கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன்

    கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்.    கவிமணி சி.தேசிக விநாயகம் (பிள்ளை) (1876–1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர்….

தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை! – வித்யாசாகர்

தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை – வித்யாசாகர்   துருப்பிடித்த சாதி – அது திருத்திடாத நீதி, துண்டுத் துண்டாகி – இன்று உயிர்களைக் குடிக்கிறது சாதி.. தலைமுறையில் பாதி – அது கொன்று கொன்று விழுவதேது நீதி ? காதல்சருகுகளை – பிஞ்சுகளைக் கொன்று கடும் நஞ்சாய்ப் பரவுகிறது சாதி.. கருப்பு வெள்ளையில்லா ஒரே சிவப்பு இரத்தம், அது சிந்திச் சிந்தி நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழெனில் சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ? “ச்சீ”.. கேட்கவே வெட்கம் செங்கல் வேகலாம், சாதியில்…

ஊர்சுற்றிப் பறவை நூல் வெளியீட்டு விழா

ஊர்சுற்றிப் பறவை (குமரி மாவட்டத்தில் ஒருவரலாற்றுப் பயணம்) நூல் வெளியீட்டு விழா. இடம்: கத்தூரிபாய் மாதர் சங்கக் கட்டடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாகர்கோவில். நாள்: ஆடி 24, 2046 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை, மாலை-4மணி வரவேற்புரை: கடிகை ஆன்றனி. தலைமை: முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னிலை: வழக்குரைஞர் ஆர். இராதாகிருட்டிணன், நூல் ஆய்வுரை: குமரி ஆதவன், நூல் வெளியிடுபவர்: காலச்சுவடு கண்ணன், நூல் பெற்றுக் கொள்பவர்: அ.கா.பெருமாள், வாழ்த்துரை :   மலர்வதி, மீரான் மைதீன், சோ.தமிழ்ச்செல்வன், ஏற்புரை: நூலாசிரியர் இராம் (இராமன் என்கிற காந்திராமன்)…

வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.

ஆடி 12, 2046 / சூலை 28, 2015 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில்   சமூக வலைத்தளங்கள் குறித்து நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com  மின்வரியில் இணையத்திலும் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழ்ச் சிறப்பை ஆரியர் தழுவினர் : மறைமலையடிகள்

  இங்ஙனம் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலேதான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்து, போந்த உயிர்க்கொலை­யினை நிறுத்துதற் பொருட்டாகத் ‘தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்­பட்டனவா­மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதும் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமையானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருந்தினமையானும் ஆரியர்க்கும் தமிழர்க்கும் இதன்பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும்…

‘கனடா – தாய்வீடு’ இதழ் அறிமுகம் : மு.பி.பா.

ஆடி 21, 2046 / ஆக. 06, 2015  மாலை 6.30 பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை 600 007  பேரா.மு.பி.பாலசுப்பிரமணியன் திரு பொன்னையா விவேகானந்தன்