அமீரகத்தில் கோடை விழாக்கள்

 அமீரகத்தில் கோடை விழாக்கள்    அபுதாபி : அமீரகத்தில் கோடை விழாவினையொட்டி அபுதாபி, துபாய் முதலான பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதை காணலாம். – முதுவை இதாயத்து  

வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் சங்கம விழா

   வட  அமெரிக்கத் தமிழ் விழா 2015    தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை[FeTNA – Federation of Tamil Sangams of North America] சார்பில் இந்த ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தில் சான் ஓசே [San Jose] நகரில் சீரும் சிறப்புமாக பேரவைத் தமிழ் விழா நடந்துள்ளது. இந்தத் தமிழர் மாநாட்டில் கிட்டத்தட்ட 2500 தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.   இரண்டு நாள் முழு நிகழ்வில் ஏராளமான தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கு ஏறியன. முதல் நாள் தமிழ்த்…

நெகிழ வைத்த அயல்நாட்டார் பண்புகள் – பொறி. இலக்குவனார் திருவேலன்

  நான் அயல்நாடுகளில் தரக்கட்டுப்பாட்டுப் பொறியாளராகப் பணியாற்றும்போது சுவையான நிகழ்ச்சிகள் பல நடந்ததுண்டு. அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.   முதல் நிகழ்வு ஒரு கிழக்குஆசிய நாட்டில். நான் ஒரு பெரிய நிறுவனத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருக்கிறேன். அந்த நிறுவனம் எமது வாடிக்கையாளருக்கு ஒரு மிகப் பெரிய, தொடர்-வார்ப்பு உருக்கு ஆலையை (Continuous Casting Plant) உற்பத்தி செய்து அளிக்கும் பணியைச் செய்து முடிக்கும் தருவாயில் உள்ளது. அன்றைய மதிப்பில் சில நூறுகோடி உரூபாய். தொடர்புடைய எந்திரப் பொருட்கள் அனைத்தும் கப்பலில்…

உதவிடலாம் ! – எம் .செயராம(சர்மா)

உதவிடலாம் ! பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக் கரங்கொடுத்து அரவணைத்து உதவிடலாம் ! ஓலைக் குடிசைதனில் ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு ஒழுங்கான வாழ்வுவர உள்ளத்தால் உதவிடலாம் ! நீர்கூடக் கிடைக்காமல் நிம்மதியைத் தொலைத்துநிற்கும் ஊரெல்லாம் தனையெண்ணி உணர்வோடு உதவிடலாம் ! மருத்துவ வசதியின்றி மனம்நொந்து நிற்பார்க்கு மருத்துவத்தைத் தெரிந்தவர்கள் மனதார உதவிடலாம் ! ஏமாற்றிப் பிழைப்பவரின் இடருக்குள் புகுந்தவர்கள்…

தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை! – வித்யாசாகர்

தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை – வித்யாசாகர்   துருப்பிடித்த சாதி – அது திருத்திடாத நீதி, துண்டுத் துண்டாகி – இன்று உயிர்களைக் குடிக்கிறது சாதி.. தலைமுறையில் பாதி – அது கொன்று கொன்று விழுவதேது நீதி ? காதல்சருகுகளை – பிஞ்சுகளைக் கொன்று கடும் நஞ்சாய்ப் பரவுகிறது சாதி.. கருப்பு வெள்ளையில்லா ஒரே சிவப்பு இரத்தம், அது சிந்திச் சிந்தி நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழெனில் சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ? “ச்சீ”.. கேட்கவே வெட்கம் செங்கல் வேகலாம், சாதியில்…

‘கனடா – தாய்வீடு’ இதழ் அறிமுகம் : மு.பி.பா.

ஆடி 21, 2046 / ஆக. 06, 2015  மாலை 6.30 பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை 600 007  பேரா.மு.பி.பாலசுப்பிரமணியன் திரு பொன்னையா விவேகானந்தன்

சங்க இலக்கியப் பயிலரங்கு,

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் இணைந்து நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கான சங்க இலக்கியப் பயிலரங்கு நெறியாள்கை: திருமதி வைதேகி  எர்பெர்ட்டு (சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்) இடம் : ஐயப்பன் ஆலய மணிமண்டபம் நிகழ் நிரல்: சனிக்கிழமை   ஆடி 23, 2046 / ஆக.08, 2015 10:00 மு.ப மங்களவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து,  நாட்டுப்பண் 10:05 மு.ப மொழிபெயர்ப்பாளர் அறிமுகம்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம் (கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்) 10:10 மு.ப பயிலரங்கு 12:00 பி.ப  நண்பகலுணவு 1:00 பி.ப பயிலரங்கு 3:00 பி.ப…

கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு

கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு கனடாவின் கியூபெக்கு மாநிலத்தில் மொன்றியல் கிழக்குப் பகுதியில் கடந்த ஆடி 02, 2046 / 18-07-2015 அன்று பலநாடுகள் பங்குகொண்ட பல்கலை நிகழ்வு 2015 (Quebec City Festivals and Events) நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 5 வருடங்களாக இலங்கைத் தமிழர்கள் தங்களின் கலை, பண்பாட்டினை பல்லின மக்களோடு பரிமாறும் பொருட்டு, கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் வருடா வருடம் பங்குகொண்டு பல கலை நிகழ்வுகளை மேற்கொண்டுவருகின்றது. ‘Festival d’été de Québec’ என்னும்…