அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 65-67

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 62-64-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 65. அமைச்சர் பதவி தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும் படி அரசனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே தன் மைத்துனரை வரச்சொல்லி உரையாடிக்கொண்டிருந்தான். அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து, உடனே தன் மைத்துனனிடம், ‘அது என்ன வண்டி? விசாரித்துவா’ என்று சொல்லி அனுப்பினான். மைத்துனனும் ஒடிப்போய் விசாரித்து வந்து, அரசனிடம் ‘நெல் வண்டி’ என்று கூறினான். அரசன்…

பொங்கல் விடுமுறையில் இரு குறைபாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

பொங்கல் விடுமுறையில் இரு குறைபாடு போகிக்கு அல்லவா விடுமுறை விட்டிருக்க வேண்டும்? மொழிப்போர் ஈகியர் நாளை வேலைநாள் ஆக்கியிருக்கலாமா? இவ்வாண்டு(தி.ஆ.2056/பொ.ஆ.2025) தமிழர் திருநாளாம் பொங்கற் புதுநாள் சனவரி 14 செவ்வாயன்று வருகிறது. தொடர்ந்து புதனன்று திருவள்ளுவர்  திருநாள்/மாட்டுப் பொங்கல்(சன.15), வியாழனன்று உழவர் திருநாள் (சன.16) என முந்நாளும் அரசு விடுமுறையாகும். எனவே வெள்ளியன்று விடுமுறை விட்டால் தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்றிலும் குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் நல் வாய்ப்பாக இருக்கும் என ஆசிரியர்களும் அரசூழியர்களும் கருதினர். இதற்கிணங்க எழுந்த முறையீட்டு அடிப்படையில் அரசு வெள்ளியன்றும்…

இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை  : சிறப்புகள்: குமரிச்செழியன்

இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை  : சிறப்புகள் இலக்கியங்கள் என்பவை மக்களின் வாழ்க்கை இலக்குகளை உரைப்பவை. உலகில் எண்ணற்ற இலக்கியங்கள் பல்வேறு மொழிகளிலும் உள்ளன என்றாலும் உலகத்தொன்மொழியாகிய தமிழ்மொழிக்குத் தனியிடம் உள்ளது. தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களிலும் திருக்குறளுக்குத் தனியிடம் உள்ளது. உலக மக்களின் வாழ்க்கை நெறிகளைப் பகுத்தும் தொகுத்தும் வழங்கும் நூல் திருக்குறள். உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற ஒரே நூல் திருக்குறள். உலக மக்கள் அனைவராலும் போற்றப்பட்டும் உரிமை கொண்டாடப்பட்டும் வருகின்ற ஒப்புயர்வற்ற உயர்ந்த நூல். திருக்குறள் ஒரு தனித்தமிழ்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 116: அத்தியாயம் 78. குறை நிவர்த்தி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 115: அத்தியாயம் 77. தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-78 குறை நிவர்த்தி திருவாவடுதுறையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். சுப்பிரமணிய தேசிகர் தாம் உத்தேசித்தபடியே திருப்பெருந்துறைக்கு வந்து சேர்ந்தார். சில தினங்களுக்குப் பிறகு தேசிகரிடமிருந்து தந்தையார் முதலியவர்களோடு திருப்பெருந்துறைக்கு வந்து சில காலம் இருக்க வேண்டுமென்று எனக்கு ஓர் உத்தரவு வந்தது. எங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைப் பண்ணுவித்து அனுப்ப வேண்டுமென்று காறுபாறு கண்ணப்பத் தம்பிரானுக்கும் திருமுகம் வந்தது. நான் என் தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறையை நோக்கிப் புறப்பட்டேன். காறுபாறு தம்பிரான் சௌகரியங்கள்…

௪.  திருத்தமாய்ப் பேசுங்கள்!-புலவர் வி.பொ.பழனிவேலனார்

(௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  ௪.  திருத்தமாய்ப் பேசுங்கள்! தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது.  அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும்.  இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும்.  பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது.  மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது.  தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது.  தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம், நாகரிகம்,…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 2 – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 1 – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 12சமயம் 2 மேய்புலமாம் முல்லைநிலக்கடவுள், ஆயர் மகளிர் பாலும், ஆனினங்கள் பாலும் அன்புடையோனாகிய கார்மேனிக் கடவுள் மாயோன். அவன் எப்போதும், குழலில் ஒலி யெழுப்பிக் கொண்டேயிருப்பான். அதன் இசை அனைத்து உயிர்களையும் ஈர்த்து உருகச் செய்யும். இசையில் மட்டுமல்லாமல், ஆடலிலும் மகிழ்வூட்டுவன். ஆய மகளிர் கூட்டம் புடைசூழ, அவன், அல்லது அவன் பக்தன் , இன்றைய ஆயர்களைப் போலவே, எளிதில் பொருள் விளங்காப் பல் வேறு ஆடல்களை மேற்கொள்வர். பால்,…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 80 : 17. எழிலிபாற் பயின்ற காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 79 – தொடர்ச்சி) பூங்கொடி 17. எழிலிபாற் பயின்ற காதை பூங்கொடி எழிலியின் இல்லம் அடைதல்           ஆங்ஙனம் புகன்ற அடிகள்தம் வாய்மொழி பூங்கொடி ஏற்றுளத் திருத்தினள் போந்து கொடிமுடி நல்லாள் குலவிய தமிழிசை நெடுமனை குறுகி நின்றன ளாக         பூங்கொடி அறிமுகம்           `வல்லான் கைபுனை ஓவியம் போலும்         5           நல்லாய்! என்மனை நண்ணிய தென்னை? இளங்கொடி யார்நீ?’ என்றனள் எழிலி; உளங்கொள அறிமுகம் உரைத்தனள் தன்னை அடிகள்தம் ஆணையும் அறைந்தனள் பூங்கொடி;         எழிலி பாடம்…

எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? இலக்குவனார் திருவள்ளுவன் எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? எள்ளத்தனைத் துயரமும் முடியவில்லை. ஆண்டுகள் முடிந்தாலும் துயரங்களுக்கு முடிவில்லையே! பல நாடுகளில் போர்கள். அதனால் வேறுபல நாடுகளிலும் போர்களால் பாதிப்புகள். உலகெங்கும் போர் அச்சுறுத்தல்கள். “கெட்டபோரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்” என்னும் பாவேந்தர் பாரதிதாசன் குரல்போல் பலரும் குரல் எழுப்பத்தான் செய்கின்றனர். ஆனால் போர்களுக்கு முடிவில்லையே! அணுக்குண்டுகளின் அழிவுகளைப் பார்த்த பின்னும் அணுக்குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றனவே! போர்களில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என எல்லாத் தரப்பு மக்களும் கொல்லப்படுகின்றனரே!…

சட்டச் சொற்கள் விளக்கம் 896 – 900

(Explanation of Legal Terms 891-895 continued) சட்டச் சொற்கள் விளக்கம் 896-900 896. Assistance உதவி; உதவுதல்‌; துணை   உதவி என்பது ஒரு செயலுக்கு உதவும் நிலையைக் குறிப்பது. துணை என்பது அதிகாரத்திற்கு அடுத்த நிலையில் இருந்து அல்லது அதிகாரத்தலைமைக்குப் பகரமாகத் துணை நிற்பதைக் குறிப்பது. aid என்பது இலவச உதவியைக் குறிப்பது. எ.கா. legal aid இதனை நாம் உதவுமை எனலாம்.   உதவி பலவகைப்படும். அவற்றை அடுத்துப் பார்க்கலாம். 897. assistance, consular /consular assistance   தூதரக…

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 62-64

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 59-61-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்  நூறு 62. இளவரசனும் அரசனும் அதிக வரி வாங்கி நாட்டு மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான் அந்நாட்டு அரசன். மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்கள் மேல் கருணை காட்டுமாறு அரசனை மிகவும் மன்றாடி வேண்டினர். மறுநாள் அரசன் குடிமக்கள் அனைவரையும் அழைத்து, “தாங்கள் கோரிக்கைகளைப் பற்றிச் சிந்தித்தேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் வந்து, அரண்மனையிலிருந்து ஒரு மூட்டை நெல் எடுத்துக் கொண்டுபோக வேண்டும். ஒரு மூட்டை அரிசியாகத் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும். இது…

௩. தமிழ்  எழுத்துச் சீர்திருத்தம்?-புலவர் வி.பொ.பழனிவேலனார்

(உ,உயர்தனிச் செம்மொழி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   ௩. தமிழ்  எழுத்துச் சீர்திருத்தம்? முன்னுரை உலக மொழிகளுள் முதன்மையானதும், பண்பட்டதும் தமிழ்மொழி ஒன்றே. எழுத்துகள் செப்பமாயமைந்தது; மென்மை, வன்மை, இடைமை ஒலிகளையுடைய எளிய இனிய மொழி; ஒரு சொற்கு ஒரு பலுக்கல் உடையது; ஒரு சொல்லில் உள்ள எல்லா எழுத்துகளும், ஒலிக்கும் இயல்புடையது. எழுத்து மாற்றம் வீரமாமுனிவரால் செய்யப் பெற்றபின், பெரியார் வழி பற்றி, தற்போது தமிழக அரசு ஓரளவு எழுத்துச் சீர்திருத்தம் செய்துளது. இதற்குமேல் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்றாலும் தற்காலத் தேவை கருதி…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம்  1 – புலவர் கா.கோவிந்தன்

(பாட்டுடைத் தலைவர்களாகப் பழங்குடி இனத்தலைவர்கள் – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 11 சமயம் மனிதன், தொழிற்கருவிகளையும், உணவு சமைக்கும், ஆடை நெய்யும், சொல் வழங்கும் உயிரினம் மட்டுமல்லன், சமய உணர்வு வாய்ந்த உயிரினமும் ஆவான். உயிரினங்கள் அனைத்திலும், மனிதன் ஒருவன்தான், தன்னை அச்சுறுத்தும் உண்மையான அல்லது கற்பனையான இன்னல்களைத் தீர்த்துத் தான் நீண்ட காலமாக, ஆர்வத்தோடு அவாவி நிற்கும் பெரும் பொருளைக் கொடுத்தருளுமாறு எல்லா வற்றுக்கும் மேலான இறைவன் துணையை வழிபாட்டின் மூலம் வேண்டும் அல்லது வற்புறுத்தும் முறையைக் கண்டவன். இச்சமய…