முள்ளிவாய்க்கால் துயர 10 ஆம் ஆண்டு நினைவு நாள் – அரசவைத் தொடக்க 3 ஆம் ஆண்டு
வைகாசி 03, 2050 / மே 17, 2019 முற்பகல் 9.00 – நண்பகல் 12.00 பிலடெல்பியா
நல்ல நண்பர்கள் தேவை! – யாழ் பாவாணன்
நல்ல நண்பர்கள் தேவை! நண்பர்கள் எம்மை நாடி வரலாம்.நண்பர்களைத் தேடி நாம் போகலாம்.“ஆயிரம் நண்பர்களை இணைத்தாலும் கூடஓர் எதிரியைக் கூட ஏற்படுத்தி விடாதே!” எனப்பாவரசர் கண்ணதாசன் சொல்லிவைத்தார்!நண்பர்களை அணைக்கத் தான்நானும் விரும்புகின்றேன்.நண்பர்கள் எதிரியாவதைக் கண்டதும்நானும் ஒதுங்குகின்றேன்.எதிர்ப்பட்ட எதிரியும் நண்பராகலாம்எச்சரிக்கையாகப் பழகுகின்றேன்.நண்பர்களே வேண்டாமெனநானும் ஒதுங்கவில்லை – இத்தால்*நண்பர்கள் தேவையெனக் காத்திருக்கிறேன்.நண்பர்களால் வானுயரப் புகழீட்டியநண்பர்களால் தான் உணர்ந்தேன்நண்பர்கள் எனக்குத் தேவை என்றே!நண்பர்கள் இல்லையென்றால் – தனக்குஉளநோய் தான் வந்திருக்குமெனநண்பர்கள் சொல்லித் தான் அறிந்தேன்நண்பர்கள் கூட நல்மருந்தென்றே!என்னை நண்பர் ஆக்குங்கள்…என்னை எதிரி ஆக்காதீர்கள்…நான் எதிரியாவதை விடநல்ல நண்பராகவே இருந்துவிடுகிறேன்!நல்ல…
நினைவேந்தல் நாளில் கறுப்புப்பட்டி அணிவோம்! மரம் நாட்டுவோம்! –வி.உருத்திரகுமாரன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! ஆளுக்கொரு மரம் நாட்டுவோம்! – தலைமையர் வி.உருத்திரகுமாரன் பெரும் இனவழிப்பொன்றின் ஊடாகத் தமிழர் தேசத்தை வன் கவர்வு செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டுப்பெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசியத் துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ்…
யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நா.வே தலையிடு! – நா.க.த.அ.
யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கை அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமை அவையின் கண்காணிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார். இது தொடர்பில் ஐ.நா மனித உரிமை அவை ஆணையாளர் மிசெல் பசேலே அம்மையார்(Michelle Bachelet) அவர்களுக்கு எழுதியுள்ள மடலில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் பல தடவைகள் ஐ.நாவுக்கும் அனைத்துலகக் குமுகாயத்திற்கும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதற்கு மாறாகக் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்…
நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு
காலம்: புரட்டாசி 11& 12, 2050 28&29 செட்டம்பர் 2019 சனி, ஞாயிறு நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு [4ème Colloque Tamoul Européen 4th European Tamil Conference இடம்: 20. Esplanade Nathalie Saurrate Paris 18 Institut International des Etudes Supérieures இற்குப் பிற்புறம்] தமிழ்ப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், லாயோலா கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்தும், ரீ.ஆர்.ரீ.தமிழொலி வானொலியின் ஒத்துழைப்புடனும் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் – பாரிசு நடத்தும், ‘நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு’ ஆய்வுப் பொருண்மைகள்: 1. தமிழ் அகராதியியலின் படிநிலை ஆக்கமும் ஆக்கப் பருமமும் (பரிணாமம் மற்றும் பரிமாணம்) இன்பத் தமிழும்…
வலைத்தமிழ் பல்சுவை மாத இதழ் வெளியீடு, வாசிங்டன்
வலைத்தமிழ் பல்சுவை மாத இதழ் வெளியீடு, வாசிங்டன் தமிழ் வளர்ச்சி சார்ந்த ஆக்கப்பூர்வமான அனைத்துச் செயற்பாடுகளையும் இருகரம் கொண்டு வரவேற்று அறிமுகப்படுத்தி வருவது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம். இச்சங்கம் மிகப்பெரிய அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியில் நடத்திய சித்திரை விழாவில் வலைத்தமிழ் பல்சுவை மாத இதழை வெளியிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தியது. தமிழ்ச்சங்கத் தலைவர், செயற்குழு , வாசிங்டன் பகுதியிலுள்ள ஆசிரியர் குழு உறுப்பினர்கள், ஆர்வலர்கள், நிகழ்ச்சியை நெறிப்படுத்திய பேரவையின் மேனாள் தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் என அனைவருக்கும் வலைத்தமிழ் ஆசிரியர் குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டது …..
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், பிரித்தானியா, மேல் விவரம்
வைகாசி 04, 2050 சனி மே 18, 2019 நண்பகல் 2.00 மணி – மாலை 5.00மணி திருப்புமுனை சந்திப்பு / சேரிங்கு கிராசு / Charing Cross நிலக்கீழ் தொடரி நிலையம் அண்மையில் குகை முனைச் சதுக்கம் / திராபல்கர் சதுக்கம் / TRAFALGAR SQUARE இலண்டன் / London WC2N 5DN முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தாயக விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்போம்! அயராதுசெயல்படுவோம்! அனைத்து நாடுகைளயும் எம்பக்கம் திருப்புவோம்! தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தொடர்புகளுக்கு: பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) 02088080465, 07814486087, 07734397383, 07943100035,…
சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 முனைவர் இரா.வேல்முருகன்
(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3 இன் தொடர்ச்சி) சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற…
இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்! உயிர்ப்பு நாளன்று (21.04.2019) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க் கொழும்பு தேவாலயம், சாங்குரிலா நட்சத்திர விடுதி, கிங்சுபரி நட்சத்திர விடுதி, சின்னமான் பெரு நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெஃகிவலாவிலும், கொழும்பு தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 நாளுக்குப் பின்னர் இலங்கை கம்பஃகாவில் நீதிமன்றம் அருகே மீண்டும்…
சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3: முனைவர் இரா.வேல்முருகன்
சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், ‘முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள்’ குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற கட்டுரை. 3 பிரிவாகப் பகுக்கப்பெற்று வெளியிடப் பெறுகிறது.] …
தமிழ் முகில் – மூன்றாமாண்டு சிறப்பு மலர்
தமிழ் முகில் – வாழ்வியல் இதழ் மூன்றாமாண்டு சிறப்பு மலர் கட்டுரைகள், கவிதைகள் முதலான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வைகாசி 10 – 15, 2050 24.05.2019 முதல் 29.05.2019 வரை நடைபெறும் அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டில் வெளியிடப் பெறும். சிறப்பு மலருக்கான கட்டுரைகள், கவிதைகள் முதலான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகள் அனுப்புவதற்கான இறுதி நாள்: 30.04.2019 படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி: முனைவர் மு.கலைவேந்தன் ஆசிரியர், தமிழ் முகில் – வாழ்வியல் இதழ் 153, வடக்கு வீதி,…
அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு, இலங்கை & ஈழம்
கொழும்பு, கண்டி, நுவரேலியா தமிழ்ப்பயணம் வைகாசி 10 – 15, 2050 24.05.2019 முதல் 29.05.2019 வரை கொழும்பு தமிழ்ச்சங்கம் உயர்கல்வி வழி காட்டும் பயிலரங்கம் முத்தமிழ் ஆய்வு மாநாடு புத்தகக் கண்காட்சி திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம்
