வாயிலுக்கு வெளியேதான் ஓட வேண்டும்! – க.தமிழமல்லன்

என்நாட்டில் என்மொழியி்ல் எல்லாம் செய்வேன் எவன்தடுப்பான்? முன்வரட்டும் எலிபோல் சாவான்! என்வீட்டில் நான் பேசி வாழ்வ தற்கே எச்சட்டம் தடுக்க வரும்? நெருப்பில் வேகும்! என்அன்னைத் தமிழ்மக்கள் அமைத்தார் கோயில் எவன்தடுப்பான் தமிழ்உரிமை? கால்கள் போகும்! என்மக்கள் ஏமாறி வாழ்க்கை தந்தால் என்மொழியை உதைக்கின்றார் வாழ்க்கை சாகும்! சமற்கிருதம் எனச்செய்த மொழியை என்றும் சரியாகப் பேசியவர் எவரு மில்லை சமற்கிருதப் பிணந் தூக்கிப் பணத்தைஎண்ணிச் சமயத்தால் மேலேறிச் சாதி செய்தோர் நமக்குள்ளே வேற்றுமைத் தீ மூட்டிவிட்டார் நம்மவரே சமற்கிருதம் தூக்க லானார் சமற்கிருதம் செத்தமொழி…

தமிழ்க்கூடல், தனிப்பாடல்

மார்கழி 27, 2046 /  சனவரி 12, 2015 சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இந்த ஆண்டின் முதல் நிகழ்வுக்கு,  சென்னைக் கம்பன் கழகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். 9841181345.  

பொங்கல் திருநாள் வாழ்த்து! – கா.வேழவேந்தன்

இன்பங்கள் கோடி குவித்திட வாழ்த்து கின்றேன்! உள்ளத்தில் ஆட்சி செய்யும் உயரிய சுடரே! ஓயா வெள்ளங்கள் ஓய்ந்த பின்னால் விழாப் பொங்கல் வந்ததீங்கே! கள்ளமில் தங்கள் நெஞ்சக் கனவெலாம் வெல்க! தாங்கள் கொள்ளைஇன் பங்கள் கோடி குவித்திட வாழ்த்து கின்றேன்! வாடாத அன்பால், என்றும் வற்றாத பற்றால், பேதம் நாடாத பண்பால் நெஞ்சில் நங்கூரம் இட்டோர் தாங்கள்! தேடாமல் தேடிப் பெற்ற செல்வமே! அறிவே! அன்பே! நீடூழித் தாங்கள் வாழ நெஞ்சார வாழ்த்து கின்றேன்!   கவிவேந்தர் கா.வேழவேந்தன் 94444 50167

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – தொடர்ச்சி)   அருந்திறல் யானைக் காகும் ஒருநாள் புல்லிய பூனைப் பற்றிடும் ஒரு நாள் நம்மிடம் சிக்கினர் நன்றே ஒறுப்போம் உடன்பிறந் தாட்குறும் பொருள்தமைப் படுக்க விரும்பா தவளின் விழைவுக்கு மாறாய் கொலையும் புரிந்துளர் கொடியோ ரவரிடம் இவளை மணத்தில் எனக்குக் கொடுக்கப் பலகால் வேண்டியும் பயனு மில்லை இனிஅவ் வெண்ணம் எய்தினும் எய்தும் கொலையால் குற்றம் சாட்டி யவரைக் கொன்றபின் இவளைக் கூடுதல் கூடும் கடிதிற் சென்று கட்டளை காட்டி காற்றளை யிட்டு கடிதிற் கொணர்வீர்…

புதுச்சேரி: சித்தர் இலக்கியம், பன்னாட்டுக் கருத்தரங்கம்

பங்குனி 5.6 & 7, 2047 / மார்ச்சு 18, 19 & 20, 2016 ஆய்வுச்சுருக்கம் அனுப்புகை இறுதி நாள்: தை 27, 2047 / பிப்பிரவரி 10, 2016

ஓய்வறியாக் கல்விப் பணியாற்றும் ஆசிரியை முத்து மீனாள்

ஓய்வறியா கல்விப் பணியாற்றும் ஆசிரியை முத்து மீனாள்     தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஓய்வறியாக் கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு வந்தவர்களை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2015 ஆண்டு முழுவதும் தற்செயல் விடுப்பு உட்பட எந்த விடுப்பும் எடுக்காமல் ஒப்படைப்பு உணர்வுடன் பணியாற்றிய இடை நிலை ஆசிரியர்…

ஆங்கிலப் பணிப்பெண்ணிற்காகத் தலைவியாம் தமிழைப் புறக்கணிக்கக் கூடாது – பேரா.சி.இலக்குவனார்

ஆங்கிலப் பணிப்பெண்ணிற்காகத் தலைவியாம் தமிழைப் புறக்கணிக்கக் கூடாது   ஆங்கிலத்தைப் போற்ற வேண்டியது தமது முன்னேற்றம் கருதியேதான் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லை. ஆனால் அதற்காகத் தமிழை அறவே மறந்து விடுதல் கூடாது அன்றோ. நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமையை நினைத்து தமது வீட்டுத் தலைவியைப் புறக்கணித்து விடலாமா? தமிழர்களில் சிலர் அவ்வாறே செய்யும் நிலையில் இருக்கின்றனர். ஆங்கிலம் தமிழுக்கு அடுத்துக் கற்க வேண்டிய மொழியே அன்றித் தமிழை விடுத்துக் கற்பதற்குரியதன்று. ஒவ்வொரு தமிழரும் தமிழை முதன் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும்…

தமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஞாலமெனும் கோளமதில் முன்பி றந்து ஞாயிற்றின் சுடரெனவே ஒளிப ரப்பிக் காலமெலாம் நின்றிருக்கும் நூல்கள் தந்து கவின்பெற்றுக் கலையுற்று வாழும் தாயே தாலசைத்தால் தமிழாகும் இயற்கை சொல்லும் தத்துவத்தின் வித்தகமாய் இலங்கு வாயே சாலவுனை வேண்டுவது தவத்தின் மேலாம் தமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே! நற்றிணையும் குறுந்தொகையாம் வரிசை எட்டும் நல்லதிரு முருகாற்றுப் படைதொ டங்கிச் சொற்றிறங்கள் காட்டுகின்ற பத்துப் பாட்டும் சுவையூட்டும் காப்பியங்கள் ஐந்தும் ஆகி மற்றுமுயர் பலசமய நூல்கள் தாமும் மாற்றரிய புதுமைசெயும் புலவோர் நூலும் எற்றானும் உனைமறவா நிலையில் நாளும்…

சங்கக்கால வாழ்த்துகள் சில!

வாணாள்   வாழ்த்து             பசி இல்லாகுக பிணிசேண் நீங்குக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 5             அறம் நனி சிறக்க அல்லது கெடுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 7             அரசுமுறை செய்க! களவுஇல் ஆகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 8             நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 9             மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 10             ஆயிர வெள்ள ஊழி வாழி!…

அகமே நீ வாழ்த்துக! – மேதை வேதநாயகம்

அகமே நீ வாழ்த்துக! கதிரவன் கிரணக் கையால்             கடவுளைத் தொழுவான் புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித்             துதிசெயும் தருக்க ளெல்லாம் பொதியலர் தூவிப் போற்றும்             பூதம்தம் தொழில்செய் தேத்தும் அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும்             அகமேநீ வாழ்த்தா தென்னே மேதை வேதநாயகம் பிள்ளை: நீதித்திரட்டு

மின்னூல் பதிவிறக்க – து.நித்யாவின் எளியதமிழில் ‘சிஎசுஎசு’

  விழுத்தொடர் பாணித் தாள்கள்(Cascading Style Sheets -CSS) இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணிணிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் வி.பா.தா.(சி.எசு.எசு.) பெரும்பங்கு வகிக்கிறது. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. ஆசிரியர் : து.நித்யா மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com வலைப் பதிவு: http://nithyashrinivasan.wordpress.com     தமிழில் கட்டற்ற கணியன்கள்பற்றிய தகவல்களைக் “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது. இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழுப் புத்தகமாக…

மின்னூல் பதிவிறக்க : ‘(உ)ரூபி’ – பிரியா சுந்தரமூர்த்தி

  “எளிய இனிய கணினி மொழி” ‘(உ)ரூபி’ க்கு இதைவிடப் பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணையப் பயன்பாடுகள் ‘(உ)ரூபி’ ’யில் எழுதப்படுகின்றன. நிரலைச் சுருக்கமாக எழுதுவதே ‘(உ)ரூபி’ யின் ஆற்றல்வாய்ந்த இயல்புகளில் ஒன்றாகும். கணியன்(software)களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ‘(உ)ரூபி’ யில் உருவாக்க முடியும். ‘(உ)ரூபி’ யின் அடிப்படையையும், பரவலாகப் பயன்படுத்தப்படும் சிறப்புகளையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ‘(உ)ரூபி’ யின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் பரவியிருப்பது அவரது சிறப்பு. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில்…