பிரதீபா நினைவுக் கூடல்
கார்த்திகை 07, 2049 / வெள்ளி / 23.11.2018 மாலை 6.00 அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007 கட்டுரையாளர், நூலாசிரியர், செயற்பாட்டாளர் பிரதீபா நினைவுக் கூடல் நட்பே உறவென வாழ்ந்தவரின் நினைவுகளைப் பகிர வாருங்கள்! கோவி.இலெனின்-தமிழ்நிலா
‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்
‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில் ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார். திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…
புத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் – இலக்குவனார் திருவள்ளுவன்
புத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச்சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன். மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய உரைகளைச் சுருக்கெழுத்து அறியாமலேயே சொல் பிறழாமல் எழுதி அச்சில் கொண்டு வந்தவர் கவிக்கொண்டல். மூத்த எழுத்தாளர், மூத்த இதழாளர், மூத்த கவிஞர், மூத்த நூலாசிரியர், மூத்த பதிப்பாளர், மூத்த தமிழறிஞர், புத்தகக் கொடையாளர் எனப் பல்வகைப் பெருமைகளுக்கும் உரியவர். பிறப்பு திருத்தங்கூர் மாணிக்கனார்-விருத்தாம்பாள் இணையராக…
தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்
தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் பேரா.சி.இலக்குவனார் மாணவப்பருவத்தில் விடுமுறைக்காலங்களில் நண்பர்கள் மூவரை இணைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் தனித்தமிழ் பொழிவுகள் நடத்தினார்; தமிழின் பெருமை, தமிழ் இலக்கியச் சிறப்பு, அயற் சொற்கள் கலப்பின்றித் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டியதன் இன்றியமையாமை முதலானவற்றை வலியுறுத்தினார். முத்தமிழ்க்காவலர், செந்தமிழ் மாமணி எனப் போற்றப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப் பருவத்தில் இருந்தே தனித்தமிழ்ப் பாவலராகவும் தனித்தமிழ்ச் சொற்பொழிவாளராகவும் திகழ்ந்து தனித்தமிழ்க் காப்பிற்குத் தொண்டாற்றித் தனித்தமிழ்க் காவலராகப் போற்றப்படுகிறார். பள்ளியில் படிக்கும் பொழுது தன்மதிப்பு இயக்கப் பற்றாளரான ஆசிரியர் அறிஞர் சாமி…
பேச்சு மொழியாக ஆங்கிலம் கற்றல்: வழக்கும்தேவையும் – வெற்றிச்செழியன்
பேச்சு மொழியாக ஆங்கிலம் கற்றல் – வழக்கும் தேவையும் பேச்சு/உரையாடல் மொழியாக ஆங்கிலம் (Spoken English) கற்றுத்தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். நீதிமன்றமும் தமிழ்நாட்டு அரசின் கருத்தைக் கேட்டுள்ளது. பலநிலைப்பட்ட தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களின் எதிர்காலம்பற்றி அக்கறையோடு செயல்படுகிற மதிப்புமிக்க பலரும் ஆர்வத்துடன் இந்த வழக்கின் போக்கைக் கவனிக்கின்றனர். பலரின் உள்ளக் கிடக்கை இந்த வழக்கு எனலாம். இந்த வழக்கு, இதில் நீதிமன்றத்தின் அணுகுமுறை, மக்களின்…
மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன் – இலக்குவனார் திருவள்ளுவன்
மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது தால்மியாபுரம் பெயர் மாற்ற எதிர்ப்பான கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் அமர்ந்தவர்; கோடை விடுமுறைகளில் கலைஞர் கருணாநிதியின் நச்சுக் கோப்பை, தூக்கு மேடை போன்ற சீர்திருத்த நாடகங்களை இயக்கியும், கதைத்தலைவன் வேடங்களில் நடித்தும், விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டவர்; பள்ளி இறுதி வகுப்பு பயிலும் பொழுது தேவிகுளம், பீர்மேடு கேரளத்தோடு இணைக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்தத்தில் பள்ளி மாணாக்கர்களையும் பங்கேற்கச் செய்தவர்; மாணவப் பருவத்திலேயே தமிழ்க்காப்புப் பாதையில் நடைபோட்ட அவர்தாம் புலவர்…
குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்
கார்த்திகை 02, 2049 / நவ.18,2018 மாலை 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்
கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா, 4 நூல்கள் வெளியீட்டு விழா
கார்த்திகை 01, 2049 சனி 17.11.2018 மாலை 6.00 இந்திய அலுவலர் சங்கம், இராயப்பேட்டை, சென்னை 14 திராவிடத் தமிழர் அறக்கட்டளையின் கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா 4 நூல்கள் வெளியீட்டு விழா அன்புடன் சுப.வீரபாண்டியன் ‘பெல்’ இராசன்
வேங்கை நங்கூரத்தின் யூன் குறிப்புகள் – புத்தகத்திறனாய்வு
கார்த்திகை 01, 2049 சனி 17.11.2018 மாலை 6.00 தே.ப.ச. (இக்சா) மையம், எழும்பூர், சென்னை எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய வேங்கை நங்கூரத்தின் யூன் குறிப்புகள் புத்தகத்திறனாய்வு திறனாய்வாளர்: ப.திருமாவேலன் அன்புடன் கூர் இலக்கிய வட்டம்
கதைகளின் வழியாக நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்
கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் செங்கற்பட்டு.நவம்.13, இளையோர் கூரறிவினர்(little jacky) பதின் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் நாள் விழாவையொட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசினார். செங்கற்பட்டு இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி இவ்விழாவிற்குத் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். கவிஞர் மு.முருகேசு எழுதிய…
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44
கார்த்திகை 01, 2049, நவம்பர் 17, 2018 சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44 தலைப்பு: கவிதைப் படிமமும் அழகியலும் சிறப்புரை: மரு. வேணு வேட்(ட)ராயன்
தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்
தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் உலகில் பெண்பாற்புலவர்கள் இருந்துள்ளனர். சங்கக்காலத்தில் 57 பெண்கள் புலமையில் சிறந்து நாடுபோற்ற வாழ்ந்துள்ளனர். அவ்வழிவழி மரபில் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் புலமையாளராகத் திகழ்பவர் முனைவர் தாயம்மாள் அறவாணன். பிறப்பும் தொடக்கக் கல்வியும் குமரி மாவட்டம் சுசீந்திரம் பக்கத்தில் மயிலாடி என்னும் ஊர் உள்ளது. அதன் அண்மையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சேந்தன்புதூர் என்ற ஊரில் வைகாசி 10, 1975 / 23-5-1944இல் தாயம்மாள் பிறந்தார். சித்தாந்த ஆசான், வித்துவான் திரு….
