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடம் மதம் என்னும் சீமைக்காரை (சிமெண்ட்டு) சுண்ணாம்பினால், கடவுள் என்னும் கற்களைக் கொண்டு…
புலவர்கள் 1. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 29 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 30 16. புலவர்கள் புலவர்களே நமது மொழியின், பண்பாட்டின், நாகரிகத்தின் புரவலர்கள் ஆவார்கள். புலவர் எனும் தமிழ்ச் சொல் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும். வெறும் மொழிப் புலமை மட்டும் உடையோர் புலவர் ஆகார். மொழிப் புலமையுடன் பண்புநலன் சான்று, ஏதேனும் ஒரு துறையில் வல்லுநராகவும், பிறர்க்கென வாழும் பெற்றியராகவும் இருப்போரே புலவர் எனும் பெயர்க்கு உரியவராவார். சங்ககாலப் புலவர்கள் அனைவரும் இவ்…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 4/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 3/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 4/17 முத்தமிழ் குயில்மயில்போல் இன்பம் கொடுக்குமொரு மொழியென்றால்இயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டும் அம்மானைஇயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டு மாயிடினேபயில்தமிழ்அம் முச்சிறப்பும் படைத்துளதோ அம்மானைசிலப்பதிகா ரத்தில்முச் சிறப்புமுள தம்மானை (16) இயற்றமிழ் புதுக்கியதேன் சுவைசொட்டும் புகழ்ச்சிமிக்க தமிழதனில்மதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள அம்மானைமதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள வானாலும்ஓதுக்கலுறும் குப்பைகளும் உள்ளனவால் அம்மானைஉள்ளகுப்பை ஆரியத்தின் உதித்தனவாய் அம்மானை (17) இடமார்ந்த தமிழ்நாட்டில் இலங்கு தமிழாம்தடமொழிபல் தமிழ்க்கதைநூல் தாங்கியுள…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 1. முன்னுரை
குறிஞ்சி மலர் முன்னுரை என்னுடைய வாழ்வில் பயன்நிறைந்த செயல்களைத் தொடங்கிய நாட்களுள் குறிஞ்சி மலர் புதினத்தை(நாவலை) எழுதப் புகுந்த நாள் மிகச் சிறந்தது. இந்தப் புதினத்திற்கான சிந்தனையும், நிகழ்ச்சிகளும், முகிழ்ந்துக் கிளைத்து உருப்பெற்ற காலம் எனது உள்ளத்துள் வளமார்ந்த பொற்காலம். ‘இந்தக் கதை தமிழ் மண்ணில் பிறந்தது. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துவது. தமிழ் மணம் கமழ்வது‘ என்று பெருமையாகப் பேசுவதற்கேற்ற மொழி, நாடு, இனப்பண்புகள் ஒவ்வொரு தமிழ்க் கதையிலும் அழுத்தமாகத் தெரியச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். இந்த ஆசை எனது குறிக்கோள். சிறந்த…
இலக்குவனார் திருவள்ளுவன் பொழிவு : இளையார் ஆத்திசூடி : 03.10.21
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் கருநாடகத்தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம் இலெமூரியா அறக்கட்டளை, மும்பை இணைந்து வழங்கும் பாவேந்தர் இலக்கியத் தொடர் புரட்டாசி 17, 2052 ஞாயிறு 3.10.2021 காலை 10.30 இலக்கியச் சொற்பொழிவு – இணையவழிச் சொற்பொழிவு 66 அறிவியல் தமிழ் அறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல – பன்னாட்டு மின்னிதழ் தலைப்பு: இளையார் ஆத்திசூடி தலைமை: திரு அ.தனஞ்செயன் (எ) வெற்றிச் செல்வன் தலைவர், கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம் பெங்களூரு நன்றியுரை: திருமதி கார்த்தியாயினி செயலாளர், கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 33
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 32. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 13 தொடர்ச்சி இரவு 2 மணிக்குத் திடீரென்று என் உறக்கம் கலைந்தது. இரவு முன்னேரத்தில் படுத்தால் எப்போதும் விடியற்காலம் வரையில் ஒன்றும் அறியாமல் ஆழ்ந்து உறங்குகின்றவன் நான். தேர்வு நாட்களில் கடிகாரத்தில் 4, 4 1/2 மணிக்கு விழிப்பொலி(அலாரம்) வைத்துவிட்டுப் படுத்தாலும், (அலார) மணி அடிக்கும் போது அந்தக் கடிகாரத்தின் மேல் வெறுப்போடும் ஆத்திரத்தோடும் எழுவேன். சில நாட்களில் எழுந்து நிறுத்தியதும் மறுபடியும் படுத்துவிடுவேன். வீட்டில் இருந்த காலங்களில் அம்மா மெல்லத் தட்டிக்…
6 எழுத்தாளர்களுக்குப் புத்தகப்பதிப்பாளர்கள் சங்கத்தின் கலைஞர் பொற்கிழி விருது
6 எழுத்தாளர்களுக்குப் புத்தகப்பதிப்பாளர்கள் சங்கத்தின் கலைஞர் பொற்கிழி விருது எழுத்தாளர் இராசேந்திர சோழன், கவிஞர் அபி, எழுத்தாளர் எசு.இராமகிருட்டிணன், தமிழ்ப் புதுமை நாடக இயக்குநர் வெளி இரங்கராசன் ஆகியோருக்குக் கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி உரூபாயை தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி), அமைப்பிற்கு வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும் ஓர் ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் ஓர் இலட்சம் உரூபாய் வீதம் பொற்கிழியும்,…
