நாள்தோறும் நினைவில் 10 : உடலைப் பேணு – சுமதி சுடர்

உடலைப் பேணு உடற்பயிற்சி செய் தூய்மையாக இரு அளவோடு உண் தட்பவெப்ப பாதுகாப்பு பெறு பொருள்படைக்க உழை உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வை இயற்கையொடு இணைந்து வாழ் நோய்க் குறிகளை அறி மருத்துவத்தின் துணைகொள் ஆழ்ந்து உறங்கு  – சுமதி சுடர், பூனா

பேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்

பேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்   கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலைகள் பேரிடரில் உள்ளன. இது குறித்துக் கருத்து செலுத்தவேண்டிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகமோ கவலைக்கிடமாக உள்ளது.   பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் துறைமுகம் உள்ளது. மேலும், எண்ணெய் இயற்கை எரிவளி நிறுவனம்(ONGC),தென்கன்னெய் வேதிய நிறுவனம் (SPIC), முதலான பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் கும்பகோணம் வழியாகவும், நன்னிலம் வழியாகவும் தூத்துக்குடி, சென்னை முதலான பகுதிகளுக்கு அனுப்பப் படுகின்றன. எடுத்துக்காட்டாக 4 பாரம்(டன்) ஏற்றிச்செல்லக்கூடிய சுமையூர்திகளில் 8 பாரம்…

விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!

விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!   காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக் கேட்கிறது அவனுக்கு. நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக் காட்சி தருகின்றன கழனிகள் அங்கே, கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அழகு மனைவி. வீட்டைப் பார்க்கிறான். வெண் சுண்ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும் அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே – சிற்றாடை தடுக்க – தத்தை போல் தாவி – நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள் –…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 6 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! காட்சி – 6 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குடில் முன் உள்ள மரக்கிளை நிலைமை  :     (நாடகம் பற்றிய கருத்துரையில் பேடும் சிட்டும் ஈடுபடல்) ஆண் :     நாடகம் எப்படி உள்ளது சொல்? பேடே! நீயும் பெண் தானே! பெண் :     எனக்கென்னத் தெரியும்! நான் சொல்ல?     உனக்கெதும் தெரிந்தால் சொல்லிவிடு! ஆண் :     நடப்பிற்கும்…

தேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா

தேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா   தேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு உணவளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேவதானப்பட்டி அருகே உள்ள சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் சார்பில் 18 நாட்கள் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும் உணவளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி தங்கராசு உணவளிப்பைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் மாநில இணைச்செயலாளர் கணேசன், கோட்டப்பொறுப்பாளர் உதயகுமார், மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி முதலான பலர் கலந்து…

கொசுக்கடிக்குத் தீர்வு புகைமூட்டம்

கொசுக்கடிக்குப் பயந்து பழமைக்கு மாறிவரும் தேனிமாவட்ட மக்கள்   தேனிமாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கொசுக்கடியிலிருந்து கால்நடைகளைக் காப்பாற்ற மூட்டம் என்ற பெயரில் கொசுக்களை விரட்டியடிக்கும் முறையைக் கையாண்டனர்.   பழமையான மண்சட்டி, நொச்சி இலை, வேப்பிலை, தேங்காய் மட்டை, சிரட்டை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக்கொண்டு தீயினால் உருவாக்கப்பட்ட கங்குகளை வைத்து புகைமூட்டம் போடுவார்கள். இவ்வாறு புகை மூட்டம் போடப்பட்டு அதனைக் கால்நடைகள் வைத்திருப்பவர்கள் தங்கள் தொழுவத்தில் வைப்பார்கள். இதனால் கால்நடைகள் கொசுக்கடியிலிருந்து காப்பாற்றப்படும்.   அதன்பின்னர் புதுமையாகி, கொசுவர்த்திச் சுருள், கொசுவை…

அடிக்கடி பழுதாகும் கொடைக்கானல் மலைச்சாலை

அடிக்கடி பழுதாகும் கொடைக்கானல் மலைச்சாலை நிலையான தீர்வுகாண சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்   தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையிலிருந்து டம்டம்பாறை வழியாகக் கொடைக்கானல் சென்றடையலாம். இச்சாலைகள் அடிக்கடி பழுதாவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிப்படுகின்றனர்.   மலைப்பாதையிலிருந்து கொடைக்கானல், பூம்பாறை, பூலத்தூர் முதலான மலை யூர்களுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். கடந்த 50 முன்னர்களுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் பெரியகுளம் வழியாகவும், தேவதானப்பட்டி வழியாகவும் குதிரைகள் மூலம் சென்று வந்தனர். தற்பொழுது வாகனப் பெருக்கம் மற்றும் சாலை வசதிகளினால் குதிரைகளை விட்டு விட்டுப் பேருந்துகளிலும்,…

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன்

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன் உலகம் இங்குப் போகும் போக்கை ஒன்று சேர்ந்து மாற்றுவோம் ஒருவ னுக்கே உரிமை யென்றால் உயர்த்திக் கையைக் காட்டுவோம் கலகம் இல்லை குழப்பம் இல்லை கடமை யாவும் போற்றுவோம் கயமை வீழ உரிமை வாழக் கருதி யுணர்வை ஏற்றுவோம் உழைத்து ழைத்து விளைத்த நெல்லை ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம் உழைத்து விட்டுக் களைத்த பின்னர் உணவில் லாமற் படுக்கிறோம் களைத்துப் போன கார ணத்தைக் கருதிக் கொஞ்சம் நோக்குவோம் கடவுள் ஆணை என்று சொன்னால் கண்ணில் நெருப்பைக்…

பெண் காவலர்களால் பாதை மாறும் திருமண உறவுகள

தாலியறுக்கும் மகளிர் காவல்நிலையங்கள் பணத்தால் பிரியும் பல குடும்பங்கள் மஞ்சள் குளிக்கும் பெண் காவலர்கள். திருமணங்கள் மேலுலகில் உறுதி செய்யப்படுகின்றன என்பது மக்களின் நம்பிக்கை.   திருமணம் நடைபெற்றவுடன் புரிதலுணர்வுடனும் விட்டுக் கொடுத்தும் வாழ்பவர்கள் வாழ்க்கை என்றும் இனிக்கும். சிலருக்கு ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள் என்பதுபோல் 90 நாள்மட்டும் இல்லற வாழ்க்கை இனிக்கும். அதன்பின்னர்தான் கணவன் மனைவியரின் உண்மை உருவம் தெரியவரும். இதற்கிடையில் கணவனின் தாய், தங்கை, அக்கா ஆகியோர்களின் தன்முதன்மைச் செயல்களால் குடும்பத்தில் புயல் வீசத்தொடங்கும்; கணவன், மனைவியரிடையே பிணக்கு…

குளத்தைத் தேடும் ஊராட்சிமக்கள் – வைகை அனிசு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குளத்தைத் தேடும் ஊராட்சிமக்கள்   நாகப்பட்டினம் மாவட்டத்தில் குளத்தைக்காணோம் என முறையீடு கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.   வடிவேல் ஒரு திரைப்படத்தில் குளத்தைக்காணோம் என்ற முறையீட்டை அளித்துக் காவலர்கள் வந்து குளத்தைத்தேடித் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள். அது போலத் தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சி மக்கள் குளத்தைக்காணோம் என முதல்வர் பிரிவிற்கும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் மனுக்கள் அனுப்பி உள்ளனர்.   அந்த ஊர் பொதுமக்களிடம் பேசியபோது கடந்த மார்கழி 27, திருவள்ளுவர் ஆண்டு 1948 / 10.01.1917இல் தெற்குப் பொய்கை…

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்   பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் வேளாண்மையை…

‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்து!

  தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து! திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து! இனப்படுகொலையாளன் பக்சே வீழ்ந்தான் என்ற மகிழ்ச்சியில் கொண்டாடுவோம் இப்பொங்கலை! வரும் புத்தாண்டில் தமிழ் ஈழத் தனி நாட்டிலும் கொண்டாடுவோம் திருவள்ளுவர் புத்தாண்டை என்னும் நம்பிக்கையில் கொண்டாடுவோம் இப் பொங்கலை! அகரமுதல இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் எல்லாரும்  எண்ணியவாறு நல்லன எல்லாம்  எய்தி இன்புற்றிருக்க வாழ்த்துகள்! பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரந்து வாழிய! வையகம் வாழ்க! வான் தமிழ் வெல்க! (-தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்…