புதியபார்வை – இலக்குவனார் சிறப்பிதழ்

  புதியபார்வை நவம்பர் 16-30 இதழ் இலக்குவனார் சிறப்பிதழாக வெளிவருகிறது. ஆசிரியர் : முனைவர் ம.நடராசன் அஞ்சல்பெட்டி எண் 1069 189, டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018 பேசி : 044 24997401 / 24980176 மின்வரி :puthiyaparvai@gmail.com வலைத்தளம் : www.puthiyaparvai.com

எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் மறைவு – தமிழ்ப்படைப்பிலக்கியத்திற்குப் பேரிழப்பு

    எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் மறைவு – தமிழ்ப்படைப்பிலக்கியத்திற்குப் பேரிழப்பு   சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ் படைப்பிலக்கியத்தில் அண்மைக்கால வரலாற்றில் தனித்த முத்திரை பதித்த மிகச்சிறந்த எழுத்தாளர்இராசம் கிருட்டிணன் அவர்கள். களஆய்வு செய்து தொடர்புடைய அந்தப் பட்டறிவுகளைத் தன்னுடைய புதினங்களில் உயிரோட்டமாகப் பதிவு செய்தவர். உப்பளத் தொழிலாளர்கள், மீனவர் சிக்கல்கள் ஆகியவற்றைக் களஆய்வுசெய்து இவர் எழுதிய ‘கரிப்பு மணிகள்’ மற்றும் ‘அலை வாய்க்கரையில்’ புதினங்களும் பீகார் கொள்ளைக்…

‘பாரதஇரத்தினா’வை இழிவுபடுத்தும் சுப்பிரமணியசாமி: தா.பாண்டியன் கண்டனம்

  இலங்கை அதிபர் இராசபக்சேவுக்குப் பாரதஇரத்தினா விருது அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கோரியிருப்பது, ‘பாரதஇரத்தினா’ விருதை இழிவுபடுத்தும் செயல் என்று தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “பாசகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் இராசபக்சேவுக்குப் பாரதஇரத்தினா விருது அளிக்க வேண்டும் எனக் கோரியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது. தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காகப் போர் விதி மீறல்களை மீறிய…

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் – வைகோ அறிக்கை

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று வைகோ அறிக்கை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப்பு வாதாடினார். இலக்சம்பெர்க்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள்…

இணையத் தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம் : இரவி நடராசன்

  இணையத் தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம் உருவாக்கம்: இரவி நடராசன் மின்னஞ்சல்: ravinat@gmail.com மேலட்டை உருவாக்கம்: இலெனின் குருசாமி மின்னஞ்சல்: guruleninn@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com ’சொல்வனம்’ இதழில் 2009, 2010 ஆம் ஆண்டுகளில் எழுதிய இணையம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு, இப்புத்தகம். இணையத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதைப் பயன்படுத்துவர்கள் பலர். அனைவரும் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதே இணையத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். ஆயினும், பயன் படுத்தும் நுட்பங்களை அறிந்தால், தகுந்த…

புலிகள் மீதான தடை நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு!   இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை! தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட எதிரானவை என, (புரட்டாசி 30, 2045 / 16.10.2014 அன்று) இலக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2001ஆம் ஆண்டு செப்டம்பரில்…

இன்ஃபோசிசு நடத்தும் இன்ஃபோசியர் குடும்பச்சிறாருக்கான அறிவியல் ஓவியப் போட்டி

இன்ஃபோசிசு அறிவியல் நிறுவனம் நடத்தும்   இன்ஃபோசிசு நிறுவன ஊழியர்களின் குடும்பத்தினர் உறவினர்களுக்கான   உலகளாவிய   அறிவியல் ஓவியப் போட்டி   4 அகவை முதல் 16 அகவையுடைய சிறுவர் சிறுமியர் மட்டுமே பங்கேற்கலாம்.   போட்டி இறுதி நாள் ஐப்பசி 10, 2045 / அக்.27, 2014   இந்திய நேரம் இரவு 11.00 மணி   பெயர், அகவை, முகவரி , மின்வரி (e-Mail) விவரங்களுடன் வரைந்த படத்தை   500அயிரைஎண்மத்திற்குள் (500 KB) வலைவலகிட்டு (scan) மின்னஞ்சலில் அனுப்ப…

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙு

       (புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி)   தீர்மானம் – 7: தமிழ்நாட்டை கதிர்வீச்சு நோயாளியாக, வேதியக் குப்பை மேடாக மாற்றாதே!   இந்திய அரசு, தனது பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை ஆதாயத்திற்காகவும் தனது ஆதாயங்களுக்காகவும் மனித குல அழிவுத் தொழில்நுட்பமான அணுப்பிளப்புத் தொழிற்சாலைகளை மேலும் மேலும் தமிழ்நாட்டில் நிறுவி வருகிறது. மற்ற மாநிலங்கள் மறுத்துவிட்ட நிலையில், தமிழகக் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டியது. அணுக்கதிர் வீச்சினால் உலகின் பல பகுதிகளில் மனிதப் பேரழிவு நேர்ந்ததை அறிந்து…