வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்

வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும்   கருத்தரங்கங்கள் கருத்துப் பரவலுக்கும் புத்தறிவிற்கும் மனமகிழ்ச்சிக்கும் படைப்புப் பெருக்கத்திற்கும் வழி வகுப்பன. ஆனால், இப்பொழுதெல்லாம் கருத்தரங்கம் என்றாலே அச்சம்தான் வருகின்றது.   சிலர் தங்களுக்கு வேண்டிய பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு கருத்தரங்கம் என அறிவிப்பார்கள். அக்கூட்டத்தில் யாரும் கேள்வியும் கேட்கக்கூடாது என்பார்கள். சொற்பொழிவாக இருந்தாலும்  1 மணி நேரம்  பேசினால் 10 மணிக்கூறாவது கலந்துரையாடல் இடம் பெற வேண்டும் என்பார் நாவரசர் அறிஞர் ஒளவை நடராசன். ஆனால், இவர்கள் தாங்கள் மட்டும் பேசிக்கொண்டு கருத்தரங்கம் என்பர்.  குறிப்பிட்ட…

கவிதை அரங்கேற்ற அழைப்பிதழ்

  அன்புடையீர், வணக்கம். முடிவுநாள்: சித்திரை 22, 2049 –  05.05.2018  உலகத் தமிழ்ச் சங்கத்தின் கவிதை அரங்கேற்ற அழைப்பிதழ்    வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு வசதியாக இதோ ஒரு மின்வரி: gangadharan.kk2012@gmail.com   நன்றி. அன்புடன், தில்லை சிதம்பர(ப்பிள்ளை) ஆசிரியர் மின்மினி @mail: minmini.ch@gmail.com  @mail: minmini.nz@gmail.com @mail: au.minmini@gmail.com பேசி : WWWPhone: +41 43 526 70 24 (மீள் அழைப்பு-Call Back)    

9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல்! -பிரித்தன்

  9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல்! இன அழிப்புக்கு பொறுப்புக் கோரல்! இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்து வரும் தமிழ் இனத்தின் தொன்மையும் செழுமையும் நிறைந்த வரலாறு, பண்பாடு, வாழ்வியல் பதிவுகளைச் சிதைத்து அழித்து எம் மக்களின் நிகழ்கால எதிர்கால அரசியல். சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கூட்டு விருப்பத் தெரிவுகளை அழித்தொழித்துத் தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக வாழ்வதை மறுதலித்துக் கடந்த கால அழிவுகளிலிருந்து என்றுமே மீண்டெழ முடியாத பலவீனமான சமூகமாக கையறு நிலையில்…

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி

    சித்திரை 15, 2049  –  28.04.2018 மாலை 4,30 முதல் இரவு 9.30 வரை அருள்மிகு துருக்கை அம்மன் கோயில் வளாகம் பகரர் பூங்கா, சிட்டினி  (Regents Park, Sydney) தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி சிட்டினித்  தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியத் தமிழ்ச்சங்கம் ஓபன் தமிழர் கழகம்   பெருமைக்குரிய சான்றோர்கள் சி.வை.தாமோதரம்(பிள்ளை) கவிஞர் கண்ணதாசன்  

எனக்குரியவள் நீ ! – கனடா செயபாரதன்

எனக்குரியவள் நீ !    பெண்ணே !  நீ என்னை நேசிக்கிறாயா ? நானுனக்குத் தேவை யாயின் என்மேல் நம்பிக்கை வைத்திடு ! என்னவளாய் நீ இருந்திட எனக்குத் தேவை நீ ! “நலம் தானா,” என்று நீ என்னைக் கேட்டால் நலமென்று விடை சொல்வேன் !   நலமாக நானில்லை என்று நன்கு அறிவேன். நான் உன்னை இழந்திருப்பேன் ! நேரம் எடுத்து நமது தனிமையில் நீ உரைத்தால், நேசம் உண்டாகும் நமக்குள் ! என் பாடல் உலகை உதறி விட்டு  உன்னிடம்…

குவைத்திலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளித்திடுக!

குவைத்திலிருந்து தமிழகம் திரும்பிய தொழில்லாளர்களுக்கு மறுவாழ்வு அளித்திடுக! அன்பிற்கினிய தமிழக அரசே! அமைச்சர்களே! மாவட்ட ஆட்சியர்களே! தமிழக சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களே! அரசியல் கட்சிகளின் / சமுதாய இயக்கங்களின் தலைவர்களே! ஊடக உறவுகளே! சமூக சேவகர்களே! குவைத்தில் பல மாதங்களாக ஊதியமின்றி பாதிக்கப்பட்டுத் தாயகம் திரும்பியுள்ள ஆயிரக்கணக்கான தமிழகத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யுமாறு தமிழக அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், ஊடகங்களுக்கும் குவைத்துத் தமிழ் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்! குவைத்து கராஃபி தேசிய நிறுவனத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம்…

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா – பல்வழி அமைப்புப் பொழிவு

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா பல்வழி அமைப்புப் பொழிவு வரும் தை 27,  பிப். 9 வெள்ளி இரவு 9 மணிக்கு ; தலைப்பு : புராணங்களும் பொய்மையும் மானமிகு சு. அறிவுக்கரசு, செயலவைத் தலைவர், திராவிடர் கழகம். வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறந்த பேச்சாளர்,எழுத்தாளர். மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்தவர். http://www.modernrationalist.com/2011/april/page05.html அழைப்பெண் : அமெரிக்கா  &  கனடா  5157391519  குறிஎண் 890386 இந்தியா 1725199068 பிப்.10, காலை 7.30 சிங்கப்பூர் 65 31389208 ஐக்கிய இங்கிலாந்து  44 3309981254

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்  – பல்வழி அழைப்பு வழியாகக் கலந்துரையாடல்

பேரன்புடையீர், வணக்கம்.  பேரவையின் மாத இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  வரும் தை 15,  ஞாயிற்றுக்கிழமை  சன.  28 அன்று, கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத இலக்கிய கூட்டத்தில் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் முனைவர் மு. இளங்கோவன். இந்த இலக்கியக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இலக்கியச்…

உருசிய நாட்டுத் தமிழறிஞர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும்

  உருசிய  நாட்டிலுள்ள தமிழறிஞர்கள் சிலர் தமிழாய்வு தொடர்பான சில திட்டப் பணிகள் தொடர்பாகத் தமிழகம் வந்துள்ளனர். மாசுகோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் உருசிய நாட்டின் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி  (Prof Alexander Dubyanskiy)அவர்களின் தலைமையில் வருகை தரும் இவர்களுடன் சந்திப்புக்கும் கலந்துரையாடலுக்கும் ஆசியவியல் நிறுவனம், தை 10, 2049செவ்வாய்க் கிழமை 23-01-2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு (செம்மஞ்சேரியில் அமைந்துள்ள) ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்றுத் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…

சைவ முன்னேற்றச் சங்கத்தின்  தைப்பொங்கல் திருநாள்

அன்புடையீர், அருள்மிகு சிவகாமி அம்பாள்  இணை  சிதம்பரேசுவரர் ஆலயத்தில்  சைவ முன்னேற்றச் சங்கத்தின் தைப்பொங்கல் திருநாள்  தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை 14.01.2018 மாலை  6.00 மணிமுதல் சிறப்பாக நடைபெறவுள்ளது.   தமிழர் திருநாளை – உழவர் திருநாளை உற்சாகமாகக் கொண்டாட அனைவரையும் வரவேற்கிறோம். திருவாட்டி தயாளன்  செயற்பொறுப்பர் சைவமுன்னேற்றக்கழகம், ஐக்கிய அரசு.

இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள்

இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் வரவேற்று அறிமுக உரை நடத்தினார். தமிழன்பர்களின் குழுத்தலைவரான அருட்திரு இயோ.நீலமேகம், இரீயூனியன் நாட்டில் தமிழ்மக்களிடம் தமிழ் இல்லா நிலை குறித்து விளக்கினார். அவர்களின் இப்போதைய மொழியான கிரயோல் மொழியில் குழுவினர் தங்களை அறிமுகப்படுத்தித் தெவிவித்த…