திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை

(அதிகாரம் 017. அழுக்காறாமை தொடர்ச்சி) 01அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 018. வெஃகாமை   எந்தக் காரணத்தாலும் பிறரது பொருள்களைப் பறிக்க விரும்பாமை.   நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக்,      குற்றமும் ஆங்கே தரும்.          பிறரது பொருளைப் பறிக்க        விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும்.   படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார்,      நடுஅன்மை நாணு பவர்           வருபயன் விரும்பிப், பழிப்புச்        செயல்களை நடுநிலையார் செய்யார்.   சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,…

புகை இல்லாத புகைவண்டி – சின்னா சர்புதீன்

புகை இல்லாத புகைவண்டி ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ இரும்புக்கம்பி இரண்டிலமர்ந்து   எதிர்த்திசையை நோக்கியே விரைந்துசெல்லும் வண்டியைப்பார்   வீறுகொண்டு பறக்குதே நீண்டுநெடுங் தூரம்ஓடி   நிற்குமிடம் தன்னிலே மீண்டும்மக்கள் தம்மைஏற்றி   மிகவிரைவாய்ச் செல்லுமே புகையிரதம் எனஇதற்குப்   பெயரிட்டார்கள் முன்னராம் புகைவராத இன்றும் அது   புகையிரதம் தானடா ஆடுமாடு மனிதர் பொருள்   அத்தனையும் சுமக்குமாம் வீடுபோன்ற அறைகள்பல   வரிசையாக இருக்குமாம் காடுமேடு வயல்நிலங்கள்   கடல்கடந்தும் போகுமாம் நாடிரண்டை மூன்றைத்தொடுத்து…

மு.பி.பா.வின் நூல் அறிமுகம்

 ஆவணி 01, 2046 / ஆக.18, 2015 செவ்வாய் மாலை 6.00 ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்   பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் நூல் “அலைகடலுக்கு அப்பால்…!”  

அமீரகத்தில் கோடை விழாக்கள்

 அமீரகத்தில் கோடை விழாக்கள்    அபுதாபி : அமீரகத்தில் கோடை விழாவினையொட்டி அபுதாபி, துபாய் முதலான பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதை காணலாம். – முதுவை இதாயத்து  

பொறி. தி.ஈழக்கதிர் – இவன் பெற்றோர் என்நோற்றார் என வியக்க வைத்துள்ளவன்!

பொறி. தி.ஈழக்கதிர் நூறு நூறு ஆண்டுகள் வாழ்கவே!    ஆடி 27, 2046 / ஆக12, 2015 அன்று பிறந்தநாள் பெருமங்கலம் காணும் எங்கள் மகன் தி.ஈழக்கதிர் நல்ல மனைவிமக்கள் பெற்று இல்லறத்தை நல்லறமாக்கி, நலம், வளம் நிறைந்து, தமிழ்நலம் பேணி நூறாண்டிற்கும் மேல்வாழ உள்ளன்புடன் வாழ்த்துகிறோம்!   ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பிள்ளைகள் பற்றிய நினைவு மிகுதியாக இருக்கும். அத்தகைய நினைவுகளில் சிலவற்றை அன்பு மகனின் பிறந்தநாளில் பகிர விரும்புகின்றேன்.   அப்பொழுது சென்னை அண்ணா நகரில் திருவேணி குடியிருப்பில் குடியிருந்தோம். மிக அருகிலுள்ள…

த.இ.க.கழகம் : கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் தொகுப்பமர்வு ஒளிப்படங்கள்

தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 24, 2046 / ஆக.09/2015   கலந்துரையாடல்  இரண்டாம் நாள் தொகுப்பமர்வு வரவேற்புரை : தமிழ்ப்பரிதி முன்னிலை : முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப. திரு நாகராசன் இ.ஆ.ப. நிறைவுரை : திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. நன்றியுரை : ஆழி.செந்தில்நாதன் படங்களைச் சொடுக்கிப் பெரிதாகக் காண்க.   காண்க: தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 23, 2046 / ஆக.08/2015   முதல் நாள் தொடக்க விழா கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் : நாள் 2 : ஒளிப்படங்கள்…

சசிபெருமாள் மறைவும் மதுவிலக்கும்

மதுவிலக்குப்போராளி சசிபெருமாள் மறைவும் முழுமையான மதுவிலக்கும் அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் (திருவள்ளுவர், திருக்குறள் 927)   தமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் போராடி வந்தவர் காந்தியவாதி செ.க.சசிபெருமாள். பலமுறை உண்ணாநோன்புப் போராட்டங்களையும் நடத்தியுள்ளார். கடந்த (தி.பி.2045 / கி.பி. 2014ஆம்) ஆண்டில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், முழு மதுவிலக்கினை வலியுறுத்தி 36 நாள் உண்ணாநோன்பு இருந்துள்ளார். இவர் விளம்பரத்திற்காக இத்தகைய போராட்டத்தில் ஈடுபடவில்லை. கட்சி அரசியல் நோக்கிலும் இதனைச் செய்ய வில்லை. வாணாளெல்லாம்…

என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? – இலக்குவனார் திருவள்ளுவன்

என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? இலக்குவனார் திருவள்ளுவன் வியாழன், 14 ஆக. 2014 , வெப்துனியா (தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், உரிமையற்ற நாட்டிலே விடுதலைக் கொண்டாட்டமா? என வினவுகிறார். ஆயினும் இவற்றைப் பேசும் உரிமை இன்னும் இருக்கிறது என்பதை நினைவூட்டி, இதனை  வெளியிடுகிறோம். – ஆசிரியர்) “என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் … … … என்றெமதன்னை கை விலங்குகள் போகும் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்” என்று மாக்கவி பாரதியார் அடிமை…