சங்க இலக்கியப் பயிலரங்கு,

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் இணைந்து நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கான சங்க இலக்கியப் பயிலரங்கு நெறியாள்கை: திருமதி வைதேகி  எர்பெர்ட்டு (சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்) இடம் : ஐயப்பன் ஆலய மணிமண்டபம் நிகழ் நிரல்: சனிக்கிழமை   ஆடி 23, 2046 / ஆக.08, 2015 10:00 மு.ப மங்களவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து,  நாட்டுப்பண் 10:05 மு.ப மொழிபெயர்ப்பாளர் அறிமுகம்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம் (கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்) 10:10 மு.ப பயிலரங்கு 12:00 பி.ப  நண்பகலுணவு 1:00 பி.ப பயிலரங்கு 3:00 பி.ப…

இந்நாடு முழுதும் பரவியிருந்தோர் தமிழரே ! – மறைமலையடிகள்

பண்டைக்காலத்தே ஆசியாக் கண்டத்தில் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ்விந்தியநாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர். (கேம்பிரிட்ஜின் தொல்லிந்திய வரலாறு) -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: பக்கம். 35  

சமசுகிருதமயமாக்குதலால் அடையாளம் இழந்தனர் – தமிழண்ணல்

  தமிழர்களுக்குச் சிறந்த வானநூற் புலமை இருந்தது. அதனால் கணியம் என்னும் சோதிடக் கலையிலும் அவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இன்று திருமணம் முதல் நீத்தார் கடன் ஈறாகத் தமிழர்தம் சடங்குகள் பலவும் தொன்றுதொட்டு இங்கு நடைபெற்று வந்தனவேயாம். எதையும் ‘சமசுகிருதமயமாக்கல்’ எனும் ஒரு சூழல், ஒரு பேரியக்கமாகவே சில நூற்றாண்டுகள் நடைபெற்றுள. இன்றைய ஆங்கில மோகம் போலச் சமசுகிருத மயமாக்குதலில், தமிழர்களே பேரார்வம் காட்டித் தங்கள் பண்பாட்டை அடையாளத்தைத் தாங்களே அழித்துக் கொண்டனர். தங்கள் சிற்பக் கலையை வடமொழியில் எழுதிவைத்து, அவை தமிழர்க்குக் கடன்பெற்றுக்…

இறையாண்மை என்றால் இதுதான் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  2   இந்தியா என்பது பல தேசிய அரசுகளின் இணைப்பு. இதன் நிலப்பரப்பும் நிலையாக இல்லாமல், உருவான காலத்திலிருந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா என்னும் செயற்கை அமைப்பே உருவானது. 1858 ஆம் ஆண்டில் இன்றைய இந்தியப் பரப்புடன் இலங்கை, ஆப்கானிசுதானம், பருமா, கிழக்கு வங்காளம், சிந்து, வடமேற்கு எல்லை மாநிலம் எனப்படும் பாக்கிசுத்தான் முதலியவை சேர்ந்த பரப்பே இந்தியா எனப்பட்டது. இப்பரப்பு எல்லைக்குள்ளேயே தனியரசுகள் சிலவும் ஆங்கிலேயர் அல்லாத பிறர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளும் இன்றைக்கு இணைக்கப்பட்டவாறு இல்லாமல்…

சித்த மருத்துவ முப்பெரு விழா, சென்னை

ஆடி 31, 2046 /  ஆக. 16, 2015 உலகச்சித்த மருத்துவ அறக்கட்டளைத் தொடக்கம் நலம்காக்கும் சித்த மருத்துவம் பாகம் 1 – நூல் வெளியீடு சித்த மருத்துவ இணையத்தளம் தொடக்கம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு ஒரு விழா எடுக்க ஆயத்தமாகி வருகிறோம்.. தமிழகம் முழுதும் இருந்து  250க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் கலந்துகொளும் இந்த விழா வரும் ஆடி 31 /  ஆக. 16 அன்று நடைபெற இருக்கிறது.  முன்பதிவு   தேவை என்பதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தொடர்புகொள்க:- info@WorldSiddha.org -ச.பார்த்தசாரதி…

உலகியல் பொருளறிவு பிறரிடம் இல்லை – மறைமலையடிகள்

உலகியல் பொருளறிவு பிறரிடம் இல்லை   இத்துணை நுட்பமான உலகியற் பொருள் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றைமொழிகளில் வல்லராய் விளங்கிய ஏனையப் பழம் புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ள பொருத்தம் பற்றி அவர் வெளியிட்ட அரிய கருத்துக்களின் விழுப்பமும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிற் பரக்கக் காணலாம். -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: பக்கம். 32-33

தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும்   நேற்று(ஆடி 09, 2046 / சூலை 25,2015 சனிக்கிழமை இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை) வாகைத்தொலைக்காட்சியாகிய ‘வின் டிவி’ என்னும் தொலைக்காட்சியில் எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். இதில், இராகுல் திருச்சிராப்பள்ளி வருகையின்பொழுது பேசிய மதுவிலக்கு தொடர்பான அரசியல் உரையாடல் நிகழ்ந்தது. இவற்றுள் மதுவிலக்கு நினைவுகள்பற்றித் தனியாகவும், மதுவிலக்குக் கொள்கைபற்றித் தனியாகவும் எழுத உள்ளேன். இராகுல் வருகைபற்றி மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்….

தாய்த்தமிழும் மலையாளமும் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 19.07.15 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 4   தமிழ் மக்களே பழந்தமிழ்ச் சொற்களைத், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான பிற சொற்களாக – இம்மொழிகள் பேசப்பட்ட பகுதி ஒரு காலத்தில் தமிழ் நிலமாக இருந்த பொழுது வழங்கிய தமிழ்ச் சொற்களே இவை என்பதை உணராமல் – கருதும் பொழுது இம் மொழி பேசும் மக்கள் எல்லாச் சொற்களும் தமக்குரியனவே எனக் கருதுவதில் வியப்பொன்றும் இல்லை. எனவேதான் அவர்கள், தமிழ்ச் சொற்கள் கண்டறியப்படும் தொல்லிடங்களையெல்லாம் தம் மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். எனவே, தமிழ்க்குடும்ப மொழிகளில்…

அரசியல் ஆத்திசூடி – இராமசெயம்

அனைத்திலும் அரசியல் அறிந்திடு ஆதிக்க உணர்வை வெறுத்திடு இல்லாதோர்க்காய் உழைத்திடு ஈகைக் குணத்தை வளர்த்திடு உண்மை உழைப்பைப் போற்றிடு ஊழல் சூழல் போக்கிடு எளிமை நெறியைக் கற்றிடு ஏளனம் செய்தல் மறந்திடு ஐக்கிய மாதல் உரைத்திடு ஒற்றுமை எண்ணம் பெருக்கிடு ஓய்தல் நீக்கிச் செயல்படு ஓளடதம் நீயென எண்ணிடு அஃதே அரசியலென மாற்றிடு. – க.இராமசெயம் http://www.rmsudarkodi.blogspot.in/    

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 004. அறன் வலியுறுத்தல்

(அதிகாரம்   003. நீத்தார் பெருமை தொடர்ச்சி)          001 அறத்துப் பால்        01 பாயிர இயல் அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல்                     ‘சிந்தனையும், சொல்லும், செயலும்          தூயதாய் இருக்க’ என வற்புறுத்தல்   சிறப்(பு)ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்(கு)      ஆக்கம் எவனோ உயிர்க்கு…..?         சிறப்பும், செல்வமும் தருஅறத்தைவிட,         வளமும் நலமும் வே[று]இல்லை.   அறத்தின்ஊங்(கு), ஆக்கமும் இல்லை; அதனை,       மறத்தலின் ஊங்(கு)இல்லை கேடு.        அறத்தைவிட, நல்லதும், அதனை         மறத்தலைவிடக், கெட்டதும்,…

கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு

கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு கனடாவின் கியூபெக்கு மாநிலத்தில் மொன்றியல் கிழக்குப் பகுதியில் கடந்த ஆடி 02, 2046 / 18-07-2015 அன்று பலநாடுகள் பங்குகொண்ட பல்கலை நிகழ்வு 2015 (Quebec City Festivals and Events) நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 5 வருடங்களாக இலங்கைத் தமிழர்கள் தங்களின் கலை, பண்பாட்டினை பல்லின மக்களோடு பரிமாறும் பொருட்டு, கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் வருடா வருடம் பங்குகொண்டு பல கலை நிகழ்வுகளை மேற்கொண்டுவருகின்றது. ‘Festival d’été de Québec’ என்னும்…