பூட்டப்பட்டது அண்ணா மேம்பாலம்!

  மாணாக்கர் எழுச்சி!   முள்ளிவாய்க்கால் முற்றத்தை உடனே மறு சீரமைப்பு செய்ய வேண்டியும் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன்  முதலான தமிழ் ஆர்வலர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டியும்  மாணாக்கர் போராட்டம் நாடெங்கும் நடைபெறுகிறது. அதில் ஒன்றாக, வரலாற்றில் முதன்முறையாக சென்னை அண்ணா மேம்பாலத்தைச் சங்கிலியால் பூட்டிப் போக்குவரத்தை முடக்கினர்  மாணாக்கர்கள். இப்போராட்டத்தில் 70 மாணாக்கர்களும் இயக்குநர் கௌதமன்  முதலான உணர்வாளர்கள் பலரும் தளையிடப்பட்டுள்ளனர். போராட்டங்கள் மேலும் பரவும் முன்னர் அரசு தலையிட்டு நல்ல முடிவு காணும் எனப் பொதுமக்கள்…

பரிவுகாட்டப்பட வேண்டியவர்களைப் பாழ்கிணற்றில் தள்ளலாமா?

சிறப்புமுகாம்வாசிகள் மடல் அனுப்புநர் : இலங்கைச் சிறைவாசிகள் இலங்கைச் சிறப்புச்சிறை மத்தியச் சிறை வளாகம் திருச்சி ஐயா வணக்கம். நாம் இந்த  மக்களாட்சி நாட்டின் விருந்தாளிகள். எம்மீது ஐயத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுப், பிணையில் வெளியே வந்தவர்கள் . வழக்கை முடிக்காமல் சொந்த நாட்டிற்குச் சென்று விடுவார்கள் எனும் அடிப்படையில் வெளிநாட்டவர் தடுப்புச் சட்டம் 3[2]உ-ஐப் பயன் படுத்தி எம்மைச் சிறப்பு முகாம்களில் அடைக்கின்றீர்கள். எமது விடுதலைக்கு நீண்ட காலம் ஆகும் என்பதைக் கருத்திற் கொண்டு உச்சநீதி மன்றம், உயர் நீதி மன்றங்கள்…

மாமூலனார் பாடல்கள் 2 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   அகம்                                                                                                                                                                பாலை 1         வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,   5           “சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம்” என்ற சொல்தாம் மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,   10        அழல் போல் வெங்கதிர்…

மும்பை சு.குமணராசனுக்குப் பாராட்டு

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில்  பத்து நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ”தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் இதழியல் பணிக்காகப் பாராட்டப் பெற்றார்.   விழாவில் பாலச்சந்திரன் இ.ஆ.ப. பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.

மருத்துவப் பண்டுவம் கடனாளி ஆக்குகிறது: சசி தரூர்

சென்னை : ”மருத்துவப் பண்டுவத்திற்காகக், கடனாளிகளாகும் நிலை, இந்தியாவில் நிலவுகிறது. எனவே, குறைந்த செலவில், தரமான மருத்துவம் வழங்க, மருத்துவர்கள் முன்வர வேண்டும்,” என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கேட்டுக் கொண்டு உள்ளார். இராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின், 18 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள், பட்டயப்  படிப்புகளில், சிறப்பிடம் பெற்ற, 51 மாணவ, மாணவியருக்குத் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றுகளை வழங்கி, சசி…

காரைக்கால் பேயின் பெண்ணியம் – முனைவர்.ப. பானுமதி

    ஆண்களுக்குத் துணையாக நின்று  அவர்களின் வாழ்வில் சுவை சேர்ப்பவர்கள் பெண்கள். தமிழகம் கண்ட பெண்மணிகள் பலரும் “தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்னும் வள்ளுவரின் வாக்கின் படி சிக்கல்களின்போது தம் கற்பையும் நிலை நிறுத்திக் கொண்டு தம் குலத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் துணிச்சலுடன் வாழ்ந்து வரலாறு படைத்துள்ளனர். அதே சமயத்தில் அநீதி கண்ட போது ஆர்த்தெழுந்து அதனை எதிர்த்துப் போர்க்கொடி ஏந்தி வெற்றியும் பெற்றுள்ளனர். மன்னனின் மடத்தனத்தைச் சுட்டிக் காட்டி, முலை திருகி மூட்டிய நெருப்பால் ஊரை…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 2

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)  வரலாற்று நோக்கு   2. மக்கள் அனைவரும் தமிழர்கள்.  தமிழ் என்னும் சொல் பனம்பாரனார் பாயிர உரையில் குறிப்பிட்டு உள்ளது தவிர தொல்காப்பிய மூலத்திலும் குறிக்கப் பெற்றுள்ளது. [தமிழ்’ என் கிளவியும் அதன் ஓரற்றே – தொல்காப்பியம்: எழுத்து: 386] மக்கள் தாம் பேசிய (தமிழ்) மொழியின் காரணமாகத் தமிழர்கள் என அழைக்கப் பெற்றனர். மொழியினால்  மக்களுக்குப் பெயர் வழங்கப்படுகின்றதே தவிர மக்களால் மொழிக்குப் பெயர் வருவது இல்லை. பேராசியிரியர் வி.கே. இராமசந்திரதீட்சதர், “வயவர் ஃகரி யான்சன்டன் (Sir Harry…

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் எழுத்தர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன

 நவம்பர் 20, 2013 முதல் 04-12-2013 வரை இணையத்தில் இதற்கென விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் அச்சுப் பதிவை 09-12-2013க்குள் அனுப்ப வேண்டும். அகவை வரம்பு 31-10-2013 அன்று பட்டதாரிகள் 24. முதுநிலைப் பட்டதாரிகள் 26. பொறியியல் உட்பட ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணையவழித் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் உரூ.300. http://career.tmb.in/ என்ற முகவரியில் இயங்கும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். பின்னர், அதனை அச்செடுத்து, அகவை, கல்வித் தகுதிக்கான சான்றிட்ட படிகள், கட்டணத்திற்கான  வரைவோலை(டி.டி.)…

தளையிடப்பட்ட தமிழாசிரியரை விடுதலை செய்க!

 சத்தியம் தொலைக்காட்சியில்   கடந்த வாரம் ‘சத்தியம் – அது சாத்தியம்’ நிகழ்ச்சி இரவு 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை நடந்தது. அதில், “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா?” என்ற விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரசு சார்பில்சட்ட மன்ற உறுப்பினர் விசயதாரணி , பாசக மாநிலப் பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று விவாதம் செய்துகொண்டிருந்தனர். காங்.கின் பேச்சு சரியாக இல்லை என்றும் இதனால் உணர்வுள்ள ஒருவர் தொலைபேசி வாயிலாகப் பேச வந்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றம் வைப்பது தமிழர்களின் கடமை. இதைப்பற்றி…

வாழ்த்துங்கள்! வளர்கிறோம்!

தமிழுக்கு முதன்மை இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது எங்கும் அல்ல! தமிழ் மக்கள் வாழும்  தமிழ்நாட்டில்தான் தமிழுக்கான முதன்மையை எதிர்நோக்குகிறோம்! தமிழுக்கான முதன்மை  அகன்று மெல்ல மெல்ல அதன் இருப்புநிலை குறைந்து இன்றைக்குக் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட வருந்தத்தகு நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றத் தமிழார்வலர்கள் முன்வரவேண்டும்! அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள், தமிழார்வலர்கள் வரிசையில் ‘அகர முதல‘ இணைய இதழ் இன்றைக்கு வெளிவருகிறது. கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் அவர்கள்,

தேடுகிறேன் . . . !

ஓடோடி   உழைத்தமகன்  வாடி   மண்ணில் உட்கார்ந்தே   தேடுகிறேன்  உள்ளத்தால்  எண்ணி ஆடிப்   பெருங்காற்றில்  அடிமரமே   வீழ்ந்துவிட்டால் கூடி   நிழலிலமரக்   கூடுமோ ? வௌவால்  மாந்தர்கள்   வாழும்தமிழ்  மண்ணில் வாய்மை   மேட்டிலொரு   தூய்மையாளன்  தோன்றினான் ! காய்மை  மனமில்லாக்   காரணத்தால்  கரைசேரவில்லை தாய்மை  மனமிருந்ததாலே   தமிழ்க்கரைகண்டார் !