செப்டெம்பர் 1 இல் சென்னை அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! – வைகோ

அமெரிக்க அரசின் வஞ்சகத்தைக் கண்டித்து, செப்டெம்பர் 1 இல் சென்னை அமெரிக்கத் தூதரகம் முற்றுகை!- வைகோ ஈழத்தமிழ் இனம் இன்றைய உலகால் சபிக்கப்பட்ட இனம் போலும்; சில நாடுகளின் தொடர்  இரண்டகங்களால் ஈழத்தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுத் துன்ப நரகத்தில் தள்ளப்படும் கொடுமை புதியபுதிய  படிநிலைகளை அரங்கேற்றுகிறது. ஈழத்தமிழர்கள் தங்களுக்கெனத் தனி அரசு அமைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழந்தமிழர் பண்பாட்டைப் பாதுகாத்து மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியரும், ஒல்லாந்தரும், பின்னர் ஆங்கிலேயரும் அடுத்தடுத்துப் படை எடுத்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி, இலங்கைத்…

இரண்டகர்களை அடையாளம் காட்டுங்கள்! – வெளிப்படையான மடல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தமிழ் இனத்தின் சார்பில் திறந்த மடலாக வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம்:   தோல்வி என்பது வெற்றிக்கான முதற்படியே. அதுவே முடிவல்ல. தமிழீழ மக்கள் சந்திக்காதவையல்ல, நீங்கள் சந்தித்திருப்பது. ஆகவே தொடர்ந்தும் தமிழீழ மக்களுடன் தமிழீழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் உறுதியாக செயல்படுங்கள். இவ்வளவுகாலமும் சம்பந்தனும், சுமத்திரனும் மாவை சேனாதிராசா உட்பட கூட்டமைப்பில் உள்ளவர்கள் செய்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இனி வரும்காலங்களிலும் தமிழ்த் தேசியத்தை உதட்டளவில் பேசிக்கொண்டு கூட்டமைப்பு தமிழீழ மக்களிற்கு வஞ்சகங்கள் செய்யும்போது கூட்டமைப்பின் உண்மை முகத்தை…

மகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன்

மகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சேவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்” என்று ஆத்திரேலிய பேரவை(செனட் சபை) உறுப்பினர் இலீ இரியன்னன் (Lee Rhiannon) தெரிவித்துள்ளார்.  நடைபெற்றுமுடிந்த எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் அவர் தனது சுட்டுரையில்(டுவிட்டரில்) இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். தேர்தலில் அடைந்த தோல்வியானது, மகிந்த மற்றும் அவரது உடன்பிறப்புகளை     ஃகேக்கில் அமைந்துள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முற்படுத்தக்கூடிய வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றும் அவர் அதில்…

மூன்றாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு – 2015

பன்னாட்டுத்  தமிழர் சந்திப்பு   ஐப்பசி 26  முதல் ஐப்பசி 29 வரை நவம்பர் 12 முதல் 15  வரை  கோலாலம்பூர் சென்னை வளர்ச்சிக் கழகம் உலகத்தமிழர் பொருளாதார அற நிறுவனம்    

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப் பயணம்

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்  நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை அவையின் 30ஆவது அமர்வை முன்னிட்டுத் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் திங்கள் கிழமை பிரித்தானியாவில் இருந்து தொடங்கப்பட உள்ளது. பிரித்தானியா, தலைமையர் (தலைமையமைச்சர்) அலுவலகத்துக்கு முன்னால் தொடங்கிப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி (தென்ஃகாக்கு), செல்கிறது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை(புருசெல்) அடைந்து, அங்கிருந்து இலக்சம்புர்க்கு நாட்டை ஊடறுத்து, ஐரோப்பிய பாராளுமன்றத்தை (ஃச்ரார்சுபுக்கு) நோக்கிப் பயணிக்கிறது. தொடர்ந்து…

கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு

கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு   கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு வெற்றிகரமாக 5 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் ஆவணி 13 / ஆகத்து மாதம் 30 ஆம் நாள் மாநாயகர்(மேசர்) அப்பாசு அலி பூங்காவில் காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.  அழிந்து போகும் தமிழர் தாயாக மண்ணின் நினைவுகளை மீட்கும் தமிழீழத்தின் தேசிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டு கனடிய மண்ணில் இளையவர்களால் அணிகளாக அணி வகுத்து மாபெரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வாக…

சிங்கப்பூர் வாசகர் வட்டம் – “தமிழ்ப்பிள்ளை” இசைத்தொகுப்பு அறிமுகம்

ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 மாலை 5.00 சையத் பாபு வணக்கம். வருகின்ற ஞாயிறு மாலை 5 மணி அளவில் சிங்கப்பூர் அங் மோ கியோ நூலக அரங்கில் நடை பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

இலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்!

தமிழினப் பகைவர்களை வீழ்த்துங்கள்!     இலங்கையில் ஆனி 11, 2046 / சூன் 26, 2015 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14 ஆவது நாடாளுமன்றத்தைப் பதவிக் காலத்திற்குப் பத்துத் திங்கள் முன்கூட்டியே கலைத்தார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆடி 32, 2016 / ஆகத்து 17, 2015 திங்கள் கிழமை நடைபெறுகிறது. அமைய உள்ள 15 ஆவது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தெரிவாகஉள்ளனர்.  இத்தேர்தலில் ஈழ வாக்காளர்கள் சலனங்களுக்கு ஆட்படாமல் இனக் கொலையாளிகளையும் இனப்பகைவர்களையும் வீழ்த்த வேண்டும். இராசபக்சேவை வீழ்த்தியதுபோல்…

மு.பி.பா.வின் நூல் அறிமுகம்

 ஆவணி 01, 2046 / ஆக.18, 2015 செவ்வாய் மாலை 6.00 ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்   பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் நூல் “அலைகடலுக்கு அப்பால்…!”  

அமீரகத்தில் கோடை விழாக்கள்

 அமீரகத்தில் கோடை விழாக்கள்    அபுதாபி : அமீரகத்தில் கோடை விழாவினையொட்டி அபுதாபி, துபாய் முதலான பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதை காணலாம். – முதுவை இதாயத்து