உத்தமத்தின் 17 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, கோயம்புத்தூர்
ஆனி 22 – 24, 2049 : 6-8/07/2018 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்
இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018 ஆகிய நாள்களில் இங்கிலாந்தில் இலிவர்பூல் நம்பிக்கைப் பல்கலைக்கழகத்தில் (Liverpool Hope University) இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. ஆசியவியல் நிறுவனம், ஓப்பு பல்கலைக்கழகத்துடனும் பிற அமைப்புகளுடனும் நிகழ்த்தும் இம்மாநாட்டில் மாண்புமிகு தமிழகத் தமிழ்வளர்ச்சி அமைச்சர் ம.ப.பாண்டியராசன் சிறப்புரையாற்றுகிறார். இம்மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நண்பகல் 11.00-1.00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அமர்வில் 4 ஆம் அரங்கில் …
நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை
புதன் கிழமை 13.06.2018 மாலை 5.00 சந்திரிகா வணிகமனை, இராயப்பேட்டை, சென்னை 14 உலகத்தமிழர் ஒப்புரவாளர் பேரவை நடத்தும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் இலக்கிய வேந்தன் அயலகத் தமிழறிஞருக்கான இலக்கிய விருதாளர் நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா
தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை! திருந்தவும் இல்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை! திருந்தவும் இல்லை! ‘’யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’’, ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ ஆகிய தமிழ் நெறிகள் உலகெங்கும் பரப்பப்படவில்லை. இதனால், இனம், சமயம்(மதம்) முதலானவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பெற்று உலகெங்கும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்ததகைய படுகொலைகளிலிருந்து மீண்டவர்களும் இத்தகைய படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றனர். உலக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலக அமைப்பு எதுவும் உருவாகவில்லை. இருக்கின்ற உலக அமைப்புகள் வல்லமையாளர்கள் கைப்பிடிகளில் உள்ளன. எனவே அவர்கள் ஆட்டுவிப்பிற்கேற்ப ஆடுகின்றன. எனவே, மனிதப் படுகொலைகளுக்கு எதிரான…
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் !
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் ! முனைவர் செனிவிரத்னா அவர்களை சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சிங்களர் ஒருவர் உட்பட நான்கு பெருமக்களுக்கு பெருமைசால் உயரிய விருதுகளை வழங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாண்பேற்றியுள்ளது. சா.சே.வே.செல்வநாயகம் நினைவு விருது, மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருது, அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது, தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசில் என ஆண்டுதோறும் நான்கு விருதுகளை வழங்கி மாண்பேற்றி வருகின்றது. அந்தவகையில்…
தமிழீழம் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம்
தமிழர் தலைவிதி தமிழர் கையில் : பேர்லினில இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம் ! பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் செருமன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்றது. இலங்கைத்தீவின் தேசிய இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது. கனாடாவில் இடம்பெற்றிருந்த மக்கள் அரங்கத்தின் தொடர்சியாகத் தற்போது செருமனியில் இடம்பெற்றுள்ளது. செருமன்…
தமிழ்ப்பேராய விருதுகள் 2018
தமிழ்ப்பேராய விருதுகள் 2018 திரு இராமசாமி நினைவு அறிவியல்-தொழில் நுட்பக் கல்விநிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்த அறிவிப்பு மடல் படவடிவில் உள்ளது. காண்க.
மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு
மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு பாரிசு ஆவணி 23 & 24, 2049 சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018 – சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும் – சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள் அன்புசால் தமிழுறவுகளே ! பாரிசு மாநகரில் ஆவணி 23 & 24, 2049 சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும் மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும். பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்) ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டிய இறுதி…
வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்
வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் கருத்தரங்கங்கள் கருத்துப் பரவலுக்கும் புத்தறிவிற்கும் மனமகிழ்ச்சிக்கும் படைப்புப் பெருக்கத்திற்கும் வழி வகுப்பன. ஆனால், இப்பொழுதெல்லாம் கருத்தரங்கம் என்றாலே அச்சம்தான் வருகின்றது. சிலர் தங்களுக்கு வேண்டிய பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு கருத்தரங்கம் என அறிவிப்பார்கள். அக்கூட்டத்தில் யாரும் கேள்வியும் கேட்கக்கூடாது என்பார்கள். சொற்பொழிவாக இருந்தாலும் 1 மணி நேரம் பேசினால் 10 மணிக்கூறாவது கலந்துரையாடல் இடம் பெற வேண்டும் என்பார் நாவரசர் அறிஞர் ஒளவை நடராசன். ஆனால், இவர்கள் தாங்கள் மட்டும் பேசிக்கொண்டு கருத்தரங்கம் என்பர். குறிப்பிட்ட…
கவிதை அரங்கேற்ற அழைப்பிதழ்
அன்புடையீர், வணக்கம். முடிவுநாள்: சித்திரை 22, 2049 – 05.05.2018 உலகத் தமிழ்ச் சங்கத்தின் கவிதை அரங்கேற்ற அழைப்பிதழ் வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு வசதியாக இதோ ஒரு மின்வரி: gangadharan.kk2012@gmail.com நன்றி. அன்புடன், தில்லை சிதம்பர(ப்பிள்ளை) ஆசிரியர் மின்மினி @mail: minmini.ch@gmail.com @mail: minmini.nz@gmail.com @mail: au.minmini@gmail.com பேசி : WWWPhone: +41 43 526 70 24 (மீள் அழைப்பு-Call Back)
9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல்! -பிரித்தன்
9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல்! இன அழிப்புக்கு பொறுப்புக் கோரல்! இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்து வரும் தமிழ் இனத்தின் தொன்மையும் செழுமையும் நிறைந்த வரலாறு, பண்பாடு, வாழ்வியல் பதிவுகளைச் சிதைத்து அழித்து எம் மக்களின் நிகழ்கால எதிர்கால அரசியல். சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கூட்டு விருப்பத் தெரிவுகளை அழித்தொழித்துத் தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக வாழ்வதை மறுதலித்துக் கடந்த கால அழிவுகளிலிருந்து என்றுமே மீண்டெழ முடியாத பலவீனமான சமூகமாக கையறு நிலையில்…
தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி
சித்திரை 15, 2049 – 28.04.2018 மாலை 4,30 முதல் இரவு 9.30 வரை அருள்மிகு துருக்கை அம்மன் கோயில் வளாகம் பகரர் பூங்கா, சிட்டினி (Regents Park, Sydney) தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி சிட்டினித் தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியத் தமிழ்ச்சங்கம் ஓபன் தமிழர் கழகம் பெருமைக்குரிய சான்றோர்கள் சி.வை.தாமோதரம்(பிள்ளை) கவிஞர் கண்ணதாசன்
