செங்காந்தள் இதழ் வெளியீடு, கனடா
ஆடி 04, 2050 சனி 20.07.2019 பிற்பகல் 3.30 கனடா கந்தசாமி ஆலய மண்டபம் இசுகார்பரோ /Scarborough சிவவதனி பிரபாகரனின் செங்காந்தள் இதழ் வெளியீடு நூல்கள் வெளியீட்டு விழா நிமிர்ந்தே எரியும் சுடர்களாய் – கவிதைத் தொகுப்பு வீழ்ந்து விடாது வீரம் – கட்டுரைத் தொகுப்பு நெருப்பு விதைகள் – கவிதை வெளியீடு அன்புடன் செங்காந்தள் இதழ்க் குழு தொடர்புக்கு : 6476782599 மின்னஞ்சல் : senganthal2019@gmail.com
தமிழால் இணைவோம்…! – மறைமலை இலக்குவனார்
தமிழால் இணைவோம்…! தமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம். உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, மலேசியா, மொரீசியசு நாட்டிலும் தொடர்பு மொழியாக இருப்பதுடன் தமிழ், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்றே ஆத்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா, தமிழ், கல்விக்கூடங்களில்…
என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! இன்று(ஆடி 19 / சூலை 4) முதல் நான்கு நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடும் தமிழர் விழா நடைபெறுகிறது. தமிழறிஞர்களைப் புறக்கணித்துள்ளதாக உள்நாட்டுத் தமிழறிஞர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தொடர் படைப்பாளர்கள் வரை வருத்தம் உள்ளது. என்றாலும், சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! குழுக்கள் பொறுப்புகளில் ஈழத்தமிழர்களைப் புறக்கணித்ததாக அவர்களிடையே பெரும் ஆதங்கம் உள்ளது. என்றாலும் உலக மாநாட்டை நடத்துவது அரிதான செயல் என்ற அளவில் மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! கவியரங்கம், தமிழிசை, மரபிசை,…
சிலப்பதிகார மாநாடு 2019, சிட்டினி, ஆத்திரேலியா
இளங்கோவடிகள் சிலை திறப்பு விழா முதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு, 2019 புரட்டாசி 10-12, 2050 – செட்டம்பர் 27, 28, 29, 2019 தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியா
அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு
அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு சிறப்புப் பயிலரங்குகள் ஆடி 11, 2050 – 27.07.2019 சனி காலை 9.30 முதல் மாலை 5.00 வரை புத்தகக் கண்காட்சி
சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3: முனைவர் இரா.வேல்முருகன், சிங்கப்பூர்
(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 இன் தொடர்ச்சி) சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்…
மூத்தோருக்கான தமிழ் வகுப்பு, கிங்குசுடன்
வைகாசி 18, 2050 சனி 01.06.2019 முதல் சனிக்கிழமை தோறும் பிற்பகல் 2.00 முதல் 4.00 மணி வரை துளசி, கிங்குசுடன் மூத்தோருக்கான தமிழ் வகுப்பு ஆர்வலர்களே! தமிழ் அறிய வருக!
ஏனையா? – அருள்மணி
ஏனையா? குண்டும் கொலையும் என்றுலகம் கொடூர வழியிற் செல்வதனைக் கண்டு காணா திருப்பதுஏன்? காரணம் சொல்வாய் ஐ. நா. வே! 1 உலக ஒழுங்கை நிலைநாட்டும் ஓரிட மாகத் உனைக்காட்டும் உலக அமைப்பாம் ஐ. நா. வே! ஊமை யானது ஏனையா? 2 திட்ட மிட்டோர் இனஅழிப்பைச் செய்த அரசிற் குதவியன்று கட்டம் கட்டமாய் அழிக்கக் காரண மானீர் ஏனையா? 3 மனித நேயம் பேசிடுவோர் மானிட உரிமைக் குரல்தருவோர் தனிமைப் படுத்தி ஓரினத்தை சாகடித் திடஏன் விட்டீர்கள்? 4…
மறப்போமா? – மாதகலான்
மறப்போமா? பத்து ஆண்டுகள் போனாலும் பழைய நினைவுகள் மாறுமோ மொத்த ஈழத் தமிழினமும் முடிவைத் தேடி ஏங்குகிறோம்! 1 மொத்த உலகும் பார்த்திருக்க முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் கொத்துக் குண்டால் அடிபட்ட கொடூரம் தன்னை மறப்போமா? 2 வாழும் உரிமை வேண்டியன்று வன்னி மண்ணில் தமிழர்கள் ஆளும் வருக்கச் சூழ்ச்சிக்கு ஆட்பட் டழிந்ததை மறப்போமா? 3 முள்ளி வாய்க்கால் அவலத்தை மொத்த ஈழத் தமிழர்க்கும் கொள்ளி வைக்கும் நினைவோடு கொண்டு சென்றதை மறப்போமா? 4 சோகம் நிறைந்த…
வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்
வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! உலகெங்கும் உள்ள சட்டத்தின் ஆட்சியில் தண்டனை பெற்றவர்களைத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வதும் ஒரு பகுதியாகும். அண்மையில் இலங்கையில் ‘புத்தபூர்ணிமா’ எனப்படும் வைகாசி விசாகச் சிறப்பு நாளில் 762 தண்டனைவாசிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது ஓர் எடுத்துக்காட்டாகும். இதை எல்லாம் அறியாமல் அடிக்கடிச் சிலர் “கொலையாளிகளை விடுதலை செய்யலாமா” என்கின்றனர். எழுவர் விடுதலைக்கு நீதிமன்றம் குறுக்கே நிற்கவில்லை. ஏனெனில் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்வதில் அது தலையிடாது. அவ்வாறிருக்க ஆளுநர் தமிழக அரசின் முடிவுகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு…
உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் – இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம்! இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்! மே 18 ஆம் நாளும் இவ்வாரமும் மனித நேயர்களால் மறக்க முடியாத துயர நாள்! தாய் மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணியவர்களுக்கு ஆளும் கொடுங்கோல் அரசும் அதற்குத் துணை நின்ற பன்னாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களும் கொடுமையான முறையில் மரணத்தைப் பரிசாகத் தந்த வாரம்! 1,70,000 ஈழத் தமிழர்கள் உயிரிழப்பு, பல்லாயிரவர்கள் உடலுறுப்பு இழப்பு, உடைமைகள் இழப்பு, இருக்க இடமோ உண்ண உணவோ இன்றித் துன்பக்கடலில் மூழ்கடிப்பு! இக்கொடுமைகள் அந்த வாரத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து…
மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி
புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்: இயக்குநர், ஆசியவியல் நிறுவனம் [ Dr.G.John Samuel,Founder Director and SecretaryINSTITUTE OF ASIAN STUDIES] சோழிங்கநல்லூர் (அஞ்சல்), செம்மஞ்சேரி, சென்னை – 600 119 மின்னஞ்சல்: info@instituteofasianstudies.com தொலைபேசி: 24500831, 24501851 , பேசி: 9840526834 இணையத்தளம்: www.instituteofasianstudies.com பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் தலைவர், பன்னாட்டுத் திருக்குறள் நிறுவம், மொரிசியசு முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப. தலைவர், பன்னாட்டு அமைதிக்கான திருக்குறள் நிறுவம் சென்னை
