ஊசுடனில் தமிழர் திருவிழா

அமெரிக்காவின் டெக்சசு மாகாணத்தில் ஊசுடன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் சார்பில் பியர்லேண்டு, கேட்டி, உட்லண்ட்சு மன்றக் கிளைப் பள்ளிகளது மாணாக்கர்கள் பங்குபெற்ற திருக்குறள் திருவிழா,பொங்கல் திருவிழா, பட்டிமன்ற நிகழ்வுகள் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. பியர்லேண்ட் கிளையில் மேல்நிலை மாணாக்கர்கள் வாதம்புரிந்த “இயந்திரத்தினால் நமக்கு ஏற்படுவது நன்மையா? தீமையா?” எனும் தலைப்பிலான பட்டிமன்றம் மாணாக்கர்களின் அறிவுத்திறனை அதுவும் தமிழில் வெகு சிறப்பாக வெளிக் கொணர்ந்தது. அனைத்துக் கிளைகளின் மாணாக்கர்களும் பங்குபெற்ற திருக்குறள் திருவிழாவில் ஒரு திருக்குறளுக்கு ஒரு தாலர் என்ற அடிப்படையில் திருக்குறளையும் அதற்கான…

வாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்

பிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான “தமிழ் இலக்கியத்தில் சமயம்” மிகவும் நன்றாக நடந்து முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ”இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ”திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்” (Edmund Husseri) தலைப்பில் நல்லதொரு உரை ஆற்றினார்கள்.                              …

புளோரிடாவில் பொங்கல் விழா

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் தைப்பொங்கல் பண்டிகை, மத்திய புளோரிடா முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வெகு  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.      ஆர்லாண்டோ நகரில் வசிக்கும் தமிழர்கள் ஆலயத்தில் ஒன்று கூடிப் பொங்கலிட்டுச் சூரியனுக்குப் படையலிட்டனர்.     இதனைத் தொடர்ந்து, சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.   விழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் எனக் கலந்து கொண்ட அனைவரும் நமது  பரம்பரை உடையில் வந்திருந்திருந்தது விழாவிற்குக் கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்திருந்தது. இவ்விழாவில் ஏராளமானோர்…

செய்திக்குறிப்புகள் சில

வேளாண்மைத் துறை சார்பில் உரூ.162.50 கோடி செலவில் திட்டங்கள்: முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார் உரூ.12.81 கோடி செலவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்,  புதிய கட்டடங்களை முதல்வர் செயலலிதா திறந்து வைத்தார்.   உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் 159 ஆவது பிறந்த நாளில் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் அதன்  தனி அலுவலர்(பொ) முனைவர் க. பசும்பொன் அவர்கள் தல்லாகுளம் அருகில் உள்ள உ.வே.சாமிநாத(ஐய)ர் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து  வணக்கம் தெரிவித்தார்கள்.   மொகாலி: பஞ்சாப் மாநில வேளாண் மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற …

முனைவர் பட்டம் பெற்ற 80 அகவை இளைஞர் சித்தர் அ.பாண்டியன்

  18.02.2014 அன்று  நடைபெற்ற அழகப்பா கல்லூரியின் 26 ஆவது பட்டமளிப்பு விழாவில்  வேந்தர் ஆளுநர் உரோசையா அவர்கள் தலைமையில் நீதியரசர் இராமசுப்பிரமணியன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். நேர்த்தியான அரங்கில் 157  முனைவர் பட்டதாரிகளும், 112 முதன்மை விருது பெற்ற பல்வேறு புலங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் நேரில் பட்டம் பெற்றனர். இளைஞர் பட்டாளத்தையும் அவர்களுடைய பெற்றோரின் பெருமைமிகு பாச முகங்களையும் கண்டது மகிழ்ச்சிக்குரியது. முனைவர் பட்டம் பெற்றவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஒளிவீசும் கண்களும், அன்பு ததும்பும் சொற்களும்கொண்ட 80  அகவை இளைஞர் முனைவர் சித்தர் அ.பாண்டியன்….

‘மறுமலர்ச்சி’ இயக்குநர் பாரதிக்கு மறுமலர்ச்சி அளியுங்கள்!

காட்டுமன்னார்கோவில் அருகே வாழ்ந்து மறைந்த வள்ளல் இராசு(படையாட்சி). அவரது வரலாற்றை மையமாக வைத்து ‘மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ்நாட்டிற்கு அந்த வரலாற்றை அறியத்தந்தவர் இயக்குநர் பாரதி.. அதன்பிறகு சில திரைப்படங்களை அவர் இயக்கினாலும் கூட மறுமலர்ச்சி எட்டிய வெற்றியை அவற்றால் எட்ட முடியவில்லை.. தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் “தில்லானா மோகனாம்பாள்” அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது “மறுமலர்ச்சி” இதுவே இத்திரைப்படத்தின் சிறப்பை வெளிப்படுத்தும். இயக்குநர் பாரதி இதுவரை தான் சம்பாதித்த எதையுமே தனக்கென்று சேர்த்துக்கொள்ளாமல் ஏழை…

கருப்புச் சூரியன்களுக்கு நடுவே – பாவலர் வையவன்

கறுக்கும் கருப்புச் சூரியன்களுக்கு நடுவே தளிரிலையால் தடவிவிடும் அன்புத்தாய் – நன்று அறிவித்தாய்! மூவுயிரைக் காக்கும் உந்தன் ஆணை ! – உனக்கு நிகராகக் காட்ட முடியாதொரு ஆணை !

எழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன?

   இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்ட  பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்டு பயசு, செயக்குமார்,  இரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகச் சட்டசபையில் விதி எண் 110- இன் கீழ் முதல்வர் செயலலிதா  விடுதலை அறிவிப்பைத் தெரிவித்தார்.   உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் உலகத் தமிழர்களும் இதற்கு உவகையுடன் வரவேற்பு தெரிவிக்கின்றனர். எனினும்  வழக்கம்போல் மனநோயாளிகள் சிலர் எதிராகப் பேசி வருகின்றனர். சிலர் பாராட்டிவிட்டு இதற்கான காரணமாகக் கட்சி அரசியலையும் தேர்தலையும் கூறுகின்றனர். காரணங்கள்  எவையாயிருப்பினும்…

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப்பள்ளிகள் – 5 : வெற்றிச்செழியன்

  தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி தாய்த்தமிழ் மழலையர் தோட்டம் கோபி பள்ளி ஏன் தொடங்கப்பட்டது? மேடைகளில் ஏறித் தமிழ்ப்பெருமை பேசுவது, பட்டிமன்றங்களில் தமிழைக்கொட்டி முழங்குவது, கருத்தரங்கம் நடத்தித் தமிழுக்கு வளம் சேர்ப்பது, பக்கம், பக்கமாக எழுதித் தமிழ்ப்பயிரை வளர்ப்பது, இவற்றை எல்லாம் முழுமையான தமிழ்ப்பணி என்று கருதாமல், மானுடத்தின் உயிரான கல்வியை, தமிழர்களின் உயிர் வேரான தமிழ்வழிக்கல்வியை ஓங்கிப்பிடித்து, கல்விப்பணி செய்வதுதான் தமிழ் இனத்தின் கேடு நீங்கச் செய்யும் வழிமுறைகளில் முதன்மையானது என எண்ணி, எதிர்கால நாற்றங்கால்களான நம் தமிழ்க் குழந்தைகளை, நமது…

பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார்

    பேரறிவாளன் பாட்டி கண்ணம்மாள் ( தந்தை குயில்தாசனின் தாய்) பேரனின் விடுதலையைக் கண்ணாரக் காணும் முன்பே கண்ணயர்ந்தார். இன்று (23.02.14)  சோலார் பேட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது.   தகவல் : வழக்குரைஞர் கல்விச்செல்வன்

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டது.

சென்னை ஒமந்தூரார் அரசு தோட்டத்தில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையைப் பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்– அமைச்சர்  செயலலிதா, பிப்.21,2014 வெள்ளியன்று திறந்து வைத்தார். பன்னோக்கு மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகள் உள்ளன.   வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லாத புதிய மருத்துவக் கருவிகள் இங்கு உள்ளன.  தனியார்  உயர்நிலை மருத்துவமனைகளுக்கு  இணையாக அமைக்கப்பட்டுள்ளது.  மூளை, இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அறுவை மருத்துவம் இல்லாமல் சரி செய்து  பண்டுவம் அளிக்கஉரூ.5 கோடி மதிப்புள்ள இரத்த நாள  அடைப்புநீக்குக் கருவி வாங்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு…