கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 79 : எழிலியின் கையறுநிலை தொடர்ச்சி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 78 – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை – தொடர்ச்சி தருவது தொழிலாக் கொண்டது தமிழகம் அயன்மொழி பலவும் ஆய்ந்து தெளிந்து மயலற மொழியும் மாந்தர் பற்பலர் எம்முடை நாட்டினில் இலங்கிடல் காணுதி! எம்மொழி யாயினும் எம்மொழி என்றதை 125 நம்பும் இயல்பினர் நாங்கள்; இந்நிலை அறிகதில் ஐய! அமிழ்தெனும் தமிழை மறந்தும் பிறமொழி மதிக்கும் பெற்றியேம்; ஆயினும் தமிழை அழிக்கும் கருத்தின் சாயல் காணினும் தரியேம் எதிர்ப்போம்; 130 பிறமொழி…
சட்டச் சொற்கள் விளக்கம் 891-895
(சட்டச் சொற்கள் விளக்கம் 886 – 890) சட்டச் சொற்கள் விளக்கம் 891-895 891. Assign உரிமை அளி; உரிமை மாற்று அளி; ஒப்புவி; குறித்தளி கையடை கொற்றம் வை வணிகத்திலும் ஒப்பந்தங்களிலும் உரிமையளித்தல் முதன்மை இடத்தைப் பெறுகிறது. உரிமைகளை அல்லது நலன்களை ஒரு தரப்பாரிடமிருந்து மற்றறொரு தரப்பாருக்கு மாற்றுவதைக் குறிக்கிறது. உட்குத்தகைக்கும் உரிமை மாற்றியளித்தலுக்கும் வேறுபாடு உள்ளது. உட்குத்தகை என்பது குத்தகையாளர் உரிமைகளில் ஒரு பகுதியை மட்டும் மாற்றியளித்தலைக் குறிக்கிறது. உரிமையளி என்பது குத்தகையாளர் ஒப்பந்தப் பின்னணியில் மற்றொருவருக்கு அல்லது மற்றொரு…
அறிவுக்கதைகள் நூறு – ரு. அரசு – அரசியல் : கி.ஆ.பெ.விசுவநாதம் : 59-61
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 56-58-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு ரு. அரசு – அரசியல்59. யார் தவறு? படிப்பறிவில்லாதவர் சட்டசபைத் தேர்தலில் நின்றார். வெற்றி பெற்றார். மந்திரியாகவும் ஆனார். அந்த ஊர்ப் பொதுமக்கள் மிகவும் மகிழ்ந்தனர் தங்கள் பள்ளிக்கூடக் கட்டடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்தார்கள். அவரும் இசைந்துவிட்டார். ஆனால் அங்கே என்ன பேசுவது என்பது தெரியவில்லை. தன் செயலரைக் கூப்பிட்டார்; பேசவேண்டிய பேச்சு – கேட்டுத் தெரிந்துகொண்டார். திறப்பு விழா மண்டபத்தே – “இது ஒரு நல்ல பணி; இது போன்ற…
பாட்டுடைத் தலைவர்களாகப் பழங்குடி இனத்தலைவர்கள் – புலவர் கா.கோவிந்தன்
(போர்ப்பாடல் மரபுகள் – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 10 பாட்டுடைத் தலைவர்களாகப் பழங்குடி இனத்தலைவர்கள் பாவாணர்கள், பண்டைக்காலம் தொட்டே, பரிசில் பெறும் நோக்கோடுதான் பாடினார்கள். ஆகவே, அவர்களுடைய பாட்டுடைத் தலைவர்களெல்லாம், பழங்குடி இனத் தலைவர்களே. போர் இத்தலைவர்களால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில நிகழ்ச்சி களின்போது மட்டுமே, ஆற்றல்மிகு அருஞ்செயல் ஆற்றும் வாய்ப்பு, பொதுமக்களுக்கு வாய்க்கும். ஆனால், போரில் ஆற்றும் அருஞ்செயல்களுக்கான பெருமையெல்லாம், பொதுவாகப் போர்ப்படைத் தலைவர்களையே சென்று சேரும். ஏழையின் காதலைப் பாடினால் பரிசு கிட்டாது. ஆகவே காதற் பாக்களின்…
ஆளுமையர் உரை 118 & 119; என்னூலரங்கம் ஞாயிறு 22.12.2024
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௪ – 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக் கழகம் ஆளுமையர் உரை 118 & 119; என்னூலரங்கம் மார்கழி 07, 2055 ஞாயிறு 22.12.2024 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00டிவ கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” உரையாளர்கள் இதழாளர் வி.முத்தையா கண்ணதாசக் காதலர் காவிரி மைந்தன் என்னூலரங்கம் இலக்குவனார்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 78 : எழிலியின் கையறுநிலை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77 – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை – தொடர்ச்சி எழிலியின் கையறுநிலை `பெயருங் கூத்தன் பெருவளி தன்னால் உயர்கலம் மூழ்கி உயிர்துறந் தான்’என உயிர்பிழைத் துய்ந்தோர் வந்தீங் குரைத்த 60 கொடுமொழி செவிப்படக் கொடுவரிப் புலிவாய்ப் படுதுயர் மானெனப் பதைத்தனள், கதறினள்; துடித்தனள், துவண்டனள், துடியிடை கண்ணீர் வடித்தனள், `என்னுடை வாழ்வில் வீசிய பெரும்புயல் விளைத்த துயரம் பெரிதே! 65 மாலுமி இல்லா மரக்கலம் ஆகிப்…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 56-58 – சமூகம்
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 53-55-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 56. மூத்த மாப்பிள்ளை ஒரு சமயம் நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் தன் அருகில் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “இவர்தான் எங்கள் வீட்டு முதல் மாப்பிள்ளை. பெரிய மாப்பிள்ளையும் கூட. இவர் மிகவும் நல்லவர். ஏனெனில் எங்கள் குடும்பத்துக்குப் பெரிய உதவி செய்துள்ளார். இதற்காக எங்கள் குடும்பமே இவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது” என்று முகமலர்ச்சியுடன் கூறினார். நான் வியப்படைந்து, அப்படிப்பட்ட உதவி இவர் என்ன செய்தார்?”…
உ. உயர்தனிச் செம்மொழி-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் உ. உயர்தனிச் செம்மொழி ஒருவர் (எவர் பெயரையும் குறிப்பிட விரும்புகிலேம்) தமிழில் பேச்சுமொழியை ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்யவேண்டும் என்கின்றார்; வேறொருவர், பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தாம் தமிழ் வளர்ச்சியடையும் என்கின்றார்; இன்னொருவர், அறிவியல் கருத்துகளைத் தமிழில் எழுத, பேசப் பிறமொழிச் சொற்களை அவ்வாறே எடுத்தாள வேண்டும். அன்றுதான் அறிவியல்தமிழ் வளரும் என்று சொல்கின்றார்; ஆங்கில மொழியைப் பின்பற்றி எழுத வேண்டும் என்கின்றார் மற்றொருவர்; ‘தமிழ்க் கழகங்கள் முத்தமிழ் வளர்த்தன என்பதெல்லாம் கட்டுக்கதை; தமிழ்ச்சங்கள் இருந்தனவென்பதற்குச்…
போர்ப்பாடல் மரபுகள் – புலவர் கா.கோவிந்தன்
(காதற்பாக்களின் இலக்கிய மரபுகள் – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 9 நில இயல்புக்கு ஏற்ப அமையும் போர்ப்பாடல் மரபுகள் காதல் அல்லாமல், பாக்களின் மற்றொரு கருப்பொருள் போர். குறிஞ்சி நிலத்தில், போர், வெட்சி எனப்படும் ஆனிரை கவர்தலில் அடங்கியிருந்தது. ஆனிரை கவரப்படையெடுத்துச் செல்வார் வெட்சி மலர்களால் ஆன மாலை அணிந்து கொள்வர் ஆதலின், அப்போர், வெட்சி என அழைக்கப்பட்டது. கவர்ந்து சென்றாரிடமிருந்து ஆனிரைகளை மீட்டுக்கோடல், அது போலும் ஒரு காரணத்தால், கரந்தை எனப் பெயரிடப்பட்டது, அடுத்து இருந்த காட்டு நிலம். தற்காப்புப்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77: 16. எழிலியின் வரலாறறிந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 76 : தமிழிசை தழைக்கும் – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை இசைச் செல்வி கன்னித் தமிழின் நன்னலங் காப்போய்! தன்னலம் விழையாத் தையல் எழிலிதன் திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கேண்மோ! அறமனச் செல்வி, அழகின் விளைநிலம் எழிலி எனும்பெயர்க் கியைந்தவள், அவள்தான் 5 இசையால் உறுபே ரிசையாள், பிறமொழி இசேயே பாட இசையாள், தமிழில் ஒன்றெனும் இயலும் ஓதித் தெளிந்தவள், மன்றினில் நிறைவோர் மகிழ்ந்திடப் பாடலில் ஒன்றிய பொருளின்…
சட்டச் சொற்கள் விளக்கம் 886 – 890: இலக்குவனார் திருவள்ளுவன்
சட்டச் சொற்கள் விளக்கம் 881-885-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் 886 – 890 886.Assessment மதிப்பீடு தீர்வை விதிப்பு ஏதாவதொன்றின் விகிதத்தினை அல்லது தொகையினைத் தீர்மானித்தல். எடுத்துக் காட்டாக இழப்பீடு அல்லது விதிக்கப்பட்ட ஒறுப்புத் தொகை. குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டவரின் உள நிலைமை குறித்துத் தகுதி வாய்ந்த வல்லுநர் ஒருவர் தீர்மானித்தல். குடும்பநல வழக்குகளில் தகுதியான வல்லுநர் ஒருவர் சிறாரின் தேவையையும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான தரப்பினரின் ஆற்றலையும் ஆராய்ந்து மதிப்பிட்டு அறிவிக்கும் பகுப்பாய்வு அறிக்கை. குடியியல் வழக்குகளில் சொத்தினைப் பேணவும் தனிப்பட்ட நலன்…
அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 53-55
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 50-52-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 53. மாப்பிள்ளை தேடுதல்! முப்பது வயதான தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் புறப்பட்ட ஒர் அந்தணனுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள் அவன் மனைவி. நடையாய் நடந்து, அலைந்து அலுத்துப்போய், ஒரு வீட்டுத் திண்ணையிலே அந்தணன் தங்கியபோது, தன் கவலையையெல்லாம் அந்த வீட்டுக்காரனிடம் சொன்னான். அது கேட்ட அவன், “எனக்கு ஒரு மகன் இருக்கிறான். வயது 32 ஆகிறது. வரதட்சணை எல்லாம் வேண்டா. உன் பெண்ணை அவனுக்கு மண முடிக்கலாம்” என்றான். அவனும்…
