துணிவு இழந்தவனுக்குச் சுண்டுவிரல்கூட எதிரிதான்

துணிவு    துணிந்தவனுக்குக் கடலின் ஆழம்கூட ஒரு சாண் வயிறு துணிவு இழந்தவனுக்கு மண்பானையின் ஆழம்கூட கடலின் ஆழம் என்பான்… துணிந்தவனுக்கு தலையெழுத்து ஒரு தடையில்லை.. துணிவு இழந்தவனுக்கு அவன் சுண்டுவிரல்கூட எதிரிதான் துணிந்தவனுக்கு ஒரு முறை மரணம்.. துணிவு இழந்தவனுக்கு நித்தம் நித்தம் மரணம்.. தவற்றைக் களையெடு சேமிப்பை விதைபோடு நீயும் துணிந்தவன்தான் வாழ்க்கையென்னும் பக்கத்தில் துணிந்தவன் வீழ்ந்தாலும் எழுவான்.. துணிவு இழந்தவன் எழுந்து எழுந்து வீழ்ந்துகிடப்பான்.. அகக்கண் திறங்கள் துணிவு பிறக்கும் புறக்கண் துறந்துவிடுங்கள்.. ஆக்கம் பிறக்கும்.. ஏன் என்ற கேள்வி பிறக்காவிடில் பிறக்காமலேயே இறந்துவிடுகிறது…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 08: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) 8   பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றிய கவிஞர்கள் அனைவரும் தமிழ் மொழியின் சிறப்பையும் மறுமலர்ச்சியையும் சமூகச் சீர்திருத்தத்தையுமே தம்முடைய கவிதைக்குக் கருப்பொருளாகக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக புலவர் குழந்தை, இ.மு. சுப்பிரமணியபிள்ளை, சாமி. சிதம்பரனார், வாணிதாசன், ச. பாலசுந்தரம் ஆகியோர் எழுதிய கவிதைகளைக் குறிப்பிடலாம். புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம்’ என்ற மிகப் பெரிய செய்யுள் நூலை எழுதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். இராவண காவியம் கம்பன் கவிக்கு…

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? – நேரடி அறிக்கை!

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? –  நேரடி அறிக்கை!   அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியபோதும்…   ஒருவார காலத்துக்குப்பின்னர் நூலிழை நம்பிக்கையில் சிலபல வாக்குறுதிகளை நம்பி கெடுவிதித்து தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தபோதும்…   தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணஅவை உறுப்பினர்களும் குதிகால் பிடரியில் அடிபட கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கும், அநுராதபுரம் சிறைச்சாலைக்கும், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் ஓடோடிச் சென்றார்கள். ஓட்டம் என்றால் அப்படியோர் ஓட்டம்! இவர்கள்…

ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே!

கார்த்திகை 10, 2046 / நவம்பர் 26, 2015 இல் பிறந்தநாள் காணும் ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே!   சென்னை மாகாண மாநிலக்கல்லூரியில் பயின்று தமிழ் இளங்கலைப் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கங்கள் பெற்றுப் பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தமிழ்ப்பேராசரியராகப் பணியாற்றிப் பலரைக் கல்வி பயில ஆற்றுப்படுத்தியவர் அறிஞர் முத்துராமலிங்கம்; அப்பொழுதே பல கோடி மதிப்புள்ள 29 வகைச் சொத்துகள் இருப்பினும் அவற்றைப் பிறருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொண்டு உழைப்பிலும் கல்வியிலும் நாட்டம் கொண்டு கல்விப்பணியாற்றியவர். இவர்…

தமிழ்நல உறுதிமொழிஞர் 05 : வேல்முருகன் சுப்பிரமணியன்

தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும் என உறுதி ஏற்கிறேன்.

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 8 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 105  ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) குற்றமொன் றில்லாக் குறுந்தொழில் புரியும் ஆளைக் கொன்றனர் ஆடலன் தப்பினன் எழிலர சிக்கோ ரிடுக்கணும் விளைத்தனர் எண்ணிய விளையும் இனிது முடித்திலர் துன்பக் கடலில் தோயப் புகுந்தனர் அறிவை யிழந்தனர் ஆண்மை குன்றினர் செய்வது யாவெனச் சிறிதும் அறிந்திலர் வாட்கிரை யான மகனை யாங்கே பறந்திடும் புட்கும் பாய்ந்திடும் நரிக்கும் இரையாய்க் கிடத்தி யேகினர். இல்லம் அடைந்தது மாங்கே அவனைச் சேணிடை “அவல் புரிய அனுப்பினோ ” மென்றனர் அவ்வித…

மன்னையில்…தமிழன்னை ஊர்வலம்

  மன்னையில் ‪#‎தமிழர்_தேசிய_முன்னணியின் தமிழன்னை ஊர்வலம் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழரினம் எங்கள் ஆணி வேர்! படத்தைப் பெரிதாகக் காண அழுத்தவும்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 4: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 105  ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி)   04 “பணமி ருந்தார் என்ப தற்காய்ப் பணிந்தி டாத மேன்மையும் பயமுறுத்தல் என்ப தற்கே பயந்திடாத பான்மையும் குணமி ருந்தார் யாவ ரேனும் போற்று கின்ற கொள்கையும் குற்ற முள்ளோர் யாரென் றாலும் இடித்துக் கூறும் தீரமும் இனமி ருந்தார் ஏழை யென்று கைவி டாத ஏற்றமும் இழிகு லத்தார் என்று சொல்லி இகழ்த்தி டாமல் எவரையும் மணமி குந்தே இனிமை மண்டும் தமிழ்மொ ழியால் ஓதிநீ மாநி…

மாவீரர்நாள் மலரஞ்சலி, சுடரேந்தல், கருத்தரங்கம் : வடபழனி

கார்த்திகை 11, 2046 / நவம்பர் 27, 2015 மாலை 4.00 தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் குமுக விடுதலைத் தொழிலாளர்கள் 

வந்தவாசி வாசகர் வட்ட முப்பெரு விழா

தேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வென்ற  பள்ளி மாணவ – மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா .          வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எசு.ஆர்.எம் இன்போடெக்கு கணிணி நிறுவனம், சிரீகிருட்டிணா பயிற்சி மையம், இணைந்து 48-ஆவது தேசிய நூலக வார முப்பெரும் விழாவினை நடத்தின. இதனை முன்னிட்டுப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில்   கார்த்திகை 04, 2046…