தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை, இசை, இசையே!

தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை, இசை, இசையே தமிழகத்தில் ஒரு குழந்தை பிறந்த நாள் தொட்டு அதாவது அது தன் முதலாவது உயிர்க்காற்றை இழுக்க ஆரம்பித்தது முதல் தொட்டு, இறுதி மூச்சு வரை தமிழ் இசை அதன் வாழ்க்கையோடு ஒன்றித்து நிற்கிறது. ஏன்? அது உயிர்நீத்த பின்னர்கூட அதன் தாயும் உறவினரும் இசைக்கும் ஒப்பாரிப் பாடல் அதன் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் எல்லாச் சடங்குளிலும் பிறப்புத்தொட்டு இறப்பு வரை வாழ்விலும் தாழ்விலும் இசையை இசைத்து…

என்ன செய்யப் போகிறோம்? – பா.செயப்பிரகாசம்

மதவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக அறிக்கை போதுமா?   மூடநம்பிக்கைகளுக்கு எதிராய் எழுதியும் பேசியும் வந்த கன்னட எழுத்தாளர் ’கல்புர்கி’ சில மாதங்கள் முன்பு கொலை செய்யப்பட்டார். அவர் முதலான மூன்று எழுத்தாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எழுத்தாளர் கே. எசு. பகவான் போன்றோர் மதவாதஆற்றலா்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்கள்.   அடிப்படை மதவாத ஆற்றலர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராய் எழுத்துலகில் குமுறல் மையம் கொண்டுள்ளது. எதிர்வினை ஆற்றாத சாகித்ய அகாதமி நிறுவனத்தின் போக்கைக் கண்டித்து, மதவாதச் செயற்பாட்டாளர்களின் காவலனாக முன்னிற்கும் அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து எழுத்தாளர் நயனதாரா சேகல், சாகித்ய…

இசைபற்றிய பழந்தமிழ் நூல்கள் – ஆபிரகாம் பண்டிதர்

இசைபற்றிய பழந்தமிழ் நூல்கள் அகத்தியம்: இஃது இயல் இசை நாடகமென்னும் முத்தமிழிலக்கணத்தையும் தெரிவிப்பதாகிய ஒரு பெரிய இலக்கண நூல்; தென்மதுரைக்கணிருந்த தலைச் சங்கப் புலவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவராலருளிச் செய்யப்பட்டது. இது நச்சினார்க்கினியார் காலத்திலேயே இறந்து போயிற்றென்று தெரிகிறது ஆயினும் இதிலுள்ள சில சூத்திரங்கள் மட்டும் பழையவுரைகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இசை நுணுக்கம்: இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரனென்பவன் இசையறிந்ததற்பொருட்டு, அகத்திய முனிவர் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவராகிய சிகண்டியென்னும் அருந்தவமுனிவரால் வெண்பாவி லியற்றப்பட்ட இசைத் தமிழ்நூல்; இஃது இடைச்சங்கமிருந்த காலத்துச் செய்யப்பட்டதென்று அடியார்க்கு நல்லாருரையாலும்,…

தண்ணீருக்கான பொதுமேடை

ஐப்பசி 08, 2046 / அக்.10, 2015 ஞாயிறு காலை 10.00 தாம்பரம் ஏரிகள் நம் அடையாளம் : 1.ஏரிக்கரையைத் தூய்மை செய்தல் 2.குழந்தைகளும் கதைசொல்லலும் 3.மக்களுடனான கலந்துரையாடல் இணைந்து செயல்பட குடும்பத்துடன் வாருங்கள் . இடம் : புதுத்தாங்கல் ஏரி (அலுவலகம் அருகில் ), முல்லை நகர் , மேற்குத் தாம்பரம் . சென்னை தொடர்புக்கு : 9994186717, 9940220091, 9884022447 தண்ணீருக்கான பொதுமேடை ஏரிகள் பாதுகாப்பு இயக்கம், தாம்பரம்

அறிஞர்கள், அமைப்பினருக்கான தமிழக அரசின் விருதுகள் – முதல்வர் வழங்கினார்

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி செ.செயலலிதா அவர்கள் புரட்டாசி 25, 2046 / 12.10.2015 அன்று தலைமைச் செயலகத்தில், 2014, 2015-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, அறிஞர் போப்(பு) விருது, உமறுப்புலவர் விருது ஆகிய விருதுகளையும், 2013, 2014-ஆம் ஆண்டுகளுக்கான முதலமைச்சர் கணிணித் தமிழ் விருதுகளையும், 2015-ஆம் ஆண்டிற்கான இளங்கோவடிகள் விருதினையும், விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.   தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள்…

திருநங்கைகள் உலகம் – நூல் அறிமுகம்

நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 36 அறிவுத்தேடல் அறிவு நூல்: திருநங்கைகள் உலகம் அதிசயங்கள், அதிர்ச்சிகள் நூலாசிரியர்: பால்சுயம்பு வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்சு சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 600 018 பேசி: 044 4200 9601, , 03, 04 மின்னஞ்சல்: support@nhm.in இணையம்: www.nhm.in பக்: 279 விலை: உருவா 150 அறிவுத்தேடல் வலைப்பூ http://arivuththaedal.blogspot.in/2015_10_01_archive.html  

வலைமச் சொற்கள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி) 4 ஏ.) protocol   சீர் மரபு, செம்மை நடப்பு வழக்கு, செம்மை நடப்பொழுங்கு, செய்மை நடப்பொழுங்கு, நெறிமுறை, மரபு பேணுகை, மரபு முறை, மரபுச்சீர் முறைமை என வெவ்வேறு வகையாக இப்பொழுது குறித்து வருகின்றனர்.   மின் குழுமம் ஒன்றில் பேரா. செல்வகுமார், “நெறிமுறை எதிர் விதிமுறை/ எதிர் வரைமுறை – protocol, எது சரி? இரண்டுமே சரியாக இருக்கும். தொடர்பாடல் துறையில், கணிணித் துறையில் இரண்டிலுமே இரு சொற்களும்…

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் சிலத் தமிழிசை நூல்கள்

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் சில இசை நூல்கள்  இனித் தேவவிருடியாகிய குறுமுனிபாற்கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி. இடைச்சங்கத்து அநரகுலனென்னும் தெய்வப்பாண்டியன் தேரொடு விசும்புசெல்வோன் திலோத்தமையென்னுந் தெய்வமகளைக்கண்டு தேரிற்கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியாநிற்கத் தோன்றினமையிற் சாரகுமாரனென அப்பெயர்பெற்ற குமரன் இசையறிதற்குச்செய்த இசை நுணுக்கமும், பராசைவமுனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதீயமும், கடைச் சங்கமீரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களில் வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூலுமெனவைந்தும இந்நாடகக் காப்பியக்கருத்தறிந்து நூல்களன்றேனும்…

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மறைந்து போன சில இசைக் கருவிகள்

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மறைந்து போன சில இசைக் கருவிகள்   இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாயுள்ள தொன்னூல்களுமிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடுஇறுதிகாணாமையின், அவையும் இறந்தனபோலும், இறக்கவே வரும் பெருங்கலமுதலிய பிறவுமாம். இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும்பெற்று ஆயிரங்கோல், தொடுத்தியல்வது; என்ன? ஆயிரநரம்பிற்றாதியாழாகு, மேனையுறுப்புமொப்பன கொளலே, பத்தர…

கருவியிசை – இளங்கோவடிகள்

கருவியிசை குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைத்தது ஆமந்திரிகை -இளங்கோவடிகள்: சிலப்பதிகாரம்: 3: 139-141

இசை என்றால் என்ன? – இளங்கோவடிகள்

இசை என்றால் என்ன? யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையாகும் -இளங்கோவடிகள்: சிலப்பதிகாரம்: 3: 26-29  

இயல், இசை, நாடக விளக்கம் – க.வெள்ளைவாரணன்

இயல், இசை, நாடகம் அறிவீர்! உள்ளத்தால் பொருளியல்பை                 உணர்த்தும் மொழி இயல் என்பர் வெள்ளத்தால் எவ்வுயிரும் மகிழ்ந்திசைய                 ஓசைகளும் விளங்க இன்பம் கொள்ளச்செய் உரைத்தி றத்தாற்                 குலவுமொழி இசையென்பர்; குறித்த செய்கை விள்ளத்தால் அதுவாகப் பயிற்றுமொழி                 நாடகமா விரிப்ப ராலோ வெள்ளை வாரணனார்: யாழ்நூல் சிறப்புப் பாயிரம்