உ.வே.சா.வின் என் சரித்திரம் 115: அத்தியாயம் 77- சமயோசிதப் பாடல்கள்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 114: அத்தியாயம் – 76: தல தரிசனம்- தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 77 சமயோசிதப் பாடல்கள் திருவாவடுதுறையில் குமாரசாமித் தம்பிரான் சின்னக் காறுபாறாக இருந்து வந்தார். சுப்பிரமணிய தேசிகருடைய யாத்திரைக்காலத்தில் அவர் திருவாவடுதுறையில் சில சில சீர் திருத்தங்களைச் செய்தார். கோயில், மடம், நந்தவனங்கள் முதலியவற்றை மிகவும் நன்றாக விளங்கும்படி கவனித்து வந்தார்.திருநெல்வேலியிலிருந்து நான் திருவாவடுதுறைக்கு வந்து சில வாரங்கள் தங்கியிருந்தேன். அக்காலத்தில் குமாரசாமித் தம்பிரானோடு தமிழ் விசயமாகப் பேசி இன்புற்றேன். யாத்திரைக் காலத்திற் சந்தித்த புலவர்களைப்பற்றியும் நிகழ்ந்த…

தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்

(சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை  முன்னுரையும்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்           க. தமிழ் வளர்ப்போம் இலக்கியம் எனின், மக்கள் வாழ்க்கை இலக்கணம் என்றால், வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும், இலக்கணமும், லட்சியம், லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர்.  தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர். ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை,  வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர்.  ஆரியர் தமிழ்நாட்டிற்குள் வந்த பின்னர்,…

காதற்பாக்களின் இலக்கிய மரபுகள் – புலவர் கா.கோவிந்தன்

(கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 8 காதற்பாக்களின் இலக்கிய மரபுகள், உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து பிறந்தனவே உலக நிலப்பரப்பின் மக்கள் வாழத்தக்க பகுதிகள், ஐந்து வகையாகப் பிரிக்கப்படும். மனிதன் முதன் முதலில் வாழத் தொடங்கி, வேட்டையாடி உயிர் வாழ்ந்த, மரம் செடி, சொடிகளைச் சிறிய அளவிலேயே கொண்ட சிறு மலைப்பகுதி, தண்ணீர் கருதி, மரம், செடி, கொடிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகி, மனிதன், முதன்முதலில், வீர ஒழுக்கங்களையும், கொள்ளையடித்து வாழும் உள்ளுணர்வையும் வளர்த்துக் கொண்ட மணல்செறிந்த பாலை; மனித வாழ்க்கையில்…

ஆளுமையர் உரை 116 & 117 ; என்னூலரங்கம்: வெருளி அறிவியல் 5

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641) தமிழே விழி!                                         தமிழா விழி!             தமிழ்க்காப்புக் கழகம் ஆளுமையர் உரை 116 & 117; என்னூலரங்கம் கார்த்திகை 23, 2055 ஞாயிறு 08.12.2024 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்       தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” உரையாளர்கள் கவிஞர் முத்துக்குமாரசாமி உலகநாதன், யார் தான்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 76 : தமிழிசை தழைக்கும்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 75 – தொடர்ச்சி) பூங்கொடி 15. இசைத்திறம் உணர எழுந்த காதை- தொடர்ச்சி தமிழிசை தழைக்கும்           ஆதலின் அன்னாய்! அத்துறை அனைத்தும்              ஏதிலர் தமக்கே இரையா காமல்,   80           தாய்மொழி மானம் தமதென நினையும் ஆய்முறை தெரிந்த ஆன்றோர் தாமும் உயிரெனத் தமிழை உன்னுவோர் தாமும் செயிரறத் தமிழைத் தெளிந்தோர் தாமும்                 புகுந்து தமிழிசை போற்றுதல் வேண்டும்;        85           தகுந்தோர் புகின்அது தழைத்திடல் ஒருதலை;          கூத்தும் பரவுக           கூத்தும் அவ்வணம்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 50-52

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 47-49-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 50. வேலை வாங்கும் முதலாளி தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி. ஒரு சமயம், அவர் தன் வேலையாள் ஒருவனை அழைத்து, ‘நான் சொல்வதை மட்டும் நீ செய்தால் போதும். மற்றதைச் செய்யாதே’ என்று கண்டிப்பாய்ச் சொல்லி அனுப்பினார். அன்று மாலை குழாயிலிருந்து குடிநீர் கொண்டுவரக் குடத்தை கொடுத்து அனுப்பினார். “குடத்தை நன்றாக விளக்கி, உள்ளேயும் கை போட்டு நன்றாகக்…

சட்டச் சொற்கள் விளக்கம் 881-885:

(சட்டச் சொற்கள் விளக்கம் 876-880 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 881-885 881. animus manendi தங்குகை நோக்கம் நிலை இருப்பிட நோக்கம் ஓரிடத்தில் காலரையறையின்றித் தங்கி அவ்விடத்தைத் தன் நிலையான இருப்பிடமாக ஆக்க எண்ணும் அகநிலை நோக்கமாகும்.   animus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள், உணர்வு, மனம், துணிவு,  சினம் முதலியன. இச்சொல் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் குறிக்க மற்ற சொற்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.  manendus என்னும் சொல்லில் இருந்து உருவான வடிவமே manendi என்பது. இதன் பொருள் இருத்தல்,…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 75 : அடிகளார் வருகை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 – தொடர்ச்சி) பூங்கொடி 15. இசைத்திறம் உணர எழுந்த காதை- தொடர்ச்சி எழுவாய்! எழுவாய்! இன்றே எழுவாய்!             தொழுவாய் அவளைத் துணையென நினைவாய்!   50           வழுவா மகளே! வாழிய பெரிதே’ என்றவள் வாழ்த்தி இருந்தனள் ஆங்கண்;        அடிகளார் வருகை           நன்று நன்றென நங்கையும் இயைந்தனள்; அவ்வுழி அடிகள் வருகை தந்தனர்           செவ்விய மங்கையர் செங்கை கூப்பி    55           நிற்றலும் அவர்தமை நேரியர் வாழ்த்திப் `பொற்றொடி யீர்!நாம் புறக்கணிப் பாக விடுதல்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 47-49

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 44-46-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 47. சவாரிக் குதிரை இங்கிலாந்தை ஆண்ட மகாராணி விக்குடோரியாவுக்கு ஒரு நாள் ஒர் ஆசை – தன் பேரனைத் (ஐந்தாம் சியார்சு) தூக்கி மகிழவேண்டும் என்பது. அதைப் பிறர் யாரேனும் பார்க்கப்படாதே என்ற அச்சம் வேறு இருந்தது. என் செய்வார்? சிறு குழந்தையைத் தூக்க ஆசை. மகாராணியாயிற்றே! யாரும் இல்லாத நேரம், ஒரு நாள் தான் பேரனைத் தன் தலைக்கு மேல்தூக்கி வைத்துக் கொஞ்சத் தொடங்கினார். இதனை, அந்த அரண்மனை ஆள் எங்கிருந்தோ…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 114: அத்தியாயம் – 76: தல தரிசனம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 113: அத்தியாயம் – 75: இரண்டு புலவர்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-76 தல தரிசனம் திருக்குற்றாலத்தில் சில தினங்கள் தங்கிப் பிறகு ஆதீனத்திற்குரியகிராமங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே சுப்பிரமணிய தேசிகர் யாத்திரை செய்யலானார். வேணுவன லிங்கத் தம்பிரான் ஆட்சியின் கீழிருந்த அந்தக் கிராமங்கள் திருவாவடுதுறை மடத்தின் சீவாதாரமாக உள்ளவை. அவற்றில் கம்பனேரி புதுக்குடி என்பது ஒரு கிராமம். அதை விலைக்கு வாங்கிய சுப்பிரமணிய தேசிகர் தம்குருவின் ஞாபகார்த்தமாக அம்பலவாண தேசிகபுரமென்ற புதிய பெயரை வைத்தார். அங்கே தேசிகர் ஒரு நாள் தங்கினார். ‘வெள்ளி…

சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை  முன்னுரையும்

(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை-தொடர்ச்சி) சுவைத் தமிழின் மூதறிஞர் மறைமலையார் பாவாணர் அடிச்சுவட்டில் மாண்பார்ந்த தனித்தமிழ்க்குப் பெருமை சேர்த்த நிறைபுலமை யாளர்நம் பழனிவேலர் நினைவெல்லாம் மொழிமானம் தாங்கி நிற்கும் குறையில்லாப் பெருங்கொள்கை யாளர்! அந்நாள் கோதறுசீர் ‘மாணாக்கன்’ இதழின் மூலம் முறையான தமிழ்த்தொண்டு புரிந்த நல்லார்! மூப்பினிலும் தமிழ்யாப்பின் மரபில் வல்லார்! உரமுடையார்! திறமுடையார்! தமிழைக் காக்கும் உணர்வுடையார்! போர்க்குணமும் உடையார்! நெஞ்சில் கரவறியார்! செந்தமிழைக் காப்ப தற்குக் களம்புகுவார்! தன்னலத்தைச் சிறிதும் எண்ணார்! வரவறியார்! பொருள்சேர்க்கும் வாழ்வைக் காணார்! வாழ்வுவளம் எல்லாமுமு்…

இலக்குவனார் திருவள்ளுவனுக்கு அடர் தமிழ்ப் போராளி விருது – பெருங்கவிக்கோ அளித்தார்

அன்னை சேது அறக்கட்டளை நடத்திய பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ இணையர் அன்னை சேதுமதியின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலின் (ஐப்பசி 23, 2055  /  09.11.2024 சனி மாலை 5.30) பொழுது தமிழ்த் தொண்டறத்தார்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றன. தொடக்கத்தில் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற இயக்குநர் கவிஞர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையில் விருதாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தினார். புலவர் மா.கணபதி தமிழ்ப்போராளி புலவர் த.சுந்தரராசன் படத்தினைத் திறந்து வைத்தார். கந்தசாமி (நாயுடு) கல்லூரி முதல்வர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் விருது வழங்குநரை அறிமுகப்படுத்தினார். அறிஞர்கள் சிலரின் உரைக்குப் பின்னர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார் தமிழ்வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள் அன்னை சேது மக்கள் சார்பில் தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயமும் பொற்கிழியும்…