தமிழ்ப் பண்பாட்டிலிருந்து ஆரியர்கள் தங்கள் பண்பாட்டை அமைத்தனர் – அ.இராகவன்

சிந்துத்தமிழ்ப் பண்பாட்டிலிருந்து ஆரியர்கள் தங்கள் பண்பாட்டை அமைத்தனர்.   ஆரியர்கள் தமிழ் இந்தியாவில் கி.மு.1000 ஆண்டிலிருந்து கி.மு.1500ஆம் ஆண்டு வரையுள்ள காலத்தில் அடிஎடுத்து வைத்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.   ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தபொழுது ஆடு மேய்க்கும் நாடோடி மக்களாக வந்தனர். அவர்களுக்கு உயர்ந்த வளர்ச்சிபெற்ற பண்பாடும், நெறியும், நாகரிகமும் இல்லை. மொழிகூட செம்மையான வளர்ச்சி பெற்றதாக இல்லை. அவர்கள் எழுத்து இன்னதென அறியார்கள். வரிவடிவம் என்பது ஒன்று உண்டென்று சிறிதும் உணரார்கள். அவர்கள் இந்தியாவில் வந்தபொழுது சிந்துவெளியில் அரப்பா, மொகஞ்சதாரோ போன்ற நனிச்சிறந்த நாகரிகச்…

மாணிக்கவாசகம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கலந்தாய்வுக் கூட்டம்

பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கலந்தாய்வுக் கூட்டம்   தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தோரை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இறைவணக்கமாக அபிராமி அந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சிக்குத் தலைமை தங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சார்ந்த தாமோதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல்…

எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை! – பிரகாசம்

எல்லை யென்பதில்லை எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை- எங்கள் தமிழ்மொழி போன்றொரு தாயு மில்லை தமிழ்மொழி போன்றொரு தந்தையு மமில்லை தமிழ்மொழி போன்றொரு அறிவொளியு மில்லை தமிழ்மொழி போன்றொரு இலக்கியமு மில்லை தமிழ்மொழி போன்றொரு வளமு மில்லை தமிழ்மொழி போன்றொரு முதுமை யில்லை தமிழ்மொழி போன்றொரு புதுமை யில்லை தமிழ்மொழி போன்றொரு வண்மை யில்லை தமிழ்மொழி யேநாளும் ஆளும் அச்சமில்லை தமிழ்மொழியை போற்றுவோம் தயக்கமு மில்லை. பிரகாசம் http://siragu.com/?p=19900

சீராட்டும் என் தமிழ் மொழி! – வேதா

அன்புப் பெற்றோர் ஆசையாய்க் குலவி என்பிலும் உறைய ஊற்றிய மொழி என் தமிழ் மொழி மனத்தில் தேன் பாய்ச்சும் தினம்தினமாய். திக்குத் தெரியாத காட்டிலும் மனம் பக்குப் பக்கென அடித்த போதும் பக்க பலமாய் மரக்கலமாய் நான் சிக்கெனப் பிடிக்கும் என் தமிழ் மொழி. பிற மொழிக் கடலில் நான் நிற பேதம், பல பேதத்தில் புரளும் திறனற்ற பொழுதிலும் என் தமிழ் பிறர் உதட்டில் தவழ்ந்தால் மனமுரமாகும். கைகாட்டி, நீர்த் தெப்பம், வாழ்வின் வழிகாட்டி என்று என்னை நிதம்; தாலாட்டி மகிழ்வில் நாளும்…

பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி – பண்பாட்டு உணவுத்திருவிழா

மாசி 16, 2047 / 28.02.2016 அன்புடையீர் வணக்கம், நமது தமிழே நமக்கு வளம் நமது உணவே நமக்கு  நலம்.. அன்புடன், வெற்றிச்செழியன்

ஈ.வெ.இராமசாமி என்கிற நான் -நூலறிமுகம்

பெரியாரின் எழுத்துகள். தோழர் பசு கவுதமன் தொகுப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக மூன்றாம் பதிப்பு. ஈ.வெ.இராமசாமி என்கிற நான். (மூன்று பாகங்கள் இரண்டு புத்தகங்கள்) விலை: 850 பக்கங்கள்: 1364   நூலிலிருந்து…. எங்கள் மதத்தில் சீர்திருத்தமுண்டு என்பர். ஆனால் எங்களைப்போல் வேடம் போட்டுக்கொள்ள வேண்டும், எங்கள் வேதத்தை நம்பவேண்டும், எங்கள் சாமிகளையும்,தூதனையும் வணங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். மற்றொருவர் எங்கள் சமயத்தில் சீர்திருத்தம் உண்டு. ஆனால் எங்களைப்போல் வேடம் போட்டுக்கொண்டு எங்கள் சாமிகளையும், புராணங்களையும் நம்ப வேண்டுமென்பார்கள். நம்பாவிட்டால் நாத்திகர், அஞ்ஞானி, பாவிகள்,…

என் இனிய தமிழ்மொழி – சக்தி சக்திதாசன், இங்கிலாந்து

என்னைத் தாலாட்டிய மொழி எனதருமைத் தாய் மொழி என் இனிய தமிழ் மொழி எண்ணமெல்லாம் நிறைந்த மொழி என்னை நான் தொலைத்த போது என்னுள்ளே புதைந்த போது எண்ணெய் ஆக மிதந்து என் எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி இதயத்தின் நாளங்கள் முகாரி மீட்டினாலும் இனிமையான கல்யாணப் பண் பாடினாலும் இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய் இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில் முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும் முகவரி இழக்காது இலக்கிய உலகில் முத்தாக…

செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் – கிரிசா ம‌ணாள‌ன்

  செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் என‌து!  வ‌ட‌மொழி ய‌டைத்த‌ மாம‌றைக் க‌த‌வினைத் திட‌முட‌ன் திற‌ந்த‌ தேன்மொழி என‌து! மும்மையை யுண‌ர்த்தி முப்பொருள் காட்டும் செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் என‌து! பொல்லாப் பிள்ளையி ன‌‌ருளினால் ந‌ம்பிமுன் தில்லையிற் க‌ண்ட‌ திருமொழி என‌து! ஆறுசேர் ச‌டையா ன‌வைமுன‌ம் அணிபெற‌ நீறுசேர் சேர‌ர் நிக‌ழ்த்திய‌ தீந்த‌மிழ்! த‌த்துவ‌ம் யாவும் த‌மிழ்மொழி யுண‌ர்த்த‌லால் ச‌த்திய‌ஞ் செய்வேன் என்தாய்மொழி அதுவே!   கிரிசா ம‌ணாள‌ன் திருச்சிராப்ப‌ள்ளி girijamanaalanhumour@gmail.com

தமிழ் மொழி – பண்பட்ட பழமை மொழி : பனிகோ

தமிழ் மொழி   – பண்பட்ட பழமை மொழி இறைவனோடும் இவ்விகத்தோடும் இணைந்து தோன்றிட்டு காலங்களைக் கடந்து வாழ்ந்திடும் பண்பட்ட பழமை மொழி அடர்காடுகளில் கரடுமலைகளில் அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன் இயற்கையோடு இணைந்து உறவாடி வடித்திட்ட இயற்கை மொழி சொல்லொன்றை உயிர் ஓவியமாய் உகமதில் வாழும் காவியமாய் சிந்தனையைக் கடைந்து படைத்து தீட்டிட்ட தொன்மை மொழி தானே விதையுண்டு தாவரமாய் வேரோடி ஆலமரமாய்த் தழைத்திட்டு இலக்கண இலக்கியம் வளம் கொழுத்துச் செழுத்திட்ட செம்மொழி தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்…

மாணிக்கவாசகம் பள்ளி மாணாக்கர்க்குப் பாராட்டு

  அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை பெருந்தலைவைர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்குப் பாராட்டு விழா   தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகப் போட்டி போட்டு அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   காரைக்குடி   தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் பள்ளிப் பரிசு போட்டிகளில்…

தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் – க.பூரணச்சந்திரன்

தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம்   மனித அறிவினால் விளையும் கண்டுபிடிப்புகள் மிக விரைந்து பெருகிவருவது இந்த நூற்றாண்டின் தனித்தன்மை. பல நூற்றாண்டுகளாகத் தளர்நடையிட்டு வந்த வந்த பல அறிவுத் துறைகள், இந்த நூற்றாண்டில் ஓட்டப்பந்தய வீரனின் வேகத்தோடு விரைந்து வளர்ந்தன. ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு கொள்கையோ புத்தாக்கமோ அடுத்தநாட்டிற்குப் பரவிப் பாடப்புத்த கத்தில் இடம் பெறுவதற்குள் பழமையடைந்து விடுகின்ற காலம் இது. அறிவுத் துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை கலைச்சொற்கள். தக்க கலைச் சொற்களின்றிக் கருத்துகளைச் செம்மையாக, துல்லியமாக, சுருக்கமாக உணர்த்த…